நான் செஞ்ச வேலைக்கு ரஜினி செம கடுப்பாயிருப்பார்..: சாந்தனு பாக்யராஜ்

நான் செஞ்ச வேலைக்கு ரஜினி செம கடுப்பாயிருப்பார்..: சாந்தனு பாக்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and Shanthanuமலேசியா நாட்டில் நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலைவிழாவை முடித்துவிட்டு சென்னை திரும்பி வந்துக் கொண்டிருக்கின்றனர் தமிழக கலைஞர்கள்.

இதில் பங்கேற்ற பெரும்பாலான நடிகர், நடிகைகள் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

மேலும் சிலர் ரஜினி விமானத்தில் அமர்ந்திருக்கும்போது வரிசையாக நின்று படம் எடுத்து தங்கள் இணைய பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த வரிசையை முதலில் ஆரம்பித்து வைத்தவர் நடிகர் சாந்தனு பாக்யராஜ்தானாம்.

அவருக்கு ஆதவ் கண்ணதாசன் நன்றி சொல்ல, அட.. இந்த செயலுக்கு ரஜினி சார் என் மேல செம கடுப்புல இருப்பார் என ட்வீட் செய்துள்ளார்.

ஆனால் இறுதிவரை அவர் போட்டோ எடுக்கவில்லை என்பதையும் பதிவிட்டுள்ளார்.

Shanthnu Buddy‏Verified account @imKBRshanthnu

Shanthnu Buddy Retweeted Aadhav Kannadhasan

I’m sure @superstarrajini sir is going have mahaaaaa kaduppu on me for starting that pic que

Aadhav Kannadhasan‏Verified account @aadhavkk

@imKBRshanthnu Thank you sonuuu for this and for starting the big queue

Shanthnu Buddy‏Verified account @imKBRshanthnu 8m8 minutes ago

Shanthnu Buddy Retweeted KALEESHWARAN

எல்லாருக்கும் வழி அமைச்சு குடுத்து கடைசீல நா போட்டோ எடுக்கவே இல்லையே

மெரினா புரட்சி பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்

மெரினா புரட்சி பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan Soori Sathish joins hands with Director Pandirajகடந்த 2016ஆம் ஆண்டு இதே ஜனவரி மாதம் உலகையே திரும்பி பார்க்க வைத்தனர் நம் தமிழக இளைஞர்கள்.

அறவழியில் எந்தவொரு தலைமையில் இல்லாமல் ஜல்லிக்கட்டு மெரினா புரட்சியை நடத்தி சரித்திரத்தில் இடம்பெற்றனர்.

தற்போது ஓராண்டு நிறைவான நிலையில் இந்த புரட்சியை திரைப்படமாக்க இருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.

தன் பசங்க புரொடக்சன்ஸ் சார்பாக இந்த படத்தை தயாரிக்கிறார்.

எம்எஸ். ராஜ் என்பவர் இயக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, அல்லுருபியன் இசையமைக்கிறார்.

விரைவில் இதன் ட்ரைலர் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இதன் பர்ஸ்ட் லுக்கை சிவகார்த்திகேயன், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.

Sivakarthikeyan revealed Pandirajs Marina Puratchi first look

marina puratchi english

பொங்கலுக்கு டபுள் ட்ரீட்; இணைந்து கலக்கும் கீர்த்தி-அனிருத்

பொங்கலுக்கு டபுள் ட்ரீட்; இணைந்து கலக்கும் கீர்த்தி-அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

keerthy suresh and anirudhநடிகைகளில் கீர்த்தி சுரேஷ்ம், இசையமைப்பாளர்களில் அனிருத்தும் படுவேகமாக முன்னேறி வருகின்றனர்.

இவர்களின் படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இவர்கள் இருவரும் இணைந்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் பொங்கலுக்கு வெளியாகிறது.

இந்தப் படம் தெலுங்கில் கேங் என்ற பெயரில் வெளியாகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து தெலுங்கில் பவன் கல்யாண், கீர்த்தி சுரேஷ், அனு இம்மானுவேல் நடித்துள்ள ‘அஞ்ஞாதவாசி’ படமும் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகிறது.

இந்தப் படத்திற்கும் அனிருத்தான் இசை.

எனவே இவர்களது ரசிகர்களுக்கு அனிருத், கீர்த்தி தரும் பொங்கல் விருந்தாக அமையும் என சொல்லப்படுகிறது

ரஜினியின் பாபா முத்திரைக்கு சிக்கல்?; உரிமை கொண்டாடும் மும்பை நிறுவனம்

ரஜினியின் பாபா முத்திரைக்கு சிக்கல்?; உரிமை கொண்டாடும் மும்பை நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் அரசியல் அறிவிப்பை தெரிவிக்கும் போது பாபா முத்திரையை காட்டினார்.

தற்போது ரஜினி மக்கள் மன்றத்திலும் இந்த முத்திரையே லோகோவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால் இந்த பாபா முத்திரை தான் ரஜினி கட்சியின் சின்னமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த முத்திரை எங்கள் நிறுவனத்தின் லோகோ என்று மும்பையை சேர்ந்த வாக்ஸ்வெப் சமூக செயல்பாட்டு நெட்ஒர்க் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பாக ரஜினிக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் அந்த நிறுவனத்தின் தலைவர் யாஸ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த நிறுவனம் தொடங்கி இதுவரை 2 ஆண்டுகள் கூட முடியவில்லையாம்.

ரஜினிகாந்த் நடித்த பாபா படத்திலிருந்தே இந்த முத்திரை இந்தியாவில் படுபிரபலம் என்பது அந்த நிறுவனத்திற்கு தெரியாது போலவே.

பாபா படம் கடந்த 2002ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் நட்சத்திர விழா 2018; அவமானப்பட்டு திரும்பிய ஸ்டார்ஸ்.?

மலேசியாவில் நட்சத்திர விழா 2018; அவமானப்பட்டு திரும்பிய ஸ்டார்ஸ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Few stars insulted at Natchathira vizha 2018 at Malaysiaதென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக மலேசியாவில் நட்சத்திர கலைவிழா கடந்த 2 நாட்களாக (ஜனவரி 5, 6) நடத்தப்பட்டது.

இத்துடன் ஸ்டார் கிரிக்கெட் மற்றும் ஸ்டார் புட்பால் ஆகியவையும் நடத்தப்பட்டது.

இதில் கலந்துக் கொள்வதற்காக ரஜினி, கமல் உள்ளிட்ட பல கலைஞர்கள் மலேசியா சென்றனர்.

இந்த நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பும் உரிமையை சன்டிவி பெற்றுள்ளது.

இருந்தபோதிலும் பல புகைப்படங்கள் வீடியோக்கள் இணையங்களில் வெளியாகியது.

இந்த விழா சிறப்பாக நடந்து முடிந்து அனைவரும் சென்னை திரும்பி வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் பல நட்சத்திரங்கள் மலேசியா ஏர்போர்ட்டில் அவமானப்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதனை நிரூபிக்கும் வகையில் எஸ்.வி. சேகரும் நடிகர் சங்கத்தை தாக்கி மறைமுகமாக ட்விட்டரில் ஒரு பதிவை இட்டுள்ளார்.

S.VE.SHEKHER‏ @SVESHEKHER
வெளி நாட்டு நட்சத்திர கலைவிழாவை மிகச்சிறப்பாக ஒருவரைக்கூட அவமானப்படுத்தாமல், (ஏர்போர்ட் வரச்சொல்லி திருப்பி அனுப்பாமல்) சரிசமாக மிக கவுரவமாக நடத்தி, நடிகர் சங்க கடனை அடைத்த விஜயகாந்த் அவர்களை ஏனோ இப்போது நினைக்க தோன்றுகிறது. HATS OFF TO U CAPTAIN

Few stars insulted at Natchathira vizha 2018 at Malaysia

எஜமான்-சிங்காரவேலன்-சின்னக்கவுண்டர் படங்களின் 2ஆம் பாகம் எடுக்கும் ஆர்.வி. உதயகுமார்

எஜமான்-சிங்காரவேலன்-சின்னக்கவுண்டர் படங்களின் 2ஆம் பாகம் எடுக்கும் ஆர்.வி. உதயகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RV Udhyakumar plans to make sequels of Ejamaan Singaravelan and Chinna Gounder movie

கலைஞர்கள் எதிர்பார்ப்பது தனக்கான அங்கீகாரத்தை தான். அப்படிப்பட்ட அங்கீகாரம் தான் அவர்களுக்கு விருதுகளாக வழங்கப்படுகின்றன.

அந்தவகையில் 2௦17ஆம் வருடத்திற்கான ரைசிங் ஸ்டார் விருதுகள் வழங்கும் விழா சமீபத்தில் சென்னை ஆர்.கே.வி.ஸ்டுடியோஸில் நடைபெற்றது.

பாஸ்கர் மீடியா, ஆர்கேவி பிலிம் இன்ஸ்டிடியூட் இந்தியன் கிளாசிகல் ஆர்ட்ஸ் & கல்சுரல் ட்ரஸ்ட் மற்றும் ஆரோக்கியம் இனிப்பு துளசி சாறு ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த விழாவினை சிறப்பாக நடத்தின.

இவ்விழாவில் 2௦17ஆம் வருடத்திற்கான ரைசிங் ஸ்டார் விருதுகளை இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமாரும் பேரரசும் வழங்கி சிறப்பித்தார்கள்.

மேலும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருமதி கோ.கோமதி IRS அவர்கள் சாதனையாளர் விருதுகளை வழங்கினார். ஜாகுவார் தங்கம் பவர் ஸ்டார் மற்றும் தமிழ் நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் தலைவர் D.S.R சுபாஷ் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.

சிறந்த அறிமுக நடிகராக நந்தன் (பள்ளிப்பருவத்திலே), சிறந்த அறிமுக நடிகையாக அதிதி பாலன் (அருவி), சிறந்த வில்லனாக டேனியல் பாலாஜி (இப்படை வெல்லும்), சிறந்த இயக்குனராக அருண்பிரபு புருஷோத்தமன் (அருவி), சிறந்த கதாசிரியராக கோபி நயினார் (அறம்) சிறந்த அறிமுக இயக்குனராக ஜிப்ஸி ராஜ்குமார் (அய்யனார் வீதி), சிறந்த இசையமைப்பாளராக ஷாம் (விக்ரம் வேதா), சிறந்த மக்கள் தொடர்பாளராக செல்வரகு, இந்தியன் கல்ச்சுரல் அகடமி ஆசிரியர் மற்றும் நிறுவனர் மேரி மேக் மோகன் பால், ,அறிமுக நாயகன் லாபி பால் ஆகியோர் உட்பட பல பிரிவுகளில் சாதித்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசியதாவது…

“நீண்ட நாட்களுக்கு பிறகு விரைவில் படங்களை இயக்க முடிவு செய்துள்ளேன்.

நான் இயக்கவுள்ள படங்களுக்கு டைட்டில் பிரச்சனை வராது.

எஜமான்-2, சிங்காரவேலன்-2, சின்னக்கவுண்டர் 2 என டைட்டில்களை வைத்து விடுவேன்” என்றார்.

ரஜினிக்கு எஜமான், கமலுக்கு சிங்காரவேலன், விஜயகாந்த்துக்கு சின்னக் கவுண்டர் ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஆர்.வி. உதயகுமார்தான் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

RV Udhyakumar plans to make sequels of Ejamaan Singaravelan and Chinna Gounder movie

More Articles
Follows