தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் முதன் முறையாக 3 வேடங்களில் நடித்து வரும் படம் டிக்கிலோனா.
ஜென்டில்மேன் படத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் காமெடி காட்சியில் இந்த டிக்கிலோனா என்ற வார்த்தை ஒரு விளையாட்டுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கும்.
அதாவது ஒருவரின் பின்னால் உள்ள பகுதியை மற்றொருவர் வந்து பின்னாலேயே மோதுவதாக காட்சி இருக்கும். அந்த ஆபாச விளையாட்டுதான் தற்போது இப்பட டைட்டில் ஆகியுள்ளது.
இந்த படத்தில் சந்தானம் உடன் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
அனகா மற்றும் ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள்.
இவர்களுடன் யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், ஷாரா என காமெடி பட்டாளமே இப்படத்தில் நடிக்கின்றனர்.
யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும், சோல்ஜர் பேக்டரி சார்பில் சினிஸும் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த நிலையில் சற்றுமுன் இப்பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.
நாளை மற்றும் நாளை மறுநாள் அடுத்தடுத்து போஸ்டர் லுக்குகள் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளனர்.
Santhanam 3 roles in Dikkiloona movie First Look released