‘தர்பார்’ வெற்றியடைய வாழ்த்தி ரஜினியுடன் மோதும் அல்லு அர்ஜூன்

‘தர்பார்’ வெற்றியடைய வாழ்த்தி ரஜினியுடன் மோதும் அல்லு அர்ஜூன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini sir is my inspiration my role model says Allu Arjunநாளை 9ஆம் தேதி ரஜினியின் தர்பார் திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

தெலுங்கு சினிமா வட்டாரத்திலும் இந்த படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதே நாளில்தான் (ஓரிரு நாட்கள் கழித்து) அல்லு அர்ஜூன் நடித்துள்ள Ala Vaikunthapurramuloo படமும் வெளியாகிறது.

இந்த நிலையில் இப்பட ஹீரோ அல்லு அர்ஜூன் தர்பார் படம் குறித்து பேசினார்.

அவர் பேசியதாவது… ரஜினிகாந்த் சார் எனக்கு ரோல் மாடல், ஒரு இன்ஸ்பிரேஷன்.

அவர் நடித்துள்ள தர்பார் ரிலீஸ் ஆகுது. என்னுடைய விருப்பமான இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார்.

தெலுங்கிலும் படம் ரிலீஸ் செய்ய போகிறார்கள்.தெலுங்கு சினிமா சார்பாக உங்களை வரவேற்கிறோம். இந்த சங்கராந்தியில் உங்களது படமும் வெற்றி பெற வேண்டும்” என வாழ்த்தினார் அல்லு அர்ஜூன்.

Rajini sir is my inspiration my role model says Allu Arjun

‘மாஸ்டர்’ படத்தில் மக்கள் செல்வனின் கெட் அப் இதுவா..?

‘மாஸ்டர்’ படத்தில் மக்கள் செல்வனின் கெட் அப் இதுவா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathis new look in Vijays Master movieலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்து நடித்து வரும் படம் ‘மாஸ்டர்’.

எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரிக்க, இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன்

இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்த பட சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் விஜய் சேதுபதி நீண்ட தலை முடியுடன் காட்சியளிக்கும் ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஒருவேளை இதுதான் மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதி கெட் அப் இதுதானோ என தகவல்கள் பறந்தன.

ஆனால் இது மாஸ்டர் படத்துக்காக அல்ல என்பது மட்டும் தெரிய வந்துள்ளது.

மாஸ்டர் படத்தில் சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், ஸ்ரீமன், விஜே ரம்யா, 96 கௌரி கிஷன், விஜய் டிவி புகழ் தீனா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

Vijay Sethupathis new look in Vijays Master movie

தனுஷ் படத்திற்கு ‘சுருளி’ என டைட்டில் வைத்த கார்த்திக் சுப்பராஜ்

தனுஷ் படத்திற்கு ‘சுருளி’ என டைட்டில் வைத்த கார்த்திக் சுப்பராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush next with Petta Karthik Subburaj is titled Suruliதுரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் பட டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, விவேக் – மெர்வின் இசையமைக்கின்றனர்.
இந்த படம் பொங்கல் சமயத்தில் ஜனவரி 16ல் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து மாரி செல்வராஜின் இயக்கத்தில் ‘கர்ணன்’ படத்தில் நடித்துள்ளார்.

இதற்கு முன்பாகவே டி40 என்று தற்காலிக பெயரால் அழைக்கப்பட்ட கார்த்திக் சுப்புராஜின் படத்திலும் நடித்துள்ளார்.

ஒய் நாட் ஸ்டுடியோ மற்றும் ரிலையன்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தின் தலைப்பு என்ன? என்பது கேள்வியாகவே உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு ‘சுருளி’ என தலைப்பிடப்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் அதன் தயாரிப்பு நிறுவன பட்டியலில் வெளியிட்டுள்ளது.

Dhanush next with Petta Karthik Subburaj is titled Suruli

சினிமா இல்லன்னா விருது வருமா.? நயன்தாராவை கண்டிக்கும் ரசிகர்கள்

சினிமா இல்லன்னா விருது வருமா.? நயன்தாராவை கண்டிக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Fans slams Nayanthara for participating in Cinema award eventsதமிழ் சினிமாவில் மட்டுமல்ல தென்னிந்தியாவிலேயே முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நயன்தாரா.

ஒரு படத்திற்கு மட்டும் கிட்டதட்ட 4 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருகிறாராம் இவர்.

இவர் நடிக்கும் படம் தொடர்பான எந்த ஒரு நிகழ்விலும் இவர் கலந்துக் கொள்வதில்லை. இதை என்னவோ எல்ஐசி பாலிசி போல கடைப்பிடித்து வருகிறார்.

ஆனால் நகை கடை திறப்பு விழா, தன் காதலனுடன் ஊர் சுற்றுதல் என ஜாலியாக இருக்கிறார்.

இவரை நம்பியே எடுக்கப்பட்டு வெளியான மாயா பட நிகழ்ச்சியிலும் கலந்துக் கொள்ளவில்லை.

அன்றைய தினம் இவர் சேலத்தில் ஒரு நகை கடை திறப்பு விழாவுக்கு சென்றிருந்தார் என்பது தனிக்கதை.

அண்மையில் நடைபெற்ற சைரா, பிகில், தர்பார் உள்ளிட்ட இவரின் படங்களின் எந்த விழாவிலும் இவர் கலந்துக் கொள்ளவில்லை.

கோடிகளில் சம்பளம் வாங்குபவர் இவரின் பட புரோமோசன் நிகழ்ச்சிகளில் எப்படி கலந்து கொள்ளாமல் இருக்கலாம் என்று இவரது ரசிகர்களை கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற தனியார் டிவி 2020 விருது நிகழ்ச்சயில் கலந்துக் கொண்டார்.

சினிமாவில் நடித்தால்தானே விருது கிடைக்கும். அந்த பட விழாக்களில் கலந்துக் கொள்ளாத நயன்தாரா விருது நிகழ்ச்சியில் மட்டும் ஏன் கலந்துக் கொள்கிறார்? என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Fans slams Nayanthara for participating in Cinema award events

BREAKING ‘தர்பார்’ படத்திற்கு மலேசியாவில் தடை; கோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING ‘தர்பார்’ படத்திற்கு மலேசியாவில் தடை; கோர்ட் அதிரடி உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinis Darbar banned to release in Malaysiaமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது லைகா.

இதற்கு முன்பே ஷங்கர் இயக்கிய ரஜினியின் 2.0 படத்தையும் லைகா தயாரித்து இருந்தது.

அப்போது 2.0 பட தயாரிப்பு பணிக்காக லைக்கா நிறுவனத்திற்கு, 12 கோடி ரூபாயை கடனாக வழங்கியதாகவும், அந்த தொகை தற்போது வட்டியுடன் சேர்த்து 23 கோடியே 70 லட்சம் ரூபாயை வழங்க வேண்டி இருப்பதால், அந்த தொகையை வழங்காமல் தர்பார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மலேசியாவை சேர்ந்த டிஎம்ஒய் கிரியேசன்ஸ் நிறுவனம் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு சில தினங்களுக்கு முன் நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, லைக்கா நிறுவனம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யபட்டது.

அதில், மலேசியா நிறுவனத்துக்கு லைக்கா நிறுவனம் எந்த கடன் பாக்கியும் வைக்கவில்லை எனவும், மனுதாரர் தான் தங்கள் நிறுவனத்திற்கு 1 கோடியே 45 லட்சம் ரூபாய் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், தங்கள் நிறுவனம் பெற்ற கடனுக்கு காலா படத்தின் சிங்கப்பூர் வெளியிட்டு உரிமையை மலேஷிய நிறுவனத்திற்கு அளித்ததாகவும் அதில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.

மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்களுக்கு தரவேண்டிய தொகைக்கு பதிலாக காலா படத்தின் சிங்கப்பூர் உரிமையை அளித்ததற்கான எந்த ஒப்பந்தம் இல்லை என தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி, லைகா நிறுவனம் தற்போது 4 கோடியே 90 ஆயிரம் ரூபாய்க்கான வங்கி உத்தரவாதம் அல்லது வங்கியில் டெபாசிட் செய்யும் வரை தர்பார் திரைப்படத்தை மலேசியாவில் மட்டும் ரிலீஸ் செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும், 4 கோடியே 90 ஆயிரம் ரூபாய் பணத்தை டெபாசிட் செய்யும் பட்சத்தில் தர்பார் திரைப்படத்தை மலேஷியாவில் படத்தை வெளியிடலாம் எனவும் நீதிபதி தன் உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Rajinis Darbar banned to release in Malaysia

வசீகர குரல் மன்னன்’ சித் ஸ்ரீராமின் ‘All Love No Hate’ – தென்னிந்திய இசைப் பயணம் 2020

வசீகர குரல் மன்னன்’ சித் ஸ்ரீராமின் ‘All Love No Hate’ – தென்னிந்திய இசைப் பயணம் 2020

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sid sriram2013ல் வெளியான ‘கடல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அடியே’ பாடலின் மூலம் பின்னணி பாடகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான சித் ஸ்ரீராம், தனது தனித்துவமான குரல்வளம் மற்றும் நேர்த்தியான பாடல் பங்களிப்பின் மூலம் வெகுவான ரசிகர்களை வென்றிருக்கிறார். அவர் முதன்முறையாக தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நேரடி இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார். மண்ணின் மைந்தரான அவர், பிரம்மாண்டமான இந்த இசை நிகழ்ச்சியை வருகின்ற பிப்ரவரி மாதம் 08ம் தேதி சென்னையில் இருந்து துவங்குகிறார்.

‘Noise and Grains’, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு நேரடி நிகழ்ச்சிகள், உண்மை நிகழ்ச்சிகள், மற்றும் டிஜிட்டல் ஊடக நிகழ்ச்சிகளுக்கு உருவாக்குதல், தயாரித்து வழங்குவதில் ஈடுபட்டு வரும் ஒரு தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனம் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் ஏ ஆர் ரஹ்மானின்
‘நெஞ்சே எழு’, இளையராஜாவின் ‘இளையராஜா 75’, அனிருத்தின் ‘சிங்கப்பூர் லைவ்’, எஸ் பி பாலசுப்பிரமணியம் – யேசுதாசின் இசை நிகழ்ச்சிகள் மற்றும் ‘மடை திறந்து’ இசை நிகழ்ச்சிகளை நடத்தியது பெருமைக்குரியது.

இந்நிறுவனம் தங்களது அடுத்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியாக, சித் ஸ்ரீராமின் ‘All Love No Hate’ – தென்னிந்திய இசைச் சுற்றுப்பயணத்தை நடத்தவிருக்கிறது. பிப்ரவரி 08ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக துவங்கும் இந்நிகழ்ச்சி, அதனை தொடர்ந்து பிப்ரவரி 23ம் தேதி கொச்சினிலும், மார்ச் 07ம் தேதி மதுரையிலும் மற்றும் மார்ச் 13ம் தேதி பெங்களூரிலும் நடைபெறவிருக்கிறது.

இந்த இசை நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தும் நோக்கத்தின் ஒரு பகுதியாக, சித் ஸ்ரீராம் ஜனவரி 5 ஆம் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் முதல் நிகழ்ச்சியாக மாலை சுமார் 03.00 மணியளவில் சென்ட்ரல் மெட்ரோவிலும், அதனைத் தொடர்ந்து 05.00 மணியளவில் பாண்டி பஜாரிலும், அடுத்ததாக சுமார் 07.00 மணியளவில் வடபழனி போரம் விஜயா மாலிலும் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடினார்.

மூன்று இடங்களிலும் ரசிகர்களிடமிருந்தும், பொதுமக்களிடமிருந்தும் தனித்துவமானதொரு வரவேற்பு அவருக்கு கிடைத்தது. அவரது இசை நிகழ்ச்சியை கண்டும், அவரோடு இணைந்து பாடியும், ரசிகர்களும் மக்களும் அவரை மகிழ்வித்து உற்சாகப்படுத்தினர்.

இந்த தென்னிந்திய இசைப் பயணத்தின் முதல் நிகழ்ச்சியாக வருகின்ற பிப்ரவரி 08ம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிக்கான அனுமதி சீட்டுகள் விற்பனை துவங்கி இருக்கிறது.

அனுமதி சீட்டுகளுக்கு www.grabmyticket.com என்ற இணைய தளத்தை அணுகுங்கள்.

More Articles
Follows