GOOD BOY RAMCHARAN… BAD BOY Jr. NTR..; சென்னையில் RRR அரங்கை அதிரவைத்த தெலுங்கு ரசிகர்கள்..

GOOD BOY RAMCHARAN… BAD BOY Jr. NTR..; சென்னையில் RRR அரங்கை அதிரவைத்த தெலுங்கு ரசிகர்கள்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாகுபலி படத்திற்கு பிறகு இயக்குனர் ராஜமௌவுலி இயக்கும் படங்கள் என்றாலே இந்தியளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தற்போது ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்கும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

மேலும் இந்தியா முழுவதும் இந்த படக்குழுவினர் புரோமோசன் பணிகளில் ஈடுபடுவதால் இதன் எதிர்பார்ப்பு தினம் தினம் அதிகரித்து வருகிறது.

‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், ஸ்ரேயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மரகதமணி இசையமைத்துள்ளார். மதன்கார்க்கி தமிழில் வசனங்களை எழுதியுள்ளார்.

இந்த படத்தை உலகம் முழுவதும் 2022 ஜனவரி 7ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.

இந்த நிலையில் ‘ஆர்ஆர்ஆர்’ பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கத்தில் CHENNAI TRADE CENTRE நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சிவகார்த்திகேயன், உதயநிதி, தயாரிப்பாளர்கள் தானு, ஆர்பி சௌத்ரி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இந்த விழாவுக்கு திருப்பதி. சித்தூர், நெல்லூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வந்திருந்தனர்.

அவர்கள் தங்கள் கைகளில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், பேனர்களை வைத்திருந்தனர். ஜெய் என்டிஆர்.. ஜெய் ராம் சரண் என கூச்சல் போட்டப்படியே இருந்தனர்.

எனவே இந்த நிகழ்ச்சி சென்னையிலும் நடந்தாலும் ஆந்திரா தெலுங்கானாவிலும் இருக்கிறோமோ என்ற உணர்வே நமக்கு ஏற்பட்டது.

விழா மேடையில் தொகுப்பாளர்கள் மணிக்கணக்கில் பேசிக் கொண்டே இருந்தாலும் ரசிகர்களின் கூச்சல் விண்ணை முட்டியது.

ராம் சரண் மற்றும் என்டிஆர் இருவருமே தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

இந்த நிலையில் ராஜமௌலியிடம் தொகுப்பாளர்கள் யார் நல்ல பையன்..? யார் கெட்ட பையன்? என இரண்டு ஹீரோக்கள் பற்றி கேட்டனர்.

அதற்கு ராம் சரண் நல்ல பையன்… சொல் பேச்சு கேட்பவர்.. ஜீனியர் என்டிஆர் கெட்ட பையன் கோவப்படுவார். சொல்பேச்சு கேட்கமாட்டார் என ராஜமௌலி சிரித்தப்படியே தெரிவித்தார்.

RRR movie pre release event high lights

பிற மொழியிலும் பின்னணி குரல்.; அடம் கொஞ்சம் தூக்கலாய் அஞ்சு விருதுகளை அள்ளிய ருத்ரா

பிற மொழியிலும் பின்னணி குரல்.; அடம் கொஞ்சம் தூக்கலாய் அஞ்சு விருதுகளை அள்ளிய ருத்ரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிசம்பர் 31ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் புதுமுகம் ருத்ரா கதையின் நாயகராக நடித்துள்ள ”சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’ படம் ரிலீஸுக்கு முன்பே, திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு 10 விருதுகளை இப்படம் வெளியாவதற்கு முன்பே, அள்ளியிருக்கிறது.

அதில், ‘கோவா இன்டர்நேஷனல் பிலிம் காம்படீஷன் ‘, ‘செவன் கலர்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம் பெஸ்டிவல்’, ‘சில்வர் ஸ்கிரீன் இன்டர்நேஷனல் ஃபிலிம் பெஸ்டிவல்’, இண்டியன் மீராக்கி அவார்டு 2021, ஆர்ஐஎஃப்எஃப். .. உள்ளிட்ட 5 சிறந்த நடிகர் விருதுகள்., அறிமுக நாயகர் ருத்ராவிற்கு, கிடைத்திருக்கிறது… என்பது சிறப்பு !

தமிழ் படங்களை பார்த்து வளர்ந்த கேரளா-திருவனந்தபுரத்துக்காரர் நாயகர் ருத்ரா, என்றாலும், தமிழில் ‘நானே இப்படத்திற்கு பின்னணி குரல் கொடுப்பேன்…’ என பிடிவாதமாக இருந்ததின் விளைவே இந்த விருதுகள் !

‘தாய் மொழி அல்லாத பிற மொழியில் பின்னணி குரல் கொடுத்து அதன் மூலம் சிறந்த நடிகர் எனும் விருதுகளை வாங்குவதென்பது எவ்வளவு கடினம் !’ என்பது எல்லோருக்கும் தெரியும் தானே. ?!

‘நபீஹா மூவீஸ் புரொடக்ஷன்’ என்ற பட நிறுவனம் சார்பில் நுபாயஸ் ரகுமான் தயாரித்துள்ள இப்படத்திற்கு கவித்துவமாக ” சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை ” என்று பெயர் வைத்து., கதாநாயகனாக ருத்ரா நடித்துள்ளார்.

கதாநாயகியாக சுபிக்ஷா மற்றும் சுபலக்ஷ்மி, ‘ராட்சசன்’ வினோத் சாகர், கணபதி, பீட்டர் ஹார்ட்லி, மகேஷ் பத்மநாபன், சுனந்தா ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – பிஜு விஸ்வநாத், இசை – ராஜேஷ் அப்புகுட்டன் & ருத்ரா, பாடல்கள் – ‘கட்டளை’ ஜெயா, எடிட்டிங். – சுதாகர்

கலை இயக்கம் – மகேஷ் ஸ்ரீதர், நடனம் – ராபர்ட், ரேகா, ஸ்டண்ட் – விஜய்,

வசனம் மற்றும் இணை இயக்கம் – L.கணபதி,

தயாரிப்பு – நுபாயஸ் ரகுமான் கதை, திரைக்கதை, இயக்கம் – மகேஷ் பத்மநாபன் உள்ளிட்டோரின் உழைப்பில் சிறப்பாக உருவாகியுள்ள ருத்ரா வின் ‘சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’ படத்தை THREE FACE Creations வெளியீடு செய்கிறது.

Debutant actor Rudhra bagged 5 awards at international film festival

மினி ஹிட் கொடுத்தவங்க உங்களுக்கு தெரியுறாங்க..; மிரட்டல் ஹிட் கொடுத்தவர தெரியலையா ரஜினி.?

மினி ஹிட் கொடுத்தவங்க உங்களுக்கு தெரியுறாங்க..; மிரட்டல் ஹிட் கொடுத்தவர தெரியலையா ரஜினி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 4ஆம் தேதி ரிலீசானது.

இப்படத்தின் வெற்றியாலும் கொரோனா காலத்தில் தன்னை படப்பிடிப்பில் நன்றாக கவனித்துக் கொண்டமையாலும் இயக்குனர் சிவாவுக்கு அவரது வீட்டிற்கே சென்று தங்க செயின் கொடுத்து பாராட்டினார் ரஜினிகாந்த்.

இதனைடுத்து கடந்த டிசம்பர் 23ஆம் தேதி ‘அண்ணாத்த’ பட 50-வது நாள் வெற்றி விழாவையொட்டி அப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களை தனக்கு சொந்தமான சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு அழைத்து பாராட்டி வாழ்த்தியிருந்தார் ரஜினி.

இயக்குநர் சிவா, இசையமைப்பாளர் இமான், ஒளிப்பதிவாளர் வெற்றி, படத்தொகுப்பாளர் ரூபன் உள்ளிட்ட 50 பேருக்கு தங்க செயின் கொடுத்து பாராட்டினாராம் ரஜினி.

அப்போது ரஜினி பேசும்போது…

‘அண்ணாத்த’ படம் ஓடிடி நெட்ஃபிளிக்ஸ்’-ல் ரிலீசான பிறகும் சில தியேட்டர்களில் 50 நாட்களாக ஓடிக் கொண்டிருக்கிறது. பல தியேட்டர் உரிமையாளர்கள் தங்களுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஹிந்தியில் மிகப் பெரிய வெற்றியை அண்ணாத்த பெற்றுள்ளது மகிழ்ச்சியாக உள்ளதாக படக்குழுவினரிடம் ரஜினி பேசினாராம்..

இந்த நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார்? என்ற கேள்வி கோலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது.

தமிழில் ஹிட் படங்களை கொடுத்த பல இயக்குனர்களிடம் கதை கேட்டு இருக்கிறாராம் ரஜினி.

தற்போது இயக்குனர்கள் வரிசையில்.. தேசிங்கு பெரியசாமி, பாண்டிராஜ், வெங்கட் பிரபு, கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் உள்ளனர்.

இவர்களுடன் பிரபல ஹிந்தி இயக்குனர் (தமிழரான) பால்கியும் இணைந்திருக்கிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த இயக்குனர்களை அழைத்து ரஜினியே கதை கேட்டு வருகிறார். இவர்கள் எல்லாம் சின்ன ஹிட் படங்களை கொடுத்தவர்கள்.

ஆனால் இந்திய சினிமாவையே தன் சூப்பர் ஹிட் படங்களால் மிரள வைத்தவர் இயக்குனர் ராஜமௌலி. அவர் கொடுக்காத ஹிட் படங்களே இல்லை எனலாம்.

அவரும் ரஜினியை இயக்க காத்திருப்பதாக பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.

சமீபத்தில் வடஇந்தியாவில் நடைபெற்ற ஆர்ஆர்ஆர் பட புரோமோசன் நிகழ்ச்சியில் கூட ரஜினியின் சிகரெட் ஸ்டைல் பற்றி சல்மான்கானிடம் பேசினார் ராஜமௌலி. அந்த வீடியோவும் இணையங்களில் வைரலாகி வருகிறது.

இப்படியாக தொடர்ந்து ரஜினி பற்றி பேசிக் கொண்டு இருக்கும் ஒரு பிரம்மாண்ட இயக்குனரிடம் ரஜினி கதை கேட்கலாமே…

ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு மகேஷ் பாபுவை இயக்கவுள்ளார் ராஜமௌலி. ஒருவேளை ரஜினி கால்ஷீட் கிடைத்தால் ரஜினிக்காக வரமாட்டாரா ராஜமௌலி..? அல்லது மகேஷ்பாபு தான் ரஜினி படத்தை இயக்கிவிட்டு வாருங்கள் என சொல்லமாட்டாரா..?

ரஜினிகாந்த் – ராஜமௌலி இணைந்தால் அந்த படத்தின் மேக்கிங் எப்படி இருக்கும்..? வியாபாரம் எப்படி இருக்கும்? என யோசித்து பாருங்கள்..

உலக சினிமா ரசிகர்களிடையே ரஜினிக்கும் ராஜமௌலிக்கு மாஸ் மார்கெட் இருக்கும்போது இருவரும் இணையலாமே என்பதுதான் ரஜினி ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையாக உள்ளது என்றால் அது மிகையல்ல..

ரஜினியின் சமீபத்திய படங்கள் அண்ணாத்த, தர்பார்… காலா.. உள்ளிட்ட படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படியிருக்கையில் ரஜினி-ராஜமௌலி இணைந்தால் அது ரஜினியின் சினிமா இமேஜை இன்னும் உயர்த்தும் என்பதில் சந்தேகமில்லை எனலாம்.

Fans wants Rajinikanth and Rajamouli combo in onscreen

EXCLUSIVE பாக்யராஜிடம் ஒரு கேள்வி; இந்த படங்கள் மீது எப்போ வழக்கு போடுவீங்க.?

EXCLUSIVE பாக்யராஜிடம் ஒரு கேள்வி; இந்த படங்கள் மீது எப்போ வழக்கு போடுவீங்க.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவின் திரைக்கதை மன்னன் என்ற பெயர் இயக்குனரும் நடிகருமான கே. பாக்யராஜீக்கு உண்டு.

தாம்பத்ய சமாச்சாரமாக இருந்தால் கூட அதை நகைக்சுவையாகவும் அதே நேரம் யாருடைய மனதையும் புண்படுத்தாத விதமாக திரைக்கதை அமைத்து தான் இயக்கிய படங்களில் காட்சியாக வைத்திருப்பார்.

சமீபத்தில் சில படங்களை பார்த்து வேதனைப்படுவதாக ஒரு விழா மேடையில் பேசியிருந்தார்.

அதாவது.. “இன்றைய தமிழ் சினிமாவில் தரமற்ற படங்கள் வெளியாகி வருகிறது. இதுபோன்ற மோசமான படங்களை நாம் (மக்கள்) தவிர்க்கவில்லை என்றால் இதுபோன்ற படங்கள் தொடர்ந்து வரும்.

எனவே தானும் மோசமான படங்கள் வெளியானால் பொதுநல வழக்கு தொடுக்கலாம் என நினைக்கிறேன்” என பேசியிருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் டிசம்பர் 10ஆம் தேதி புளு சட்டை மாறன் இயக்கிய ஆன்டி இண்டியன் படம் ரிலீசானது. இந்த படம் வெளியாவதற்கு 2 நாட்களுக்கு முன்னர் பாரதிராஜா, பாக்யராஜ், சேரன் உள்ளிட்ட இயக்குனர்கள் படத்தை ஆஹா ஓஹோ என புகழ்ந்து தள்ளினர்.

இவர்களின் பேச்சை நம்பி பலரும் இந்த படத்தை பார்த்தனர். ஆனால் ஆன்டி இண்டியன் படத்தில் அப்படி ஒன்றும் விசேஷமில்லை.

மேலும் அந்த படம் ஒரு வட இந்திய படத்தின் காப்பியாகும். இவையில்லாமல் ஒரு குறும்படத்தின் காப்பி என சம்பந்தப்பட்ட படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த விஷயங்களை எல்லாம் மறைத்து ஆன்டி இண்டியன் படத்தை என்னவோ தன்னுடைய சொந்த கதை போல பேசியிருந்தார் புளு சட்டை மாறன். படத்தை பார்த்த ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மோசமான படங்களை பார்த்தால் வழக்கு போடுவேன் என்று சொன்னாரே பாக்யராஜ்.

அதன்படி இவர் பாராட்டிய ஆன்டி இண்டியன் படம் மற்றும் இவர் நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் படங்கள் மீது வழக்கு போடுவாரா? என ரசிகர்கள் எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர்.

(இதை படிக்கும் பாக்யராஜ் ரசிகர்கள் சிலர் விவாதத்திற்கு வரலாம்.. அதாவது… அவரது பார்வையில் நல்ல படமாக தெரிந்த ஒன்று மற்றவர்கள் பார்வையில் மோசமான படங்களாக தெரியலாம்.

அதுபோல ஒருவேளை மற்றவர்கள் பார்வைகளில் நல்ல படங்களாக தெரிந்த ஒன்று பாக்யராஜ் பார்வையில் மோசமான படமாக தெரியலாம். அப்படியிருக்கையில் பாக்யராஜ் என்ன அளவுகோல் வைத்துள்ளார் எனத் தெரியவில்லை.)

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.. பெரும்பாலான மக்களுக்கு முருங்கைக்காய் சிப்ஸ் மற்றும் ஆன்டி இண்டியன் படங்கள் பிடிக்கவில்லை. எனவே பாக்யராஜ் எப்போது வழக்கு போடுவார்? என காத்திருக்கிறார்கள்.

Common man question to director Bhagyaraj ?

விடிய விடிய 12 மணி நேரத்தில் நடக்கும் ‘பிரம்ம முகூர்த்தம்’

விடிய விடிய 12 மணி நேரத்தில் நடக்கும் ‘பிரம்ம முகூர்த்தம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாலை 6 மணிக்கு துவங்கி மறுநாள் காலை 6 மணிவரை நடைபெறும் நகைச்சுவை கலந்த காதல் படத்தின் கதை திரைக்கதை எழுதி டைரக்ட் செய்கிறேன்.

பிரபல முன்னணி கதாநாயகி இதில் நாயகியாக நடிப்பதற்கும், முன்னனியில் பிரபல நான்கெழுத்து நகைச்சுவை நடிகர் முக்கிய வேடத்தில் நடிப்பதற்கும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

தேனி,கம்பம், போடி, ஏற்காடு மற்றும் சென்னையிலும் இதன் படப்பிடிப்பை நடத்தி மார்ச் மாதம் திரைக்கு வருவதற்கு உருவாகும் இதற்கு ” பிரம்ம முகூர்த்தம்” என்று பெயர் வைத்துள்ளோம்.

தொழில் அதிபர் பி.செந்தில்நாதன் கே.வி.மீடியா நிறுவனம் சார்பில் இதை தயாரிக்கிறார்” என்று இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, எழுதி இயக்கும் புதியவரான டி.ஆர். விஜயன் கூறினார்.

விஜய் விஷ்வா, மனோஜ்குமார், இருவருடன் முல்லை கோதண்டம், விஜய் டி.வி.பாலா, உட்பட மேலும் பல நகைச்சுவை நடிகர்களும் இதில் நடிக்கின்றனர்.

பி. முகமது ஜாபர் வசனம் தீட்ட, சினேகன், சி.பாலமுருகன், ராஜா மூவரின் பாடல்களுக்கு ஸ்ரீசாஸ்தா இசையமைக்கிறார்.

பம்மல் ரவி சண்டைப் பயிற்சியையும், கேசவ் நடன பயிற்சியையும், ப்ரியன் படத்தொகுப்பையும், சேகர் கலையையும், இ.கே.நவ்சாத் ஒளிப்பதிவையும், ஜெ. மணி தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனிக்கின்றனர்.

பிரபல தொழில் அதிபரான பி. செந்தில்நாதன் தயாரிக்கும் ” பிரம்ம முகூர்த்தம்” படத்தின் கதை, திரைக்கதை எழுதி டி.ஆர்.விஜயன் டைரக்ட் செய்கிறார்.

Brahma Muhurtham shoot happens evening six to morning six

கேன்சர் தாக்கிய குழந்தைகளுக்கு உதவ பேஷன் ஷோ.; பெண்களுக்கு சுயம்பி விருது

கேன்சர் தாக்கிய குழந்தைகளுக்கு உதவ பேஷன் ஷோ.; பெண்களுக்கு சுயம்பி விருது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்நாடு மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை பட்டியலில் இடம் பிடித்தவர் இலங்கேஸ்வரி முருகன். ஒப்பனைக் கலைஞராக இந்த துறையில் 21 வருட அனுபவம் கொண்டவர் இவர். .

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் விதமாக, கடந்த வருடம் டிச-28ல் ஒப்பனை மற்றும் நவீன ஒப்பனை போட்டி, பேஷன் ஷோ ஆகியவற்றை சென்னையில் நடத்தினார்,

இந்த துறையில் உள்ள 200க்கும் மேற்பட்ட ஒப்பனைக் கலைஞர்களும் அழகு கலை நிபுணர்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை வெற்றிகரமான நிகழ்ச்சியாக மாற்றினார்கள்.

இந்தநிலையில் தற்போது அடித்தட்டு நிலையில் இருந்து தங்களது உழைப்பால் முன்னேறி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் பத்து பெண்களை தேர்வு செய்து அவர்களுக்கு சுயம்பி என்கிற விருது வழங்கி கவுரவிக்க இருக்கிறார் இலங்கேஸ்வரி முருகன்.

அதேபோல தமிழ்நாடு முழுதும், கிராமத்தில் இருந்து வருகின்ற அழகு கலை நிபுணர்கள் மற்றும் ஒப்பனை கலைஞர்கள் அனைவருக்கும் ஒரு மிகப்பெரிய போட்டி நடத்தி அவர்களுக்கான தொழில் செய்யும் தளங்களை உருவாக்கி கொடுக்க இருக்கிறார்.

அதுமட்டுமல்ல பேஷன் ஷோ ஒன்றை நடத்தி அதில் நம் வீட்டு செல்லப் பிள்ளைகளை நடந்துவர செய்து, அந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் தொகையை குழந்தைகள் நல மருத்துவமனைகளில் உள்ள புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான உபகரணங்களை வாங்கி கொடுக்க இருக்கிறார்.

விரைவில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளும் மற்றும் அதற்கான நிதி திரட்டலும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன என்கிறார் இலங்கேஸ்வரி முருகன்.

Fashion show organised for cancer patients donation

More Articles
Follows