ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா விவாகரத்து பெற்றார்

ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா விவாகரத்து பெற்றார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajnikanths 2nd daughter Soundarya gets divorcedசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-லதா தம்பதியரின் இரண்டாவது மகள் சௌந்தர்யா.

இவருக்கும் தொழிலதிபர் அஸ்வினுக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு வேத் என்ற ஒரு ஆண் குழந்தை தற்போது உள்ளது.

திருமணம் நடந்த சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட கணவரை பிரிய சௌந்தர்யா முடிவெடுத்தார்.

எனவே இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்த இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரியிருந்தனர்.

அதன்படி கடந்த மாதம் 23ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகினர்.

தங்களின் பிரிந்து வாழும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

மனுவை ஏற்ற சென்னை குடும்பல நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.

Rajnikanths 2nd daughter Soundarya gets divorced

soundarya rajini wedding

நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்கு; தாடி பாலாஜி தலைமறைவு

நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்கு; தாடி பாலாஜி தலைமறைவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor balaji wife nithya8 ஆண்டுகளுக்கு முன்பு, நித்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார் காமெடி நடிகர் தாடி பாலாஜி.

தற்போது இவர்களுக்கு போஷிகா என்ற 6 வயது பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக கூறப்பட்டது.

மேலும் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், தாக்குவதாகவும் நித்யா தெரிவித்து, போலீஸ் கமிஷ்னரிடம் நித்யா புகார் கொடுத்திருந்தார் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

இதனைத்தொடர்ந்து காவல் ஆணையர் உத்தரவின் பேரில் நித்யாவின் புகார் மாதவரம் போலீசுக்கு மாற்றப்பட்டது.

இதன்படி, பாலாஜி மீது, பெண் வன்கொடுமை சட்டம், ஆபாசமாக திட்டுதல், தகாத வார்த்தைகளால் தரக்குறைவாக பேசுதல், கொலை மிரட்டல், ஆபத்து ஏற்படுத்தும் வகையில் தாக்கியது என 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்களாம்.

இதனையறிந்த தாடி பாலாஜி தலைமறைவாகிவிட்டாராம். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Four Complaints registered against Balaji Actor Escape

balaji wife nithya case

முதன்முறையாக அஜித் படத்தை வாங்க காத்திருக்கும் விஜய்

முதன்முறையாக அஜித் படத்தை வாங்க காத்திருக்கும் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay tv new logoஅஜித் நடித்து வரும் விவேகம் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

கேரளாவில் ரூ. 4 கோடிக்கு மேல் விற்பனையாகியுள்ளதாக பார்த்தோம்.

இந்நிலையில் இப்படத்தின் சேட்டிலைட் உரிமையை பெற கடும் போட்டி எழுந்துள்ளதாம்.

இதில் பெருந்தொகை கொடுக்க காத்திருக்கிறதாம் விஜய் டிவி.

இதுவரை அஜித் படங்களின் உரிமையை பெறாத விஜய் டிவி, இம்முறை பெற்றே தீர வேண்டும் என மல்லுக்ட்டி நிற்கிதாம்.

அண்மையில் மெர்சல் படத்தை ஜீடிவியும், சிவகார்த்திகேயன் வேலைக்காரன் படத்தை விஜய் டிவியும், இவரின் அடுத்த படத்தை சன் டிவியும் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Vijay tv Planning to bag the satellite right of Vivegam

மெர்சல் படத்தில் 3வது கேரக்டரில் அரசியல்வாதியாக விஜய்.?

மெர்சல் படத்தில் 3வது கேரக்டரில் அரசியல்வாதியாக விஜய்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay real life lookஅட்லி இயக்கி வரும் மெர்சல் படத்தில் 3 கெட்டப்புகளில் விஜய் நடித்து வருகிறார் என கூறப்பட்டு வருகிறது.

இப்படத்தின் இரண்டு போஸ்டர்கள் இதுவரை வெளியாகியுள்ளன.

ஒரு கேரக்டரில் ஜல்லிக்கட்டு போராட்ட வீரர் போல காட்சியளித்தார் விஜய். மற்றொரு போஸ்டரில் மேஜிக் மேனாக போஸ் கொடுத்தார்.

இந்நிலையில், மற்றொரு கேரக்டர் பற்றிய தகவல்களை இதுவரை வெளியிடாமல் இருந்தனர்.

இந்நிலையில் இப்பட சூட்டிங்கின் போது, அட்லி ஒரு குடும்பத்துடன் போட்டோ எடுத்துள்ளார்.

அந்த பின்னணியில் விஜய் ஒரு காலண்டரில் இருப்பது போல ஒரு படம் உள்ளது. அது மேடையில் விஜய் பேசுவது போல நிற்கிறார். அந்த டிசைனில் மொட்டை ராஜேந்தர் படமும் இடம் பெற்றுள்ளது.

மேலும் அதில் ஒரு தேசிய கொடியும், அதோடு இன்னொரு கொடியும் இடம்பெற்றுள்ளது.

அது அரசியல்வாதி கேரக்டரா? என விசாரித்தற்கு, அதுபற்றி கூறமுடியாது. ஆனால் நிச்சயம் பவர் புல் கேரக்டராக இருக்கும் என தெரிவித்தனர்.

Vijays 3rd Character in Mersal movie revealed

vijay 3rd getup in mersal movie

கமலுக்கு முதல்வர் பதவி கொடுத்து பாருங்க… – அல்போன்ஸ் புத்திரன்

கமலுக்கு முதல்வர் பதவி கொடுத்து பாருங்க… – அல்போன்ஸ் புத்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

If Kamal became CM of tamilnadu he will do all good things says Alphonse Puthrenஒரு பக்கம் ஜிஎஸ்டி வரி நல்லது. மறுபக்கம் ஜிஎஸ்டி நல்லதில்லை. என பல விவாதங்கள் நாடெங்கிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இது ஒரே நாடு, ஒரே வரி என்று சொல்லப்பட்டாலும், தமிழ் சினிமாவுக்கு என தனியாக 30% வரியை நிர்ணயித்துள்ளது தமிழக அரசு.

இதனால் இந்த வரி விதிப்பினை எதிர்த்து திரையரங்கு உரிமையாளர்கள் திரையரங்குகளை மூடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து ‘பிரேமம்’ பட இயக்குனர் புகழ் அல்போன்ஸ் புத்திரன் தனது பேஸ்புக் பக்கத்தில் ஓர் பதிவினை பதிவிட்டுள்ளார்.

‘வாய்ப்பிருந்தால் ‘முதல்வன்’ படத்தில் போல் கமல் அவர்களை தமிழகத்தின் ஒரு நாள் முதல்வராக ஆக்கலாம்.

அவரது தொலைநோக்கு பார்வையால் தமிழகத்திற்கு நன்மைகள் கிடைக்கும். இது என்னுடைய விருப்பம். இதில் ஏதேனும் தவறு இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

If Kamal became CM of tamilnadu he will do all good things says Alphonse Puthren

alphonse puthiran

சினிமாவ காப்பாத்துங்க ரஜினி; உங்க வாய்ஸ்க்கு மதிப்பிருக்கு! – சேரன்

சினிமாவ காப்பாத்துங்க ரஜினி; உங்க வாய்ஸ்க்கு மதிப்பிருக்கு! – சேரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth cheranதமிழகத்தில் உள்ள 1000க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் நேற்றுமுதல் மூடப்பட்டுள்ளதால் தயாரிப்பாளர்களும் நடிகர்களும் தமிழக அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.

தமிழக அரசு விதித்துள்ள வரியை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், கமல், சித்தார்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல நடிகர்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான சேரனும் தன் ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

ரஜினி சார் நீங்க குரல் கொடுங்க ப்ளிஸ். நம்ம சினிமாவ காப்பாத்துங்க. உங்க வாய்ஸ் இந்த பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என சேரன் பதிவிட்டுள்ளார்.

Rajini should give voice to save tamil cinema industry says Cheran

Cheran Pandian‏ @cherandreams
#Rajinikanth sir pls must raise your voice to reduce GST and 30% tax by TNgovt.. It’s time to save our industry your voice make some value

மேலும் அவர் பதிவிட்டுள்ள பதிவுகள் இதோ…

தமிழகஅரசு தமிழகமெங்கும் தலைவிரித்தாடும் திருட்டு dvd கடைகளை எல்லாம் தடைசெய்து எங்கள் தொழிலுக்கு பாதுகாப்பு கொடுத்தால் வரிவிதிப்பது நியாயம்.

இந்தியஅரசு onlineல் திருட்டுத்தனமாக படம்வெளியிடும் websiteகள் அனைத்தையும் தடைசெய்து நிரந்தரமாக முடக்கினால்சினிமா வாழவழி செய்தால் வரிகட்டலாம்

More Articles
Follows