தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
என்னதான் பல படங்களில் நடித்தாலும் ஒரு சில இயக்குனர்களின் படங்களில் நடித்தால் தான் தன் நடிப்புக்கு சரியான சான்றிதழ் கிடைக்கும் என்பதை நிறைய கலைஞர்கள் உணர்ந்துள்ளனர்.
அப்படியான ஒரு இயக்குனர்தான் செல்வராகவன். இவரின் இயக்கத்தில் நடிக்க பலரும் காத்திருக்கின்றனர்.
இவர் தற்போது கௌதம் மேனன் தயாரிப்பில், எஸ் ஜே சூர்யா நடிக்க நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் இவரின் அடுத்த படத்தில் கதையின் நாயகனாக சந்தானம் நடிக்கவிருக்கிறாராம்.
இதுகுறித்து சந்தானம் கூறியதாவது…
“செல்வராகவன் சார் என்றாலே ‘சீரியஸான மனிதர் தான்’… அவர் படங்கள் உணர்ச்சிகரமாக தான் இருக்கும்… என்ற கருத்துக்கள் மக்கள் மத்தியில் உள்ளது.
ஆனால் செல்வராகவன் சாரிடம் சிறந்த நகைச்சுவை உணர்வுள்ளது” என்றார்.
இந்த வித்தியாச கூட்டணி எப்படி திரையில் விருந்து படைக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.