ராஜஸ்தானிலும் ரஜினி ராஜ்ஜியம்.; வைரலாகும் ‘ஜெயிலர்’ சூட்டிங் ஸ்டில்ஸ்

ராஜஸ்தானிலும் ரஜினி ராஜ்ஜியம்.; வைரலாகும் ‘ஜெயிலர்’ சூட்டிங் ஸ்டில்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவில் உள்ள பல மொழி சினிமா நட்சத்திரங்கள் நடித்து வரும் திரைப்படம் ‘ஜெய்லர்’.

ரஜினிகாந்த், மோகன்லால், ஜாக்கி ஷெராப், சுனில், தமன்னா, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வரும் இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்.

அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதுவரை 80% ஷூட்டிங் நிறைவடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

ஜெயிலர்

தற்போது ராஜஸ்தானில் ஜெய்சல்மார் என்ற இடத்தில் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளை படமாக்கி வருகிறார் இயக்குனர்.

இந்த படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகின்றன.

அங்கே ஆக்சனில் அடித்து வீசப்பட்ட வாகனங்கள் கவிழ்ந்து கிடப்பதாக காணப்படுகிறது.

இத்துடன் நெல்சன் கெத்தாக நிற்கும் ஒரு புகைப்படமும் பகிரப்பட்டுள்ளது.

மேலும் ரஜினியுடன் போட்டோ எடுக்க ரசிகர்கள் குவிந்து வருவதையும் அங்கே காண முடிகிறது.

ஜெயிலர்

Rajinis Jailer leaked stills goes viral

இயக்குனர் விஜய் ஆண்டனி-யின் ‘பிச்சைக்காரன் 2’ பட ஸ்னீக் பீக் வெளியானது

இயக்குனர் விஜய் ஆண்டனி-யின் ‘பிச்சைக்காரன் 2’ பட ஸ்னீக் பீக் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி, கடந்த மாதம் மலேசியாவில் தனது வரவிருக்கும் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் படப்பிடிப்பின் போது காயமடைந்தார்.

இந்த மாத தொடக்கத்தில் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கினார்.

இப்படத்தில் விஜய் ஆண்டனி, ஜான் விஜய் மற்றும் ஹரீஷ் பரேடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

இந்நிலையில், தயாரிப்பாளர்கள் இப்போது படத்தின் முதல் நான்கு நிமிடங்களை வெளியிட்டு, பார்வையாளர்களுக்கு ஒரு ஸ்னீக் பீக் கொடுத்துள்ளனர்.

மேலும், விஜய் ஆண்டனி ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் சரியான வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

vijay antony’s ‘Pichaikkaran 2’ sneak peek release

மீனாவுக்காக கலா போடும் கலக்கல் ப்ளான்.; ரஜினி – கமல் பங்கேற்பு.?!

மீனாவுக்காக கலா போடும் கலக்கல் ப்ளான்.; ரஜினி – கமல் பங்கேற்பு.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரம் ஆக அறிமுகமானவர் மீனா.

1980களில் குழந்தை நட்சத்திரமாக ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ என்ற படத்தில் நடித்தவர் மீனா.

அதன் பின்னர் வளர்ந்து ரஜினிக்கே ஜோடியானார். எஜமான், வீரா, முத்து ஆகிய படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் பெரும்பான்மையான ஆதரவை பெற்றவர் மீனா.

மேலும் கமல், விஜயகாந்த், சத்யராஜ், பாக்யராஜ், கார்த்தி, முரளி, சரத்குமார், அஜித், விஜய், பிரசாந்த் ஆகியோருடனும் இணைந்து பணியாற்றியுள்ளார் மீனா.

தமிழ் சினிமாவை போல தெலுங்கிலும் மலையாளத்திலும் மீனாவுக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, வெங்கடேஷ் ஆகியோருக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார் மீனா.

மீனாவின் மகள் நைனிகாவும் தற்போது குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை மீனா தனது சினிமா பயணத்தில் 40 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் அவரை கௌரவிக்க விழா எடுக்க திட்டமிட்டு இருக்கிறாரா நடன இயக்குனர் கலா.

இதற்கான (மீனா 40) அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விழாவில் ரஜினி கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்களையும் அழைத்து மீனாவுக்கு பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளாராம்.

கூடுதல் தகவல்..

சமீபத்தில் தன் கணவரை கொரோனா தொற்றால் இழந்த நடிகை மீனா அதிலிருந்து தற்போது மெல்ல மெல்லமாக மீண்டு சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Meena completes 40 years in the film industry

மாணவிகளுக்காக ‘மதுகை’ திட்டத்தை தொடங்கி வைத்த நயன்தாரா

மாணவிகளுக்காக ‘மதுகை’ திட்டத்தை தொடங்கி வைத்த நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல கல்வி நிறுவனம் சத்யபாமா இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி 35-ம் ஆண்டு கலாச்சார விழா 2023-ஐ சமீபத்தில் கொண்டாடியது.

சத்யபாமா பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் மரியஜீனா ஜான்சன், தலைவர் டாக்டர் மரிய ஜான்சன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும். நயன்தாராவை “சத்யபாமா பிராண்ட் அம்பாஸடர் 2023” என்று சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர். மரியஜீனா ஜான்சன் சமீபத்தில் அறிவித்தார்.

உடன் பல்கலைகழக துணைத் தலைவர்கள் மரியா பெர்னாட்டி தமிழரசி, ஜெ.அருள் செல்வன், செல்வி மரிய கேத்தரின் ஜெயப்பிரியா ஆகியோர் இருந்தனர்.

நயன்தாரா

சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் வேந்தரின் சிந்தனையில் உருவான “மதுகை” (The Strength – தி ஸ்ட்ரெங்த்) என்ற திட்டத்தை நயன்தாரா தொடங்கி வைத்தார்.

சுகாதாரப் பொருட்கள் மற்றும் அதிக கலோரி சத்துக்கள் அடங்கிய தொகுப்புகளை விநியோகிப்பதன் மூலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் இந்த திட்டம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

முதற்கட்டமாக 15 அரசுப் பள்ளிகள் பல்கலைக்கழகத்தின் வேந்தரால் தத்தெடுக்கப்பட்ட 5 கிராமங்கள் இதனால் பயனடைகின்றன.

நயன்தாராவிற்க்கு திருமணம் முடிந்த பிறகு சத்தியபாமா பல்கலைகழகத்தின் பிராண்ட் அம்பாஸடராக அறிவிக்கப்பட்டது குறித்து சத்தியபாமா பல்கலைகழகம் சார்பில் தற்போது வெளியிடப்பட்ட படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா

Madhugai launched by Sathyabama Brand Ambassador Nayanthara

குறட்டையால் குடும்பத்தில் குழப்பம்.; குட் மெசேஜ் சொல்லும் ‘குட் நைட்’

குறட்டையால் குடும்பத்தில் குழப்பம்.; குட் மெசேஜ் சொல்லும் ‘குட் நைட்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜெய் பீம்’ நடிகர் மணிகண்டன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் படத்திற்கு, ‘குட் நைட்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான அனிரூத் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் படம் ‘குட் நைட்’.

இதில் ‘ஜெய் பீம்’ மணிகண்டன் கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை மீதா ரகுநாத் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் ரமேஷ் திலக், இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்குநராக ஸ்ரீகாந்த் கோபால் பணியாற்ற, பட தொகுப்பை பரத் விக்ரமன் மேற்கொண்டிருக்கிறார்.

ரொமான்டிக் காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம். ஆர். பி என்டர்டெய்ன்மெண்ட் எனும் பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நசரேத் பசிலியான், மகேஷ் ராஜ் பசிலியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக இயக்குநர் எஸ். பி. சக்திவேல் பணிபுரிந்துள்ளார்.

‘குட் நைட்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் மணிகண்டனின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்…

”குறட்டையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் குடும்ப உறவுகளின் முக்கியத்துவமும் இடம் பிடித்திருக்கிறது.

தூங்கும் போது ஒருவர் விடும் குறட்டை, எப்படி மற்றவர்களை பாதிக்கிறது என்பதை நகைச்சுவையாகவும், அர்த்தமுள்ள கதையாகவும் உருவாக்கி இருக்கிறோம்” என்றார்.

good night movie first look poster released

சார்மினாரில் படப்பிடிப்பை தொடங்கிய இயக்குனர் ஷங்கர்…

சார்மினாரில் படப்பிடிப்பை தொடங்கிய இயக்குனர் ஷங்கர்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் நடித்த ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் இருந்த இயக்குனர் ஷங்கர் ஷெட்யூலை முடித்துவிட்டு, தற்போது ராம் சரண் வைத்து ‘RC15’ படத்தையும் தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி,அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, சுனில், ஸ்ரீகாந்த், ஜெயராம், நவீன் சந்திரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ‘RC15’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள சார்மினாரில் நேற்று துவங்கியுள்ளதாக இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும், சார்மினார் முன் தனது படத்தை ட்விட்டரில் பகிர்ந்த இயக்குனர் ஷங்கர், “#RC15 இன் அடுத்த அட்டவணையை சின்னமான சார்மினாரில் தொடங்குகிறோம்” என்று எழுதினார்.

Shankar resumes shooting of Ram Charan’s ‘RC15’

More Articles
Follows