இன்னும் கட்சி ஆரம்பிக்கல; அதான் வரல.. கமலிடம் கூறிய ரஜினி

Rajini not participated in TN Cauvery Farmers meeting conducted by Kamalமக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், “காவிரி : நிரந்தர தீர்வுக்கான தமிழக விவசாயிகளின் குரல்” என்ற பெயரில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இதில் கட்சி பாகுபாடு இன்றி தமிழர்களாய் ஒன்றிணைவோம் என அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுத்திந்தார் கமல்ஹாசன்.

இன்றைய கூட்டத்தில் தமிழகத்தின் முக்கிய கட்சிகளான திமுக., அதிமுக., உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்கவில்லை.

ஆனால் பா.ம.க., சார்பில் அன்புமணி, தினகரன் கட்சி சார்பில் தங்கதமிழ்ச்செல்வன், டி.ராஜேந்தர், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் விவசாய சங்கத்தின் பல்வேறு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ரஜினியை கலந்துக் கொள்ள அழைப்பு விடுத்திருந்தார் கமல்.

ஆனால் ரஜினி வரவில்லை. இதுகுறித்து கமலிடம் செய்தியாளர்கள் கேட்தற்கு “இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை நான் எப்படி வருவது என்று ரஜினி தன்னிடம் கூறியதாக தெரிவித்தார்.

மேலும் இனி வரும் கூட்டங்களில் ரஜினி பங்கேற்க வேண்டும் என்பதே என் எண்ணம்” எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கமல், இது ஒரு நாளில் முடியும் கூட்டமில்லை. தூங்கிக்கொண்டிருக்கும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை தட்டி எழுப்பும் கூட்டமாக இருக்கும்.

நாங்கள் எங்களை தமிழர்களாக, விவசாயிகளின் நண்பர்களாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இது போன்ற கூட்டங்களை தொடர்ந்து நடத்திக் கொண்டேயிருப்போம் என கமல்ஹாசன் தெரிவித்தார்.

Rajini not participated in TN Cauvery Farmers meeting conducted by Kamal

Overall Rating : Not available

Latest Post