ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகர்களிடம் விசாரணை

jalli kattu protestகடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி லட்சக்கணக்கானோர் மெரினாவில் திரண்டனர்.

ஆரம்பத்தில் அறவழியில் இந்த போராட்டம் தொடங்கியது.

ஆனால் ஒரு சிலரால் இறுதியில் தடியடியில் முடிந்தது.

அந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம் தற்போது விசாரணை கமிஷன் விசாரித்து வருகிறது.

இதில் ஒரு சில நடிகர்களும் நேரிடையாக கலந்துக் கொண்டனர்.

அவர்களை நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பபடவுள்ளதாக ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி விசாரணை செய்யும் நீதிபதி ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டத்தில் விஜய், RJ பாலாஜி, ஜி.வி.பிரகாஷ், ராகவா லாரன்ஸ், ஹிப் ஹாப் ஆதி உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Latest Post