தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழகமே எதிர்பார்த்த தன் அரசியல் அறிவிப்பை அண்மையில் வெளியிட்டார் நடிகர் ரஜினிகாந்த்.
கட்சி கொடி சின்னம் தொடர்பான விவரங்களை டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பேன் எனவும் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து ரஜினியுடைய போயஸ் கார்டன் இல்லம் & தெருவிற்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
12-15 தமிழக போலீசார் தினசரி பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த போலீசாருக்கு ரஜினி இல்லத்திலிருந்து (பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல்) தூக்குவாளி மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மதியம் உணவை தொடர்ந்து மாலை நேரங்களில் டீ & காபி வழங்கப்பட்டு வருகிறது.
சூப்பர் ஸ்டார் வீட்டு உணவு கிடைத்த உற்சாகத்தில் போலீசாரும் உற்சாகமாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Rajinikanth family provides lunch and evening snacks to police security guards