அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ரஜினி – கமல் வாழ்த்து

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ரஜினி – கமல் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக அமைச்சராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகனும் சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

இன்று காலை 9.30 மணியளவில் கிண்டி கவர்னர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார்.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்று கொண்டதற்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டர் பதிவில்,

“தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் பதிவில்,

“வாழ்த்துகிறேன் தம்பி உதயநிதி ஸ்டாலின். அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

rajini kamal wishes for minister udhayanidhi

அரசியலுக்கு வருவேன்..; லெஜெண்ட் சரவணனின் அடுத்த அதிரடி

அரசியலுக்கு வருவேன்..; லெஜெண்ட் சரவணனின் அடுத்த அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்னணி தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் சமீபத்தில் வெளியான ‘லெஜெண்ட்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானது அனைவரும் அறிந்ததே.

பிரைடல் ஸ்டுடியோ நூரின் திறப்பு விழா கோவையில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரைடல் ஸ்டூடியோவை திறந்து வைத்த லெஜெண்ட் சரவணன் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அதற்குண்டான ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கி விட்டதாகவும் கூறினார்.

லெஜெண்ட் சரவணன்

இந்த நிகழ்வில் லெஜெண்ட் சரவணன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது…

சினிமாவில் வந்த பிறகு, கதாநாயகர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை அரசியல் தான், உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்றும், அரசியலுக்கு வர விருப்பம் உள்ளதா? என்றும் கேட்டனர்.

இக்கேள்விக்கு பதில் அளித்த அவர், “மக்களும், மகேசனும் நினைத்தால் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய லெஜெண்ட் சரவணன், “சென்னையை போலவே கோயம்புத்தூரும் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. அதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

கடுமையாக உழைப்பவர்களை எனக்கு எப்போதும் பிடிக்கும். அப்பேற்பட்ட ஒருத்தர் தான் பிரைடல் ஸ்டுடியோ நூரின் நிறுவனர் நூர் முகமது. அவர் மிகவும் அன்பான மனிதர். அவரது அன்பிற்கு கட்டுப்பட்டு தான் இங்கு வந்தேன்,” என்று கூறினார்.

நடிகர் நடிகைகளை மிகவும் அழகாக திரையில் காட்டுவதில் ஒப்பனை கலைஞர்களுக்கு மிகப்பெரிய பங்குண்டு என்றும், நூர் முகமது மிகவும் திறமையான கலைஞர் என்றும் லெஜெண்ட் சரவணன் கூறினார்.

தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

லெஜெண்ட் சரவணன்

Legend Saravanans Political Entry updates

விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ படக்குழுவினர் மூன்று பேர் கைது…!

விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ படக்குழுவினர் மூன்று பேர் கைது…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் ’பிச்சைக்காரன்’ என்ற திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகியது.

இப்படம் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிசில் வசூல் குவித்தது.

இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டு மற்றும் பார் கவுன்சில் வளாகத்தை ட்ரோன் மூலம் படம் பிடித்ததாக கூறி படக்குழுவினர் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

படக்குழுவை சேர்ந்த நவீன் குமார், சுபேஸ், சுரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். தற்போது மூவரையும் ஜாமினில் விடுவித்துள்ளனர்.

Police arrested pichaikkaran 2 movie members

EXCLUSIVE கதாநாயகனாக களமிறங்கும் காமெடி நடிகரும் இயக்குனருமான சரவணசக்தி

EXCLUSIVE கதாநாயகனாக களமிறங்கும் காமெடி நடிகரும் இயக்குனருமான சரவணசக்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பல படங்களில் காமெடி நடிகராக நடித்து பெயர் பெற்றவர் இயக்குனர் சரவணசக்தி.

இவர் தற்போது மீண்டும் இயக்குனராக தன் முழு கவனத்தை செலுத்தி வருகிறார்.

சரவணா சக்தி இயக்கியுள்ள ‘குலசாமி’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படம் ஒரு சீரியஸ் கதை எனவும் இதில் விமல் நாயகனாக நடித்துள்ளார் எனவும் நம்மிடம் தெரிவித்தார்.

மேலும் மற்றொரு படத்தில் தானே கதையின் நாயகனாக நடித்து படத்தை இயக்கி இருக்கிறார் சரவணன் சக்தி.

இந்த படத்திற்கு கிளாஸ்மேட் (GLASSMATE) என்று பெயரிட்டுள்ளார்.

இந்த படப்பிடிப்பு 90% முடிவடைந்த நிலையில் தற்போது சில காட்சிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மயில்சாமி நடிக்கும் காட்சிகளை படமாக்கியவுடன் இந்த படப்பிடிப்பு நிறைவுபெறும் என சரவணா சக்தி நம்மிடம் FILMISTREET தெரிவித்தார்.

Director Saravana shakti is playing hero role

துணிவு அப்டேட்டால் ஃபயர் விடும் அஜீத் ரசிகர்கள்

துணிவு அப்டேட்டால் ஃபயர் விடும் அஜீத் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜிப்ரான் இசையமைத்து அனிருத் பாடிய ‘துனிவு’ படத்தின் முதல் சிங்கிளான ‘சில்லா சில்லா’ ரசிகர்கள் மற்றும் நடுநிலை இசை ஆர்வலர்களிடம் இருந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

லிரிக் வீடியோ வெளியான மூன்றே நாட்களில் 16 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

இதற்கிடையில், இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது சமூக ஊடகத்தில் படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘காசேதான் கடவுளடா’ விரைவில் ரிலீஸ் என்று அறிவித்துள்ளார்.

இது ஹிப் ஹாப் ஆதி பாடிய தத்துவ பாடலாக இருப்பதால், அஜித்தின் தனித்துவமான பாணியை வெளிப்படுத்தும் பல மாஸ் தருணங்களை எதிர்பார்க்கலாம் என தெரிகிறது

இயக்குனராக களம் இறங்கும் நடிகர் சிவகார்த்திகேயன் . முழு தகவல்கள் இங்கே

இயக்குனராக களம் இறங்கும் நடிகர் சிவகார்த்திகேயன் . முழு தகவல்கள் இங்கே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனராக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. .

தமிழ்நாட்டின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்ததும் தனது வாழ்க்கை வரலாறு எடுக்கப்படும் என்று மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் தனது கேரக்டரில் நடிப்பது மட்டுமின்றி இயக்குவார் என்றும் அவர் உறுதி செய்துள்ளார்.

நடராஜன் ஐபிஎல் 2023 இல் சிறப்பாக செயல்படுவார் என்றும் தேசிய இந்திய அணியில் மீண்டும் தனது இடத்தைப் பெறுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

More Articles
Follows