ரஜினிதான் அடுத்த முதல்வர்; கமல் அண்ணன் சாருஹாசன் பேட்டி

rajinikanth and charu hasanஉலகநாயகன் என்றழைக்கப்படும் நடிகர் கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.

இன்று மய்யம் விசில் என்ற மொபைல் ஆப்பை வெளியிட உள்ளார்.

மேலும் தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, கட்சி வளர்ச்சி பணிகளில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் கமலின் சகோதரரும், நடிகருமான சாருஹாசன்,

“தமிழ்நாட்டின் அடுத்த முதல்-அமைச்சர் ரஜினி தான் என்று சூசகமாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சமூக வலைதளமான பேஸ்புக்கில் அவர் கூறியிருப்பதாவது:-

கர்நாடகாவை சேர்ந்த ஒருவர்தான் தமிழகத்தின் அடுத்த முதல்- அமைச்சர். இதை ஒப்புக் கொள்ளாதவர்கள் என்னை முட்டாள் என்று அழைக்கலாம்.

இந்த ஆண்டு உங்களை நான் புரிந்து கொள்வேன். அடுத்த ஆண்டு நீங்கள் என்னை புரிந்து கொள்வீர்கள்.” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Overall Rating : Not available

Latest Post