மக்களை காப்பாற்ற வரும் ரட்சகனாக சரவணன் ஸ்டோர்ஸ் ஓனர்

saravanan arulஎந்த ஒரு பண்டிகை காலம் என்றாலும் டிவி.க்களில் விளம்பரங்கள் அதிகம் வருவதை பார்த்திருப்போம். அதிலும் சென்னையிலுள்ள சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்கள் அடிக்கடி வருவதை பார்த்திருப்போம்.

முன்பெல்லாம் சினிமா நட்சத்திரங்களுக்கு கோடி கோடியாக கொட்டி கொடுத்த இதன் ஓனர் சரவணன் அருள் தற்போது அவரே ஆடல் பாடல் என அசத்தலாக விளம்பரங்களில் வருகிறார்.

இந்த நிலையில் இவர் ஒரு சினிமாவில் நடிக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.

ஜேடி ஜெர்ரி என்பவர் இப்படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இது ஒரு பேன்டசி படம் என்றும், பூமியில் வசிக்கும் மக்களை, வேற்று கிரகத்தில் இருந்து வந்து காப்பாற்றும் ரட்சகனாக அவர் நடிக்கவுள்ளாராம்.

நாயகி யார்? என்பதுதான் இதுவரை சஸ்பென்சாக உள்ளது. பல முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Overall Rating : Not available

Latest Post