ரஜினி கட்சியில் இணைய லைக்காவிலிருந்து ராஜுமகாலிங்கம் ராஜினாமா

ரஜினி கட்சியில் இணைய லைக்காவிலிருந்து ராஜுமகாலிங்கம் ராஜினாமா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth and raju mahalingamஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.ஓ படத்தை லைக்கா நிறுவனம் ரூ. 400 கோடியில் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்த லைகா நிறுவனத்தின் தென்னிந்திய செயல் பிரிவு தலைமை அதிகாரியாக பணிபுரிந்து வந்தார் ராஜு மகாலிங்கம்.

தற்போது அவர் ரஜினியின் ஆன்மிக அரசியலில் இணைய தன் பதவியை ராஜினாமாசெய்துள்ளார்.

அவருக்குப் பதிலாக கருணாமூர்த்தி பணிபுரிவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியோடு இணைந்திருப்பது குறித்து ராஜு மகாலிங்கம் கூறியதாவது…

ரஜினியை நான் நெருக்கமாக கவனித்தேன். அவரது கடமை உணர்வு, நேர்மை, அர்ப்பணிப்பு என்னை அவரது கட்சியின்பால் ஈர்த்துள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.

ரஜினி கட்சியில் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தாலும், முதல் நபராக பிரபலமான ஒருவர் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இணையத்தை அதிர வைக்கும் விஜய் 62 போட்டோஸ்

இணையத்தை அதிர வைக்கும் விஜய் 62 போட்டோஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெர்சலை முடித்துவிட்டு தன் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார் விஜய்.

விஜய்யின் நடிப்பில் 62வது படமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க ஏஆர். முருகதாஸ் இயக்குகிறார்.

ஏஆர். ரஹ்மான் இசையமைக்க கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் போட்டோ சூட் நேற்று சென்னையிலுள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்றுள்ளது.

இப்படத்தை எடுத்த ஒருவர் இணையத்தில் அதை வெளியிட தற்போது அது இணையங்களில் வைரலாகி வருகிறது.

வெளியான சில நிமிடங்களிலேயே அதை தளபதி ரசிகர்கள் பகிர, தற்போது இணையமே அதிருகிறது.

vijay photo shoot pics

vijay

ஊடகங்களை கையாள தெரியவில்லை; மன்னிப்பு கேட்ட ரஜினி !

ஊடகங்களை கையாள தெரியவில்லை; மன்னிப்பு கேட்ட ரஜினி !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthரஜினிகாந்த் கடந்த 31ஆம் தேதி அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்நிலையில் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

இச்சந்திப்பில் அவர் பேசியதாவது…

என் அரசியல் அறிவிப்பை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கு நன்றி.

ஊடகங்களை எப்படி கையாள்வது என்றே எனக்கு தெரியவில்லை.

தவறு ஏதும் செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.

நானும் 2 மாதங்கள் பத்திரிக்கை துறையில் பிழை திருத்தும் ஆசிரியராக பணிபுரிந்துள்ளேன்.

நான் முதன் முதலில் பொம்மை பத்திரிக்கைக்குதான் பேட்டியளித்தேன்.

என் அரசியல் பணிக்கு ஊடகங்களின் உதவி தேவை. நம் எல்லோருக்கும் கடமை உள்ளது.

விரைவில் உங்களை சந்தித்து கட்சி கொடி பற்றிய அறிவிப்பை வெளியிடுவேன்.

ரஜினியின் அரசியலுக்கு காவலனாக வரும் ராகவா லாரன்ஸ்

ரஜினியின் அரசியலுக்கு காவலனாக வரும் ராகவா லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raghava Lawrenceஅனைவரும் எதிர்ப்பார்த்தபடி ரஜினி தன் அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.

அப்போது தன் கட்சி தொண்டர்கள் சமூகத்தின் காவலனாக மாற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அதன்படி ரஜினியின் தீவிர ரசிகரான நடிகர் ராகவா லாரன்ஸ் தானும் காவலனாக மாறவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அறிவிப்பை ஜனவரி 4ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளாராம் லாரன்ஸ்.

ரஜினி கட்சி கொடி பற்றிய அறிவிப்பு

ரஜினி கட்சி கொடி பற்றிய அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthரஜினிகாந்த் தன் அரசியல் பிரவேச அறிவிப்பை ஓரிரு தினங்களுக்கு முன் வெளியிட்டார்.

நேற்று ரஜினிமன்றம் இணையதளம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.

இந்நிலையில் சற்றுமுன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது கட்சி கொடி தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

விரைவில் மீண்டும் பத்திரிகையாளர்களை சந்தித்து அதை முறைப்படி அறிவிப்பதாக தெரிவித்தார்.

அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா.; ரஜினிக்கு அமெரிக்காவிலிருந்து ஆதரவு

அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா.; ரஜினிக்கு அமெரிக்காவிலிருந்து ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Rajinikanthஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த சிவாஜி படத்தில் பல்லேக்கா பாடலில் ரஜினி அரசியலுக்கு வந்தா தமிழ்நாடு அமெரிக்கா போல ஆகும் என வரிகள் இருந்தது.

தற்போது ரஜினியின் அரசியல் வருகைக்கு அமெரிக்கா வாழ் தமிழர்களிடம் இருந்து ஆதரவு குரல்கள் வந்துள்ளது.

ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்தை அவருடைய அமெரிக்க ரசிகர்கள் வரவேற்று, மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். ஆயிரம் கரங்கள் கூப்பி அன்புத் தலைவர், மக்கள் தலைவர் ரஜினியை வரவேற்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்

இது குறித்து வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவையின் நிர்வாகிகள் டல்லாஸ் இர.தினகர், சிகாகோ ரஜினி ராஜா, ஃப்ரிஸ்கோ அன்புடன் ரவி, வாஷிங்டன் எஸ்.ஸ்ரீனிவாசன், டல்லாஸ் எம்.ஆனந்த், ஃப்ரிஸ்கோ என்.ராம்குமார், இர்விங் கே.ஆர்.கிருஷ்ணகுமார் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

“அன்புத் தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ‘அரசியல் வருகை’ பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறோம்.

ஆயிரம் கரங்கள் கூப்பி அன்புத் தலைவர், மக்கள் தலைவர் ரஜினியை வரவேற்கிறோம்.

இனி, தலைவர் ரஜினியின் ஆட்சியில் அறம் சார்ந்த ஆட்சி நடைபெறும். அரசியல் என்பது ஒரு தொழிலாகி மாறிவிட்ட அவலம் நீங்கும். தூய்மையான எண்ணத்துடன் மக்கள் பணியாற்றுபவர்களுக்கு, உரிய அங்கீகாரத்துடன், தொடர்ந்து பணியாற்ற அரசியல் பதவிகள் உறுதுணையாக அமையும்.

இந்தத் தமிழகம் இழந்து விட்ட பெருந்தலைவர் காமராஜர் காலத்து அரசியல் மாண்புகள் மீண்டும் திரும்பும். தமிழகத்தின் கல்வி, விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சி உலகத் தரத்திற்கு மேம்படும்.

தலைவர் ரஜினியின் அரசியல் வழிகாட்டி சிங்கப்பூரின் சிற்பி ‘லீ க்வான் யூ ’ நவீன சிங்கப்பூரை உருவாக்கினார். அதைப் போல், தமிழக மக்களின் பேராதரவுடன், தமிழகத்தை உலகின் முன்மாதிரி மாநிலமாக தலைவர் ரஜினி மாற்றுவார் என்று நம்பிக்கை தெரிவிக்கிறோம்.

பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் அந்நிய மண்ணில் வாழ்ந்தாலும் அமெரிக்கத் தமிழர்களின் உயிர்த்துடிப்பு தமிழகத்தில் தான். தமிழ் மொழி, தமிழர்கள், தமிழகம் என்பதையே உயிர்மூச்சாகக் கொண்டு இங்கே வாழ்கிறோம். தமிழகத்தில் ஒரு சிறு அதிர்வு என்றாலும் துடித்துப் போகிறோம். இதையெல்லாம் தலைவர் ரஜினி நன்றாகவே உணர்ந்துள்ளார் என்பதையும் அறிகிறோம்.

தலைவர் ரஜினி ஆட்சியில் தமிழ் மொழி, தமிழர்கள், தமிழகம் ஆகியவற்றின் நலன்கள் முன்னெப்போதையும் விட சிறந்து விளங்கவும், இந்திய இறையாண்மைக்கு உட்பட்ட தமிழர்களுக்கான அனைத்து உரிமைகளையும் மீட்டெடுக்கவும் தலைவர், நாளைய முதல்வர் ரஜினி அவர்கள் தக்க நடவடிக்கைகள் எடுப்பார் என நம்புகிறோம்.

தமிழகத்தில் மீண்டும் பெருந்தலைவர் காமராஜர் காலத்து பொற்காலம் திரும்ப, தலைவர் ரஜினியின் ஆட்சி மலர அனைத்து விதத்திலும் உறுதுணையாக இருப்போம் என்று வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை சார்பில் உறுதி கூறுகிறோம்.

தலைவரின் கொள்கைகளான ‘உண்மை, உழைப்பு, உயர்வு’ என்பதே நமது தாரக மந்திரமாக ஏற்று செயல்படுவோம்.

வாழ்க தமிழ், வெல்க தமிழ்குடி, வருக தலைவர் ரஜினி ஆட்சி!!”

என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து இரா.தினகர் கூறியதாவது,

‘சிஸ்டம் கெட்டுப் போயிருக்குன்னு நீண்ட நாளா சொல்லி வரும் தலைவர், அதை சீர் செய்ய முயற்சிகள் எடுத்தார்.

96ல் மூப்பனாரை முதல்வராக்க காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். முடியாத பட்சத்தில், கலைஞரை முதல்வராக்க முன்னின்றி செயல்பட்டார்.

அடுத்தடுத்த ஆட்சிகளிலும் அவர் நினைத்தது போல், சிஸ்டம் மாறவில்லை. இனி அடுத்தவர்களை நம்பி பலன் இல்லை என்பதால், மக்கள் ஆதரவுடன் அரசியலுக்கு வந்துள்ளார். இதை வட அமெரிக்க ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

தலைவர் ரஜினியை இந்துத்துவாவுடன் இணைத்து இடது சிந்தனையாளர்கள் தவறாக சித்தரித்து வருகிறார்கள். அனைவருக்கும் பொதுவான ஒருவர் தமிழகத்தில் முதல்வராக வர முடியாது என்ற தவறான கண்ணோட்டத்தில் அப்படிச் சொல்கிறார்கள்.

தலைவர் ரஜினி, தன்னை கடுமையாக எதிர்த்த சீமானிடம் கூட நல்ல திட்டங்களைக் கண்டார். தமிழர்களுக்கும், தமிழ் மொழிக்கும், தமிழகத்திற்கும், மற்ற முதல்வக் காட்டிலும் பல மடங்கு கூடுதலாக நன்மை செய்வார் என்று உறுதியாக நம்பலாம்.

அவர் அனைவருக்கும் பொதுவான முதல்வராக இருப்பார். காமராஜரை பெரியார் ஆதரித்தது போல், இன்று ரஜினிக்கு எதிர்ப்பு தெரிப்பவர்கள் நாளை ஆதரவு தெரிவிக்கும் நிலை வரும்.

தலைவர் மீது அவதூறு பிரச்சாரம் செய்வதை விடுத்து, இணைந்து செயல்பட வாருங்கள், தமிழர் நலன் காப்போம் என்று அழைப்பு விடுக்கிறோம்” – இவ்வாறு தினகர் தெரிவித்தார்.

ரஜினியின் அரசியல் அறிவிப்பால் தமிழகம் மட்டுமல்லாமல், உலகெங்கும் வசிக்கும் ரஜினி ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளார்கள் என தெரிய வந்துள்ளது.

More Articles
Follows