ஐஸ்வர்யாவின் ‘பயணி’..; லவ் யூ என ரஜினி ட்வீட்.. தோழி என தனுஷ் ட்வீட்

ஐஸ்வர்யாவின் ‘பயணி’..; லவ் யூ என ரஜினி ட்வீட்.. தோழி என தனுஷ் ட்வீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு தன் காதல் கணவரான தனுஷை பிரிந்தார் ரஜினி மகள் ஐஸ்வர்யா.

மீண்டும் தனது திரைப்பயணத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

இதனையடுத்து சில நாட்களில் ‘முசாபிர்’ எனும் காதல் பாடல் வீடியோவை இயக்கியிருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினி.

அதன்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் மியூசிக் வீடியோ ஒன்றை இயக்கியுள்ளார்.

இந்த இசை ஆல்பத்திற்கு தமிழில் ‘பயணி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

அன்கித் திவாரி இசையமைத்துள்ள இப்பாடலை தமிழில் அனிருத், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த், தெலுங்கில் சாகர், இந்தியில் அன்கித் திவாரி ஆகியோர் பாடியுள்ளனர்.

விரைவில் ஒரு புதிய படம் இயக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ராகவா லாரன்ஸின் துர்கா படத்தை ஐஸ்வர்யா இயக்குவார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘பயணி’ வீடியோவை இன்று வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் ரசிகர்களின் சில கேள்விகளுக்கு பதில் கிடைத்துவிட்டது.

நாயகியின் பெற்றோர் அவர் கண் முன்பே சண்டை போடுகிறார்கள். ஆனால் சிறிது நேரத்தில் சமாதானம் ஆகி ஜோடியாக செல்ஃபி எடுத்து மகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

எனவே விரைவில் பிரிந்த தம்பதியர் இணைவார்கள் என எதிர்ப்பார்க்கலாம்.

இந்த பயணி குறித்து ரஜினி ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

9 வருட இடைவெளிக்குப் பிறகு என் மகள் ஐஸ்வர்யா இயக்கிய பயணி இசை ஆல்பத்தை வெளியிட்டதில் மகிழ்ச்சி;

நீ எப்போதும் சிறப்பாக இருக்க விரும்புகிறேன், கடவுள் ஆசீர்வதிப்பார், லவ் யூ”

– ரஜினிகாந்த் என பதிவிட்டுள்ளார்.

தனுஷ் தன் ட்விட்டரில்..

Congrats my friend @ash_r_dhanush on your music video #payani

https://t.co/G8HHRKPzfr

God bless

@rajinikanth | @ash_r_dhanush | @soundaryaarajni | #Payani

Rajinikanth launches Aishwrya’s music single

இதயங்களை ரணமாக்கிய ‘ஜெய்பீம்’ வில்லன் இயக்கிய ‘டாணாக்காரன்’ ரிலீஸ் அப்டேட்

இதயங்களை ரணமாக்கிய ‘ஜெய்பீம்’ வில்லன் இயக்கிய ‘டாணாக்காரன்’ ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அப்படி டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் அடுத்த பெரிய வெளியீடாக விக்ரம் பிரபு நடிப்பில் டாணாக்காரன் திரைப்படம், வரும் ஏப்ரல் மாதம் பிரத்யேகமாக வெளியாகவுள்ளது.

டாணாக்காரன் திரைப்படத்தின் கதைக்களம் 1998ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகம் இதற்கு முன் பல காவல்துறை சார்ந்த திரைப்படங்களைக் கண்டுள்ளது.

ஆனால் டாணாக்காரன் அந்த வகைப் படங்களில் தனித்துவமான, இதுவரை வெள்ளித்திரையில் ரசிகர்கள் பார்த்திராத ஒரு உலகத்தைக் காட்டும்.

அதே போல, நடிகர் விக்ரம் பிரபு இதற்கு முன் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இந்த கதாபாத்திரம் இதுவரை அவர் நடித்த படங்களில் ஒரு மைல்கல்லாக இருக்கும். திரைப்படத்தின் ஒவ்வொரு நடிகர், நடிகையும் தங்களது கதாபாத்திரங்களுக்காக முழு அர்ப்பணிப்போடு கடின உழைப்பைத் தந்துள்ளனர்.

படத்தின் போஸ்டர்களும் டீஸரும் ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படத்தின் ட்ரெய்லரும், இசையும் விரைவில் வெளியாகவுள்ளது.

மாயா, மான்ஸ்டர், மாநகரம் உள்ளிட்ட தனிச்சிறப்பு கொண்ட படைப்புகளை வழங்கிய பொடன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த வருடம் வெளியிடும் முதல் திரைப்படம் இது.

எஸ் ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு, பி கோபிநாத், தங்க பிரபாகரன் ஆர் உள்ளிட்டோர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

முன்னதாக ‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து பெருவாரியான பாராட்டுகளைப் பெற்றிருந்த தமிழ், டாணாக்காரன் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இயக்குநர் வெற்றிமாறனிடம் அசோஷியேட் இயக்குநராக பணிபுரிந்திருக்கும் தமிழ், இதற்கு முன் தமிழக காவல்துறையில் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

என்றும் நினைவில் நிற்கும் பாடல்களுக்கும், பின்னணி இசைக்கும் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அஞ்சலி நாயர் நாயகியாகவும், லால், எம் எஸ் பாஸ்கர், லிவிங்க்ஸ்டன் மற்றும் போஸ் வெங்கட் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

ஏப்ரல் 2022ல் டாணாக்காரன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

Taanaakkaran release update is here

ஹாலிவுட்டுக்கு நிகரானது.. பிரமிப்பான படம்.; குதிரைவாலில் குஞ்சம் வைக்கும் மிஷ்கின் & லோகேஷ்

ஹாலிவுட்டுக்கு நிகரானது.. பிரமிப்பான படம்.; குதிரைவாலில் குஞ்சம் வைக்கும் மிஷ்கின் & லோகேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘குதிரைவால்’. கலையரசன், அஞ்சலி பாட்டீல் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.

எழுத்தாளர் ராஜேஷ்குமார் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகியுள்ள இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல விருதுகளை வென்றிருக்கும் நிலையில், நாளை (மார்ச் 18) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தை வெளியிட பல ஒடிடி நிறுவனங்கள் போட்டியிட்ட நிலையில், திரையரங்கில் மட்டுமே இப்படத்தை வெளியிடுவேன், என்பதில் இப்படத்தின் தயாரிப்பாளர்கள் விக்னேஷ் சுந்தரேசன் மற்றும் பா.இரஞ்சித் உறுதியாக இருந்தார்கள்.

காரணம், இப்படத்தை திரையரங்குகளில் பார்க்கும் போது இதுவரை இல்லாத ஒரு புதிய அனுபவத்தை ரசிகர்கள் அனுபவிக்க முடியும் என்ற நம்பிக்கையால் தானாம்.

அப்படி ஒரு திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருப்பதோடு, சமீபத்தில் வெளியான டிரைலர் எதிர்ப்பார்ப்பை அதிக்கரிக்கவும் செய்திருக்கிறது.

இந்த நிலையில், ‘குதிரைவால்’ படத்தின் சிறப்பு காட்சி சமீபத்தில் திரையிடப்பட்டது. இதில் இயக்குநர்கள் மிஷ்கின், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்று படம் பார்த்ததோடு, படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

இயக்குநர் மிஷ்கின் படம் குறித்து கூறுகையில்…

“தமிழ் சினிமாவில் நான் இதுவரை பார்த்த திரைப்படங்களிலேயே மிகவும் அறிவுப்பூர்வமான திரைப்படம் ‘குதிரைவால்’. ஒரு இயக்குநர் நான் நினைத்த அறிவுப்பூர்வமான விஷயங்களை திரைப்படமாக கொடுத்திருக்கும் முதல் திரைப்படம் இது தான்.

நான் உள்பட நினைத்ததை 10 சதவீதம் தான் படத்தில் சொல்வோம். ஆனால், இந்த படத்தின் இயக்குநர்கள் தாங்கள் நினைத்ததை 100 சதவீதம் முழுமையாக சொல்லியிருக்கிறார்கள். அதற்கு என் பாராட்டுகள். ஒரு சைக்காலாஜிக்கல் பயணமாகவே இப்படம் இருந்தது.

நான் படம் பார்க்கும் போது எனக்கு புதுவித உணர்வை கொடுத்தது. இந்த படத்தை தயாரித்த இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு என் நன்றியும், பாராட்டும். இந்த படம் ஆங்கிலப் படத்துக்கு நிகராக இருக்கிறது.

இந்த படத்தின் மேக்கிங் சிறப்பாக இருக்கிறது. பெரிய பெரிய விருதுகள் வாங்குவதற்கு தமிழ் சினிமா வெகு தூரத்தில் இல்லை மிக குறைவான தொலைவில் இருக்கிறது என்பதற்கு இந்த படம் சிறந்த உதாரணம். இந்த படத்தை மிக பொறுமையாக பார்க்க வேண்டும்.

இதுபோன்ற படங்களை பத்திரிகையாளர்களிடம் சேர்க்க வேண்டும். இந்த படத்தை தயாரித்த இயக்குநர் பா.இரஞ்சித் மற்றும் யாழி பிலிம்ஸ் நிறுவனத்துக்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். பா.இரஞ்சித் தயாரித்த படங்களிலேயே இது தான் மிகச்சிறந்த படம்.” என்றார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் குறித்து கூறுகையில்…

“மிகவும் பிரமிப்பான திரைப்படம். இப்படி ஒரு படத்தை நான் எதிர்ப்பார்க்கவில்லை.

படத்தில் நடித்த நடிகர்கள் அவர்களின் நடிப்பு மற்றும் ஒளிப்பதிவு என அனைத்தும் மிக சிறப்பாக உள்ளது. ஒரு வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த படம் ரசிகர்களுக்கு நிச்சயம் வித்தியாசமான உணர்வை கொடுக்கும்.” என்றார்.

இந்த நிலையில், ‘குதிரைவால்’ படம் குறித்து இயக்குநர் பா.இரஞ்சித் கூறுகையில்…

“தமிழ் சினிமாவில் இது ஒரு புதிய ஆரம்பமாக இருக்கும்.

புற உலகில் இருந்து விலகி அக உலகிற்குள் இருக்கும் ஒரு கலையை பற்றி குதிரைவால் படம் பேசி இருக்கிறது. கனவு, கனவு உலகத்தில் இருக்கும் சுதந்திரம் பற்றி குதிரைவால் காட்சிப்படுத்தி உள்ளது.

வழக்கமான ஹீரோ வில்லன் கதையாக இல்லாமல், பார்ப்பவர்கள் பர்சனலாக கனெக்ட் செய்து கொள்ள கூடிய அளவில் படம் இருக்கும். திரையரங்குகளில் குதிரைவால் படம் தரும் புதிய அனுபவம் பேசப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

Lokesh and Mysskin praises Kuthiraivaal movie

கமலுக்கு புரியும்.. சிம்புக்கு புரியாது..; அனிதாவின் கமெண்ட்டால் ரசிகர்கள் டென்சன்

கமலுக்கு புரியும்.. சிம்புக்கு புரியாது..; அனிதாவின் கமெண்ட்டால் ரசிகர்கள் டென்சன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிப்பரப்பாகி வருகிறது.

இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் அவர் சினிமா பணிகளில் பிசியாக இருப்பதால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

தற்போது நடிகர் சிலம்பரசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இவர் கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிப்பாகவும் ஜாலியாக இருக்க வேண்டிய இடத்தில் ஜாலியாகவும் நிகழ்ச்சியை நடத்தி செல்கிறார்.

இந்த நிலையில் சிம்புவை பற்றி அனிதா கூறிய ஒரு கருத்து வைரலாகி வருகிறது.

ஸ்ருதியிடம் இந்த வீடியோவில் அனிதா கூறியதாவது…: “நீ பேசுனது ரொம்ப ஆழமான விஷயம். இதெல்லாம் சிம்புவுக்கு புரியாது. ஏனா அவர் பிக்பாஸுக்கு புதுசு. கமல் சாருக்கு இதெல்லாம் புரியும். ஏன்னா அவர் பிக்பாஸ் 5 சீசன்களை பார்த்திருக்கிறார்’ என அனிதா கூறியுள்ளார்.

அனிதாவின் இந்த கருத்தை கேட்ட சிம்பு ரசிகர்கள் டென்ஷனாக தங்கள் கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.

Anitha’s comment made STR fans angry

ரஜினி மகள் ஐஸ்வர்யாவுடன் இணையும் ராகவா லாரன்ஸ்

ரஜினி மகள் ஐஸ்வர்யாவுடன் இணையும் ராகவா லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் தனுஷை பிரிவதாக அறிவித்த ஐஸ்வர்யா ரஜினி தற்போது தனது முழுகவனத்தையம் சினிமாவில் செலுத்தி வருகிறார்.

தனுஷ் நடித்த ‘3’ மற்றும் கௌதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை என்ற படங்களை இயக்கினார். தற்போது முசாபிர் என்ற பாடல் ஆல்பத்தை மூன்று மொழிகளில் இயக்கியுள்ளார் ஐஸ்வர்யா.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நடிகர் ராகவா லாரன்ஸை சந்தித்து பேசியுள்ளார் ஐஸ்வர்யா.

‘லாரன்ஸ் அண்ணாவை பார்த்தவுடன் எனது மூளை புத்துணர்ச்சி பெற்றது’ என தெரிவித்துள்ளார். இந்த படங்களை அவரே இன்ஸ்ட்டாவில் பகிர்ந்துள்ளார்.

ராகவா லாரன்ஸ் நடிக்கும் படம் ஒன்றை ஐஸ்வர்யா இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த படம் துர்கா என கூறப்படுகிறது.

இந்த படத்தை ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் ஆகியோர் தான் இயக்குவதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் சமீபத்தில் விலகிக்கொள்கிறோம் என அறிவித்து இருந்தனர்.

எனவே துர்கா படத்தை ஐஸ்வர்யா இயக்குவார் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

ரஜினி இல்லை என்றால் சினிமாவில் தனக்கு இந்த இடம் இல்லை. அவர்தான் சினிமாவில் நிலையான இடம் கொடுத்தார். தலைவர் ரஜினியின் மகள்கள் தன் தங்கைகள். அவர்களுக்காக நான் இருப்பேன் என லாரன்ஸ் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலம்பரசன் நடிக்கவுள்ள ஒரு படத்தையும் ஐஸ்வர்யா இயக்குவார் என்ற மற்றொரு தகவலும் உலா வருகிறது.

Aishwarya Rajinikanth and Raghava Lawrence joins for a new film

ஓடிடி தொடங்கும் சூப்பர் ஸ்டார்.; அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஓடிடி தொடங்கும் சூப்பர் ஸ்டார்.; அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகெங்கிலும் ஓடிடி தளங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு எழுந்துள்ளது.

எந்த மொழி படம் என்றாலும் வீட்டில் இருந்தபடியே எத்தனை முறை வேண்டுமானாலும் தன் குடும்பத்தாருடன் பார்த்து மகிழலாம் என்பதால் இது எல்லோரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

எனவே பிரபலங்கள் பலரும் ஓடிடி தளங்களை தொடங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஏற்கெனவே அமேசான், ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ், சோனி லைவ், ஜீ5 மற்றும் ஆஹா என பல்வேறு ஓடிடி தளங்கள் பிரபலமாக உள்ளன.

இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கான் புதிய ஓடிடி தளம் ஒன்றை தொடங்குகிறார்.

SRK+ என்ற பெயரில் இதனை ஷாருக்கான் தொடங்குகிறார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தன் படங்களை தியேட்டர்களில் வெளியிட்டு பிரபலமான ஒரு நடிகர் ஓடிடி தளத்தை தொடங்குவதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Shah Rukh Khan announced new OTT platform

More Articles
Follows