ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’ உலகமெங்கும் வசூல் சாதனை.; கே ஜி எஃப்பை முந்தியது

ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’ உலகமெங்கும் வசூல் சாதனை.; கே ஜி எஃப்பை முந்தியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘காந்தாரா’ தீபாவளிக்கு வெளியான நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்களைக் கடந்து, 100-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி, வசூல் சாதனை படைத்து வருகிறது.

‘கே ஜி எஃப்’ எனும் பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸின் தயாரிப்பில் உருவாகி, வெளியான திரைப்படம் ‘காந்தாரா’. கர்நாடக மாநிலத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் பஞ்சுருளி எனும் காவல் தெய்வத்தை மையப்படுத்திய ‘காந்தாரா’ திரைப்படம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கன்னடத்தில் தயாரான இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்று வருகிறது.

காந்தாரா

அக்டோபர் 15-ம் தேதியன்று தமிழக திரையரங்குகளில் ‘காந்தாரா’ படத்தின் தமிழ் பதிப்பு வெளியானது.

இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், தீபாவளிக்கு வெளியான முன்னணி நடிகர்களின் படங்களுக்கு எந்தவித பாதிப்பில்லாமல் தொடர்ந்து வசூல் சாதனை செய்து வருகிறது.

காந்தாரா

நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி உச்சகட்ட காட்சியில் உணர்வுபூர்வமாக நடித்திருக்கும் ‘காந்தாரா’ திரைப்படம், இன்றும் தமிழகம் முழுவதும் 100-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலில் சாதனை படைத்து வருகிறது என திரையுலகினர் உற்சாகத்துடன் தெரிவிக்கிறார்கள்.

இதனிடையே ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’ உலகமெங்கும் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது என்பதும், கன்னடத்தில் வெளியான ‘கே ஜி எஃப் 2’ படத்தை பார்த்த பார்வையாளர்களை விட, ‘காந்தாரா’ படத்தை பார்வையிட்ட பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காந்தாரா

Rishab Shetty starrer Kantara movie collection updates

சந்தானம் நடிக்கும் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

சந்தானம் நடிக்கும் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் மனோஜ் பீதா இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிக்கும் படம் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’.

இந்த படம், 2019 ஆம் ஆண்டு ஸ்வரூப் ஆர்.எஸ்.ஜே இயக்கத்தில் நவீன் பொலிச்செட்டி, ஸ்ருதி ஷர்மா நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாஸ ஆத்ரேயா’.

தற்போது, இந்த படத்தை தமிழ் ரீமேக்கில் சந்தானம் நடித்து வருகிறார்.சந்தானத்துக்கு ஜோடியாக நடிகை ரியா சுமன் நடிக்கிறார்.

மேலும், இந்த படம் நவம்பர் மாதம் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Agent Kannayiram movie november 25 release

வால்டேர் வீரய்யா படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக கமல் மகள்

வால்டேர் வீரய்யா படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக கமல் மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெகா ஸ்டார் சிரஞ்சீவி – மாஸ் மகாராஜா ரவிதேஜா – மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாரான ‘வால்டேர் வீரய்யா’ எனும் படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இத்துடன் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில் ‘மெகா 154’ என பெயரிடப்பட்டு தொடங்கப்பட்ட திரைப்படத்திற்கு, ‘வால்டேர் வீரய்யா’ என பெயரிடப்பட்டது.

இந்நிலையில் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக ‘வால்டேர் வீரய்யா’ எனும் டைட்டிலுக்கான டீசரை பட குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தீவிர ரசிகரும், இயக்குநருமான பாபி எனப்படும் கே எஸ் ரவீந்திரா இயக்கத்தில் தயாராகும் ‘வால்டேர் வீரய்யா’ எனும் டைட்டிலுக்கான டீசர், சிரஞ்சீவியின் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக வெளியாகி இருக்கிறது.

இதில் பெரிய கப்பல் ஒன்றில் அமர்ந்திருக்கும் வில்லன், ‘வால்டேர் வீரய்யா’வை வார்த்தைகளால் கேலி செய்கிறார். பிறகு மெகா ஸ்டார் சிரஞ்சீவி அந்தக் கப்பலுக்குள் வருகை தந்து, உரிய பதிலடியை அவரது பாணியில் அளிக்கிறார். சிரஞ்சீவியின் அறிமுகக் காட்சியை இயக்குநர் பாபி, சிறப்பான முறையில் வடிவமைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருப்பதால் டீசருக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

மெகா ஸ்டார் சிரஞ்சீவி மீண்டும் பழைய உற்சாகத்திற்கு வந்துவிட்டார் என்றேச் சொல்லலாம்.

ஏனெனில் அவரது தோற்றம், நடை உடல் மொழி, கதாபாத்திர படைப்பு.. ஆகியவை சிரஞ்சீவியின் கடந்த கால பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்களில் இடம் பெற்ற சின்ன சின்ன விசயங்களை மீண்டும் நினைவுபடுத்துகிறது.

மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் மாஸ் மகாராஜா ரவி தேஜாவை காண முடியாவிட்டாலும் , படத்தின் வெளியிட்டு தேதியையும், தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்திருக்கிறார்கள். ‘வால்டேர் வீரய்யா’ அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியாகிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் இணைந்து பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரிக்கும் இந்தப் படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.

இவர்களுடன் மாஸ் மகாராஜா ரவிதேஜா முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். ஆர்தர் ஏ வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, ‘ராக்ஸ்டார்: தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

ஜி. கே. மோகன் மற்றும் எம் பிரவீண் இணை தயாரிப்பாளர்களாகப் பணியாற்றும் இந்த படத்தின் கதை, வசனத்தை பாபி எழுதி இருக்கிறார். இயக்குநர் கோனா வெங்கட் மற்றும் கே. சக்கரவர்த்தி ரெட்டி ஆகியோர் திரைக்கதையை எழுத, கூடுதல் திரைக்கதை மற்றும் வசனத்தை எழுத்தாளர்கள் ஹரி மோகன கிருஷ்ணா மற்றும் வினித் பொட்லுரி எழுதியுள்ளனர். படத்தொகுப்பு பணிகளை நிரஞ்சன் தேவராமனே கவனிக்க, ஏ. எஸ். பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.

அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியாகும் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் ‘வால்டேர் வீரய்யா’ படத்தின் டைட்டிலுக்கான டீசர், வெளியான இரண்டு மணி நேரத்தில் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

வால்டேர் வீரய்யா

Shruthihassan pair with Chiranjeevi in Walter Veeraiya

https://youtu.be/PlS6KkFfMOM

Megastar Chiranjeevi, Mass Maharaja Ravi Teja, Bobby, Mythri Movie Makers’ Mega154 Titled Waltair Veerayya, Releasing For Sankranthi

The makers of megastar Chiranjeevi’s Mega154 offered a sparkle before Diwali with a small glimpse of Mega154 and it made everyone anticipate curiously for the real Diwali blast. The wait is over, as they released the title teaser of the movie.

A powerful title Waltair Veerayya is finalized for the movie being directed by Chiranjeevi’s hard-core fan Bobby (KS Ravindra). There are some elements fans expect from Chiranjeevi’s movies and Bobby seems to be readying a full meal feast for them.

The title teaser starts off with a villain sitting in a huge ship making a mockery of Waltair Veerayya. Then, comes the megastar and sets the ship on fire, to give a fitting reply. This indeed is the kind of intro one expects in the crazy combo of Chiranjeevi and Bobby.

We must say that vintage Chiranjeevi is back. His get-up, walking style, body language, and characterization brings back memories of Chiranjeevi’s iconic characters from yesteryear blockbusters. Although mass maharaja Ravi Teja can’t be seen he sends Diwali wishes, besides announcing the release date. Waltair Veerayya will be releasing for Sankranthi, 2023.

Arthur A Wilson’s camera work is top-notch, whereas Rockstar Devi Sri Prasad has fired up the visuals with his background score. The production design of Mythri Movie Makers are high in standard.

Shruti Haasan is the leading lady opposite Chiranjeevi in the film billed to be a mass-action entertainer laced with all the commercial ingredients. The film is produced on a grand scale by Naveen Yerneni and Y Ravi Shankar of Mythri Movie Makers, while GK Mohan is the co-producer.

Niranjan Devaramane is the editor and AS Prakash is the production designer. Sushmita Konidela is the costume designer.

While the story and dialogue were written by Bobby himself, Kona Venkat and K Chakravarthy Reddy penned the screenplay. The writing department also includes Hari Mohana Krishna and Vineeth Potluri.

Cast: Chiranjeevi, Ravi Teja, Shruti Haasan and others.

Technical Crew:
Story, Dialogues, Direction: KS Ravindra (Bobby)
Producers: Naveen Yerneni and Y Ravi Shankar
Banner: Mythri Movie Makers
Music Director: Devi Sri Prasad
DOP: Arthur A Wilson
Editor: Niranjan Devaramane
Production Designer: AS Prakash
Co-Producers: GK Mohan, Praveen M
Screenplay: Kona Venkat, K Chakravarthy Reddy
Additional Writing: Hari Mohana Krishna, Vineeth Potluri
CEO: Cherry
Costume Designer: Sushmita Konidela
Line Producer: Balasubramanyam KVV
PRO: Yuvraaj
Publicity: Baba Sai Kumar
Marketing: First Show

விக்ரம் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் தயாராகும் ‘தங்கலான்’

விக்ரம் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் தயாராகும் ‘தங்கலான்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு ‘தங்கலான்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகும் இந்த டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

முத்திரை பதித்த முன்னணி இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘தங்கலான்’. இந்த படத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

இவருடன் நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகன் நடிகர்கள் பசுபதி, ஹரி கிருஷ்ணன், அன்பு துரை உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஏ. கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

தமிழ் பிரபா இணை கதாசிரியராக பணியாற்ற, கலை இயக்கத்தை எஸ். எஸ். மூர்த்தி கையாள, படத்தொகுப்பு பணிகளை ஆர். கே. செல்வா கவனிக்க, சண்டை காட்சிகளை ஸ்டன்னர் சாம் அமைக்கிறார். கோலார் தங்க வயலைக் கதைக்களப் பின்னணியாகக் கொண்டு, ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜாவும், நீலம் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் பா. ரஞ்சித்தும் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள்.

‘சீயான் 61’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த இப்படத்திற்கு தற்போது ‘தங்கலான்’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் காணொளி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. சீயான் விக்ரம் ரசிகர்களுக்கு, அவர் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு, தீபாவளி விருந்தாக வெளியாகியிருப்பதால் உற்சாகமடைந்து இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

Chiyaan Vikram Ranjith team up for Thangalaan

Chiyaan Vikram starrer “Thangalaan”

Chiyaan Vikram’s new project has been titled “Thangalaan”. This film, directed by Pa. Ranjith has now got its title announcement poster revealed now.

The film directed by eminent filmmaker Pa Ranjith has been titled Thangalaan. CHIYAAN VIKRAM plays the content-driven hero in this movie that features Parvathy and Malavika Mohanan in the female lead characters. The others in the star-cast include include pasupathy, Hari Krishnan, Anbu Durai and few more prominent actors.

A. Kishore is handling the cinematography and GV Prakash Kumar is composing music. Tamizh Prabha is the co-writer of this film and art department is handled by S.S. Moorthy. R.K. Selva (Editing) and Stunner Sam (Stunts) are the others in star cast.

The story set against the backdrops of Kolar Gold Field, the film crafted and materialized as an action entertainer is produced by eminent Studio Green K.E. Gnanavel Raja in association with Pa. Ranjith’s Neelam Productions at a whopping budget.

Chiyaan Vikram’s upcoming film tentatively titled ‘Chiyaan 61’ has been named as “Thangalaan”. The title announcement poster unveiled for the auspicious occasion of Diwali Eve has turned to be a colossal festive treat for the Chiyaan fans

ரஜினி பிறந்த நாளில் 90ஸ் 2k கிட்ஸ்க்கு பிடித்த பள்ளிக்கூட படம் ஆரம்பம்

ரஜினி பிறந்த நாளில் 90ஸ் 2k கிட்ஸ்க்கு பிடித்த பள்ளிக்கூட படம் ஆரம்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யூடியூப் சேனலாகத் தொடங்கி இன்று தங்களுக்கென ஒரு சேட்டிலைட் டிவி, ஓடிடி என வளர்ந்து நிற்கும் பிளாக் ஷீப் இளைஞர் பட்டாளத்தின் மற்றுமொரு மைல் கல்லாய் பள்ளிக்கூட பருவத்தை மையமாக வைத்த புத்தம் புதிய திரைப்படத்தை எழுதியிருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான பல வெற்றிப்படங்களில் பங்களிப்பு செய்து வரும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் , பிளாக்‌ஷிப்பின் இந்த கனவுத் திரைப்படத்தை தயாரிக்கிறார்.

பிரபல டிஜிட்டல் , தொலைக்காட்சி மற்றும் மேடைப்பேச்சு நட்சத்திரமான தமிழ்ப்பேச்சு ராஜ்மோகன் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார்.

மக்களை மகிழ்விக்கும் பல நட்சத்திரங்களின் பட்டாளமே இந்தப் பள்ளிக்கூட படத்தில் உள்ளது. தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியலோடு நட்சத்திரங்களின் பட்டியலும் விரைவில் வெளிவர உள்ளது.

டிசம்பர் 12ஆம் தேதி (ரஜினி பிறந்தநாள்) படப்பிடிப்பு பணிகள் துவங்க உள்ளது. 90ஸ் கிட்ஸ் , 2k கிட்ஸ் என அனைவருக்கும் பிடித்த அழகான பள்ளிக்கூடத் திரைப்படமாக அடுத்த சம்மர் திரைக்கு வருகிறது ஒரு புதிய திறமைப் பட்டாளம்.

இந்த செய்தியை தீபாவளி இனிப்பாய் ஊடக உறவுகளோடு பகிர்ந்து கொண்டு மகிழ்கிறார்கள், பொது மக்களின் அன்பையும் ஆதரவையும் எதிர்நோக்கி உள்ளது.

90’s 2k kids’ favorite school film opens on Rajini’s birthday

சாக்‌ஷி தோனி எழுத்தில் தோனி தயாரிக்கும் முதல் சினிமா இதுதான்

சாக்‌ஷி தோனி எழுத்தில் தோனி தயாரிக்கும் முதல் சினிமா இதுதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி திருமதி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து ‘தோனி என்டர்டெயின்மெண்ட்’ என சொந்தமாக பட நிறுவனத்தை தொடங்கி, தமிழில் திரைப்படம் ஒன்றை தயாரிக்கின்றனர்..

சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு படமாக தயாராகும் அந்த படைப்பு விரைவில் தொடங்குகிறது.

இந்நிறுவனம் அனைத்து மொழிகளிலும் பொழுதுபோக்கு அம்சம் உள்ள திரைப்படங்களை தயாரிப்பதற்காக களம் இறங்கி இருக்கிறது.

இதற்கான பல கட்ட தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய ஐபிஎல் போட்டிகளை அடிப்படையாகக் கொண்டு பிரபலமான ‘ரோர் ஆஃப் தி லயன்’ எனும் ஆவணப் படத்தை தயாரித்து வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் தயாரிப்பு துறையில் தனக்கென தனித்துவமான நற்பெயரையும் பெற்றுள்ளது. ‘ வுமன்’ஸ் டே அவுட் ‘ என்ற பெயரில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தையும் தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்திருக்கிறது.

இந்திய அளவில் பிரபலமான நட்சத்திர கிரிக்கெட் வீரராக தோனி திகழ்ந்தாலும், அவருக்கும் தமிழக மக்களுக்கும் இடையேயான பந்தம் பிரத்யேகமானது. சிறப்பானது.

இந்த நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் தோனி என்டர்டெய்ன்மெண்ட், தனது முதல் படத்தை தமிழில் தயாரிக்கிறது. இந்த படம், தோனி என்டர்டெய்ன்மெண்ட்டின் நிர்வாக இயக்குநரான சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கம் கொண்ட ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாகும்.

இந்த திரைப்படத்தை ‘அதர்வா- தி ஆர்ஜின்’ எனும் முப்பரிமாண வடிவிலான கிராஃபிக் நாவலை எழுதிய ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.

இந்த நாவல் ஒரு புதிய யுக கிராஃபிக் நாவல். மேலும் இப்படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள்.

தமிழில் மட்டுமின்றி அறிவியல் புனைவு கதை, குற்றவியல் நாடகம், நகைச்சுவை, சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் பல வகையான அற்புதமான மற்றும் அர்த்தமுள்ள உள்ளடக்கத்தை கொண்ட திரைப்படங்களை உருவாக்கவும் மற்றும் தயாரிப்பதற்காகவும், பல திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரைக்கதை ஆசிரியர்களுடன் தோனி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

தமிழில் தோனி என்டர்டெய்ன்மெண்ட்டின் முதல் தயாரிப்பை இயக்கும் வாய்ப்பை பெற்றிருக்கும் ரமேஷ் தமிழ்மணி பேசுகையில்…

”சாக்‌ஷி தோனி எழுதிய கதையின் கருவைப் படிக்கும்போதே இதன் தனித்துவத்தை என்னால் உணரமுடிந்தது. புத்தம் புதிதாய் இருந்த இந்த கதை குடும்பங்களை மகிழ்வூட்டி, சிரிக்கவைத்து சிந்திக்கவைக்கும் என்று நம்பினேன்.

இந்தக் கருவைத் திரைக்கதையாக்கி திரைப்படமாக்கும் வாய்ப்பை அவர் எனக்கு வழங்கியதைப் பெருமையாகக் கருதுகிறேன்.” என்று ரமேஷ் தமிழ்மணி கூறியுள்ளார்.

மேலும் “இந்தப் பயணத்தில் பங்கேற்பதில் ஒட்டுமொத்தக் குழுவும் முழு ஆர்வத்தில் இணைந்துள்ளது. ஒரு சிறந்த திரைப்படத்தை மக்களுக்குக் கொடுக்கப்போகிறோம் என்ற நம்பிக்கையில் துளிர்க்கும் ஆர்வம் அது. என்று ரமேஷ் தமிழ்மணி கூறுகிறார்.

தோனி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் வணிகப்பிரிவு தலைவரான விகாஸ் ஹசிஜா பேசுகையில்…

‘ கொரோனா தொற்றுப் பாதிப்பிற்குப் பிறகு இந்தியாவில் வெளியாகும் முக்கிய திரைப்படங்களின் வணிகம் என்பது விரிவாக்கம் அடைந்திருக்கிறது..எல்லைகளற்ற அதாவது பிராந்திய சினிமாவிற்கும், இந்தி சினிமாவிற்கும் இடையேயான விவாதம் இல்லாமல், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்கள், வட மாநிலங்களிலும் சமமாக கொண்டாடப்படுவதால், தோனி என்டர்டெய்ன்மெண்ட், தன்னை மொழி சார்ந்த தயாரிப்பு நிறுவனமாக அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. நமது நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உள்ள இந்திய பார்வையாளர்களை, அர்த்தமுள்ள கதைகளின் மூலம் சென்றடைவதே எங்களின் முன்னுரிமை. எங்களின் முதல் படம் தமிழில் தான் உருவாகும் என்றாலும், பல மொழிகளில் வெளியாகும்” என்றார்.

தோனி என்டர்டெய்ன்மெண்ட்டின் படைப்புத்திறன் பிரிவுத் தலைவர் பிரியன்ஷு சோப்ரா பேசுகையில்.

, ” கதை தான் நாயகன் என நாங்கள் நம்புகிறோம். தோனி என்டர்டெய்ன்மெண்டில் வித்தியாசமான மற்றும் அழுத்தமான உள்ளடக்கத்தை கொண்ட கதைகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறோம். நமது பாரம்பரிய கலாச்சாரத்தையும், அதற்கேற்றக் கதாபாத்திரங்களும், உண்மையான சித்தரிப்புகளும், சூழலுக்கு ஏற்ற வகையில் இருக்கும் படைப்புகள், திரைப்படங்களாக உருவாகும் போது பார்வையாளர்களின் இதயத்தை வெல்லும். இதைப் போன்ற யதார்த்தமான படங்களை உலகளாவிய பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவாக்குவதே எங்களது நோக்கம்” என்றார்.

மகேந்திரா சிங் தோனி

Dhoni Entertainment forays into mainstream film production with a Tamil film

~ Conceptualized by Sakshi Singh Dhoni, the family entertainer will start rolling soon ~

Chennai, 24th October 2022: Legendary cricketer Mahindra Singh Dhoni and his wife Sakshi Singh Dhoni’s production house Dhoni Entertainment has commenced the various stages of producing entertainment content, across all mainstream languages. Dhoni Entertainment has already carved a name for itself by producing and releasing the popular documentary, the ‘Roar of the Lion’, based on the IPL matches played by the Chennai Super Kings. “Women’s Day Out”, a short film about Cancer awareness was also produced by them.

The exceptional bond that Dhoni shares with the people of Tamil Nadu is eminent. Reinforcing this extra special relationship further, Dhoni Entertainment will be producing its first film in Tamil, a family entertainer conceptualized by Sakshi Singh Dhoni, the Managing Director of Dhoni Entertainment and will be directed by Ramesh Thamilmani, who has also authored Atharva – The Origin, a new age graphic novel. The cast and crew of the film will be announced shortly.

Besides Tamil, Dhoni Entertainment is in talks with multiple filmmakers and script writers to create and produce exciting and meaningful content across genres including science fiction, crime drama, comedy, suspense thriller, and more.

“From the moment I read the concept written by Sakshi, I knew it was special. The concept was fresh and had all the potential to be a fun family entertainer. I am honored and very grateful for this opportunity to develop this really fresh concept into a feature film story and to be directing the film as well.” Says Ramesh Thamilmani, the Director. He adds, “All of us are excited to kick start this journey and bring this special film to life for the audience to watch and enjoy.”

Vikas Hasija, Business Head, Dhoni Entertainment says, “Post Pandemic, the business of the mainstream films in India has become a singular entity, the boundaries are blurred and there is no Regional cinema vs Hindi cinema debate anymore. As more Tamil, Telugu, Malayalam, and Kannada films are equally celebrated in the North, Dhoni Entertainment does not want to limit itself as a single-language production house. Our priority is to reach our Indian audiences in every nook and corner of our country, through meaningful stories. Though our first film will be originally made in Tamil, it will be released in multiple languages.”

Adding to this, Priyanshu Chopra, the Creative Head of Dhoni Entertainment says, “We believe that ‘Content is King’. We at Dhoni Entertainment are concentrating on content that explores our roots and stays true to the milieu with earthy characters and authentic depictions of our culture. Films with rooted stories always win hearts and our aim is to make such realistic films with universal appeal.”

More Articles
Follows