நீண்ட நாட்களுக்கு பிறகு அரசியல் குறித்து ரஜினி வாய்ஸ்

நீண்ட நாட்களுக்கு பிறகு அரசியல் குறித்து ரஜினி வாய்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini voice Rajini speechஇந்தியாவில் ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போது ரஜினியின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி எழும்.

அதிலும் முக்கியமாக தமிழக தேர்தல் வந்தால், தன்னுடைய அரசியல் ஆதரவு நிலை குறித்து தன் ரசிகர்களுக்கு தெரிவிப்பார் ரஜினிகாந்த்.

இடையில் சில காலமாக அரசியல் பற்றி எதுவும் ரஜினி பேசவில்லை.

சில நாட்களுக்கு முன்பு, ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிடும் இசையமைப்பாளர் கங்கை அமரன் அவர்கள் ரஜினியை சந்தித்தார்.

எனவே, ரஜினி அவருக்கு ஆதரவு தெரிவிப்பாரா? என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் தன் ட்விட்டர் பக்கத்தில், வரும் தேர்தலில் யாருக்கும் நான் ஆதரவு அளிக்க போவதில்லை என ரஜினி தெரிவித்துள்ளார்.

இது ஆர்.கே. நகர் தேர்தலுக்கு மட்டும்தானா? அல்லது இனி வரும் எல்லா தேர்தலுக்கும் பொருந்துமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Rajinikanth‏Verified account @superstarrajini 5m 5minutes ago
My support is for no one in the coming elections.

Rajini voice about TN Politics Current election

இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் வழங்கும் விழாவில் ரஜினி

இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் வழங்கும் விழாவில் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajiniஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த நடித்து வரும் 2.0 படத்தை மிகப்பிரம்மாண்டமாக லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையின் வவுனியாவில் 150 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

லைக்கா நிறுவன தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனின் தாயார் ஞானாம்பிகை பெயரில் அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளைதான் இது.

இந்த வீடுகளை ஈழத்தமிழர்க்கு வழங்கும் விழா வருகிற ஏப்ரல் 9ம் தேதி யாழ்ப்பாணத்தில் நடக்கிறது.

இவ்விழாவில் கலந்துக் கொண்டு அந்த மக்களுக்கு வீடுகளை வழங்கவிருக்கிறார் ரஜினி.

ஈழத் தமிழர்களுக்கான இநத் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக ரஜினி தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொள்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Rajini participating in providing free house function at Srilanka

அஜித்தின் 2வது லுக் வெளியானது… ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

அஜித்தின் 2வது லுக் வெளியானது… ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thala Ajithசிவா இயக்கத்தில் விவேகம் படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

அவ்வப்போது, சூட்டிங் தொடர்பாக சில படங்களும் வெளியானது.

இந்நிலையில் இதன் 2வது லுக்கை வெளியிட்டுள்ளார் இயக்குனர் சிவா.

இதனை ரசித்த அஜித் ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

Ajith 2nd look revelad by Vivegam director siva

ரஜினி படத்திற்கு அனிருத் இசை..? மீண்டும் தனுஷுடன் கூட்டணி

ரஜினி படத்திற்கு அனிருத் இசை..? மீண்டும் தனுஷுடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush and anirudh2.0 படத்தை தொடர்ந்து ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்.

விரைவில் தொடங்கவுள்ள இப்படத்தை தன் வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பாக தயாரிக்கிறார் நடிகர் தனுஷ்.

இந்நிலையில் திடீரென அனிருத்தின் ஸடூடியோவுக்கு சென்றார் ரஜினிகாந்த்.

இச்சந்திப்பால் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க வாய்ப்பு உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

இது உறுதியாகும் பட்சத்தில் தனுஷ்-அனிருத் கூட்டணி மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தனுஷின் “இசை கடல்” யார் தெரியுமா…?

தனுஷின் “இசை கடல்” யார் தெரியுமா…?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor dhanushதனுஷ் முதன் முறையாக இயக்குனராக களமிறங்கும் படம் பவர்பாண்டி.
தற்போது ப. பாண்டி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இப்படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் ராஜ்கிரண் ஹீரோவாக நடிக்கிறார்.
இவருடன் நடிகை ரேவதி, பிரசன்னா, சாயா சிங், செண்ட்ராயன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.
இன்று இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
விழாவில் பேசிய இயக்குனர் தனுஷ் பேசியதாவது…

“உலகத்தில் நம் வாழ்க்கையில் அன்பு,நிம்மதி, பாசம், கோபம் என்ற பல விஷயங்கள் நம்மைச் சுற்றி உள்ளன.
இதில் பாஸிட்டிவ் விஷயங்கள் அதாவது நன்மையான விஷயங்களை மட்டுமே எடுத்து கொள்வது தான் இந்த ப. பாண்டி திரைப்படம்.
இயக்குனர் பாலுமகேந்திரா எப்போதும் கூறும் விஷயம், ஒரு படம் தனக்கு தேவையான விஷயங்களை தானே எடுத்துக் கொள்ளும்.
அப்படி எடுத்துக் கொள்ளாத படம் தான் தோல்வியை சந்திக்கின்றன.

அந்தவகையில் ப .பாண்டி தனக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் அதுவாகவே தேடிக் கொண்டது.
இவ்வாறகவே இப்படத்தின் பவர்பாண்டியும் (ராஜ்கிரண்) எங்களுக்கு கிடைத்தார்”.
மேலும் இப்படத்தின் இசையமைப்பாளர் பற்றி தனுஷ் பேசும்போது…

“இப்படத்தின் ஆன்மா ஷான் ரோல்டனின் இசைதான்.
அவரை நான் இசை கடலே என்றுதான் கூப்பிடுவேன்.
எனது எண்ணமும் அவரது எண்ண ஒரே திசையில் பயணித்ததே இப்படத்தின் இசை வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம்”. என்று பேசினார்.

ரஜினி பட சூட்டிங்கில் தாக்குதல்… மன்னிப்பு கேட்டார் ஷங்கர்

ரஜினி பட சூட்டிங்கில் தாக்குதல்… மன்னிப்பு கேட்டார் ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

IMG-20170322-WA0009ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 படத்தை லைகா தயாரிப்பில் இயக்கி வருகிறார் ஷங்கர்.

இதன் சூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது.

பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதால் சூட்டிங்கை படம் பிடித்தார் ஒரு நிருபர்.

அப்போது அவரை படக்குழுவைச் சேர்ந்தவர் தாக்கினார் என்பதையும் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டதையும் பார்த்தோம்.

எனவே, இச்சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து ஷங்கர் மன்னிப்பு கேட்டார்.

அவர் பேசும்போது…

பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் எனக்கு தெரியாமல் நடந்துவிட்டது.

நான் மிகவும் கவனமாக இருப்பேன். இருந்திருந்தும் இது போன்ற ஒரு சம்பவம் நடைபெற்றிருப்பது வருத்தத்திற்கு உரியது.

இனி வரும் காலத்தில், இது போன்று எதுவும் நடைபெறாமல் பார்த்துக் கொள்கிறேன். என்று

பத்திரிக்கையாளர் சங்கத்திற்கு நேரில் வந்து பேட்டியளித்து மன்னிப்பு கேட்டார்.

ஷங்கர் வருத்தம் தெரிவித்ததைத் தொடர்ந்து, நல்லெண்ண அடிப்படையில், புகைப்படக் கலைஞர்கள் சார்பில் அளிக்கப்பட்ட போலீஸ் புகாரும் திரும்பப் பெறப்பட்டது.

More Articles
Follows