தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் ஒய் ஜி மகேந்திராவின் பிரபல நாடகமான சாருகேசி திரைப்படமாக உருவாக்கப்படவுள்ளது.
இந்த விழாவில் ஒய் ஜி மகேந்திரா பேசுகையில்…
“ஒரே ஒரு மக்கள் திலகம், ஒரே ஒரே நடிகர் திலகம், ஒரே ஒரு மெல்லிசை மன்னர், ஒரே ஒரே கவிஞர் கண்ணதாசன், ஒரே ஒரு ரஜினிகாந்த் தான் சூப்பர் ஸ்டாராக இருக்கு முடியும்,” என்று கூறினார்.
சாருகேசி நாடகத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை வெங்கட் எழுதியுள்ளார். சாருகேசிக்கான பொறி காலம் சென்ற கிரேசி மோகனிடமிருந்து வந்ததாகும். இந்த நாடகத்தை ஒய் ஜி மகேந்திரா இயக்கியுள்ளார்.
அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு இசை கலைஞனின் வாழ்க்கையை சுற்றி கதை நடக்கிறது.
இந்த நாடகத்தை திரைப்படமாக எஸ் ஏ ஆர் பி பிக்சர் ப்ரொடக்ஷன்ஸ் (ஸ்ரீ அக்ரஹாரம் ராஜலக்ஷ்மி ப்ரொடக்ஷன்) தயாரிக்கவுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்த் எஸ் சாய் இந்த படத்திற்கு திரைக்கதை அமைக்க உள்ளதோடு கிரியேட்டிவ் இயக்குநராகவும் பங்காற்ற உள்ளார்.
ஒய் ஜி மகேந்திரா முதன்மை வேடத்தில் நடித்து இயக்குகிறார். இதர நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
Rajinikanth is the one and only Superstar says Y Gee Mahendra