மனிதன் – இயற்கை மோதல்.; பாலமான காவல் தெய்வம்.; ‘காந்தாரா’ பட ரிஷப் ஷெட்டி பேட்டி

மனிதன் – இயற்கை மோதல்.; பாலமான காவல் தெய்வம்.; ‘காந்தாரா’ பட ரிஷப் ஷெட்டி பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கே ஜி எஃப்’ பிரம்மாண்டமான வெற்றிப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘காந்தாரா’.

இதில் ரிஷப் ஷெட்டி, அச்சுத் குமார், சப்தமி கௌடா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் எஸ் காஷ்யப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார்.

கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் ரிஷப் ஷெட்டி.

கன்னட மொழியில் தயாராகி வெளியான இந்த திரைப்படம், விரைவில் 100 கோடி ரூபாய் வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ் பதிப்பு அக்டோபர் 15 ஆம் தேதியான இன்று தமிழகத்தில் வெளியானது. தமிழகம் முழுவதும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு வெளியிட்டிருக்கிறார்.

இன்று வெளியான ‘காந்தாரா’ தமிழக மக்களிடமும் நல்லதொரு வரவேற்பினைப் பெற்றிருக்கிறது. இதனைத் தொடர்ந்து படத்தின் இயக்குநரும், நாயகனுமான ரிஷப் ஷெட்டி சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து உரையாடினார்

அதன் போது அவர் பேசியதாவது….

“ காந்தாரா – அடர்ந்த வனத்தினூடாக இருக்கும் மர்மமான பகுதி. பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து கர்நாடகாவில் இது குறித்த நம்பிக்கை இருந்து வருகிறது. மனிதனுக்கும், இயற்கைக்கும் இடையே நடைபெறும் மோதலைச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

நான் அடிப்படையில் விவசாயம் செய்யும் குடும்பத்திலிருந்து திரையுலகிற்கு அறிமுகமானேன். இந்த படத்தை என்னுடைய சொந்த ஊரில் தான் படப்பிடிப்பு நடத்தினேன்.

நான் சிறிய வயதில் என்னென்ன பார்த்து ரசித்தேனோ… அதனைத் தான் இந்த படத்தில் படமாக்கி இருக்கிறேன்.

அப்பொழுது இருந்த சமூகம்… மக்களின் நம்பிக்கை… நம்முடைய கலாச்சார வேர்கள் ஆகிய அனைத்தையும் முன்னிலைப்படுத்தி தான் இந்த திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறேன்.

இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநில மக்களுக்கும், அவர்கள் வாழ்கின்ற பகுதியில் காவல் தெய்வங்கள் என்றும், குலதெய்வங்களும் உண்டு. அது போன்ற காவல் தெய்வத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தான் நாங்கள்.

காவல் தெய்வங்கள் தான், சமூகத்தில் உயர்ந்தவர்கள் மற்றும் தாழ்ந்தவர்கள் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் சமநிலையில் மனிதர்களை வைத்திருக்கும் சக்தி படைத்தது என எண்ணுகிறேன்.

‘காந்தாரா’ படத்தில் இடம்பெற்றிருப்பது போல் நான் சிறிய வயதில் தெய்வ வேடமிட்டு வருபவர்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் அனைவரையும் சமமாகவே கருதுவார்கள்.

இது தற்போது எம் மாதிரியான விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கிறது என்பதனை பற்றி விவரிப்பதை விட, இதனை மையப்படுத்தி சமூகத்தில் ஒரு நேர் நிலையான அதிர்வலைகளை ஏற்படுத்த இயலும் என்பதனை படைப்பாக்கி இருக்கிறேன்.

இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையே பாலமாக இந்த காவல் தெய்வங்கள் இருக்கிறது என்ற நம்பிக்கையை மையப்படுத்தி தான் இந்த படத்தின் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது.” என்றார்.

Kantara movie director cum hero Rishab shetty open talk

பஞ்சாயத்து யூனியன் தூய்மை பணிகளுக்காக வாகனம் வழங்கிய சூர்யாவின் 2D நிறுவனம்

பஞ்சாயத்து யூனியன் தூய்மை பணிகளுக்காக வாகனம் வழங்கிய சூர்யாவின் 2D நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள கானாத்தூர் ரெட்டி குப்பம் பஞ்சாயத்து யூனியனுக்கு, தூய்மை பணிகளை எளிதாக கையாள்வதற்காக நவீன வாகனம் ஒன்றை ஊராட்சி தலைவரிடம் நடிகர் சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பாக சூர்யாவின் தந்தை நடிகர் சிவகுமார் வழங்கினார்.

தமிழ் திரையுலகில் ‘ஜெய் பீம்’ போன்ற படைப்புகளை உருவாக்கி, சமூகத்தில் நேர் நிலையான அதிர்வுகளை, நடிகர் சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் ஏற்படுத்தியது. படைப்புகளுடன் மட்டும் நில்லாமல் சமூக நல பணிகளுக்காகவும், மக்கள் நல திட்டங்களுக்காகவும் சூர்யாவின் 2D நிறுவனம் சார்பில் நிதியுதவிகளும், பொருளுதவிகளும் நன்கொடையாக அளித்து வருகிறது.

சூர்யா

அந்த வகையில் கானாத்தூர் ரெட்டி குப்பம் பகுதியில் தூய்மை பணிகளுக்காக வாகனம் ஒன்று வேண்டும் என அந்த ஊராட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை ஏற்று, தூய்மை பணிகளுக்கான நவீன வாகனத்தை நடிகர் சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் நன்கொடையாக அளித்துள்ளது. இந்த வாகனத்தை நடிகர் சூர்யா சார்பாக அவரது தந்தையான நடிகர் சிவக்குமார், கானத்தூர் ரெட்டி குப்பம் ஊராட்சி மன்ற தலைவரான வள்ளி எட்டியப்பனிடம் வழங்கினார்.

இதன்போது 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளரான ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் மற்றும் கானாத்தூர் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

நடிகர் சூர்யா, திரையுலக நலன், மாணவ மாணவிகளின் கல்விச் செலவு மட்டுமல்லாமல், மக்கள் நலனுக்காகவும் இயன்ற அளவில் உதவிகளை தொடர்ச்சியாக செய்து வருகிறார்.

தன்னலமற்ற இவரது சமூக சேவையை திரையுலகினரும், சமூக ஆர்வலர்களும் பாராட்டுகிறார்கள்.

சூர்யா

Surya’s 2D company donates a vehicle for cleanliness work

கல்யாணத்திற்கு பிறகான காதலைச் சொல்லும் ‘காலங்களில் அவள் வசந்தம்’

கல்யாணத்திற்கு பிறகான காதலைச் சொல்லும் ‘காலங்களில் அவள் வசந்தம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறம் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஶ்ரீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் கலகலப்பான காதல் கதையாக உருவாகியுள்ள திரைப்படம் ‘காலங்களில் அவள் வசந்தம்’.

காதல் கதைகள் அரிதாகி வரும் தமிழ் சினிமாவில், காதலை மாறுபட்ட கோணத்தில் சொல்லும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. புதுமுகம் கௌஷிக் ராம் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.

‘டாணாக்காரன்’ புகழ் அஞ்சலி நாயர் கதாநாயகியாக நடிக்கிறார். ஹெரோஷினி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வர்கீஸ் மேத்தியூ, ஆர் ஜே விக்னேஷ், அனிதா சம்பத், ஸ்வாமிநாதன், சவுந்தர்யா, ஜெயா ஸ்வாமிநாதன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் இசைவிழா திரைபிரபலங்கள், படக்குழுவினர் கலந்து கொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவினில்..

தயாரிப்பாளர் CV குமார் பேசியதாவது…

இயக்குநரை எனக்கு 10 வருடமாக தெரியும் அட்டகத்தி நேரத்தில் என்னிடம் இந்த கதை சொன்னார். அவரிடம் இந்த கதையை படமெடுக்கலாம் என பேசிக்கொண்டிருந்தோம். மிக அழகான காதல் கதை இது. இந்தக் கால இளைஞர்கள் பற்றிய கதை. அனைவரும் படத்தில் அருமையாக செய்துள்ளார்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

இயக்குநர் ரவிக்குமார் பேசியதாவது…

CV குமார் சார் கதை தேர்வு செய்வதும் தயாரிப்பில் ஈடுபடுவதும் ஆச்சர்யம் தரும். அவர் புதுமுகங்களை ஊக்குவிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. படக்குழு மிக அழகான திரைப்படத்தை எடுத்துள்ளார்கள். தொழில்நுட்ப குழுவினர் அருமையாக உழைத்துள்ளனர். அனைவருக்கும் வாழ்த்துகள்.

இயக்குநர் ராம்குமார் பேசியதாவது…

CV குமார் ஒரு படத்தில் சம்பந்தப்படுகிறார் என்றால் கண்டிப்பாக அந்தப்படம், கதை வித்தியாசமாக இருக்கும். இந்தப்படமும் பார்க்க அழகாக இருக்கிறது படம் வெற்றி பெற வாழ்த்துகள்.

நடிகர் RK சுரேஷ் பேசியதாவது…

CV குமார் இருப்பதால் கதைக்களம் நன்றாக இருக்கும். காலங்களில் அவள் வசந்தம் டைட்டிலே நன்றாக இருக்கிறது. இன்று தமிழ் சினிமா நன்றாக இருக்கிறது. தம்பி விஷ்வா இப்படத்தில் பங்குபெற்றுள்ளார்.

நாயகன் அழகாக இருக்கிறார். நாம் இருந்த இடத்தை மறக்க கூடாது, அதை இங்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துகள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

இயக்குநர் கௌரவ் பேசியதாவது…

CV குமார் ஒரு விஷயத்தில் கை வைக்கிறார் என்றாலே அது பற்றி அனைத்தையும் அலசி விடுவார். லவ் படத்தில் நாயகன் நாயகி அழகாக இருக்க வேண்டும். இப்படத்தில் இருவரும் அழகாக இருக்கிறார்கள். டைட்டிலே பாஸிட்டிவாக நன்றாக இருக்கிறது. படம் அனைவருக்கும் வசந்தம் தரும், வாழ்த்துகள்.

நாயகி அஞ்சலி நாயர் பேசியதாவது…

இந்தப் படத்திற்காக என்னை தேர்ந்தெடுத்தற்கு நன்றி. ராதே கதாப்பாத்திரம் எனக்கு மிகவும் நெருக்கமானது. ஹரி மியூசிக் மிக அற்புதமாக வந்துள்ளது. கௌஷிக், ஹெரோஷினி எனக்கு மிக உதவியாக இருந்தார்கள். இப்படம் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் ஆதரவு தாருங்கள் நன்றி.

நாயகி ஹெரோஷினி பேசியதாவது…

என் டீமுக்கு முதல் நன்றி. அவர்களால் தான் இந்தப்படம் மிக அழகாக வந்துள்ளது. நாங்கள் அனைவரும் இன்னும் நெடுந்தூரம் பயணப்பட வேண்டும். அதற்கு உங்கள் ஆதரவு தேவை. விரைவில் உங்களை திரையில் சந்திக்கிறோம் நன்றி.

இயக்குநர் ராகவ் மிர்தாத் பேசியதாவது…

என் அப்பா அம்மாவுக்கு நன்றி. என் மனைவிக்கு மிக நன்றி அவர்கள் சப்போர்டில் தான் நான் இங்கு இருக்கிறேன். ஸ்போர்ட்ஸில் லவ் ஆல் சொல்லி துவங்குவது போல் தான் இந்தப்படத்தை துவங்கியுள்ளேன். அன்பு தான் இந்தப்படத்தின் அடிப்படை. இந்தப்படத்தில் ஹரி மிக அற்புதமான இசையை தந்துள்ளார். கண்டிப்பாக இசை மிகப்பெரிய அளவில் பேசப்படும்.

இந்தப்படம் கல்யாணத்திற்கு பிறகான காதலை சொல்லும் படம் மெச்சூரிட்டியை புரிந்து கௌஷிக் மிக அற்புதமாக நடித்திருக்கிறார். அஞ்சலி நாயர், ஹெரோஷினி இருவரும் கண்டிப்பாக பாராட்டை பெறுவார்கள். தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் மிகப்பெரிய அளவில் உழைத்துள்ளார்கள் அனைவருக்கும் என் நன்றிகள். இந்தப்படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் நன்றி.

நடிகர் கௌஷிக் பேசியதாவது…

இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. சின்ன வயதிலிருந்தே எனக்கு பொழுதுபோக்கு துறை மீது அதிகம் விருப்பம் இருந்தது. என் குடும்பம் எனக்கு மிகப்பெரும் உறுதுணையாக இருந்தார்கள் அவர்களுக்கு நன்றி. இயக்குநரின் 15 வருட கனவு இந்தப்படம். இந்தக்கனவை உங்களிடம் கொண்டு வந்து சேர்த்துள்ளோம். உங்கள் ஆதரவை தருவீர்கள் என நம்புகிறேன். நன்றி.

‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்திற்கு கோபி ஜகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, அறிமுக இசையமைப்பாளர் ஹரி இசையமைக்க, லியோ ஜான் பால் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

அறம் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஶ்ரீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள ‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தை தமிழகமெங்கும் வி ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட் வெளியிடுகிறது.

காலங்களில் அவள் வசந்தம்

Highlights of Kaalangalil Aval Vasantham Audio Launch

————————-

Kaalangalil Aval Vasantham, a feel-good romantic entertainer, is produced by Aram Entertainment in association with Sree Studios and is directed by Raghav Mirdhath.

Glimpses from the Audio launch of #KalangalilAvalVasantham. World wide Grand release from October 28.

▶️https://youtu.be/U7J-kSb9RMM

#KAVFromOct28

@sristudiosoffl @aram_enter @VSquareEnt @RMirdath @kaushikramoffl @ianjalinair @Herokomali @leojohnpaultw @imhari_sr_ @GopinathJagade3

. @arunprajeethm @Arunact0r @deepakporkathi1 @tipsmusicsouth @Sharanyalouis @onlynikil #NM

ஸ்டாலின் தந்த இன்ப அதிர்ச்சி.; என் காதலுக்குரிய மோகன்.; சிலிர்க்கும் சீனுராமசாமி

ஸ்டாலின் தந்த இன்ப அதிர்ச்சி.; என் காதலுக்குரிய மோகன்.; சிலிர்க்கும் சீனுராமசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அனைவருக்கும்
அன்பான வணக்கம்

எழுதுவது
சீனு ராமசாமி

எனக்கு ஆச்சர்ய பரிசு தர இது நாள்வரை
நான் எழுதிய கவிதைகள் அத்துணையும் சேகரித்து எனக்குத் தெரியாமல் நூலாக்கி ‘சொல்வதற்கு சொற்கள் தேவையில்லை’
என அந்நூலுக்கு
என் கவிதையையே தலைப்பிட்டு
பிறந்தநாள் பரிசாக மனைவி தர்ஷணாவும் மகள்களும் தந்தனர்.

இந்நூலுக்கு வாழ்த்துமடல்
மாண்புமிகு
நம் முதல்வர்
மு.க.ஸ்டாலின் அவர்கள்

ஒரு கணவனுக்கு ஆச்சர்யமூட்டும் பரிசு
தருவதற்காக ஒரு மனைவி தொகுத்த கவிதை
தொகுப்பிற்கு ஊக்கமளித்து பாராட்டி
ஒரு கடிதம் தந்து வாழ்த்திய உங்கள் உயர்ந்த உள்ளம் பற்றி நினைப்பதா?
அல்லது
என் போன்ற கலைஞர்களுக்கு நீங்கள் தரும் இதயப்பூர்வமான அன்பை எண்ணி நெகிழ்வதா எனத் தெரியவில்லை
அய்யா?

என்னால் இதை முதலில் நம்ப முடியவில்லை.

முதல்வரின் கனிந்த
இதயத்திற்கு முன் வணங்கி நிற்கிறேன்.

மேலும்
அணிந்துரை தந்தவர்
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்..

கவிஞரும் தன் பங்களிப்பாக
ஆயிரம் மலர்களை சொற்களாக்கி
சூடிவிட்டார்.

உங்கள் கருத்த கைகளை முத்தமிடுகிறேன் கவிஞரே..

கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அம்மா எழுத்தாளர்
எஸ்.ராமகிருஷ்ணன்
சத்யபாமா பல்கலைக்கழக
வேந்தர் மரிய சீனாஜான்சன்

என் வாழ்நாளில் சிறப்பான
நினைவு பரிசினை தந்த உங்களுக்கு இதய நன்றிகள்.

நூலினை வீட்டிற்கே வந்து வெளியிட்டவர்
நடிகர் மோகன் அவர்கள் அதுவும் தீடீரென்று..

என் காதலுக்குரியவர்
அவர்

மோகன் சாருக்கு
இதய நன்றிகள்.

ஆச்சர்யம் அதிர்ச்சியாயிற்று.
திக்குமுக்காடிப்போனேன்.

வாழ்த்திய
அனைவருக்கும்
அன்பு நன்றி
வணக்கம்.

அன்பன்
சீனு ராமசாமி

சீனு ராமசாமி

சீனு ராமசாமி

Seenu Ramasamy emotional letter regarding CM Stalin and Actor Mohan

JUST IN கால் மீ லைலா.; கார்த்தியை டார்ச்சர் பண்ணிட்டேன்.; மித்ரன் ஓபன் டாக்

JUST IN கால் மீ லைலா.; கார்த்தியை டார்ச்சர் பண்ணிட்டேன்.; மித்ரன் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மித்ரன் இயக்கத்தில் கார்த்தி மாறுப்பட்ட நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்தார்’. அவர் இரு வேடங்களில் நடித்துள்ளார்.

இதில் ராஷி கண்ணா, லைலா, ரஜிஷா விஜயன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.

முக்கிய வேடத்தில் முனீஷ்காந்த், குட்டி ரித்விக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஜீவி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். ரூபன் எடிட்டிங் செய்ய ஸ்பை த்ரில்லர் படமாக இது உருவாகியுள்ளது.

ரெட் ஜெயண்ட் நிறுவனம் படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது.

தீபாவளி வெளியீடாக அக்டோபர் 21ல் படம் வெளியாகவுள்ள நிலையில் இதன் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை ப்ரோம் மாலில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சர்தார்

தற்போது இயக்குனர் மித்ரன் பேசுகையில்…

“இந்தப் படத்தில் கார்த்தி மிகவும் கஷ்டப்பட்டு நடித்துள்ளார். அவரை மிகவும் டார்ச்சர் செய்து விட்டேன். அவர் நடித்த படங்களில் இது வித்தியாசமாக இருக்கும்.

லைலா மேடம் நடித்த படங்களை என் பள்ளி பருவத்தில் பார்த்திருக்கிறேன். அவரை மேடம் என கூப்பிட்டால் பிடிக்காது. கால் மீ லைலான்னு சொல்வார். அவரின் கேரக்டர் சூப்பராக இருக்கும்.

ரித்விக் ஒரு குட்டி ஸ்டார். அவன் தான் ஹீரோ.

ரஜிஷா கேரக்டர் தைரியமான கேரக்டர். நன்றாக செய்துள்ளார்.

ராஷிகண்ணா வட இந்தியாவை சேர்ந்தவர் என்றாலும் தமிழில் பேசி அசத்தினார்.

படம் எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் நன்றாக வந்துள்ளது.” என பேசினார் மித்ரன்.

சர்தார்

Director PS Mithran open talk about Sardar movie characters

நாகசைதன்யா – வெங்கட்பிரபு படத்தில் அரவிந்த்சாமி சரத்குமார் ப்ரியாமணி

நாகசைதன்யா – வெங்கட்பிரபு படத்தில் அரவிந்த்சாமி சரத்குமார் ப்ரியாமணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட்பிரபு இயக்கத்தில் அக்கினேனி நாகசைதன்யா நடிக்கும் NC 22 படம் தமிழ்- தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது.

இதன் படப்பிடிப்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கியது. தற்காலிகமாக NC 22 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார்.

நாகசைதன்யா இதுவரை கதாநாயகனாக நடித்துள்ள படங்களில் NC 22 படம்தான் அதிக பொருட்செலவில் உருவாகி வரக்கூடிய ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் இணைந்துள்ள தொழில்நுட்பக் குழு மற்றும் நடிகர்கள் குறித்தான அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தங்களுடைய வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த திறமையான நடிகர்கள் அரவிந்த்சாமி, சரத்குமார், தேசிய விருது பெற்ற நடிகை ப்ரியாமணி ஆகியோர் இந்த ஆக்‌ஷன் எண்டர்டெயினர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளனர்.

ப்ரேம்ஜி அமரன், ப்ரேமி விஷ்வானந்த், சம்பத்ராஜ் மற்றும் வெண்ணிலா கிஷோர் ஆகியோரும் இந்தப் படங்களில் இணைந்துள்ள மற்ற முக்கிய நடிகர்கள்.

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இசையில் மேதமை கொண்ட தந்தை மகனுமான ’இசைஞானி’ இளையராஜா மற்றும் ’லிட்டில் மாஸ்ட்ரோ’ யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இந்தப் படத்திற்கு இசையமைக்கின்றனர்.

பவன்குமார் இந்தப் படத்தை வழங்குகிறார். அபூரி ரவி இந்தப் படத்திற்கு வசனங்கள் எழுத, SR கதிர் ஒளிப்பதிவை கையாள்கிறார்.

நடிகர்கள்: நாகசைதன்யா, கீர்த்தி ஷெட்டி, அரவிந்த்சாமி, ப்ரியாமணி, சரத்குமார், ப்ரேம்ஜி அமரன், ப்ரேமி விஷ்வானந்த், சம்பத் ராஜ், வெண்ணிலா கிஷோர் மற்றும் பலர்.

*தொழில்நுட்பக் குழு விவரம்*:

கதை, திரைக்கதை, இயக்கம்: வெங்கட்பிரபு,
தயாரிப்பு: ஸ்ரீனிவாசா சித்தூரி,
பேனர்: ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன்,
வழங்குபவர்: பவன்குமார்,
இசை: மாஸ்ட்ரோ இளையராஜா, லிட்டில் மாஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜா,
ஒளிப்பதிவு: SR கதிர்,
எடிட்டர்: வெங்கட் ராஜன்,
வசனம்: அபூரி ரவி,
ப்ரொடக்‌ஷன் டிசைனர்: ராஜீவன்,
சண்டைப் பயிற்சி: யானிக் பென், மகேஷ் மாத்யூ,
கலை இயக்குநர்: DY சத்யநாராயணா

More Articles
Follows