‘ஜெயிலர்’ பட காவாலா பாட்டு.; சீமானுக்கு போன் போட்டு சமுத்திரக்கனி சரமாரி கேள்வி

‘ஜெயிலர்’ பட காவாலா பாட்டு.; சீமானுக்கு போன் போட்டு சமுத்திரக்கனி சரமாரி கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த், மோகன்லால், தமன்னா நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள ‘ஜெயிலர்’ ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இதில் ரஜினியுடன் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த்ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘ஜெயிலர்’ பட இசை வெளியீட்டு விழா வரும் ஜூலை 29ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த நிலையில் ‘காவலா…’ என்ற பாடல் ஓரிரு தினங்களுக்கு முன் வெளியானது. பொதுவாகவே ரஜினி பட பாடல்கள் என்றால் ரஜினியின் அறிமுக பாடல் அல்லது தத்துவ பாடல் ஏதாவது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தமன்னா குத்தாட்டம் போட்ட காவலா என்ற பாடல் வெளியானது.

இதனால் ரஜினி ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில் காவாலா பாடல் குறித்து பல மீம்ஸ்கள் உருவாகி வருகின்றன.

மேலும் ரஜினியை விட தமன்னா ஐட்டம் சாங் கிளாமருக்காக ‘ஜெயிலர்’ படத்தை பார்க்கலாம் எனவும் கலாய்த்து வருகின்றனர்.

அதில் ஒரு மீம்ஸ் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

அதில் ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் சமுத்திரக்கனி ஒரு காட்சியில் போன் போடும் காட்சியை பகிர்ந்துள்ளனர்.

அதில்…

Hello சீமான் அண்ணே வீடா, அண்ணே Englishல “Jailer” ன்னு Title வச்சிகிட்டு, ஒரு கன்னட நடிகர், ஒரு இந்திக்கார பொண்ணு கூட தெலுங்கு பாட்டுக்கு ஆடிட்டு இருக்காரு. கேட்டா தமிழ்ப் படம்ன்னு சொல்றாங்க. கொஞ்சம் என்னான்னு கேளுங்கண்ணே” என வாசகங்களை கொடுத்து டிசைன் செய்துள்ளனர்.

சமுத்திரக்கனி

Rajinis Jailer song Kaavaalaa troll goes viral

‘டிக்கி டிக்கி டா’ கூட்டணியில் தர்புகா – ஷிவாங்கி – அசல் கோளாறு

‘டிக்கி டிக்கி டா’ கூட்டணியில் தர்புகா – ஷிவாங்கி – அசல் கோளாறு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசையுலகில் தனித்துவம் வாய்ந்த சுயாதீன பாடல்களை வெளியிட்டு வரும் முன்னணி ஆடியோ நிறுவனமான சரிகம.. அசல் பாடல்களையும், சுயாதீன இசை ஆல்பங்களின் வீடியோவையும் வெளியிட்டு வருகிறது.

அந்த வரிசையில் தற்போது ‘டிக்கி டிக்கி டா’ எனும் பெயரில் சுயாதீன பாடல் ஒன்றையும், அதற்கான பிரத்யேக காணொளியையும் வெளியிட்டிருக்கிறது.

இந்த பாடலுக்கு தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார். பாடலை மதன் கார்க்கி மற்றும் பாடலாசிரியரும், பாடகருமான அசல் கோளாறு ஆகியோர் இணைந்து எழுதி இருக்கிறார்கள்.

இந்தப் பாடலை அசல் கோளாறு, தர்புகா சிவா மற்றும் ஷிவாங்கி ஆகியோர் இணைந்து பாடி, ஆடி நடித்திருக்கிறார்கள்.

இந்த வீடியோ இசை ஆல்பத்தை மல்லிகா அர்ஜுன் ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பாளரும், பாடகருமான தர்புகா சிவா இயக்கியிருக்கிறார்.‌

இந்த பாடலை எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனமும், டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது.

ஃபங்க் சாங் பாணியில் தயாராகி இருக்கும் இந்த பாடலில் அசல் கோளாறுவின் ராப் இசை பாடல்கள் இளைய தலைமுறையினரை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

சரிகம லெட்ஸ் கோ லைவ் நிகழ்ச்சியில் இந்த பாடல் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Ticky Ticky Taa Music Video song launch

‘அஸ்வின்ஸ்’ போல ரிப்பீட் ஆடியன்ஸ் எந்த படத்திற்கு வரவில்லை.. – வசந்த்ரவி

‘அஸ்வின்ஸ்’ போல ரிப்பீட் ஆடியன்ஸ் எந்த படத்திற்கு வரவில்லை.. – வசந்த்ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தருண் தேஜா இயக்கத்தில் வசந்த் ரவி, விமலா ராமன், சரஸ்வதி மேனன் உள்ளிட்டோர் நடித்த ஹாரர் படம் ‘அஸ்வின்ஸ்’.

இந்த படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்த விழாவில்…

நடிகர் வசந்த்ரவி பேசியதாவது…

“வளர்ந்து வரக்கூடிய நடிகருக்கு வெற்றி என்பது மிக முக்கியமானது. இதற்கு காரணமாக இருந்த என்னுடைய தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பாபி சார் தமிழில் இனி பெரிய படங்கள் தயாரிப்பார்.

அதற்கு ‘அஸ்வின்ஸ்’ முதல் படமாக இருக்கும் என்று சொன்னேன். அதுதான் இப்போது நடந்திருக்கிறது. தருண் ஒரு எனர்ஜியான இயக்குநர். ‘ராக்கி’ அருண் எப்படி இப்போது தனுஷை வைத்து ‘கேப்டன் மில்லர்’ இயக்குகிறாரோ அதுபோல தருணுக்கும் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும்.

என்னுடன் நடித்த அனைவருக்கும் நன்றி. தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சிறப்பான பணியைக் கொடுத்துள்ளனர். இந்தப் படத்திற்கு தியேட்டர் விசிட் போனபோது, பார்வையாளர்கள் கொடுத்த வரவேற்பு அவ்வளவு எமோஷனலாக இருந்தது.

இதுபோல, ரிப்பீட் ஆடியன்ஸ் சமீப காலத்தில் எந்தவொரு படத்திற்கும் வரவில்லை. இது எங்களுக்கு ரொம்பவே ஸ்பெஷல். படத்தின் இரண்டாவது பாகம் குறித்தான அறிவிப்பு சீக்கிரம் வரலாம்” என்றார்.

Vasanth Ravi speech at asvins movie success meet

வசந்த் ரவியின் படம் தனுஷ் படத்தைப் போல கொண்டாடப்பட வேண்டியது – சக்திவேல்

வசந்த் ரவியின் படம் தனுஷ் படத்தைப் போல கொண்டாடப்பட வேண்டியது – சக்திவேல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தருண் தேஜா இயக்கத்தில் வசந்த் ரவி, விமலா ராமன், சரஸ்வதி மேனன் உள்ளிட்டோர் நடித்த ஹாரர் படம் ‘அஸ்வின்ஸ்’.

இந்த படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்த விழாவில்…

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேல் பேசியதாவது…

“எல்லாப் படங்களும் வெற்றிப் பெறும்போது திருப்தி கிடைக்கும். ஆனால், ‘அஸ்வின்ஸ்’ வெற்றிப் பெற்றிருக்கும்போது எனக்கு ஒரு கேள்வி எழுந்தது. நான் எதிர்பார்த்த வெற்றி இந்தப் படத்திற்கு கிடைக்கவில்லை என்றால் மிகப்பெரிய அதிருப்தி கிடைத்திருக்கும்.

ஆனால், அதை எல்லாம் தகர்த்து இப்படி ஒரு வெற்றி விழாவில் அனைவரையும் சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

வசந்த் ரவி நடித்திருந்த ‘ராக்கி’ திரைப்படம் தனுஷ் சாரின் ‘புதுப்பேட்ட’ போன்று கொண்டாடப்பட வேண்டிய ஒரு படம்.

’அஸ்வின்ஸ்’ எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் நான் போய் பார்த்த ஒரு படம். வசந்த்ரவி, விமலாராமன், சரஸ்வதி என எல்லாருமே சிறப்பாக நடித்துள்ளனர். தொழில்நுட்ப ரீதியாகவும் சிறந்த சினிமா அனுபவத்தை இது கொடுத்திருக்கிறது. அவ்வளவு மகிழ்ச்சியாக வெளியிட்டேன். வசந்த்ரவி சார், இயக்குநர் என படக்குழுவின் அனைவருக்கும் கிடைத்துள்ள இந்த வெற்றி நியாயமானது”.

distributor sakthivelan speech at asvins movie success meet

‘அஸ்வின்ஸ்’ விமர்சனத்தில் சவுண்ட் என்ஜினியர் வரை பாராட்டினர் – வியப்பில் விமலா ராமன்

‘அஸ்வின்ஸ்’ விமர்சனத்தில் சவுண்ட் என்ஜினியர் வரை பாராட்டினர் – வியப்பில் விமலா ராமன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தருண் தேஜா இயக்கத்தில் வசந்த் ரவி, விமலா ராமன், சரஸ்வதி மேனன் உள்ளிட்டோர் நடித்த ஹாரர் படம் ‘அஸ்வின்ஸ்’.

இந்த படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்த விழாவில்…

நடிகை விமலா ராமன் பேசியதாவத…

“’அஸ்வின்ஸ்’ படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. எங்கள் படத்திற்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரக்கூடிய சக்தி சாருக்கு நன்றி. தயாரிப்பாளர்கள் பிரசாத் சார், பாபி சார், பிரவீன் சாருக்கு நன்றி. படத்தின் விமர்சனம் நான் பார்த்த வரையில் படத்தொகுப்பு, சவுண்ட் மிக்ஸிங், மியூசிக் என அனைத்து டிபார்ட்மெண்ட்டையும் பாராட்டி இருந்தார்கள்.

என்னுடைய சக நடிகர்கள் எல்லாருமே அற்புதமாக ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். என்னுடைய இயக்குநர் தருணுக்கும் ஆதரவு கொடுத்த பார்வையாளர்களுக்கும் நன்றி”.

இயக்குநர் தருண் தேஜா பேசியதாவது…

“நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்தக் கதையை நான் எழுதும்போதே பார்வையாளர்களுக்கு நல்லதொரு ஹாரர் சினிமாட்டிக் எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்க வேண்டும் என்றுதான் எழுதினேன். அது சரியாக போய் சேர்ந்திருக்கிறது என்றுதான் நினைக்கிறேன்.

இரண்டு, மூன்று முறை பார்வையாளர்கள் திரும்ப வந்து பார்க்கிறார்கள் என்று சொல்லும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய தயாரிப்பாளர்கள் கிடைக்க நான் பாக்கியம் செய்திருக்கிறேன்.

என்னுடைய குறும்படம் பார்த்து பாராட்டி வாய்ப்பு கொடுத்த பிரவீன் சாருக்கும் பாபி சாருக்கும் பிரசாத் சாருக்கும் நன்றி. படமாக உருவான பின்பு சக்தி சார் அவ்வளவு ஆதரவு கொடுத்தார்.

மிகச்சிறந்த உழைப்பைக் கொடுத்த என்னுடைய ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், எடிட்டர் என அனைவருக்கும் நன்றி. நடிகர்கள் யாரையும் அதிகம் தொந்தரவு செய்யவில்லை என நினைக்கிறேன்.

வொர்க்‌ஷாப்பில் அனைவரும் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தனர். என்னுடைய குறும்படம் பார்த்துவிட்டு தயாரிப்பாளரிடம் கூட்டிச் சென்றதே விமலாராமன் மேம்தான். அவர் எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்திருக்கிறார். நடிகர் என்பதையும் தாண்டி அஸ்வின் எனக்கு நல்ல சகோதரர். கிளைமாக்ஸில் வசந்த் ரவியின் கடின உழைப்பு பாராட்டுதலுக்குரியது”.

தயாரிப்பாளர் BVSN பிரசாத் பேசியதாவது, “இந்தப் படத்திற்கு ஆதரவு கொடுத்து வெற்றிக் கொடுத்த அனைவருக்கும் நன்றி”

சவுண்ட் டிசைனர் சக்தி பேசியதாவது, “தயாரிப்பாளர், இயக்குநர், படக்குழு அனைவருக்கும் நன்றி. படம் யாரும் இன்னும் பார்க்காமல் இருந்தால் பார்த்துவிடுங்கள்”.

Actress Vimala Raman speech at asvins movie success meet

எனக்குள்ள திறமையை வெளிக் கொண்டு வந்தார் இயக்குநர்.. – சரஸ்வதி மேனன்

எனக்குள்ள திறமையை வெளிக் கொண்டு வந்தார் இயக்குநர்.. – சரஸ்வதி மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தருண் தேஜா இயக்கத்தில் வசந்த் ரவி, விமலா ராமன், சரஸ்வதி மேனன் உள்ளிட்டோர் நடித்த ஹாரர் படம் ‘அஸ்வின்ஸ்’.

இந்த படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்த விழாவில்…

நடிகை சரஸ்வதி மேனன்…

“பொதுவாக ஹாரர் படம் பார்ப்பதில் நான் ஆர்வம் காட்டுவதில்லை. அதனால், எனக்கு படத்தில் எப்படி பயமுறுத்துவது என்று தெரியவில்லை. ஆனால், எனக்குள் அப்படி ஒரு திறமை இருப்பதை வெளிக் கொண்டு வந்தது ‘அஸ்வின்ஸ்’தான். எட்வின் சார், பாலா சார், விமலா மேம் என அனைவருக்கும் நன்றி. ஊடகங்களுக்கும் பார்வையாளர்களுக்கும் நன்றி. எனக்கு இந்த முதல் வெற்றியைக் கொடுத்துள்ளீர்கள். படம் 50வது நாள் வரை செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது”.

actress Saraswathi Menon speech at asvins movie success meet

More Articles
Follows