தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஓரிரு தினங்களுக்கு முன் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ படம் உலகமெங்கும் வெளியானது.
ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு இந்த படம் வெளியானது.
அனிருத் இசை அமைத்திருந்த இந்த படத்தை நெல்சன் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
இதில் ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிசரப், சுனில் உள்ளிட்ட இந்திய பிரபல நட்சத்திரங்கள் நடித்திருந்ததால் இந்தியா முழுவதும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது.
அதற்கு ஏற்ப வசூல் வேட்டையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஜெயிலருக்கு பாசிட்டிவ் விமர்சனங்களே வந்துள்ளதால் ரூ. 100 கோடியை தாண்டி வசூல் வேட்டை செய்து வருகிறது.
ஆகஸ்டு 10 வியாழக்கிழமை எந்த ஒரு பண்டிகை தினமும் விடுமுறை தினமும் இல்லை. ஆனாலும் படத்திற்கு டிக்கெட் எங்குமே கிடைக்கவில்லை என்பது ரஜினியின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை மீண்டும் நிரூபித்துள்ளது.
நமது அண்டை மாநிலங்களான கேரளா ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் காலை 6 மணிக்கு முதல் காட்சி தொடங்கப்பட்டது.
ஆனால் தமிழகத்தில் சிறப்பு காட்சிகள் அனுமதி இல்லை என்பதால் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி தொடங்கப்பட்டது .
முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 25 கோடியை படம் வசூலித்துள்ளது. ஒருவேளை தமிழகம் முழுவதும் சிறப்பு காட்சிகள் அனுமதிக்கப்பட்டு இருந்தால் ரூ 30 கோடியை இந்த படம் எட்டி இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே முதல் நாளில் சிறப்பு காட்சி இல்லாததால் 5 கோடி நஷ்டத்தை ஜெயிலர் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் எங்கும் இல்லாத அளவிற்கு ஜெயிலர் படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை செய்து வருவதால் ரஜினி ரசிகர்களும் தியேட்டர் அதிபர்களும் படக்குழுவினரும் விநியோகஸ்தர்களும் என திரையுலகமே மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது கூடுதல் தகவல்.
Rajinis Jailer lost 5 crores in TN Box office