இப்போ இல்லனா எப்பவுமே இல்ல..; விவசாயிகள் துயர் துடைக்க வா தலைவா.. – ரஜினி வீட்டு முன்பு திரண்ட ரசிகர்கள்

இப்போ இல்லனா எப்பவுமே இல்ல..; விவசாயிகள் துயர் துடைக்க வா தலைவா.. – ரஜினி வீட்டு முன்பு திரண்ட ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini fans in poes gardenகொரோனா தொற்று அச்சம், அவரின் உடல்நிலை பாதிப்பு உள்ளிட்ட சில காரணங்களால் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவாரா? என்ற சந்தேகம் மக்களிடையே வலுத்து வருகிறது.

இதனால் ரஜினி ரசிகர்களே செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

நேற்று ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கையிலும்.. தன் உடல்நிலை பற்றி வெளியான (போலி) அறிக்கையில் கூட உண்மை இருந்ததாக தெரிவித்தார்.

இதனால் பல ஊடகங்களில் இதுவே விவாதப் பொருளாக மாறியது.

இந்த நிலையில் இன்று காலை ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டு முன்பு அவரது ரசிகர்கள் திரண்டனர்.

அப்போது அவர்கள் ஊடகங்களிடம் தங்கள் தலைவருக்கு கோரிக்கை வைத்தனர்.

“தமிழகத்தை ஆள வா…. ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம்… இப்போ இல்லனா எப்பவுமே இல்ல.. விவசாயிகள் துயர் துடைக்க வா தலைவா… ஓட்டுன்னு போட்டா ரஜினிக்கு தான்… உள்ளிட்ட பல கோரிக்கைகள் வைத்தனர்.

மேலும் இது போன்ற வாசக போஸ்டர்களை சென்னை நகரில் பல முக்கிய பகுதிகளில் ஒட்டியுள்ளனர்.

Rajinikanth fans gathered at Poes Garden

‘என்ஜிகே’ படைத்த சாதனையை முறியடித்த ‘சூரரைப் போற்று’.

‘என்ஜிகே’ படைத்த சாதனையை முறியடித்த ‘சூரரைப் போற்று’.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriyaசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘சூரரைப் போற்று’.

ஜிவி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் நவம்பர் 12ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இதன் டிரைலர் வெளியாகி சாதனை படைத்து வருகிறது-

தற்போது 1 கோடியே 50 லட்சம் பார்வைகளைக் நெருங்கி கொண்டுள்ளது.

இதற்கு முன் சூர்யாவின் ‘என்ஜிகே’ படம்தான் அதிகப் பார்வைகளைப் பெற்ற டிரைலர் என்ற சாதனையை படைத்திருந்தது.

அந்த டிரைலருக்கு 1 கோடியே 29 லட்சம் பார்வைகள் கிடைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Soorarai Pottru beats NGK’s records

மணிரத்னத்தின் ‘நவரசா’.. அரவிந்த்சாமி, கவுதம் மேனன் உள்ளிட்ட 9 இயக்குனர்கள் கூட்டணி

மணிரத்னத்தின் ‘நவரசா’.. அரவிந்த்சாமி, கவுதம் மேனன் உள்ளிட்ட 9 இயக்குனர்கள் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம், ஜெயேந்திரா தயாரித்துள்ள 9 குறும்படங்களை ‘நவரசா’ என்ற தலைப்பில் வெளியிட உள்ளது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம்.

இந்த 9 குறும்படங்களை அரவிந்த்சாமி, பிஜாய் நம்பியார், கவுதம் மேனன், கார்த்திக் சுப்பராஜ், கார்த்திக் நரேன், கே.வி.ஆனந்த், பொன்ராம், ரவீந்திரன் பிரசாத், ஹலிதா ஷமீம் ஆகியோர் இயக்கியுள்ளனர்.

இந்த படங்களில் 40 நடிகர்கள், நடிகைகள் நடித்துள்ளனர்.

இந்த குறும்படங்கள் “கோபம், கருணை, தைரியம், வெறுப்பு, பயம், சிரிப்பு, காதல், அமைதி, வியப்பு” ஆகிய உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது.

இக்குறும்படங்களை வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொரோனா சமயத்தில் பாதிக்கப்பட்டுள்ள சினிமா தொழிலாளர்களுக்கு வழங்க ‘நவரசா’ தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

விரைவில் நவரசா ரிலீஸ் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது.

navarasa directors
9 Kollywood directors joins for Mani Ratnam’s Navarasa

பெங்காலி ரீமேக்கில் இணையும் ராம் & தனஞ்செயன்.; ஹீரோஸ் யாரு.?

பெங்காலி ரீமேக்கில் இணையும் ராம் & தனஞ்செயன்.; ஹீரோஸ் யாரு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிபிராஜ் நடித்துள்ள கபடதாரி என்ற படத்தை தயாரித்து வருகிறார் தனஞ்செயன்.

இப்படத்தை அடுத்து பெங்காலி மொழியில் சூப்பர் ஹிட்டான ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கிய ‘வின்சி டா’ என்ற படத்தின் தமிழில் ரீமேக் உரிமையை பெற்று அதை தமிழில் படமாக்கவுள்ளார்.

இப்படத்திற்கான திரைக்கதையை இயக்குனர் ராம் உடன் இணைந்து எழுதியிருக்கிறார் தனஞ்செயன்.

டபுள் ஹீரோ படமான இப்படத்தில் நடிக்கவுள்ள ஹீரோக்கள் யார்? என்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம்.

Director Ram and Producer Dhananjayan joins for Vinci Da Tamil remake

vinci da

விஷால் இயக்கும் ‘துப்பறிவாளன் 2’ படத்தில் ‘பிக்பாஸ்’ தாத்தா

விஷால் இயக்கும் ‘துப்பறிவாளன் 2’ படத்தில் ‘பிக்பாஸ்’ தாத்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suresh chakravarthy in thuparivalan 2‘சக்ரா’ படத்தை முடித்துவிட்டு துப்பறிவாளன் 2 படத்தை தயாரித்து நடித்து வந்தார்.

இப்பட இயக்குனர் மிஷ்கினுக்கும் விஷாலுக்கு ஏற்பட்ட கருத்து மோதலால் மிஷ்கின் இந்த படத்திலிருந்து விலகினார்.

தற்போது விஷாலே படத்தை தயாரித்து இயக்கி நடிக்கவுள்ளார்.

ஏற்கனவே மிஷ்கின் இயக்கத்தில் பாதி சூட்டிங் முடிவடைந்துள்ளது.

தற்போது மீதி படப்பிடிப்பை நவம்பர் 9ல் தொடங்கவுள்ளனர்.

இந்த படத்தில் விஷாலுடன் பிரசன்னா, ரகுமான், கெளதமி உள்ளிட்டவர்கடள நடிக்கின்றனர்.

இந்த நிலையில் பிரபல நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தியும் நடித்துள்ளதார் என தெரிய வந்துள்ளது.

இவர் அழகன் உள்ளிட்ட படங்களிலும், ஓரிரு சீரியல்களிலும் நடித்துள்ளர்.

தற்போது பிக்பாஸ் சீசன் 4-ல் பங்கேற்றுள்ளார். அவரை போட்டியாளர்கள் தாத்தா என அழைத்து வருகின்றனர்.

Bigg Boss Suresh Chakravarthy is part of Vishal in Thupparivaalan2

சிம்பு-கௌதம் இணையும் படத்தை இயக்கும் சூர்யா பட இயக்குனர்

சிம்பு-கௌதம் இணையும் படத்தை இயக்கும் சூர்யா பட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான முப்தி என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்ய முன்வந்தார் ஞானவேல்ராஜா.

சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக இணைந்து இந்த படத்தில் நடித்து வந்தனர்.

முதற்கட்டப் படப்பிடிப்பு கர்நாடகாவிலும் தொடங்கப்பட்டது.

கன்னடத்தில் முப்தி படத்தை இயக்கிய நார்தனே தமிழிலும் இயக்கி வந்தார்.

ஆனால் சிம்புவின் கால்ஷீட் பிரச்சினையால் இயக்குனர் மன உளைச்சலுக்கு ஆளானார்.

எனவே நார்தன் படத்திலிருந்து விலகினார்.

இதன்பின்னர் படம் டிராப் ஆகிவிட்டதாக தகவல்கள் வந்தன.

இந்த நிலையில் தற்போது ஈஸ்வரன் படத்தில் நடித்து வரும் சிம்பு ‘முப்தி’ ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை படத்தை சிலுன்னு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Major changes in Mufti tamil remake

sillunu oru kadhal director

More Articles
Follows