‘A1’ வெற்றிக்கு பிறகு மீண்டும் அப்பா-மகனாக MS பாஸ்கர் & சந்தானம்

‘A1’ வெற்றிக்கு பிறகு மீண்டும் அப்பா-மகனாக MS பாஸ்கர் & சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

santhanamஆர்.கே.என்டெர்டெய்ன்மென்ட் சி.ரமேஷ்குமார் தயாரிப்பில், ஆர்.ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நடிகர் சந்தானம் புதிய படமொன்றில் நடிக்கிறார்.

இப்படத்தில் அவருக்குத் தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார்.

இவர்களுடன் ஷாயாஜி ஷிண்டே, வம்சி கிருஷ்ணன், லொல்லுசபா ஸ்வாமிநாதன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

முதன்முறையாக சந்தானம் படத்தில் சாம் சி.எஸ். இசையமைத்து கைகோர்த்துள்ளார்.

திரைப்படத்தை மாதவன் எடிட்டிட் செய்கிறார்.

நடிகர் சந்தானம் ‘பாரிஸ் ஜெயராஜ்’ என்ற படத்தில் நடித்து முடித்த கையோடு இந்த புதிய படத்திற்கான படப்பிடிப்பில் கும்பகோணத்தில் இணைந்துள்ளார்.

கும்பகோணத்தைத் தொடர்ந்து திருச்சி, ஸ்ரீரங்கம், சென்னை உள்ளிட்டப் பகுதிகளிலும் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அறிமுக இயக்குநராக இணைந்துள்ளார் ஸ்ரீனிவாச ராவ்.

இவர், ‘வல்லினம்’ படத்தின் இயக்குநர் அறிவழகனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். நிறைய விளம்பரப் படங்களையும் இவர் இயக்கியிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

இப்படத்தைப் பற்றி ஸ்ரீனிவாச ராவ் கூறுகையில்…

“இந்தத் திரைக்களம் சந்தானத்துக்கு மிகவும் பொருந்தியுள்ளது.

காமெடி கதைக்களம் என்றாலும் கூட தந்தை – மகன் இடையே நடைபெறும் காட்சிகள் படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு தந்தை – மகனையும் உணர்வுப்பூர்வமாக பிணைத்துவைக்கும்.

ஒரு தந்தைக்கும் – மகனுக்கும் இடையே நடந்த சம்பவங்களையும், அவர்கள் கடந்துவந்த உணர்வுப் போராட்டங்களையும் இப்படம் பிரதிபலிக்கும் என்பதால் படத்தைக் காண்போர் தங்களுடைய வாழ்க்கை நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு ஒன்றிப்போக முடியும்.

மேலும், அனைத்துத் தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஜனரஞ்சகமான கதையாக உருவாக்கப்பட்டுள்ளதால் ஏ, பி, சி என எல்லா சென்டர்களிலும் படம் நல்ல வரவேற்பைப் பெறுமென்பதில் ஐயமில்லை.

காமெடி, உணர்வுப்பூர்வமான காட்சிகள் மட்டுமல்லாமல் இதுவரை ஏற்றிராத புதிய வேடத்தில் மற்றொரு அழகிய பரிணாமத்தில் நடிக்கிறார்.

இது அனைவரின் புருவத்தையும் உயர்த்தி பாராட்டு பெறும் மற்றும் இன்றைய அரசியல் அமைப்பை வெளிப்படுத்தும் வகையில் பல சுவாரஸ்யமான ஜனரஞ்சகமான காட்சிகளுடன் இப்படம் உருவாக்கப்படுகிறது.

ஹீரோயினாக புதுமுகத்தை அறிமுகம் செய்கிறோம். மேலும், படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது.

கும்பகோணத்தைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம், திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் படப்பிடிப்பு நடைபெறும்.

அரசாங்கம் வழிகாட்டுதலின்படி கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றியே படப்பிடிப்பு நடைபெறுகிறது” என்றார்…

Santhanam and MS Bhaskar joins for a new untitled film

‘திரெளபதி’ பட நாயகன் ரிச்சர்ட் ஜோடியாக டிவி சீரியல் நடிகை

‘திரெளபதி’ பட நாயகன் ரிச்சர்ட் ஜோடியாக டிவி சீரியல் நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் மற்றும் ஷீலா ஜோடியாக நடித்த படம் ‘திரெளபதி’.

இப்படம் நாடக காதல், ஆணவக் கொலைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.

இப்படம் வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்தது.

தனது அடுத்த படத்திற்கு ‘ருத்ர தாண்டவம்’ என பெயரிட்டுள்ளார் மோகன்.

இதிலும் ‘திரெளபதி’ பட நாயகன் ரிச்சர்ட் தான் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்நிலையில், இப்பட ஹீரோயின் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டிவி சீரியல்களில் நடித்து வரும் தர்ஷா குப்தா, இப்படத்தின் மூலம் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.

TV actress Darsha Gupta to play the female lead in Richard’s next film

dharsha gupta

கட்சிக்காகவே வாழ்ந்தேன்.. வருமான வரித்துறையில போட்டு கொடுத்துட்டாங்க..; திமுக கூட்டத்தில் துரை முருகன் பீலிங்ஸ்

கட்சிக்காகவே வாழ்ந்தேன்.. வருமான வரித்துறையில போட்டு கொடுத்துட்டாங்க..; திமுக கூட்டத்தில் துரை முருகன் பீலிங்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

durai muruganடிசம்பர் 20ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பேசும்போது…

“சட்டமன்ற தேர்தல் முடியும் வரை யாரிடமும் பகைமை காட்ட மாட்டேன்.

யாரிடத்திலும் போட்டு கொடுக்கமாட்டேன் என ஒரு சபதத்தை எடுங்கள்.

திமுகவை தோற்கடிக்க சிலரை கட்டாயப்படுத்தி புதிய கட்சி..; ரஜினியை மறைமுகமாக தாக்கும் ஸ்டாலின்

சில கல்நெஞ்சம் படைத்தவர்கள், வருமான வரித்துறைக்கு நம்மைப்பற்றி செய்தி சொல்லும் அளவிற்கு நன்றி கெட்டு போய் உள்ளனர்.

65 ஆண்டுகளாக கட்சிக்காக வாழ்ந்த எனக்கு பெரும் வருத்தமாக உள்ளது” என பேசினார் துரை முருகன்.

Durai Murugan requests DMK party members

இனி போர் நேரம்… பாரபட்சம் பார்க்காமல் பதிலடி கொடுக்கப்படும்..; ரஜினிக்கு ஆதரவாக ராணா அதிரடி

இனி போர் நேரம்… பாரபட்சம் பார்க்காமல் பதிலடி கொடுக்கப்படும்..; ரஜினிக்கு ஆதரவாக ராணா அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Rana Rajinikanthசுந்தர் சி தயாரிப்பில் ஹிப் ஹாப் ஆதி நடித்த படம் ‘நான் சிரித்தால்’.

இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராணா.

இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகர்.

‘நான் சிரித்தால்’ படம் இவரது முதல் படம் என்றாலும் அந்த பட்ஃபர்ஸ்ட் லுக்கையே ரஜினிதான் வெளியிட்டார்.

விரைவில் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ள நிலையில் அவரின் வருகையை பிடிக்காத சிலர் ரஜினியை நேரடியாகவே கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அந்த நபர்களுக்கு ரஜினி ரசிகர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

திமுகவை தோற்கடிக்க சிலரை கட்டாயப்படுத்தி புதிய கட்சி..; ரஜினியை மறைமுகமாக தாக்கும் ஸ்டாலின்

தற்போது ‘நான் சிரித்தால்’ இயக்குநர் இராணாவும் அதிரடியாக தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:..

“ஒரு நல்லவர், நல்ல நோக்கத்துடன் அரசியலுக்கு வரும்போது, அவர் மீது வன்மம் கொண்டு பேசுபவர்களை கண்டு ஒதுங்கி இருக்க முடியாது.

எனவே நாகரீகமான முறையில் தக்க பதிலடிகள் பாரபட்சம் பார்க்காமல் கொடுக்கப்படும். இனி போர் நேரம்..”

இவ்வாறு ராணா பதிவிட்டுள்ளார்.

Director Rana’s reply to Rajinikanth haters

78வது கோல்டன் க்ளோப் & அகாடமி விருதுகளில் போட்டியிட தகுதியான ‘சூரரைப் போற்று’

78வது கோல்டன் க்ளோப் & அகாடமி விருதுகளில் போட்டியிட தகுதியான ‘சூரரைப் போற்று’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

soorarai pottruபெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், தனது தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் சார்பாக நடிகர் சூர்யா தயாரித்து நாயகனாக நடித்த தமிழ் திரைப்படமான ‘சூரரைப் போற்று’, 2020ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று.

இந்திய ராணுவத்தில் கேப்டன் பதவியில் இருந்தவரும், ஏர்டெக்கான் நிறுவனத்தின் நிறுவனருமான கேப்டன் ஜி.ஆர் கோபின்நாத்தின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்தியாவின் ஏழை வர்க்க மக்களுக்கு விமானப் பயணத்தை சாத்தியப்படுத்திய குறைந்த விலை விமான சேவையை ஏர் டெக்கான் தந்தது.

மேலும் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியான முதல் உயர் சிந்தனை திரைப்படம் சூரரைப் போற்று.

நவம்பர் 12, 2020 அன்று அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியான இந்தப் படம் உலகம் முழுவதிலிமிருக்கும் தமிழ் பேசும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. மனமார இந்தப் படத்தை ரசித்து, ஆதரவு தந்தனர் ரசிகர்கள்.

ஐஎம்டிபி தளத்தில் 10 புள்ளிகளுக்கு 8.8 புள்ளிகள் என்கிற உயர்ந்த மதிப்பீடை ரசிகர்கள் தரும் அளவுக்கு அவர்களின் அன்பு இருந்தது.

சூப்பர் சூர்யா… அபாரம் அபர்ணா.; சூரரைப் போற்று விமர்சனம் – 4.25/5

உலகம் முழுவதும் தமிழ் மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட சூரரைப் போற்று, தற்போது 78வது கோல்டன் க்ளோப் விருதுகள் விழாவில் சிறந்த அயல் மொழித் திரைப்படம் என்கிற பிரிவில் போட்டியிடவுள்ளது.

இந்தச் சாதனை ஏன் இன்னும் விசேஷமானது என்றால், இந்த பெருமைக்குரிய விருது வழங்கு விழாவில் போட்டியிட அனுமதி பெற்ற முதல் நேரடி ஓடிடி வெளியீடுத் திரைப்படம் இதுவே.

பிப்ரவரி 2021ல், பெவர்லு ஹில்டன், பெவர்லி ஹில்ஸில் இந்த விழா நடைபெறவுள்ளது.

கரோனா நெருக்கடி காரணமாக இந்த விழாவில் போட்டியிடும் திரைப்படங்களுக்கான விதிகள் மாற்றப்பட்டுள்ளன.

இதனால் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களும் கோல்டன் க்ளோப் மற்றும் அகாடமி விருதுகளில் போட்டியிட தகுதி பெற்றுள்ளன.

இந்தத் தகவலை 2டி நிறுவனத்தைச் சேர்ந்த ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண் டியன் தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்..

Suriya’s Soorarai Pottru has been selected for screening at the Golden Globe Awards 2021

பஹத் பாசில் & நயன்தாரா ஜோடியை இணைக்கும் ‘பிரேமம்’ பட இயக்குநர்

பஹத் பாசில் & நயன்தாரா ஜோடியை இணைக்கும் ‘பிரேமம்’ பட இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘நெற்றிக்கண்’ மலையாளத்தில் ‘நிழல்’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.

தற்போது ரஜினிகாந்த் உடன் ‘அண்ணாத்த’ & தன் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா.

இந்த நிலையில் மலையாளத்தில் ‘பாட்டு’ என்ற பெயரிடப்பட்ட ஃபகத் பாசிலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்

‘நேரம்’ & ‘பிரேமம்’ பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

Nayanthara Fahadh Faasil team up with Alphonse Puthren For Paattu

???????????????????????????????????????????????????????????

More Articles
Follows