கோலிவுட்டில் புதிய தயாரிப்பு நிறுவனம்.; சதீஷ் – சௌந்தரராஜன் நேரில் வாழ்த்து

கோலிவுட்டில் புதிய தயாரிப்பு நிறுவனம்.; சதீஷ் – சௌந்தரராஜன் நேரில் வாழ்த்து

செ பிக்சர்ஸ் எனும் புதிய தயாரிப்பு நிறுவனம் சிறிய முதலீட்டில் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களை தயாரிக்வுள்ளன.

இதன் முதல் படியாக அறிமுக இயக்குனர் தினேஷ் தீனதயாளன் இந்நிறுவனத்தின் முதல் படத்தை இயக்கவுள்ளார்.

இந்நிறுவனத்தின் துவக்க விழா ரோஸ் வாட்டர் எனும் தனியார் ஹோட்டலில் நடந்தது.

இதில் காமெடி நடிகர் சதீஷ், நடிகர் சௌந்தரராஜன், தளபதி தினேஷ், பெசன்ட் நகர் ரவி, இயக்குனர் விஜய் அதிராஜ் , நடிகர் மாரிமுத்து, நடிகர் அபிஷேக், நடிகர் திலிபன், போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் செ பிக்சர்ஸ் செல்வகுமார் முத்து, புகழேந்தி, உமா புகழேந்தி வரவேற்றனர்.

Sathish and Soundararajan participated in SEI pictures launch

4 படங்களில் 4 திசைகளையும் திரும்ப வைத்தவர் லோகேஷ்.; பாரதிராஜா பாராட்டு

4 படங்களில் 4 திசைகளையும் திரும்ப வைத்தவர் லோகேஷ்.; பாரதிராஜா பாராட்டு

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் இமயம் பாரதிராஜா, , இயக்குனர் லோகேஷ் கனகராஜ், மூத்த பத்திரிகையாளர் தேவிமணி, சிகரம் குழும நிறுவனர் சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டு விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தனர்.

இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக இயக்குனர் பாரதிராஜா அவர்களுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் ஆளுயர ரோஜா மாலையும், மலர் கிரீடமும், நினைவு பரிசும் வழங்கி இயக்குனர் இமயத்தின் 40 ஆண்டுகால கலைப்பயணத்தை பாராட்டி கௌரவம் செய்யப்பட்டது.

கூடவே, வாழ்த்து மடலும் வாசித்து அளிக்கப்பட்டது.

தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் நினைவு பரிசு கொடுத்து கௌரவம் செய்தார்.

விழாவில் லோகேஷ் கனகராஜ் பேசுகையில்…

பாரதிராஜா சாரை என் வாழ்நாளில் ஒரு முறை தான் பார்த்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சியின் மூலம் அவருடன் அருகில் அமரும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கிறேன். என்னுடைய முதல் படம் துவங்கி இப்போது ‘விக்ரம்’ வரையிலும் பத்திரிக்கையாளர்களின் பங்கு என் வாழ்நாளில் நிச்சயம் ஈடு செய்ய முடியாதது.

இதை மாநகரம் சந்திப்பில் கூட சொல்லியிருந்தேன் இந்த படத்தில் நடித்தவர்கள் பலரையும் மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை பத்திரிக்கையாளர்களான உங்களால் மட்டுமே இந்த படத்தை கொண்டு போய் சரியான முறையில் சேர்க்க முடியும் என தெரிவித்திருந்தேன்.

அதன்படி பத்திரிகையாளர்கள் எனக்கு கொடுத்த ஆதரவு தான் இன்று இப்போது இந்த இடத்தில் நான் நான் நிற்க காரணம். ஒவ்வொரு கட்டத்திலும் உங்களின் ஆதரவும் உதவியும் சொற்களால் அடக்க முடியாது எப்போது எங்கு நீங்கள் கூப்பிட்டாலும் நான் வர கடமைப்பட்டிருக்கிறேன். இப்படிப்பட்ட விழாவில் நான் நிற்பதை பெருமையாக கருதுகிறேன் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.

தொடர்ந்து இயக்குனர் இமயம் பாரதிராஜா பேசுகையில்…

என் இனிய பாசத்திற்கும் அன்பிற்கும் உரிய பத்திரிகையாளர்களே என அவர் பாணியிலேயே ஆரம்பித்து தொடர்ந்து பேசினார், பல வருடங்களாக சினிமா பத்திரிக்கையாளர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். தற்போது விமர்சனம் செய்வதில் நிறைய மாற்றங்கள் உண்டாகி இருக்கின்றன. விமர்சனம் திட்டாமல் மனம் நோகாமல் விமர்சனம் செய்வதை இக்கால தலைமுறையினர் கடைபிடிக்கின்றனர் சந்தோஷமாக இருக்கிறது நன்றி.

நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் நட்பாக பாசமாக கலந்து கொண்டது இந்நிகழ்ச்சியில்தான்.

இதில் பல முகங்களை 40 வருடங்களுக்கும் மேலாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். எத்தனையோ நிகழ்ச்சிகள் டெல்லி, மும்பை என பார்த்துவிட்டேன் ஆனால் ஊடகங்கள் என்னை அழைத்து பாராட்டுவது … நினைக்கும் போது நான் பாக்கியமாக கருதுகிறேன். நெகிழ்ச்சியில் இருக்கும் போது வார்த்தைகள் வசப்படாது அப்படியான ஒரு தருணத்தில் தான் இப்போது நான் இருக்கிறேன்.

இந்த சங்கத்தை சுமார் நான்கு வருடங்களுக்கு மேல் ஒரு பெண் தலைவியாக கவிதா கட்டி இழுத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

அப்போதிருந்த பாரதிராஜா வேறு இப்போது இருக்கும் பாரதிராஜா வேறு இப்போது பொறுமையும் பக்குவமும் அதிகரித்துவிட்டது இப்போது இருக்கும் இளைஞர்கள் மிகச்சரியாக கணித்து விமர்சனங்கள் செய்கின்றனர் அந்த அளவிற்கு பக்குவ நிலை அவர்களிடம் உள்ளது.

லோகேஷ் கனகராஜ் குறித்து அவர் மேலும் பேசுகையில்…

“நான்கே படங்களில் நான்கு திசைகளையும் திரும்பிப் பார்க்க வைத்து விட்டார். விக்ரம் படம் பார்த்துவிட்டு அவருக்கு அழைத்து பேசினேன் அவரைப் பார்த்தது கூட இல்லை விக்ரம் படத்திற்கு பிறகு தான் அவருடைய முந்தைய படங்களை பற்றி தெரிந்து கொண்டேன்.

ஏராளமான கனவுகளும் கற்பனைகளும் சூழ உள்ளே வந்த லோகேஷ் கனகராஜிடம் மிகப்பெரிய கலை ஞானம் உள்ளது.

கமல் ஒரு அற்புதமான கலைஞர் சினிமாவிற்காக பல விஷயங்களை இழந்திருக்கிறார் அப்படிப்பட்டவருக்கு இப்படி ஒரு படம் தான் இதுவரை இழந்த அத்தனையையும் முதலீடாக அள்ளிக் கொடுத்திருக்கிறது. அதற்குக் காரணம் லோகேஷ் கனகராஜ் தான்.

இப்படியான இயக்குனர்கள் எல்லாம் பார்க்கும் பொழுது இவர்களுடன் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் இப்போது வரை அடங்கவே இல்லை. நான்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன், இரண்டு படங்களுக்கான கதைகள் எழுதி முடித்து விட்டேன் லோகேஷ் கனகராஜ் போன்ற இளம் இயக்குனர்களுடன் சேர்ந்து ஓட வேண்டும் என்ற நோக்கத்தில் எப்போதும் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

சினிமாவிற்குள் வரவில்லை எனில் எங்கேயோ தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றி கொண்டோ அல்லது விவசாயம் செய்து கொண்டோ அல்லது திருமணம் செய்து குழந்தைகள் பெற்று என சக மனிதனாக வாழ்ந்து போய் சேர்ந்திருப்பேன் ஆனால் சினிமா என்னை எங்கேயோ கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.

அப்படிப்பட்ட சினிமாவில் இந்த ஒரு ஜென்மம் அல்ல ஏழேழு ஜென்மம் கிடைத்தாலும் சினிமா காரனாக வாழ வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. அப்படித்தான் சினிமா பத்திரிகையாளர்களான நீங்களும் யாருக்குமே இல்லாத அளவிற்கு சினிமா பத்திரிகையாளர்களான உங்களிடம் சினிமா அறிவு இருக்கிறது.

இத்தனை வருடங்களும் எந்த பத்திரிக்கையாளரும் என்னிடம் ஒரு பத்திரிகையாளராக நடந்து கொண்டதே இல்லை சக நண்பனாக இருந்து என்னை விமர்சனம் செய்ததை காட்டிலும் நிறைய பாராட்டி இருக்கிறீர்கள். இப்படிப்பட்ட விழாவில் நிற்பதை பெருமையாக கருதுகிறேன் என மகிழ்ச்சியுடன் இயக்குனர் இமயம் பாரதிராஜா பேசி முடித்தார்.

இருவரும் பேசி முடித்த பிறகு நிகழ்ச்சியின் முக்கிய அங்கமான உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு நடந்தது.

அடையாள அட்டைகளை உறுப்பினர்களுக்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்து வழங்கினர்.

Bharathiraja appreciates Director Lokesh Kanagaraj

துப்பாக்கி சுடும் போட்டியில் தெறிக்க விட்ட அஜித்.; 6 அவார்டுகளை அள்ளி ரியல் ஹீரோவானார்

துப்பாக்கி சுடும் போட்டியில் தெறிக்க விட்ட அஜித்.; 6 அவார்டுகளை அள்ளி ரியல் ஹீரோவானார்

திருச்சியில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வரும் ரைபிள் கிளப்பில் 47-வது மாநில துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி, பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கிச் சுடும் போட்டி நடைபெற்று வருகிறது.

கடந்த 24-ந் தேதி தொடங்கிய இந்த போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது.

தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற 1,300 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் 16, 19, 21 ஆகிய வயதுக்கு உட்பட்ட பிரிவினருக்கும், 21 முதல் 45 வயது, 45 முதல் 60 வயது மற்றும் 60 வயதுக்கு மேல் உள்ள பிரிவினருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

நடிகர் அஜித்தும் ஒரு சிறந்த துப்பாக்கிச் சுடும் வீரர் என்பதால் இதில் கலந்து கொண்டார்.

இந்த போட்டியில் அஜித்குமார் மாஸ்டர் பிரிவில் பங்கேற்றார்.

இந்தப் போட்டியில் அஜித் அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர், 50 மீட்டர் பிரீ பிஸ்டல் மாஸ்டர் உள்ளிட்ட பிரிவுகளில் 4 தங்கம், 2 வெண்கலம் பதக்கம் வென்றுள்ளது அஜித் அணி.

சென்டர் பயர் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப்பதக்கமும், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப்பதக்கமும், 50 மீட்டர் பிரீ பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப்பதக்கமும், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி (ஐ.எஸ்.எஸ்.எப்) பிரிவில் தங்க பதக்கமும், 50 மீட்டர் பிரீ பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கல பதக்கமும், ஸ்டாண்டர்டு பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கல பதக்கமும் என 4 தங்கம், 2 வெண்கல பதக்கம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றது அஜித் அணி.

வெற்றி பெற்றவர்களுக்கு நாளை பரிசு வழங்கப்படுகிறது.

Ajith won 4 Gold and 2 bronze medal in the 47th Tamil Nadu state rifle competition

கன்னியாகுமரி கதை : டான்சர் பிருந்தா இயக்கத்தில் தயாரான ‘தக்ஸ்’

கன்னியாகுமரி கதை : டான்சர் பிருந்தா இயக்கத்தில் தயாரான ‘தக்ஸ்’

நடன இயக்குநரும், இயக்குநருமான பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகி வரும் ஆக்சன் எண்டர்டெய்னர் திரைப்படமான ‘தக்ஸ்’ எனும் படத்தின் படபிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

நடன இயக்குநராக திரையுலகில் புகழ்பெற்ற பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய ஆக்சன் திரைப்படம் ‘தக்ஸ்’. இந்த படத்தின் மூலம் நடிகர் ஹிர்ரூது ஹாரூன் தமிழில் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்.

இவருடன் நடிகர்கள் சிம்ஹா, ஆர். கே. சுரேஷ், முனீஸ்காந்த், அப்பாணி சரத், நடிகைகள் அனஸ்வரா ராஜன், ரம்யா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி. எஸ் இசையமைத்திருக்கிறார்.

பட தொகுப்பு பணிகளை பிரவீன் ஆண்டனி மேற்கொள்கிறார். ஆக்சனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதால் ‘ தக்ஸ் ‘ படத்தில் பிரபல சண்டை பயிற்சி இயக்குநர்களான ராஜசேகர் மற்றும் ஃபோனீக்ஸ் பிரபு ஆகிய இருவரும் சண்டை பயிற்சி இயக்குநர்களாக பணியாற்றியிருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளராக முத்து கருப்பையா பணியாற்ற, யுவராஜ் நிர்வாக தயாரிப்பாளராகவும், மக்கள் தொடர்பாளராகவும் பணியாற்றுகிறார்.

தமிழைத் தவிர்த்து தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

இந்நிறுவனம் தமிழில் வெளியாகி, வசூலில் வெற்றியைப் பெற்ற ‘விக்ரம்’ மற்றும் ‘ஆர். ஆர். ஆர்.’ ஆகிய படங்களை கேரளாவில் விநியோகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குமரி மாவட்டத்தைக் கதையின் பின்னணி களமாக கொண்டிருந்தாலும், இப்படத்தின் படபிடிப்பு கன்னியாகுமரி, நாகர்கோவில், கொச்சி என பல்வேறு இடங்களில் ஒரே கட்டமாக நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது.

பிருந்தா மாஸ்டர் இயக்கும் ஆக்சன் படமான ‘தக்ஸ்’ படத்தின் டைட்டில், கடந்த ஜுன் 10 ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டு, படபிடிப்பு தொடங்கியது. நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நட்ப கலைஞர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் ‘தக்ஸ்’ படத்தின் படபிடிப்பு திட்டமிட்டப்படி ஒரே கட்டமாக நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது.

படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதால் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘தக்ஸ்’ படத்தின் டைட்டில் வெளியானவுடன், இணையத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, எதிர்பார்ப்பினை எகிற வைத்தது- இதனையடுத்து படக்குழுவினரும் திட்டமிட்டப்படி மூன்று மாதக் காலக்கட்டத்திற்குள் பட பிடிப்பு நிறைவு செய்திருக்கிறார்கள். இதன் காரணமாக ‘தக்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸருக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

Director Brindha’s next film is titled Thugs

எங்கிருந்து தொடங்குவது.? ரசிகர்களே எனது தூண்கள்.; தனுஷ் உருக்கமான அறிக்கை

எங்கிருந்து தொடங்குவது.? ரசிகர்களே எனது தூண்கள்.; தனுஷ் உருக்கமான அறிக்கை

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் தனுஷ்

தற்போது கோலிவுட், டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என உலக சினிமா வரை சென்றுவிட்டார்.

நேற்று தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் வாத்தி – நானே வருவேன் மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய படங்களின் போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டனர்.

ரசிகர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பலரும் அவரை வாழ்த்தினர்.

இந்த நிலையில் வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார் தனுஷ்.

“இது எங்கிருந்து துவங்கியது என்று எனக்கு தெரியவில்லை. எனது பிறந்தநாளுக்கு வாழ்த்திய நலம் விரும்பிகள், திரையுலகினர், நண்பர்களுக்கு நன்றி.

குறிப்பாக ரசிகர்களின் வாழ்த்து, அளவற்ற அன்பு, ஆதரவுக்கு நன்றி. கடந்த 20 ஆண்டுகளாக ரசிகர்களே எனது தூண்களாக இருந்து என்னை ஆதரிக்கின்றனர்.

உங்களின் அன்பால் நெகிழ்கிறேன். விரைவில் படங்கள் மூலம் சந்திக்கிறேன். ஓம் நமசிவாய” என தெரிவித்துள்ளார் தனுஷ்.

Where to start.? Fans are my pillars.; Dhanush’s warm statement

காவலர்களை வீட்டிற்கு அழைத்து கௌரவித்த ரஜினிகாந்த்.; ஏன் தெரியுமா.?

காவலர்களை வீட்டிற்கு அழைத்து கௌரவித்த ரஜினிகாந்த்.; ஏன் தெரியுமா.?

இந்தியாவில் முதன்முறையாக 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் தொடங்கி நடந்து வருகிறது.

நேற்று ஜூலை 28ல் இந்த நிகழ்ச்சிக்கான துவக்க விழா பிரம்மாண்டமாய் செஸ் விளையாட்டு வீரர்கள் முன்னிலையில் நடந்தது.

இதில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும், நடிகர்கள் ரஜினிகாந்த், கார்த்தி உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்கு தன்னை வீட்டிலிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்ற காவலர்களை ரஜினிகாந்த் கௌரவித்துள்ளார்.

அந்த காவலர்களை வீட்டுக்கு அழைத்து அவர்களின் பணியை பாராட்டி உள்ளார் ரஜினிகாந்த்.

அவர்கள் ரஜினியுடன் எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Rajinikanth honored the guards by inviting them home; Do you know why?

More Articles
Follows