A1 படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து பிரம்மாண்ட வெற்றி பெறும் !!

A1 படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து பிரம்மாண்ட வெற்றி பெறும் !!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectசர்க்கிள் பாக்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள படம் A1. இப்படம் வரும் (ஜுலை26) வெள்ளியன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது. ஜான்சன் கே எழுதி இயக்கியுள்ள இப்படத்தை 18 ரீல்ஸ் எஸ்.பி சவுத்ரி வெளியிடுகிறார். இன்று இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னை பிரசாத்லேப்-ல் நடைபெற்றது.

விழாவில்,
ஒளிப்பதிவாளர் கோபி பேசும்போது,

” இயக்குநர் ஜான்சன் எழுத்தும் இயக்கமும் இப்படத்தில் அழகாக இருக்கிறது. படம் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரைக்கும் செம்ம ஜாலியாக இருக்கும். சந்தோஷ் நாராயணன் அவர்களோடு எனக்கு இது முதல் படம்” என்றார்

ஸ்டண்ட் மாஸ்டர் ஹரி தினேஷ் பேசும்போது,

“இந்தப்பட வாய்ப்பு தந்த இயக்குநருக்கு நன்றி. சந்தானம் சார் கூட நிறைய படங்கள் பண்ணிருக்கேன். சந்தானம் சார் படத்துல வித்தியாசமான வகையில் பைட் இருக்கும். இந்தப்படத்திலும் அப்படியான பைட் பண்ணிருக்கார்” என்றார்

எஸ்.பி சவுத்ரி பேசும்போது,

“படத்தை சந்தானம் சார் போட்டுக்காட்டினார். படம் செம்மயாக வந்திருக்கிறது. என்னை நம்பி படத்தை தந்த சந்தானம் சாருக்கு நன்றி” என்றார்

இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசும்போது,

“இந்த மேடையில் சந்தானம் சார் இருக்கிறதால எல்லாராலும் ஜாலியாகப் பேச முடியுது. ஜான்சன் அவர்களின் ரைட்டிங் அருமையாக இருந்தது. சூது கவ்வும் படத்திற்கு பிறகு எனக்கு மிக பிடித்த படம் இது. ஈக்குவாலிட்டி பற்றியப் படங்கள் எப்பவாவது வரும். இந்தப்படமும் ஈக்குவாலியிட்டியை ஜாலியாகப் பேசி இருக்கிறது. அந்த வகையில் படத்தை சிறப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குநர். ஒரு காமெடி நடிகர் தன்னை நிலைத்து வைத்து மக்களை எண்டெர்டெய்ன் பண்றது ரொம்ப கஷ்டம். அதைச் சந்தானம் சார் சரியாகச் செய்து வருகிறார். இந்தப்படத் தயாரிப்பாளரிடம் ஒரு சந்தோஷம் இருக்கிறது. காரணம் இந்தப்படம். தியேட்டரிகல் எக்ஸ்பிரீயன்ஸில் இந்தப்படம் நல்லா இருக்கும் என்று நம்பிக்கை இருக்கு. படத்தின் டீசரை வைத்து சில சர்ச்சைகள் வந்தது. ஆனால் படம் அதற்கு நேர்மாறாக படம் இருக்கும்” என்றார்

கதாநாயகி தாரா அலிசா பெரி பேசும்போது,

“சந்தானம் சார் இயக்குநர் ஜான்சன் சார் மற்றும் தயாரிப்பாளர் மூவருக்கும் நன்றி. இந்தப்படம் மிக சந்தோஷமான அனுபவம். சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பில் நான் நடிச்சிருப்பது பெருமை ” என்றார்

இயக்குநர் ஜான்சன் பேசும்போது,

“முதல் நன்றி தயாரிப்பாளர் ராஜ் சாருக்கு. அவர் தான் என்னை சந்தானம் சாரிடம் அழைத்துச் சென்றார். சந்தானம் அவரது டீமை கூப்பிட்டு தான் கதைச் சொல்லச் சொன்னார். படபடப்பாக இருந்தது. ஏன் என்றால் எங்கள் டீம் அப்படி. ஆனால் கதையைக் கேட்டதும் அனைவரும் கை கொடுத்தனர். படம் உடனே படம் துவங்கி விட்டது. புதிய கதாநாயகியை தேர்ந்தெடுத்தது எதனால் என்றால் மற்ற நடிகைகளின் டேட் எங்களுக்கு சாதகமாக இல்லை. சந்தானம் சார் எந்தச் ஷாட் எடுத்தாலும் மானிட்டர் வந்து பார்ப்பார். திடீரென்று சில நாட்கள் அவர் வரவில்லை. எனக்குப் பயமாக இருந்தது. பின் தான் தெரிந்தது அவர் என்னை நம்ப ஆரம்பித்து விட்டார் என்று. நிச்சயமாக சந்தானம் சார் இல்லை என்றால் நான் இல்லை. நீங்கள் படத்தை காசு கொடுத்த நம்பி வந்து பார்க்கலாம். ஆர்ட் டைரக்டர் ராஜா பிரில்லியண்டாக வொர்க் பண்ணி இருக்கிறார். எடிட்டிங்கில் லியோன் ஜான் பால் அசத்தி இருக்கிறார். அவர் முன்னாளில் கேங்ஸ்ட்ராக இருந்திருப்பார் போல. நிறைய காட்சிகளை வெட்டிவிட்டார். கேமரான் கோபி உள்பட எல்லோரும் எனக்கு சப்போர்ட்டாக இருந்தார்கள். கோபியிடம் ஒரு சீனைக் கொடுத்தால் அசத்தலாக எடுத்துக் கொடுத்து விடுவார். படத்தில் நடித்த தாரா, மாறன், மனோகர், எம்.எஸ் பாஸ்கர் சார் என எல்லோருமே படத்தை சிறப்பாக நகர்த்தி இருக்கிறார்கள். சந்தானம் சார் எல்லோருக்கும் நடிப்பதில் சமமான வாய்ப்பைக் கொடுப்பார். ஹீரோயின் தாராவிடம் நான் பேசியது ஒரு ஐந்து வார்த்தைகள் இருக்கும். ஆனால் நான் அவரிடம் என்ன எதிர்பார்த்தேனோ அதை வாங்கிவிட்டேன்” என்றார்.

நடிகர் சந்தானம் பேசும்போது,

“தில்லுக்கு துட்டு2″ படத்தை வெற்றிப்படமாக்கிய உங்களுக்கு முதல் நன்றி. ஜான்சன் கதையைச் சொன்னதும் சரி பண்ணலாம் என்று சொன்னேன். 2000ல டீவில அறிமுகமானேன் இப்போ வரைக்கும் ஓரளவு நான் தாக்குப்பிடிச்சுப் போகுறேன்னா அதுக்கு காரணம் என் டீம் தான். அவர்கள் இல்லன்னா நான் இல்லை. என் டீமில் இருந்த ஜான்சன் இப்போ டைரக்டராகி இருக்கார். ராஜ் தயாரிப்பாளர் ஆகி இருக்கிறார். ஜான்சன் பயங்கர ஷார்ப்பு. விசாயர்பாடில பிறந்து வளர்ந்த ஆளு. அங்க உள்ள கதையை தான் படமாக்கி இருக்கார். இது சூது கவ்வும் பேட்டன்ல ஒரு படம். எனக்கு இந்தப்படம் ரொம்ப புதுசு. சந்தோஷ் நாராயணன் வந்த பிறகு இந்தப்படத்தின் கலரெ மாறிவிட்டது. சந்தோஷ் சாரிடம் நான் கதை எப்படி இருக்குன்னு கேட்டேன். கதை நல்லாருக்கு சார் கண்டிப்பா நான் பண்றேன் என்றார். படத்தில் ஒவ்வொருத்தருக்கும் ஒரு தீம் மியூசிக் போட்டிருக்கார். கேமராமேன் டெய்லி ஒரு ஜாக்ஸ் போட்டுட்டு ஹீரோ மாதிரி வருவாப்ல. என்னை ரொம்ப அழகா காமிச்சிருக்கார். லைட் எதுவுமே இல்லாமல் வெறும் தெர்மாகோல் வைத்தே அழகாக காட்டும் திறமைசாலி அவர். பைட் மாஸ்டர் இனிமே இப்படித்தான் படத்துலே எனக்கு வித்தியாசமான பைட் கொடுத்தார். அதே மாதிரி இந்தப்படத்திலும் இருக்கு. ஆர்ட் ராஜாவும் நல்லா ஒர்க் பண்ணி இருக்கார். இந்தப்படத்தை வாங்கி ரிலீஸ் செய்யப் போறார் செளத்ரி சார். அவர் ஒரு தெலுங்குப் படத்தை வாங்கி வந்திருந்தார். நான் அந்தப்படம் வேண்டாம் இந்தப்படத்தை பண்ணலாம் என்றேன். ஒரு பிராமின் கேர்ளுக்கும் லோக்கல் பையனுக்கும் நடக்குற கதை என்பதற்காக சரியான ஹீரோயின் வேணும் என்று தேடினோம். நாங்கள் நினைத்ததை தாரா சரியாக செய்திருக்கிறார். நாம ஆசைப்பட்டா மாதிரி ஒரு இடத்தை அடையணும்னா நம்மை சுத்தி இருக்கிற குடும்பம் நண்பர்கள் எல்லாரும் நாம நல்லா இருக்கணும்னு நினைச்சா தான் முடியும். என்னைச் சுற்றி அப்படியான ஆட்கள் இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேல் என்னுடைய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. என்னுடைய வேண்டுகோள் என்னன்னா படத்தை எடுத்துட்டு ரிலீஸ் பண்ணலாம்னு பார்த்தா ரொம்ப கஷ்டமா இருக்கு.ஐ.பி.எல் வருது, அவெஞ்செர்ஸ் வருது என நாட்களைத் தள்ளிப் போட வேண்டியதிருக்கு. நல்ல தயாரிப்பாளர்கள் இரண்டு பேர் இப்போ வந்திருக்காங்க. தயவுசெய்து படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள்” என்றார்

மேலும் படத்தில் வேலை செய்த அத்தனைபேர்களின் பெயர்களையும் சொல்லி சந்தானம் நன்றி சொன்னார்.

சூர்யா-கார்த்தியை அடுத்து விக்ரமுடன் இணையும் பிரியா பவானி சங்கர்

சூர்யா-கார்த்தியை அடுத்து விக்ரமுடன் இணையும் பிரியா பவானி சங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Priya Bhavani Shankar Paired Opposite Chiyaan Vikramஓரிரு தினங்களுக்கு முன் விக்ரம் நடிப்பில் வெளியான படம் கடாரம் கொண்டான்.

இப்படத்தைத் தொடர்ந்து இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

விக்ரம் நடிப்பில் 58 படமாக உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

பாகுபலி இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் வசனம் எழுத அடுத்த மாதம் சூட்டிங் தொடங்குகிறது.

இந்த நிலையில் விக்ரமிற்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம், எஸ்ஜே சூர்யா நடித்த மான்ஸ்டர் படங்களில் பிரியா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Priya Bhavani Shankar Paired Opposite Chiyaan Vikram

எங்க தல எங்களுடன் செல்ஃபி எடுப்பார்..; அஜித் ரசிகர்கள் ஆனந்தம்

எங்க தல எங்களுடன் செல்ஃபி எடுப்பார்..; அஜித் ரசிகர்கள் ஆனந்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith fans happy with their actor Selfie at fans crowdபொதுவாக ஒரு நடிகர், நடிகைகள் கண்டால் ரசிகர்கள் அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ள விரும்புவார்கள்.

அதுவும் டாப் ஹீரோக்களை கண்டுவிட்டால் கட்டுங்கடங்காத கூட்டம் வந்துவிடும் என்பதால் சில நடிகர்கள் வேகமாக சென்றுவிடுவார்கள்.

இந்த நிலையில் பொதுவெளியில் நடிகர் அஜித்தை கண்டதும் பெருங்கூட்டம் திரண்டுள்ளது.

அப்போது ரசிகரின் செல்போனை வாங்கிய அஜித் தானே அவர்களுடன் செல்பி எடுத்துள்ளார்.

இதனை பதிவிட்ட ரசிகர்கள் எங்க தல எங்களுடன் செல்ஃபி எடுப்பார் என ஆனந்தமாக சொல்லி வருகின்றனர்.

அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படம் வருகிற ஆகஸ்ட் 8ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.

Ajith fans happy with their actor Selfie at fans crowd

Breaking மறக்க முடியாத நிகழ்வை தந்த ரஜினி..; சூர்யா நெகிழ்ச்சி

Breaking மறக்க முடியாத நிகழ்வை தந்த ரஜினி..; சூர்யா நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya thanks to Rajini for his valubale comments on Kaappan audio launchலைகா தயாரிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவான ‘காப்பான்’ படத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா நடித்துள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்து கொண்டு இசையை வெளியிட்டார் ரஜினி.

மேலும் புதிய கல்வி கொள்கை குறித்த சூர்யா பேசிய கருத்துக்கு தன் பெரும் ஆதரவை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சற்றுமுன் தன் ட்விட்டரில் ”தனது வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு இந்த இசை வெளியீட்டு விழா… நன்றி! ரஜினி சார் உங்கள் வார்த்தை பெரும் மதிப்பு மிக்கவை.” என தெரிவித்துள்ளார்.

Suriya thanks to Rajini for his valubale comments on Kaappan audio launch

டென்னிஸை தொடர்ந்து யோகாவில் கால்பதித்தார் ஐஸ்வர்யா ஆர் தனுஷ்!!

டென்னிஸை தொடர்ந்து யோகாவில் கால்பதித்தார் ஐஸ்வர்யா ஆர் தனுஷ்!!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)‘3’, ‘வை ராஜா வை’ ஆகிய படங்களை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ், தற்போது முதலீட்டாளராக மாறியுள்ளார். இவர் 2016-ல் தொடங்கப்பட்ட ‘சர்வா யோகா’ நிறுவனத்தில் தற்போது முதலீடு செய்துள்ளார். இந்த நிறுவனத்தின் நிறுவனர்கள் சர்வேஷ் ஷஷி மற்றும் நடிகை மலைக்கா அரோரா ஆகியோர். இந்த நிறுவனம் நேரடி மற்றும் டிஜிட்டலின் மூலம் யோகாவினால் உண்டாகும் பலனை பார்வையாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் எடுத்துரைக்கின்றனர். சர்வா நிறுவனத்திற்கு பாலிவுட் பிரபலங்கள் பலர் நிதியளித்துள்ளனர், அந்த வரிசையில் மலைக்கா அரோரா, சாஹித் கபூர், பாப் நட்சத்திரம் ஜெனிபர் லோபஸ் ஆகியோர் அடங்குவர்.

இந்நிறுவனத்திற்கு உலகளவிலான மூதலீட்டின் மூலம் 34.47 கோடி ரூபாய் நிதி சேர்ந்துள்ளது. இந்தியாவில் உள்ள சர்வா ஸ்டூடியோக்களின் எண்ணிக்கை அடுத்த மாதத்தில் 100-ஐ தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022-க்குள் 500 ஸ்டூடியோக்களை ஓயோ நிறுவனத்துடன் இணைந்து அமைக்கத் திட்டமிட்டுள்ளது சர்வா நிறுவனம்.

சர்வா மற்றும் திவா யோகா குறித்து பேசிய ஐஸ்வர்யா ஆர். தனுஷ், ” தென்னிந்தியாவில் செயல்பாடுகளை அதிகரிக்க சர்வா நிறுவனம் உதவும். இந்த நவீன வாழ்க்கை முறையில், மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு, தூக்கமின்மை மற்றும் உடல் பருமன் ஆகியவற்றுடன் நாம் தினசரி போராடி வருகின்றோம். மலைக்கா மற்றும் சர்வேஷின், சர்வா மற்றும் திவா யோகா பணிகளை நான் பார்த்து வருகிறேன். ஆரோக்கியத்துடன் தொடர்புடைய எல்லாவற்றிலும் எங்கள் சிந்தனை செயல்முறைகள் எப்படி சரியாக இணைகின்றன என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் இருவருடனும் பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், இந்த கூட்டணியின் மூலம் தென்னிந்தியாவில் சர்வா மற்றும் திவா யோகா அதிகரிக்கும் என்று நம்புகிறேன். நினைவாற்றல் மற்றும் முழுமையான ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உலகத்திற்கு நினைவூட்ட வேண்டும், என்பது சர்வாவின் குறிக்கோள், நான் இதில் முதலீடு செய்ததற்கான காரணமும் இதுவே” என்று கூறினார்.

பாலிவுட் ஃபிட்ஸ்பிரேஷன் மலைக்கா அரோரா, “ஐஸ்வர்யா அவர்கள் சர்வா மற்றும் திவா யோகாவுடன் சேர்வது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஐஸ்வர்யாவின் ஆர்வம் திவா யோகாவின் தேசிய வளர்ச்சித் திட்டங்களை விரைவுபடுத்த உதவும். ஆரோக்கியம் மற்றும் முழுமையான வாழ்க்கை என்று வரும்போது, எங்கள் மூவருக்கும் ஒரே மாதிரியான எண்ணம் இருக்கின்றது, எங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் சர்வா மற்றும் திவா யோகா இரண்டையும் வெற்றியின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று நான் நம்புகிறேன். ”

இந்த வளர்ச்சி குறித்து சர்வாவின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான சர்வேஷ் ஷஷி கூறுகையில், “ஐஸ்வர்யா அவர்கள் மனதளவில் மற்றும் உடலளவிலான ஆரோக்கியத்திற்கு குரல் கொடுப்பவராக நான் அறிந்திருக்கிறேன், அவர் தென்னிந்தியாவில் திவா யோகாவின் செயல்பாடுகளை மேம்படுத்துவதில் நான் பெருமைப்படுகிறேன். ”

இந்த நிறுவனம் 10 கோடி மக்களை அடுத்த 5 வருடங்களில் சென்று சேரத் திட்டமிட்டுள்ளது. இந்தியா முழுக்க 100 ஸ்டூடியோக்களை வரும் மாதத்திற்குள் திறக்கவுள்ளது சர்வா. இந்நிறுவனம் நாள் ஒன்றுக்கு 18,000 உறுப்பினர்கள் என ஒரு வாரத்திற்குள் 3500க்கும் மேற்பட்ட வகுப்புகளை நடத்தி வருகிறது. சர்வாவின் திவா யோகா ஸ்டூடியோ – பெண்களுக்கான பிரத்யேக யோகா மையம், சென்னையில் அடுத்த இரு மாதங்களில் செயல்படவுள்ளது.

சிவகார்த்திகேயனின் “ஹீரோ” படத்தில் வில்லனாக நடிக்கும் “அபய் தியோல்”

சிவகார்த்திகேயனின் “ஹீரோ” படத்தில் வில்லனாக நடிக்கும் “அபய் தியோல்”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectபாலிவுட்டின் மிகவும் திறமை வாய்ந்த நடிகர்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே சிவப்பு கம்பளங்கள் விரிக்கப்படுவதும், அவர்கள் மீது பாராட்டு மழை பொழிவதும் மிகவும் தெளிவாகத் தெரிந்த ஒரு விஷயம். குறிப்பாக, அவர்கள் அனைவரும் தமிழ் சினிமாவில் தங்கள் திறமைகளை கட்டவிழ்த்து விடும்போது, அவை மிகவும் பிரபலமான தலைப்பாக மாறும். நிச்சயமாக, மிகவும் அழகான நடிகர் அபய் தியோல் அந்த தருணங்களை அனுபவிக்க வேண்டிய நேரம் இது. ஆம்! சிவகார்த்திகேயனின் அடுத்து வரவிருக்கும் ‘ஹீரோ’ படத்தில் வில்லனாக நடிக்க அபய் தியோல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த திறமையான நடிகரை இந்த படத்தில் கொண்டு வருவதில் யார் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள் என்று யூகிக்கிறீர்களா?, அதன் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் தான் என அவரே சொல்கிறார்.

இது குறித்து அவர் கூறும்போது, “இந்த படத்தில் அவரது இருப்பு ‘ஹீரோ’வின் சாராம்சத்தை உயர்த்துவதில் மிகச்சிறந்த பெருக்கியாக இருக்கும். எனது முதல் படமான ‘இரும்புத்திரை’ அர்ஜுன் சார் நடித்த வில்லன் கதாபாத்திரத்திற்காக மிகவும் கவனிக்கப்பட்டது. உண்மையில் இந்த படம் கடுமையான குணாதிசயங்களுடன் கூடிய ஒரு வில்லத்தனமான கதாபாத்திரத்தை உருவாக்க கூடுதல் பொறுப்பை கொண்டிருந்தது. அவர் கணிக்க முடியாத மற்றும் கட்டுப்பாடற்ற ஒருவர். அவரது முழுமையான எதிர்வினைகள் குறைந்தபட்ச புன்னகையாக இருக்கும், ஆனால் அதற்கு கீழே அதிக பயங்கரவாதம் உள்ளது. யார் இந்த கதாபாத்திரத்துக்கு பொருந்துவார்கள் என நான் என் கற்பனையில் என் எண்ண ஓட்டத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் போது, அபய் தியோல் தான் மிகவும் பரிபூரணமாக இருந்தார். அவர் இந்த கதை மற்றும் அவரது கதாபாத்திரத்திலும் மிகவும் ஈர்க்கப்பட்டார் என்பது எனக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. இப்போது இது மகிழ்ச்சியுடன் சேர்த்து, அதிகப்படியான பொறுப்புகளையும் கொடுத்திருக்கிறது. சிவகார்த்திகேயன், அர்ஜூன் சார் மற்றும் அபய் தியோல் போன்ற சக்தி வாய்ந்த நட்சத்திர நடிகர்களை கொண்டிருப்பது, படத்தை மிகச்சிறந்ததாக கொடுக்க என்னை உந்துகிறது” என்றார்.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கும் இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் எழுதி இயக்குகிறார். அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க, ‘நாச்சியார்’ புகழ் இவானா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா (இசை), ஜார்ஜ் சி வில்லியம்ஸ் (ஒளிப்பதிவு) மற்றும் ரூபன் (படத்தொகுப்பு) என “இரும்புத்திரை”யின் அதே தூண்கள் பி.எஸ். மித்ரன் உடன் இரண்டாவது முறையாக இந்த படத்திலும் இணைந்திருக்கிறார்கள்.

More Articles
Follows