தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் இன்று தன் ரசிகர்கள் 5வது நாளாக சந்தித்து போட்டோ எடுத்துக் கொண்டார். அப்போது அவர் பாலசந்தர் பற்றி பேசியதாவது…
பல மேடைகளில் பால சந்தர் சார் பத்தி பேசியிருக்கிறேன். நடிப்பதற்காக ஆடிசனுக்கு சென்ற போது தமிழ்,ஆங்கிலம் இரண்டுமே தெரியாது.
ஆனாலும், என்னை நடிக்க சொன்னார்.
அப்போது அவர் சொன்னது ஒன்றுதான். நீ தமிழ் கத்துக்கடா. உன்னை எப்படி உயரத்திற்கு கொண்டு போறேன் பார் என்றார்.
பிறகு ஏதோ யோசித்துவிட்டு என்னை அவரது அடுத்த மூன்று படங்களில் புக் செய்தார்.
அபூர்வ ராகங்களில் ஒரு சின்ன வேடம், பிறகு மூன்று முடிச்சு படத்தில் ஒரு நல்ல ஆண்டி ஹூரோ ரோல்.
பாலசந்தர் சார் என்னை தத்து எடுக்கவில்லை அவ்வளவு தான் கைலாஷ், பிரசன்னாவிற்கு பிறகு ரஜினிகாந்த். என்னை அவர் மகனாக பார்த்துக் கொண்டார்.