விக்னேஷ்சிவன்-கீர்த்தி பாசமலர்களாக மாற நயன்தாரா காரணமா?

விக்னேஷ்சிவன்-கீர்த்தி பாசமலர்களாக மாற நயன்தாரா காரணமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vignesh-shivan-and-keerthy-sureshநானும் ரௌடிதான் படத்தில் இணைந்த நயன்தாரா, விக்னேஷ்சிவன் இருவரும் இன்றுவரை நிஜத்திலும் இணைந்தே வலம் வருகின்றனர்.

இந்நிலையில் விக்னேஷ்சிவன் தற்போது இயக்கியுள்ள தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கீர்த்தி சுரேஷ் இணைந்தார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விக்னேஷ்சிவன் பிரதர் பிரதர் என அழுத்தமாக பல முறை அழைத்தார் கீர்த்தி.

அதன்பின்னர் பேசிய விக்னேஷ்சிவனோ… கீர்த்தி, நீங்கள் பயப்பட வேண்டாம். நீங்கள் எனக்கு சிஸ்டர்தான். நீங்கள் பாதுகாப்பான இடத்தில்தான் இருக்கிறீர்கள் என உறுதியளிக்கும் விதமாக பேசினார்.

இதனால் திரை பின்னணியில் ஏதோ நடந்துள்ளது என அங்கிருந்த அனைவரும் பேசிக் கொண்டனர்.

இந்நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் கீர்த்தி சுரேஷிடம் விக்னேஷ் சிவன் கொஞ்சம் ஓவராக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் கடுப்பான நயன்தாரா சம்பந்தபட்ட இருவரையும் கண்டித்துள்ளதாக கிசுகிசுக்கப்படுக்கிறது.

இதனால்தான் மேடையில் இருவரும் பாசமலர் அண்ணன் தங்கையாக மாறியதாகவும் கூறப்படுகிறது.

பிரபுதேவா, சிம்பு ஆகிய இருவரின் காதல் தோல்விக்கு பிறகு நயன்தாரா தற்போது விக்னேஷ்சிவனுடன் நெருக்கம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

விக்ரம்-சூர்யா செய்த மாயத்தால் குடியரசு தினத்தில் குவிந்த படங்கள்

விக்ரம்-சூர்யா செய்த மாயத்தால் குடியரசு தினத்தில் குவிந்த படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya vikramநீண்ட வருடங்களுக்கு பிறகு விக்ரம் மற்றும் சூர்யா நடித்த படங்கள் ஒன்றாக திரைக்கு வருகிறது.

விக்ரம் நடித்துள்ள ஸ்கெட்ச் மற்றும் சூர்யா நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படங்கள் ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இத்துடன் பிரபுதேவா, ஹன்சிகா நடித்துள்ள குலேபகாவலி படமும் திரைக்கு வருகிறது.

இவை மட்டுமே தற்போதுவரை பொங்கல் ரேஸில் உறுதிசெய்யப்பட்டுள்ளன.

இந்த படங்களுடன் விமல் நடித்துள்ள மன்னர் வகையறா, விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள மதுரவீரன் மற்றும் அரவிந்த்சாமி, அமலாபால் நடித்துள்ள பாஸ்கர் ஒரு ராஸ்கல் படமும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் சூர்யா மற்றும் விக்ரமின் படங்களே நிறைய தியேட்டர்களில் புக் ஆகிவிட்டதால் மேற்கூறிய படங்கள் தள்ளிப்போய் உள்ளன.

இந்த படங்கள் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26ல் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

ஏற்கெனவே ஜனவரி 26 குடியரசு தினத்தில்… விஷால் நடித்துள்ள இரும்புத்திரை, ஜெயம் ரவி நடித்துள்ள டிக் டிக் டிக், உதயநிதி நடித்துள்ள நிமிர் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.

இத்துடன் அனுஷ்கா நடித்துள்ள தெலுங்கு டப்பிங் படமான ‘பாகமதி’ யும் ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இத்துடன் ஒருவேளை கலகலப்பு-2 படமும் இணைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

எனவே இந்த ஜனவரி மாதம் சினிமா ரசிகர்கள் கொண்டாட்டம்தான்.

Vikram and Suriya pushed many movies to release on Republic day

பொங்கல் திருநாளில் விசுவாசம் படத்தின் முக்கிய அறிவிப்பு

பொங்கல் திருநாளில் விசுவாசம் படத்தின் முக்கிய அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

An important announcement on Pongal 2018 about Viswasam movieகடந்த சில வருடங்களாக V என்ற ஆங்கில எழுத்தில் தலைப்பை தொடங்கி M எழுத்தில் முடியும் சென்டிமெண்ட்டை அஜித், சிவா கூட்டணி செய்து வருகிறது.

வீரம், வேதாளம், விவேகம் தொடங்கி தற்போது புதிதாக உருவாகவுள்ள விசுவாசம் வரை இந்த சென்டிமெண்ட் தொடர்கிறது.

சத்யஜோதி தயாரிக்கவுள்ள இப்படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் யார்? என்பது கேள்விகுறியாகி இருக்கிறது.

யுவன் சங்கர் ராஜா என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சாம் சி.எஸ் என கூறப்பட்டது. அவர் இதனை மறுக்கவே தற்போது அனிருத்தே இசையமைப்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது போன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பொங்கல் தினத்தில் விசுவாசம் படத்தின் இசையமைப்பாளர் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

An important announcement on Pongal 2018 about Viswasam movie

மீண்டும் சசிகுமார்-சமுத்திரக்கனி இணையும் நாடோடிகள் 2

மீண்டும் சசிகுமார்-சமுத்திரக்கனி இணையும் நாடோடிகள் 2

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Samuthirakani and Sasikumar to join hands for Nadodigal 2கடந்த 2009ஆம் ஆண்டில் பரபரப்பாக பேசப்பட்ட படம் நாடோடிகள்.

மைக்கேல் ராயப்பன் தயாரித்த இப்படத்தை சமுத்திரக்கனி இயக்க, சசிகுமார், விஜய் வசந்த், பரணி, அனன்யா, அபிநயா நடித்திருந்தனர்.

மாபெரும் வெற்றிப் பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது 9 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகவுள்ளது.

இப்படத்தை சசிகுமார் தயாரித்து இயக்கி நடிக்கவுள்ளாராம். இதில் முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறாராம்.

விரைவில் இப்படம் குறித்த மற்ற தகவல்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Samuthirakani and Sasikumar to join hands for Nadodigal 2

ரஜினி-கமலை தொடர்ந்து நேரடி அரசியலில் பாக்யராஜ்

ரஜினி-கமலை தொடர்ந்து நேரடி அரசியலில் பாக்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor cum Director K Bhagyaraj entering into Politics soonசினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிதல்ல. எனவே அது பற்றி நாம் விரிவாக பாரக்க வேண்டிய அவசியமில்லை.

அண்மையில் நாங்கள் அரசியலுக்கு வருவது உறுதி என ரஜினியும் கமலும் அறிவித்துவிட்டனர்.

இவர்களைத் தொடர்ந்து நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் அவர்களும் முழு நேர அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார்.

எம்ஜிஆரின் கலை உலக வாரிசாக அறிவிக்கப்பட்டவர் நடிகர் பாக்யராஜ்.

எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற போது, தமிழகம் முழுவதும் அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்தவர் பாக்யராஜ்.

எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு ஜானகி அணியை ஆதரித்தார். அதன் பின்னர், அவரே தனிக்கட்சி தொடங்கினார்.

சில ஆண்டுகளுக்கு பின்னர் திமுகவில் சேர்ந்தார்.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போது அவர் கூறியதாவது..

“lநேரடி அரசியல் குறித்து முடிவு எடுக்கும் வாய்ப்பு வந்துவிட்டது. ஒருமாதத்திற்குள் முடிவைச் சொல்லுவேன்.

யாருக்கு ஆதரவு, ஏன் ஆதரவு என்றெல்லாம் அப்போது தெரியும். கொஞ்சம் பொறுத்திருங்கள்” என்று தெரிவித்தார் பாக்யராஜ்.

Actor cum Director K Bhagyaraj entering into Politics soon

பிப்ரவரியில் 2 படங்களுடன் களமிறங்கும் ஜீவா-நிக்கிகல்ராணி

பிப்ரவரியில் 2 படங்களுடன் களமிறங்கும் ஜீவா-நிக்கிகல்ராணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jiiva and Nikki Galraniஅறிமுக இயக்குனர் காளீஸ் இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி, அனைகா சோடி, ராஜேந்திர பிரசாத், கோவிந்த் பத்மசூர்யா, சுஹாசினி, ஆர்.ஜே.பாலாஜி, மனோபாலா, மீரா கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் கீ.

மைக்கேல் ராயப்பன் தயாரித்து வரும் இப்படத்திற்கு சென்சாரில் ‘U’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

விஷால் சந்திரசேகர் இசையமைக்க, ஒளிப்பதிவை அபிநந்தன் ராமானுஜம் மேற்கொண்டுள்ளார்.

142 நிமிடங்கள் ஓடும் இப்படத்தை பிப்ரவரி 9-ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளனர் என்பதை பார்த்தோம்.

இதே மாத்த்தில் ஜீவா நடித்துள்ள மற்றொரு படமான கலகலப்பு 2 படம் வெளியாகவுள்ளது.

சுந்தர் சி. இயக்கியுள்ள இப்படத்தில் ஜீவா உடன் ஜெய், மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரீன் தெரசா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்

அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பாக நடிகை குஷ்பூ இப்படத்தை தயாரித்துள்ளார்.

More Articles
Follows