சந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் மாபெரும் படமாக தயாராகி வருகிறது டிக்கிலோனா

சந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் மாபெரும் படமாக தயாராகி வருகிறது டிக்கிலோனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Santhanam in Dikkilonaசந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் மாபெரும் படமாக தயாராகி வருகிறது டிக்கிலோனா. இந்தப்படத்தின் நட்சத்திர பட்டியலே அசரடிக்கிறது. நடிகர் சந்தானத்தோடு
சுழற்பந்து வீச்சால் எதிரணியை கலங்கடிக்கும் இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நட்பேதுணை படம் மூலம் அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்திழுத்த அனகா மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படம் மூலமாக இளைஞர்கள் நெஞ்சில் தஞ்சம் அடைந்த ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். இன்றைய தமிழ்சினிமாவின் எனர்ஜிடிக் காமெடியன் யோகிபாபு, வில்லத்தனம் கலந்த காமெடியால் ஆடியன்ஸை சுவாரசியப்படுத்தும் ஆனந்த்ராஜ், குணச்சித்திரம் காமெடி என அந்தக் கேரக்டருக்கான முக்கியத்துவத்தை நடிப்பில் கொண்டு வரும் முனிஷ்காந்த், அனுபவம் வாய்ந்த நடிகர்களான நிழல்கள் ரவி, சித்ரா லெட்சுமணன், மேலும் காமெடிக்கு வலு சேர்க்க மொட்டை ராஜேந்திரன், ஷாரா நடிக்கிறார்கள். அருண் அலெக்‌ஸாண்டர் ஒரு வேடமேற்க பிரபல திரைப்பட விமர்சகர் இட்டிஸ் பிரசாந்தும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இப்படி டிக்கிலோனோ படத்தில் தோன்றும் அனைத்து நடிகர்களும் மக்களுக்கு பரிட்சயமானவர்கள் என்பதோடு பிடித்தமானவர்களும் கூட.

சந்தானம் மூன்று வேடங்களில் நடித்து வரும் இப்படத்தை
பல வெற்றிகரமான படங்களுக்கு திரைக்கதையில் உதவியாக இருந்த கார்த்திக் யோகி இயக்குகிறார். சில வாரங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் தலைப்பு வெகுஜனத்தை வெகுவாக ஈர்த்தது.
அதேபோல் படத்தின் டெக்னிக்கல் டீமும் சிறப்பாக அமைந்துள்ளது. இசை அமைப்பாளாராக யுவன் சங்கர் ராஜா களத்தில் இருப்பதால் படத்தின் பின்னணி இசை பாடல்கள் பற்றிச் சொல்லத்தேவை இல்லை. தேர்ந்த கேமராமேனாக ஆர்வி பணியாற்ற எடிட்டராக ஜோமின் அசத்த இருக்கிறார். நாயகன் அடிக்கும் ஒவ்வொரு அடியையும் ரசிகனை நம்ப வைக்கும் விதமாக கொரியோகிராபி செய்யும் தினேஷ் சூப்பராயன் சண்டைப்பயிற்சியை கவனிக்கிறார். கனா படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் மற்றும் சரவெடி சரண் பாடல்களை எழுதுகிறார்கள். ஆர்ட் டைரக்டராக A. ராஜேஷ் பணியாற்றுகிறார்.

மிகப்பிரம்மாண்டமான நட்சத்திர பட்டாளமும் மிகச்சிறந்த டெக்னிக்கல் டீமும் இணைந்துள்ளதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு இந்தியளவில் எகிறியுள்ளது. முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்தை மையப்படுத்திய இப்படம் மிகப்பெரிய கவனம் பெறுவதற்கான எல்லா வாய்ப்புகளையும் பெற்றிருக்கிறது.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும், சோல்ஜர் பேக்டரி சார்பில் சினிஸும் மிகப்பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரிக்கின்றனர்.

இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. பூஜையில் படத்தின் நாயகன் சந்தானம், நாயகிகள் அனகா, ஷிரின், தயாரிப்பாளர்கள் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் கோட்டப்பாடி ஜே. ராஜேஷ், சோல்ஜர் பேக்டரி சினிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற இருக்கிறது

BREAKING கமல்-60 விழாவில் கார்த்தி & விஜய்சேதுபதி & ஜெயம் ரவி பேச்சு

BREAKING கமல்-60 விழாவில் கார்த்தி & விஜய்சேதுபதி & ஜெயம் ரவி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthi Vijay Sethupathi and Jayam Ravi speech at Kamal 60 eventகமல் 60 விழாவில் நடிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.

இந்த விழாவில்

நடிகர் விஜய்சேதுபதி பேசியதாவது…

கமல் சாருடன் நடித்தவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர வேண்டும். அது இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு உதவும்.

எனக்கு இந்தியன் 2 படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. முடியவில்லை. எனவே கமல் 60 விழாவில் வாய்ப்பு கேட்டேன். கமல் தந்தார்.
“கமல் சார் இத்தனை ஆண்டுகளாக அவர் எப்படி ரசிகர்களை ஏமாற்றாமல் இருக்கிறாரோ அது போல அரசியலிலும் ஏமாற்ற மாட்டார் என நம்புகிறேன்.

அவரின் கட்சி பெயர் மக்கள் நீதி மய்யம் என்ற பெயர் எனக்கு பிடிக்கும். அதுபோல் அந்த லோகோவின் ஐடியாவும் பிடிக்கும்.

ஜெயம் ரவி பேசியதாவது…

கமல் எனக்கு ஒரு இன்ஸ்ப்ரேசன். அவரின் பரதநாட்டியம் பார்த்துதான் நான் நடனம் கற்றுக் கொண்டேன்.

நடிகர் கார்த்தி பேசியதாவது…

ஹீரோயின் மற்றும் பாடல்கள் இல்லாத கைதி படத்தை மக்கள் கொண்டாடுகின்றனர். அதற்கான விதையை கமல்ஹாசன் அவர்கள் குருதிப்புனல் படத்தில் போட்டு இருந்தார்.

விக்ரம் படத்தில் உள்ள வனிதாவனி பாடலை என்னால் மறக்க முடியாது.

Karthi Vijay Sethupathi and Jayam Ravi speech at Kamal 60 event

BREAKING கடவுளை வணங்காத கமலை அத்தி வரதருடன் ஒப்பிட்ட ஷங்கர்

BREAKING கடவுளை வணங்காத கமலை அத்தி வரதருடன் ஒப்பிட்ட ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Shankar compared Actor Kamal with God Athivaradhar கமல் 60 நிகழ்ச்சியில் இயக்குனர் ஷங்கர் கலந்துக் கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது…

நான் படிக்கும் காலம் முதலே கமல் ரசிகன் தான். அவர் மாதிரி நடிக்க முயற்சித்துள்ளேன்.  நடிகராகவும் ஆசைப்பட்டேன்.

நான் இயக்கிய படங்களிலேயே இந்தியன் படம் தான் பெஸ்ட் என பலரும் சொல்லியிருக்கிறார்கள்.

தன் உடம்பையும் நடிக்க வைத்திருக்கிறார். மீண்டும் சேனாதிபாதி வருவார். 360 டிகிரியில் தன் நடிப்பை கொடுத்துள்ளார்.

இந்தியன் 2 படத்தில் குஜராத்தி மொழி பேசி நடித்துள்ளார் கமல். (உடனே கமல் அந்த பட டயலாக்கை மேடையில் பேசி காட்டினார்).

கமல் ஒரு முழுமையான நடிகர். அவர் ஒரு குறிஞ்சி பூ மற்றும் அத்தி வரதரை போன்றவர்” என்றார்.

கடவுளை வணங்காதவர். கடவுள் இருந்தா நல்லா இருக்கும்ல என அடிக்கடி கூறுபவர் கமல். அவரை ஷங்கர் இவ்வாறு ஒப்பிட்டு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Director Shankar compared Actor Kamal with God Athivaradhar

BREAKING முதல்வர் ஆவேன்னு எடப்பாடி நினைச்சிருக்க மாட்டார்.. – ரஜினி

BREAKING முதல்வர் ஆவேன்னு எடப்பாடி நினைச்சிருக்க மாட்டார்.. – ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini talks about TN CM Edappadi Palanisamy at Kamal 60 eventகமல்ஹாசனின் 60 ஆண்டுகால சினிமா பயணத்தை கௌரவிக்கும் வகையில் கமல் 60 விழா சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் இந்நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசன் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற பாடலை முதல்பாடலாக பாடி அசத்தினார்.

நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினி, விஜய்சேதுபதி, கார்த்தி, விக்ரம் பிரபு, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி மற்றும் அவரது தாயார் ஷோபா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் தன் நண்பர் கமலை பாராட்டி ரஜினிகாந்த பேசினார். அப்போது அரசியல் குறித்தும் பேசினார்.

ரஜினிகாந்த் பேசியதாவது…

நான் ஏழையாக இருந்தேன். கண்டக்டராக கஷ்டப்பட்டேன்.

ஆனால் கமல் வசதியாக இருந்தாலும் சினிமாவின் பல்வேறு துறைகளில் கஷ்டப்பட்டு இருக்கிறார்.

சினிமாதுறையில் ஒருவரே நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர், டான்சர் என அத்தனையும் செய்யவில்லை.

உலகில் எந்த ஒரு நடிகரும் 10 வேடங்களில் நடிக்கவில்லை. அதுபோல் தொடர்ந்து 60 வருடங்கள் யாரும் நடிக்கவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி அவர்கள் முதல்வராக ஆவார் என கனவில் கூட நினைத்து இருக்க மாட்டார். 4 மாசத்துல ஆட்சி கவுந்துடும் நினைச்சாங்க. ஆனால் அதிசயம் நடந்துச்சு. அற்புதம் நடந்துச்சு. அதுபோல அதிசயம் எதிர்காலத்திலயும் நடக்கும்.

இவ்வாறு கமல் 60 நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

Rajini talks about TN CM Edappadi Palanisamy at Kamal 60 event

BREAKING கமல் பேசுறது புரியலையா? சூப்பர் ஸ்டார் ரஜினி சூப்பர் பதிலடி

BREAKING கமல் பேசுறது புரியலையா? சூப்பர் ஸ்டார் ரஜினி சூப்பர் பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dont you understand Kamal Speech Rajini superb speech at Kamal 60கமல்ஹாசனின் 60 ஆண்டுகால சினிமா பயணத்தை கௌரவிக்கும் வகையில் கமல் 60 விழா சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் இந்நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசன் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற பாடலை முதல்பாடலாக பாடி அசத்தினார்.

இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது…

எங்கள் (கமல்) நட்பை யாராலும் பிரிக்க முடியாது, வேறு துறைக்கு சென்றாலும், சித்தாந்தம், கொள்கை வேறாக இருந்தாலும் நட்பு மாறாது.

கமல் பேசுவது புரியவில்லை என்கிறார்கள். தூங்குபவர்களை எழுப்பலாம். ஆனால் தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. கமல் பேசுவது எனக்கே புரிகிறது. மற்றவர்களுக்கு புரியவில்லையா?

இவ்வாறு ரஜினி பேசினார்.

Dont you understand Kamal Speech Rajini superb speech at Kamal 60

BREAKING அரசியலில் ரஜினி கமல் இணையனும் : SAC செம பேச்சு

BREAKING அரசியலில் ரஜினி கமல் இணையனும் : SAC செம பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director SAC talks about Rajini Kamal and Vijay politics உலகநாயகனின் கமல்ஹாசனின் 60 ஆண்டுகால சினிமா பயணத்தை கொண்டாடும் வகையில் ‘உங்கள் நான்’ என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டு அரங்கில் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது.

கமலை கௌரவிக்க நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டுள்ளனர்.

இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் கமல் குறித்து பேசியதாவது…

“சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்ற பேச்சு எப்போதும் இருக்கிறது.

யார் வேண்டுமானாலும் வரலாம் என இருக்கும்போது சினிமாக்காரர் ஏன் வரக்கூடாது ?

ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என நான் மட்டுமல்ல, ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார். கமல், ரஜினி எனும் இரண்டு ஜாம்பவான்கள். அவர்கள் இருவரும் இணைந்தால் தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் நல்லது.

அரசியலில் அடுத்த தலைமுறைக்கு மூத்தவர்கள் வழிவிட வேண்டும் நல்லாட்சி தந்த நீங்கள், உங்களின் தம்பிகள் வரும்போது அவர்களுக்கு வழிவிடுங்கள்” என எஸ்ஏசி பேசினார்.

Director SAC talks about Rajini Kamal and Vijay politics

More Articles
Follows