சூப்பர் ஸ்டார் பட்டத்தை ட்விட்டரில் நீக்கிய அரசியல்வாதி ரஜினி

சூப்பர் ஸ்டார் பட்டத்தை ட்விட்டரில் நீக்கிய அரசியல்வாதி ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthகடந்த 4 ஆண்டுகளாக ட்விட்டரில் மட்டுமே அக்கௌண்ட் வைத்திருந்த நடிகர் ரஜினிகாந்த், நேற்று முதல் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் இணைந்தார் என்பதை பார்த்தோம்.

இந்த இரண்டிலும் Rajinikanth என்றே அவரது அக்கௌண்ட் உள்ளது.

ஆனால் ட்விட்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினி என்றே இருக்கும்.

இந்நிலையில் இன்று திடீரென @superstarrajini என்ற அக்கௌண்டில் சூப்பர் ஸ்டாரைத் தூக்கிவிட்டு ரஜினிகாந்த் என மாற்றம் செய்துள்ளார். அதாவது, @rajinikanth என மாற்றியுள்ளார்.

விரைவில் ரஜினி தனது கட்சியை அறிவிக்க உள்ளதால், ரசிகர் மன்றம் முதல் பல மாற்றங்களை செய்து வருகிறார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 116 ட்வீட்டுகளைப் பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், ஒரு ரீட்வீட் கூட செய்யவில்லை.

அவரை ட்விட்டரில் மட்டும் 45 லட்சத்துக்கும் அதிகமானோர் ஃபாலோ செய்ய, அவரோ வெறும் 24 பேரை மட்டுமே பின்தொடர்கிறார்.

நரேந்திர மோடியின் இரண்டு கணக்குகள், அமிதாப்பச்சன், ஏ.ஆர்.ரஹ்மான், தனுஷ், அனிருத், செளந்தர்யா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோரைத் தவிர மற்ற எல்லாமே செய்தி நிறுவனங்களைத்தான் அவர் பின்தொடர்கிறார் என்பதும் இங்கே கவனித்தக்கது.

பெரியார் பற்றி எச்.ராஜா கூறியது காட்டுமிராண்டித்தனமானது… ரஜினி

பெரியார் பற்றி எச்.ராஜா கூறியது காட்டுமிராண்டித்தனமானது… ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini and H Rajaதிரிபுராவில் லெனின் சிலை இடித்து தள்ளப்பட்டதை அடுத்து தமிழ்நாட்டிலும் பெரியார் சிலை உடைக்கப்படும் என்ற வகையில் பாஜக எச்.ராஜா பேஸ்புக்கில் பதிவிட்டார்.

அன்று இரவே பெரியார் சிலை ஒரு சில இடங்களில் உடைக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

மேலும் பல எதிர்ப்புகள் எச்.ராஜா மீது கிளம்ப, அந்த பதிவை நான் செய்யவில்லை. என் அட்மின்தான் செய்தார் என பல்டி அடித்தார்.

இதை நடைபெற்று 2 நாட்கள் மௌனம் காத்த ரஜினிகாந்த், இன்று அது குறித்து கூறியுள்ளார்.

”பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று கூறியதும், சிலையை உடைத்ததும் காட்டுமிராண்டித்தனம்” என்று தெரிவித்தார்.

தற்போது இந்த விவகாரம் அமைதியாகிவிட்ட நிலையில் இது பற்றி பெரிதுப்படுத்த வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

எம்ஜிஆர்-ஜெயலலிதா பட பாடலை தலைப்பாக்கிய அமலா பால்

எம்ஜிஆர்-ஜெயலலிதா பட பாடலை தலைப்பாக்கிய அமலா பால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Amala paulமறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இணைந்து நடித்த படம் ஆயிரத்தில் ஒருவன்.

அப்படத்தில் அதோ அந்த பறவை போல… எனத் தொடங்கும் ஒரு பாடல் வரி உள்ளது.

மிகப்பெரிய ஹிட்டான இந்த பாடல் தற்போது அமலாபால் நடித்துள்ள ஒரு படத்தின் தலைப்பாக்கியுள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை இன்று மகளிர் தினத்தில் நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு….

இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஃபீனிக்ஸ் பறவையாய் எழுந்து பறக்கும் அமலாபாலின் “அதோ அந்த பறவை போல” படத்தின் முதல் பார்வை போஸ்டரை அமலா பாலின் தோழியான நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டு மகளிர் தினத்தை மேலும் சிறப்பாக்கி இருக்கிறார்.

தன் ட்விட்டர் பக்கத்தில் இதை வெளியிட்ட காஜல் அகர்வால், அமலாபாலை பேரழகுப் பெண் டார்லிங் அமலா பால் என்று குறிப்பிட்ட தன் நட்பையும் அன்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.

அதோ அந்த பறவை போல’ படத்தை கே.ஆர்.வினோத் இயக்குகிறார். சாந்தகுமார் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு செய்ய, ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார். ஜோன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

தலைமை வெற்றிடத்தை ரஜினி-கமலால் திடீரென நிரப்ப முடியாது.. : கௌதமி

தலைமை வெற்றிடத்தை ரஜினி-கமலால் திடீரென நிரப்ப முடியாது.. : கௌதமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Magalae song release stills (5)இன்று மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி, நடிகை கவுதமி இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் சொன்னது…

நான் நடித்துள்ள மகளே படத்தின் பாடலை இங்கு வெளியிடுகிறேன்.

உலகத்தில் உள்ள எல்லா தாய்மார்களுக்கும், பெண்களுக்கும் இதை சமர்ப்பிக்கிறேன்.

தமிழக அரசியல் தொடர்பாகவும், ரஜினி மற்றும் கமலின் அரசியல் பிரவேசம் குறித்தும் கேட்டபோது..

“முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவக்குப் பின் தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது உண்மைதான்.

கமல் மற்றும் ரஜினி திடீரென அரசியலுக்கு வந்து தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்கு நடைமுறையில் சாத்தியம் இல்லை.

இந்த வெற்றிடத்தை ஒரே நாளில் யாராலும் நிரப்ப முடியாது’ என்றார்.

நாங்க போராட கமல் சொல்ல தேவையில்லை…; கடுப்பான வைகோ

நாங்க போராட கமல் சொல்ல தேவையில்லை…; கடுப்பான வைகோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vaiko condemns Kamals new tweet about Periyar Statue issueதிரிபுரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி அடைந்தது.

அங்கு பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியுள்து.

இதனையடுத்து பாஜக.வினரால் லெனின் சிலை அதிரடியாக அகற்றப்பட்டது.

இதுபற்றி தமிழக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவிடும் போது… ‘லெனின் யார், அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில். இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதிவெறியர் ஈவேரா ராமசாமி சிலை’ என பதிவிட்டிருந்தார்.

பெரியார் சிலை உடைக்கப்படும் என எச்.ராஜா கூறியதால் அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் உருவாகின.

முக.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், சீமான் உள்ளிட்டோரும் தங்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.

அதன்பின்னர்.. அந்த பதிவை நான் பதிவிடவில்லை. தனது பேஸ்புக் அட்மின்தான் பதிவிட்டார் எனக் கூறி எச்.ராஜா அந்த பதிவை நீக்கவிட்டார்.

இந்த சர்ச்சை குறித்து கமல் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

`அன்பார்ந்த ஸ்டாலின், வை.கோ, திருமாவளவன், சீமான். வீணாகத் தங்கள் பேச்சாற்றலை விழலுக்கிரைக்கவேண்டாம்.

எல்லாச் சிலைகளையும் அகற்றும் வாக்குறுதியை அவர் தந்தால் நாம் நம் மூதாதையார் பெரியார் சிலையை அகற்ற அனுமதிப்போம். வழிபடுதல் வேறு வழிநடப்பது வேறு’ என்று பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து பத்திரிகையாளர்கள் வைகோ.விடம் கேட்டபோது அவர் அவரது பாணியில் அனலாக பேசினார்.

கமல்ஹாசனுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஆனால் என் நண்பர்கள், ஊடகத்துறையினர் இது குறித்து கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

ஒரு வாரத்திற்கு முன்பு அரசியலுக்கு வந்த கமல் நாங்கள் எப்படி போராட வேண்டும் என சொல்ல தேவையில்லை.

விழலுக்கிரைக்கவேண்டாம் என கூறியிருக்கிறார். அப்படி என்றால் வீணாக போராட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

54 ஆண்டுகாலமாக போராடி, சிறை சென்று அரசியல் செய்து வருகிறோம். எங்களுக்கு அவர் சொல்ல தேவையில்லை” என கடுமையாக பேசினார்.

Vaiko condemns Kamals new tweet about Periyar Statue issue

பெரியார் சிலை குறித்து எச்.ராஜா பேசியது மத்திய அரசு தூண்டுதல்..? : கமல் கேள்வி

பெரியார் சிலை குறித்து எச்.ராஜா பேசியது மத்திய அரசு தூண்டுதல்..? : கமல் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanநடிகர் கமல்ஹாசன் திடீரென இன்று செய்தியாளர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்திருந்தார்.

அப்போது பெரியார் சிலை விவகாரம், எச் ராஜாவின் பேச்சு, காவரி நீர் பிரச்சினை குறித்து பேசினார்.

அவர் பேசியதாவது…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முயற்சி நடந்து வருகிறது. ஆனால் அந்த முயற்சியை திசை திருப்பும் வகையில் இந்த பெரியார் சிலை விவகாரத்தை எழுப்பியுள்ளனர்.

பெரியார் சிலையை உடைப்போம் என கூறிய எச்.ராஜா வருத்தம் தெரிவித்து இருப்பதை தற்போது என்னால் ஏற்க முடியாது.

அவர் சொன்ன வார்த்தையை திருப்பி எடுத்தாலும் அது காயம்தானே.

இது மத்திய அரசின் தூண்டுதலாக கூட இருக்கலாம். இப்போது அவர்கள் அதற்கும், எங்களுக்கும் சம்பந்தமும் இல்லை என்கிறார்கள்.

அவர் மீது பா.ஜனதா கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

பெரியார் பற்றி சிலர் கலக வார்த்தைகள் சொல்கிறார்கள்.

பெரியார் சிலையை யாரும் தொட்டு விட முடியாது. பெரியாரை தமிழர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

பெரியார் சிலைகளுக்கு பாதுகாப்பு தேவையில்லை. பெரியார் பற்றி விமர்சனம் செய்பவர்களுக்குதான் பாதுகாப்பு தேவை.” என தெரிவித்தார்.

More Articles
Follows