ரஜினி விஜய் விக்ரம் பட நடிகை கணவருக்கு கொரோனா தொற்று

ரஜினி விஜய் விக்ரம் பட நடிகை கணவருக்கு கொரோனா தொற்று

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shriya saran and husbandரஜினியுடன் ’சிவாஜி’ விஜய்யுடன் ’அழகிய தமிழ்மகன்’, விக்ரமுடன்’கந்தசாமி’ உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயா.

இவர் சில ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரூ என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இருவரும் ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனா நகரத்தில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஸ்ரேயா கணவர் ஆண்ட்ருவுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்துள்ளதாம்.

எனவே கணவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்துள்ளனர்.

வீட்டிலிருந்தே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்றுவர மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இதனை அடுத்து இருவரும் வீட்டிலிருந்தே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்களாம்.

தற்போது ஸ்ரேயாவின் கணவரின் உடல் தேறி வருவதாக சொல்லப்படுகிறது.

கனடாவில் சிக்கிய விஜய் மகன் சஞ்சய் குறித்து விசாரித்தாரா அஜித்.?

கனடாவில் சிக்கிய விஜய் மகன் சஞ்சய் குறித்து விசாரித்தாரா அஜித்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith jason vijayஇளைய தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் இருக்கிறார்.

அவர் பிலிம் மேக்கிங் படிக்க கனடா நாட்டுக்கு சென்று அங்கேயே தங்கி படித்து வருகிறார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அவரால் இந்தியா வரமுடியவில்லை.

கனடாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் தன் மகனை நினைத்து வருத்தத்தில் இருக்கிறாராம் விஜய்.

மகனிடம் தினமும் போனில் பேசி நலம் விசாரித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் அஜித், உடனே விஜய்யிடம் செல்போனில் தொடர்பு கொண்டு அவரின் மகன் சஞ்சய் குறித்து விசாரித்து வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

நடிகர் விஜய்யும், அஜித்தும் இதுபோல் அடிக்கடி செல்போனில் பேசுவது வழக்கமான ஒன்றுதான் எனவும் கூறப்படுகிறது.

பழைய செய்திகளை போடும் வெப் சைட்ஸ்.; பழைய சீரியல்களுக்கு போட்டி?

பழைய செய்திகளை போடும் வெப் சைட்ஸ்.; பழைய சீரியல்களுக்கு போட்டி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Few Cinema Websites posting old news in Corona lock down daysகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மே 3 வரை அமலில் இருக்கும்.

அதன் பின்னர் கொரோனா பரவலை பொறுத்துதான் இந்த உத்தரவு இருக்குமா? இல்லையா? என்பது தெரிய வரும்.
ஊரடங்கினால் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

மற்ற தொழில்களை போல சினிமா மற்றும் டிவி சீரியல்கள் சூட்டிங்கும் நிறுத்தப்பட்டுள்ளன.

மக்களை மகிழ்விக்க டிவி சேனல்கள் பழைய டிவி சீரியல்களை மீண்டும் ஒளிப்பரப்பி வருகின்றன.

இவர்களை போல ஒரு சில சினிமா இணையத்தளங்கள் பழைய செய்திகளை போடுகின்றனர்.

அதாவது கடந்த 30-40 ஆண்டுகளில் சினிமாவில் நடந்த ஏதாவது ஒரு செய்தியை புது செய்தி போல பதிவிட்டு வருகின்றனர்.

நாட்டில் கொரோனா குறித்து எத்தனையோ செய்திகள் இருக்கிறது. அவையில்லாமல் சினிமா பிரபலங்களும் ஏதாவது ஒன்றை தங்கள் வீட்டிலேயே இருந்து செய்து வருகின்றனர்.

அவற்றை செய்தியாக போடலாமே… அதைவிடுத்து பழைய செய்தியை ஏதோ இன்று நடந்தது போல போடவேண்டிய அவசியமென்ன? என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

Few Cinema Websites posting old news in Corona lock down days

சிங்கப்பூரில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் ரஜினி-சச்சின்

சிங்கப்பூரில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் ரஜினி-சச்சின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini and Sachins Covid 19 awareness in Singapore கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இதற்கு மருந்து இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்பதால் பல உயிர்கள் தினம் தினம் செத்து மடிகிறது.

சீனா, இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, கனடா, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளிலும் மோசமான நிலையே நீடித்து வருகிறது.

இதனால் திரையுலக பிரபலங்கள் பலரும் அந்தந்த நாடுகளில் தங்கள் இயன்றவரை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

சிங்கப்பூரில் நேற்று ஒரே நாளில் 700 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் சிங்கப்பூர் அரசு பெரும் அச்சத்தில் உள்ளது.

இந்த நிலையில் இந்திய பிரபலங்களின் கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை அங்கு ஒளிப்பரப்பி வருகின்றனர்.

வெளிநாடுகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, நடிகர் ரஜினிகாந்த், மற்றும் சச்சின் டென்டுல்கர் ஆகியோரது வீடியோக்களை வைத்து, அந்நாட்டு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறதாம்.

இந்தியாவில் மட்டுமல்ல நடிகர் ரஜினிக்கு உலகின் பல நாடுகளிலும் லட்சக்கணக்கில் தீவிர ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajini and Sachins Covid 19 awareness in Singapore

நடிகர் சங்கத்துக்கு 25 லட்சம் கொடுத்த லாரன்ஸ்; மனமுருகி உதயா நன்றி

நடிகர் சங்கத்துக்கு 25 லட்சம் கொடுத்த லாரன்ஸ்; மனமுருகி உதயா நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raghava Lawrence donated Rs 25 Lakhs to Nadigar Sangamமுல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி. வரலாற்றில் நாம் படித்திருக்கிறோம். ஒரு முல்லைக் கொடி படர்வதற்கு வழியில்லாமல் தரையில் தவழ்ந்து வாடிக் கொண்டிருப்பதை கண்டு மனமுருகி அது படர்வதற்கும், உயிர் பிழைப்பதற்கும் தனது தேரையே அதற்கு அர்ப்பணித்தான் முல்லைவேந்தன்.

அதுபோல் இன்று கொரனாவால் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் திரைப்பட தொழிலாளர்களுக்கும், நடன கலைஞர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் அமைப்புசாரா மற்ற தொழிலாளர்களுக்கும் ரூபாய் மூன்று கோடியை வாரி வழங்கியது மட்டுமில்லாமல்…

இன்னும் சில திரைத்துறையை சார்ந்தவர்களுக்கும் தூய்மை பணியாளர்களுக்கும் நிதி உதவி வழங்கிய வள்ளல் .. எங்கள் மாஸ்டர் திரு.ராகவா லாரன்ஸ் அவர்கள், பெப்சி அமைப்பில் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் அங்கம் இல்லாததால் அவர்களுக்கு தான் செய்த உதவி போய் சேரவில்லை என்று அறிந்து.. மனம் உருகி, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள நலிந்த நடிகர்கள், நாடக நடிகர்களுக்கு ரூபாய் 25 லட்சத்தை அளித்து.. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கிறார் திரு. ராகவா லாரன்ஸ் அவர்கள்.

இக்கட்டான சூழ்நிலையில் உதவுவதற்கு பணம் மட்டும் இருந்தால் போதாது …கொடுக்கும் மனம் இருக்கவேண்டும்..திரைத்துறையை சார்ந்தவர்களின் குடும்பங்களில் விளக்கேற்றி வைத்த.. ஒளிவிளக்கு.. கொடுத்து சிவந்த கை, எங்கள் கருப்பு வைரம் திரு. ராகவா லாரன்ஸ் அவர்கள் நீடூழி வாழ்க வாழ்த்துகிறேன்.

அன்பன்,
நடிகர் உதயா.

Raghava Lawrence donated Rs 25 Lakhs to Nadigar Sangam

விஜய் மரணம்; அஜித்துக்கு பாடை.; தமிழர்களை அசிங்கப்படுத்தும் ரசிகர்கள்

விஜய் மரணம்; அஜித்துக்கு பாடை.; தமிழர்களை அசிங்கப்படுத்தும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay and Ajith fans worst clash in twitterஒரு பக்கம் கொரோனாவை தடுக்க என்னவெல்லாம் முயற்சிகள் மேற்கொள்ளலாம் என உலகமே போராடி வருகிறது.

இந்த வைரஸை தடுக்க மருத்துவர்கள், காவல்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், மீடியா உள்ளிட்ட பலரும் தங்கள் உயிரை பணயம் வைத்து தினம் தினம் போராடி வருகின்றனர்.

இந்த வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே தங்கள் பொழுதை கழித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அஜித் விஜய் ரசிகர்கள் என்ன நடந்தால் என்ன? நாமும் எப்போதும் போல சண்டை போடுவோம் என ட்விட்டரில் கேவலமான கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

வருகிற மே 1 ஆம் தேதி அஜித்துக்கு பிறந்தநாள் வருகிறது. இதற்கு எதிராக விஜய் ரசிகர்களோ… அஜித்துக்கு பாடை என ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ஜீன் 22ஆம் தேதி விஜய்க்கு பிறந்தநாள் வருகிற நிலையில் விஜய்யின் இறந்தநாள் என அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

கொரோனா தொற்று பயத்தால் அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்க மக்களின் வேதனையறியாமல் அஜித் விஜய் ரசிகர்கள் இதுபோல் செய்யலாமா? என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் இதை பார்க்கும் மற்ற மாநிலத்தவர்கள் மற்ற நாட்டினர் தமிழர்களை பற்றி என்ன நினைப்பார்கள்..? அசிங்கமாக நினைக்க மாட்டார்களா? என கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.

Vijay and Ajith fans worst clash in twitter

More Articles
Follows