தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தன் ரசிகரின் மனைவிக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து வளைகாப்பு நடத்தியுள்ளார் ரஜினிகாந்த். அந்த சுவாரஸ்ய தகவல் இதோ…
சென்னையை சேர்ந்தவர் ராகவா விக்னேஷ். இவரது மனைவி ஜெகதீஸ்வரி. இவர்களின் குடும்பமே ரஜினி ரசிகர்கள் தானாம்.
இந்த தம்பதிக்கு கடந்த பிப்ரவரியில் திருமணம் நடைபெற்றுள்ளது.
அதன்பின்னர் கர்ப்பமான அவரது மனைவியிடம் ஏதாவது ஆசையிருக்கிறதா? என கேட்டுள்ளாராம்.
ரஜினியை சந்திக்க வேண்டும் என மனைவி கூற அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார் ரசிகர். ரஜினி ஆசி வேண்டும் என்பதற்காக தன் மனைவி கர்ப்பமானதை உறவினர்களிடம் கூட தெரிவிக்கவில்லையாம்.
பல கட்டங்களை தாண்டி இவரின் ஆசை ரஜினிக்கு தெரிய வந்துள்ளது.
அதற்குள் ஜெகதீஸ்வரிக்கு 9வது மாதம் ஆகிவிட்டதாம். இதனையறிந்த ரஜினி, அந்த ரசிகரை திட்டிவிட்டு உடனே வாங்க என அழைத்திருக்கிறார்.
அதன்பின்னர் அவர்களை ஆசிர்வதித்து அவர்கள் கொண்டு சென்ற வளையல்களை அணிவித்துள்ளார் ரஜினி.
தற்போது இந்த போட்டோக்களை ரசிகர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.