800 தியேட்டர்களில் ரிலீஸ்.; டாப் ஸ்டார்ஸ் வரிசையில் இணைந்தார் லெஜண்ட் சரவணன்

800 தியேட்டர்களில் ரிலீஸ்.; டாப் ஸ்டார்ஸ் வரிசையில் இணைந்தார் லெஜண்ட் சரவணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லெஜண்ட் சரவணன் நடிக்கும் ‘தி லெஜண்ட்’ படத்தை தமிழகம் எங்கும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் கோபுரம் சினிமாஸ் சார்பாக ஜி என் அன்புச்செழியன் வெளியிடுகிறார்*

லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து அதிரடி நாயகனாக அறிமுகமாகும் ‘தி லெஜண்ட்’ படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது.

இப்படத்தின் டிரைலர் 29 மில்லியன் பார்வைகளையும், மொசலோ மொசலு பாடல் 14 மில்லியன் மற்றும் வாடிவாசல் பாடல் 18 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ள நிலையில், முதல் படம் வெளிவருவதற்கு முன்பே தான் ஒரு லெஜண்ட் என தடம் பதித்திருக்கிறார் லெஜண்ட் சரவணன்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடித்த பல வெற்றி படங்களை தமிழகம் எங்கும் விநியோகம் செய்து ராசியான, சக்சஸ்ஃபுல் விநியோகஸ்தர் என பெயர் எடுத்த கோபுரம் சினிமாஸ் ஜி என் அன்புச்செழியன், ‘தி லெஜண்ட்’ படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்து “என் கணிப்பின் படி முதல் படத்திலேயே உச்ச நட்சத்திரங்கள் வரிசையில் லெஜண்ட் சரவணன் இணைகிறார்” என்று பாராட்டி, நிச்சயம் இப்படம் மாபெரும் வெற்றி பெறும் எனக் கூறி அதிக முன் பணம் கொடுத்து தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறார்.

மேலும், தமிழகம் எங்கும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தை அவர் வெளியிட முடிவு செய்து உறுதி செய்தார்.

முதல் படத்திலியே அதிக பணம் கொடுத்து பெறப்பட்ட படம், மற்றும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் படம் என்கிற பெருமை லெஜண்ட் சரவணனுக்கு மட்டுமே கிடைத்துள்ளது என்று திரைத்துறை மற்றும் திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எமோஷன், ஆக்ஷன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து மக்களும் மீண்டும் மீண்டும் படம் பார்க்கும் வகையில், சினிமா பாணியில் சொல்வதென்றால் ரிபீட் ஆடியன்ஸை வரவழைக்கும் ஒரு பக்கா கமர்சியல் மாஸ் படமாக பான் இந்தியா அளவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் ஜூலை 28 அன்று வெளியாகவுள்ளது .

தமிழகத்தை போல மற்ற மொழிகளிலும் அதிக திரையரங்குகளில் வெளியாகும் என வெளிநாடு மற்றும் அனைத்து மொழிகளில் வெளியீட்டு உரிமையை வாங்கிய விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

தனி பாடல் மூலம் உலகமெங்கும் பிரபலமான மும்பை மாடல் ஊர்வசி ரவுத்தலா தி லெஜண்ட் திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். தங்கள் தனி திறமையால் முத்திரை பதித்து அனைத்து மொழியிலும் பிரபலமான தொழில்நுட்ப கலைஞர்கள் ‘தி லெஜண்ட்’ படத்தில் லெஜெண்ட் சரவணனுடன் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

ஒரு அன்பான எளிய மனிதன் தனது புத்திசாலித்தனத்தாலும், முயற்சியாலும், வலிமையாலும் அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி ‘ஒரு லெஜண்டாக’ எப்படி உருவாகிறான் என்ற கருத்தை மையமாக வைத்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அணைத்து தரப்பினரும் ரசித்து மீண்டும் மீண்டும் பார்க்கும் வகையில் அனைவரின் மனதிலும் ஒரு மிக பெரிய பாசிட்டிவ் எண்ணத்தை உணரும் வகையில் திரைக்கதையும் வசனமும் எழுதப்பட்டிருக்கிறது.

ஜனரஞ்சக கலைஞன் என அனைவராலும் பாராட்டப்பட்ட விவேக் கடைசியாக நடித்த படம் மட்டுமன்றி, இப்படம் தனக்கு ஒரு முக்கியமான படம் என பல நேரங்களில் லெஜண்ட் சரவணன் மற்றும் படக்குழுவினருடன் அவர் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்றைய முன்னணி நகைச்சுவை நாயகன் யோகி பாபு முக்கிய வேடத்தில் லெஜண்ட் சரவணனுடன் படத்தில் பயணிக்கிறார்.

படத்தில் இடம்பெறும் அனைத்து கதாபாத்திரங்களிலும் பிரபல நட்சத்திரங்கள் லெஜண்ட் சரவணனுடன் இணைந்துள்ளனர்.

Legend Saravanan joins the rank of top stars

ஹரி – ஷீலா ஜோடியாக நடிக்கும் படத்தை தொடங்கி வைத்தார் ரஞ்சித்

ஹரி – ஷீலா ஜோடியாக நடிக்கும் படத்தை தொடங்கி வைத்தார் ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ், விஜயலஷ்மி தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நடிகர் ஹரி கிருஷ்ணன் நாயகனாக நடிக்கிறார்.

இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் ஜானியாக தோன்றி அனைவரையும் கவர்ந்த நடிகர் ஹரிகிஷ்ணன்.

இவர் கபாலி மற்றும் ரைட்டர் திரைப்படங்களில் முக்கியமான வேடம் ஏற்று நடித்திருந்தார்.

இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

நாயகியாக டூலெட், மண்டேலா திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் உள்ளம் கவர்ந்த நடிகை ஷீலா ராஜ்குமார் நடிக்கிறார்.

கோல்டன் சுரேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்குகிறார். A.குமரன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, வெங்கட் ரமணன் படத்தொகுப்பை மேற் கொள்கிறார்.

சிவசங்கர் வசனம் எழுதுகிறார். ஸ்டில் கேமரா மேனாக M.குமரேசன் பணிபுரிய, புரொடக்‌ஷன் மேனேஜராக T.ராஜன், மக்கள் தொடர்பாளராக A. ஜான் பணிகளை மேற்கொள்கின்றனர்.

இந்தப்படத்தின் துவக்க விழா சென்னையில் ஜூலை-6 (இன்று) நடைபெற்றது. இயக்குநர் பா.ரஞ்சித் இந்த தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டு இப்பட பணிகளை துவங்கி வைத்தார்.

நடுத்தர வர்க்கத்தின் அன்றாட வாழ்கையில் நடக்கும் எதார்த்தமான கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிகழவிருக்கிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

தயாரிப்பாளர்: கோல்டன் சுரேஷ், விஜயலஷ்மி
நடிகர்கள்: ஹரிகிஷ்ணன், ஷீலா ராஜ்குமார்
இயக்குநர்: ஜஸ்டின் பிரபு
ஒளிப்பதிவு: A.குமரன்
படத்தொகுப்பு: வெங்கட் ரமணன்
வசனம்: சிவசங்கர்
ஸ்டில்ஸ் : M.குமரேசன்
புரொடக்‌ஷன் மேனேஜர்: T.ராஜன்
மக்கள் தொடர்பு: A. ஜான்
தயாரிப்பு நிறுவனம்: மஞ்சள் சினிமாஸ்

Director Ranjith launches the new film starring Hari and Sheela Rajkumar

உயிருக்கு போராடும் மக்களை காக்க களத்தில் இறங்கிய விஜய் மக்கள் இயக்கம்

உயிருக்கு போராடும் மக்களை காக்க களத்தில் இறங்கிய விஜய் மக்கள் இயக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளைஞர்கள் சக்தியை பயனுள்ளதாக மாற்றும் விதமாகத்தான் தளபதி விஜய்யின் ரசிகர்கள், விஜய் அகில இந்திய நற்பணி இயக்கம் மூலமாக தொடர்ந்து பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

அடித்தட்டு மக்களுக்கு உணவுப்பொருட்கள், அவர்கள் வாழ்வாதாரத்திற்கான தையல் மிஷின், இஸ்திரி பெட்டி உள்ளிட்ட உபகரணங்கள், மாணவர்களுக்கான கல்வி உதவி என தேவைப்படுவோருக்கு தேவையான உதவிகளை விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி என் ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின் படி உரிய நேரத்தில் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது தளபதி விஜய் மக்கள் இயக்கத்தால் தொடங்கப்பட்டுள்ள புதிய முன்னெடுப்பு தான் ‘தளபதி விஜய் குருதியகம்’..

ஆம்.. தானத்தில் சிறந்தது ரத்த தானம் என்பார்கள்.. அந்த ரத்த தானம் மக்களுக்கு எளிதாக கிடைக்கும் புதிய வழிமுறை தான் இந்த ‘தளபதி விஜய் குருதியகம்’..

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் பலர் உரிய நேரத்தில் தேவைப்படும் ரத்தம் கிடைக்காமல் உயிரிழந்த நிகழ்வுகள் பல உண்டு. இந்த நிலை இனியும் தொடரக்கூடாது என்கிற விதமாகத்தான் ‘தளபதி விஜய் குருதியகம்’ என்கிற செயலியை (Mobile App) உருவாக்கியுள்ளனர் விஜய் மக்கள் இயக்கத்தினர்.

இந்த செயலி மூலம் பல லட்சக்கணக்கான இளைஞர்களை ஒன்றிணைத்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் ரத்த தான சேவையை வழங்க இருக்கிறார்கள்.

ரத்த தானம் வழங்க முன்வருவோர் தங்களை இணைத்து கொள்ளவும் ரத்தம் தேவைப்படும் பயனாளிகள் பெற்றுக்கொள்ளவும் உறுதுணையாக இருக்கும் விதமாக இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

Vijay Makkal Iyakkam has entered the field to protect the people who are fighting for their lives

மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் ‘காட் பாதர்’ ஃபர்ஸ்ட் லுக்

மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் ‘காட் பாதர்’ ஃபர்ஸ்ட் லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் ‘காட் ஃபாதர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அதற்கான வீடியோ வெளியாகியிருக்கிறது.

அத்துடன் நவராத்திரி திருவிழா கொண்டாட்டத்தின் போது ‘காட் ஃபாதர்’ திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கொனிடேலா புரொடக்ஷன்ஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்டமான திரைப்படம் ‘காட் ஃபாதர்’. மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை முன்னணி இயக்குநரான மோகன் ராஜா இயக்கியிருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கான வீடியோ, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் ‘காட் ஃபாதர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கிற்கான காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி முதன் முறையாக ஸ்போர்ட்ஸ் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கருப்பு நிற ஆடை அணிந்து நாற்காலியில் தனக்கே உரிய பாணியில் ஸ்டைலாக அமர்ந்தபடி தோற்றமளிப்பது ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது.

முன்னணி இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘காட்ஃபாதர்’ படத்தின் காணொளியில்.. சிரஞ்சீவி கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் காட்சி இடம்பெற்றுள்ளது.

இதில் ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள் அவருக்காக அலுவலகத்திற்கு வெளியே காத்திருக்கின்றனர். அதன்போது மெகா ஸ்டார் சிரஞ்சீவி காரில் வருகிறார். ‌ அந்த காரிலிருந்து இறங்கி ஆவேசமாக அலுவலகத்திற்குள் செல்லும் காட்சியும்.., அதன் போது ‘காட் ஃபாதர்’ என்ற தலைப்பு தோன்றுவதும் பொருத்தமாக இருக்கிறது. மேலும் அவரது கதாபாத்திரம் திரையில் தோன்றும் பொழுது எஸ். எஸ். தமனின் பின்னணியிசை ரசிகர்களை உற்சாகப்பட வைக்கிறது.

எஸ். எஸ். தமனின் அற்புதமான பின்னணியிசையில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியை வித்தியாசமான தோற்றத்தில் பார்க்கும் பொழுது, ‘ காட் ஃபாதர்’ மாஸ் எண்டர்டெயின்மென்ட் படமாக இருக்கும் உறுதி என்பது தெரிய வருகிறது.

மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர்கள் ஆர். பி. சௌத்ரி மற்றும் என். வி. பிரசாத் தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை கொனிடேலா சுரேகா வழங்குகிறார்.

இந்த திரைப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார்.

இவருடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநர் பூரி ஜகன்நாத் மற்றும் நடிகர் சத்யதேவ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தில், கலை இயக்குனராக சுரேஷ் செல்வராஜன் பணியாற்றுகிறார்.

இந்த ‘காட் ஃபாதர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கான காணொளியுடன் இந்தத் திரைப்படம் நவராத்திரி திருவிழா கொண்டாட்டத்தின் போது வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல்

திரைக்கதை & இயக்கம் மோகன் ராஜா
தயாரிப்பாளர்கள் ஆர் . பி சௌத்ரி & என் வி பிரசாத்
வழங்குபவர் கொனிடேலா சுரேகா
தயாரிப்பு நிறுவனம் கொனிடேலா புரொடக்சன்ஸ் & சூப்பர் குட் பிலிம்ஸ்
இசை எஸ் எஸ் தமன்
ஒளிப்பதிவு நிரவ் ஷா
கலை இயக்கம் சுரேஷ் செல்வராஜன்
தயாரிப்பு வடிவமைப்பு வகாடா அப்பாராவ்

Megastar Chiranjeevi –Mohan Raja – Konidela Productions And Super Good Films – Godfather First Look Out, Theatrical Release For Dasara

காமிக்ஸ் போஸ்டரில் மாதம்பட்டி ரங்கராஜ் – வாணி போஜன் இணைந்த ‘கேசினோ’

காமிக்ஸ் போஸ்டரில் மாதம்பட்டி ரங்கராஜ் – வாணி போஜன் இணைந்த ‘கேசினோ’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாதம்பட்டி சினிமாஸ் & MJ Media Factory தயாரிப்பில், இயக்குநர் மார்க் ஜோயல் இயக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும் “கேசினோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டார்.

புதுமையான வகையில், ஒரு இரவில், ஒரு கட்டிடத்திற்குள் நடக்கும் பரபரப்பு சம்பவங்களை மையப்படுத்தி, ஒரு பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே புதுமையான வகையில் ஒரு காமிக்ஸ் போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஃபர்ஸ்ட் லுக்கில் ஒரு குழுவின் துப்பாக்கி சண்டை, பணத்தை தேடி ஓடும் பாத்திரம் ஆகியவை காட்டப்பட்டுள்ளது.

இந்த காட்சிகள் ரசிகர்களை இருக்கை நுனியில் வைத்திருக்கும் பரபரப்பான திரில்லராக இருக்கும் என்பதை உறுதி செய்கிறது. புதுமையான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக் வெளியான வேகத்தில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் முழுக்க கோயம்புத்தூரில், இரவில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் காட்சிகளில் 70 சதவீதம் ஒரு கட்டிடத்திற்குள் நடக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.

மெஹந்தி சர்க்கஸ் நாயகன் மாதம்பட்டி ரங்கராஜ் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, வாணி போஜன் நாயகியாக நடித்துள்ளார்.

இவர்களுடன் ரமேஷ் திலக், ஜான் மகேந்திரன், ‘எரும சாணி’ அமர் கீர்த்தி, நக்கலைட்ஸ் செல்லா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

தொழில்நுட்ப குழுவில் : எழுத்து,படத்தொகுப்பு, இயக்கம்: மார்க் ஜோயல், ஒளிப்பதிவு: விக்னேஷ் J.K, இசை: தினேஷ் நாகராஜன் & ஸ்டான்லி சேவியர், நிர்வாக தயாரிப்பாளர்: முகேஷ் சர்மா கலை மற்றும் தலைமை இணை இயக்குநர்: அமர் கீர்த்தி, விளம்பர வடிவமைப்பு: தீபக் போஜ்ராஜ் ஆடை வடிவமைப்பு: நித்யா கார்த்திகா, மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

கேசினோ படத்தின் டீசர், டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Madhampatti Rangaraj-Vani Bhojan’s ‘Casino’ in Comics Poster

உலகளவில் ‘கடைசி விவசாயி’ முன்னிலை.: ராஜமௌலி கமலை பின்னுக்கு தள்ளிய விஜய்சேதுபதி

உலகளவில் ‘கடைசி விவசாயி’ முன்னிலை.: ராஜமௌலி கமலை பின்னுக்கு தள்ளிய விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லெட்டர் பாக்ஸ்டி என்ற நிறுவனம் உலகளவில் திரைப்படங்கள் குறித்து மதிப்பிட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது 2022ஆம் ஆண்டின் முதல்பாதியின் மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது.

ஜனவரி முதல் ஜூன் வரை முதல் 6 மாதங்களில் வெளியான படங்களை இந்த நிறுவனம் தரவரிசைப்படுத்தி உள்ளது.

அதில், மணிகண்டன் தயாரித்து இயக்கி, விஜய் சேதுபதி, யோகிபாபு சிறப்பு வேடத்தில் நடித்திருந்த ‘கடைசி விவசாயி’ திரைப்படத்துக்கு 2ஆம் இடம் கிடைத்துள்ளது.

ராமசாமி என்ற 80 வயது மதிக்கத்தக்க நபர் இதில் கதையின் நாயகனாக நடித்திருந்தார்.

இந்த படம் வெளியாவதற்கு முன் அவர் கொரோனா கால கட்டத்தில் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் 5 இடங்களில் ‘கடைசி விவசாயி’ என்ற தமிழ் படம் மட்டுமே இடம்பெற்றுள்ளது.

கடைசி விதை..; கடைசி விவசாயி விமர்சனம் 3.75/5

ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் 6வது இடத்திலும் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் 11வது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi who pushed Rajamouli and Kamal Haasan back

More Articles
Follows