காந்தாரா படத்தின் முந்தைய பாகம் ரெடியாகிறதா ?

காந்தாரா படத்தின் முந்தைய பாகம் ரெடியாகிறதா ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காந்தாரா படம் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் என இருதரப்பிலும் பரவலாகப் பாராட்டப்பட்டது. இந்நிலையில், ரிஷப் ஷெட்டி தனது ரசிகர்களுடன் ஒரு நல்ல செய்தியை பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் பெங்களூரில் நடந்த காந்தாரா படத்தின் 100 நாள் வெற்றி விழாவில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் படத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். விழாவில் நடிகர் மற்றும் இயக்குனர் ரிஷப் ஷெட்டி காந்தாரத்தின் தொடர்ச்சி பற்றி பேசுவதைக் காண முடிந்தது.

நீங்கள் பார்த்தது உண்மையில் பகுதி 2, காந்தாரத்தின் முன்னுரை பகுதி 1 அடுத்த ஆண்டு வரும்” என்று ஷெட்டி கூறினார்.

Rishab Shetty shares a huge update on Kantara Prequel

ரஜினி படங்களை தயாரித்தவரும் 24 மணி நேர கின்னஸ் பட புகழ் ஹேம்நாக் பாபுஜி காலமானார்

ரஜினி படங்களை தயாரித்தவரும் 24 மணி நேர கின்னஸ் பட புகழ் ஹேம்நாக் பாபுஜி காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பின்னணி பாடகி வாணி ஜெயராம், டைரக்டர் டி.பி.கஜேந்திரன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் அடுத்தடுத்து காலமாகினர்.

தற்போது இன்று பிப்ரவரி 7ல் கிரிதாரிலால் நாக்பால் என்றழைக்கப்படும் ஹேம் நாக் பாபுஜி காலமானார்.

இவர் ரஜினிகாந்த் நடித்த ‘காளி’ மற்றும் ‘கர்ஜனை’ படங்களை தயாரித்தவர்.

மேலும் 24 மணி நேரத்தில் உருவான கின்னஸ் சாதனை படமான ‘சுயம்வரம்’ என்ற படத்தையும் தயாரித்தவர் ஆவார்.

கிரிதாரிலால் நாக்பால் என்றழைக்கப்படும் ஹேம் நாக் பாபுஜிக்கு தற்போது வயது 76 ஆகிறது.

இவரது உடலை இன்று பகல் 12 மணிக்கு அவரது வீட்டுக்கு கொண்டுவருகிறார்கள்

வீட்டு முகவரி
No 50,
Flat no 15
3rd floor
B block
Pleasant Appartments
Taylor’s road,
Kilpauk,
Chennai 600010

Contact
Son G. Vinay

Hemnak Babuji producer of Rajinikanth films passes away

மீண்டும் ‘குஷி’.; விஜய் – சமந்தா நடிப்பில் உருவாகும் புதிய படம்

மீண்டும் ‘குஷி’.; விஜய் – சமந்தா நடிப்பில் உருவாகும் புதிய படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கில் முன்னணி இயக்குநர் சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘குஷி’.

இதில் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கிறார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகும் இந்த திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து, இயக்குநர் சிவ நிர்வானா- நடிகர் விஜய் தேவரகொண்டா – ‘ ஹிருதயம்’ படம் புகழ் இசைமைப்பாளர் ஹேஷாம் ஆகியோர் அண்மையில் முக்கியமான சந்திப்பு ஒன்றினை நடத்தி, விரிவாக விவாதித்தனர்.

இதனைத் தொடர்ந்து ‘குஷி’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குவது என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள படத்தின் நாயகியான நடிகை சமந்தாவும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதனால் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘குஷி’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

இதனை ‘குஷி’ படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் உறுதிப்படுத்தியிருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் தொடர்பான தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதல் தகவல்..

‘குஷி’ என்ற இதே படப் பெயரில் தமிழில் விஜய் நடித்த ஒரு படமும் (2000) தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த ஒரு படமும் (2001) வெளியானது. இந்த இரண்டு படங்களையுமே எஸ் ஜே சூர்யா இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குஷி

Vijay and Samanthas Kushi Set To Resume Shoot soon

இளையராஜா இசையில் இயக்குனர் வெற்றிமாறனுக்காக பாடிய தனுஷ்

இளையராஜா இசையில் இயக்குனர் வெற்றிமாறனுக்காக பாடிய தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகரான சூரி தற்போது முதன்முறையாக ‘விடுதலை’ என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.

இப்படத்தை வெற்றிமாறன் இயக்க இளையராஜா இசையமைத்து வருகிறார்.

முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி மற்றும் கௌதம் மேனன் இருவரும் நடித்து வருகின்றனர்.

இரண்டு பாகங்களாக தயாராகி வரும் ‘விடுதலை’ படத்தின் முதல் பாகம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் பாடல் வெளியாக உள்ளது என படக் குழுவினர் அறிவித்துள்ளனர். முதல் பாடலாக ‘ஒன்னோட நடந்தா’ என்ற பாடலை பிப்ரவரி 8ல் வெளியிடுகின்றனர்.

இப்பாடலை தனுஷ் உடன் இணைந்து அனன்யா பட் என்பவரும் பாடி உள்ளார்.

இதுதொடர்பான மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.

இந்த மாதிரி பாடுங்கள் என தனுஷிற்கு இளையராஜா சொல்லிக் கொடுக்கிறார். அருகில் இயக்குனர் வெற்றிமாறன் ரசித்தபடி நிற்கிறார்.

விடுதலை

Dhanush sung in Vetrimaran ilaiyaraajas Viduthalai

JUST IN ‘வாத்தி’ பட டிரைலர் அப்டேட்.; மகாகவி பாரதியாக மாறிய தனுஷ்

JUST IN ‘வாத்தி’ பட டிரைலர் அப்டேட்.; மகாகவி பாரதியாக மாறிய தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ள படம் ‘வாத்தி’. தெலுங்கில் இந்த படத்திற்கு ‘சார்’ என்று பெயரிட்டுள்ளனர்.

நாகவம்சி மற்றும் சாய் தயாரிக்கின்ற இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார்.

சம்யுக்தா கதாநாயகியாக நடிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அடுத்த வாரம் பிப்ரவரி 17ஆம் தேதி தியேட்டர்களில் ‘வாத்தி’ படம் வெளியாகவுள்ள நிலையில் டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர் படக் குழுவினர்.

நாளை மறுநாள் பிப்ரவரி 8ஆம் தேதி ‘வாத்தி’ பட டிரைலர் வெளியாகும் என வெளியிட்டு ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

அந்த போஸ்டரில் மகாகவி பாரதி வேடத்தில் கையில் கம்புடன் தனுஷ் நிற்பது போல உள்ளது வடிவமைக்கப்பட்டுள்ளது.

தனுஷ் பின்னால் மாணவ மாணவிகள் வரிசையாக நிற்கின்றனர்.

வாத்தி

Dhanush Vaathi Trailer release date is here

JUST IN ‘தண்டகாரண்யம்’ படத்திற்காக மீண்டும் இணைந்தது ‘அட்டக்கத்தி’ கூட்டணி

JUST IN ‘தண்டகாரண்யம்’ படத்திற்காக மீண்டும் இணைந்தது ‘அட்டக்கத்தி’ கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கபாலி’ ‘காலா’ என ரஜினியின் பிரம்மாண்ட படைப்புகளை இயக்குனராக கொடுத்தவர் பா ரஞ்சித்

தற்போது விக்ரம் நடிப்பில் ‘தங்கலான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

மறுபக்கம் நீலம் புரொடக்சன்ஸ் என்ற தன் சொந்த நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள 10வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இன்று பிப்ரவரி 6ம் தேதி மாலை 7 மணிக்கு தங்களது புதிய பட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ என்ற படத்தை இயக்கியவர் அதியன் ஆதிரை.

இவர் இயக்க உள்ள இந்த படத்திற்கு ‘தண்டகாரண்யம்’ என பெயரிட்டுள்ளனர்.

இதில் அட்டகத்தி தினேஷ் மற்றும் கலையரசன் இருவரும் நாயகர்களாக நடிக்கின்றனர்.

ரஞ்சித் இயக்கிய முதல் படமான ‘அட்டக்கத்தி’ படத்தில் இருவருமே நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் ரித்விகா, பாலசரவணன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க பிரதீப் ஒளிப்பதிவு செய்கிறார். செல்வா எடிட்டிங் செய்கிறார்.

அட்டகத்தி தினேஷ் - கலையரசன்

Ranjiths production 10th movie titled Thandakaaranyam

More Articles
Follows