தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என 2017 டிசம்பர் 31ல் அறிவித்தார்.
ஆனால் அந்த அறிவிப்பு வந்து 3 ஆண்டுகளாகியும் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கவில்லை.
தற்போது கொரோனா ஊரடங்கு & தன் உடல்நிலை பிரச்சினை உள்ளிட்ட சில பிரச்சினைகளால் கட்சி அறிவிப்பில் தாமதம் செய்து வருகிறார் ரஜினிகாந்த்.
இதனால் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் அவரின் ரசிகர்களும் குழப்பத்தில் உள்ளனர்.
இதனையொட்டி ரஜினி விரைவில் அரசியலுக்கு வரவேண்டுமென ரசிகர்கள் தமிழகமெங்கும் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.
அந்த போஸ்டர்களில்…
அரசியல் மாற்றம்.. ஆட்சி மாற்றம்… இப்போ இல்லன்னா எப்பவுமே இல்ல… ஓட்டுன்னு போட்டா ரஜினிக்குத்தான்.. சிங்க பாதையா? பூ பாதையா.? முடிவெடு தலைவா… என்ற வாசகங்கள் கொண்ட போஸ்டரை ஒட்டியுள்ளனர்.
வேலூர் மாவட்ட பகுதிகளில்.. ”மக்களின் ரத்தத்தை குடிக்கும் ஓநாய் கூட்டத்தையும் கழுகு கூட்டத்தையும் வேட்டையாட சிங்கப்பாதையில்தான் செல்ல வேண்டும்”… ”மக்களாட்சி இனிதே ஆரம்பம்” என்றெல்லாம் ரஜினி படங்களுடன் போஸ்டர்கள் ஒட்டி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
என்ன செய்ய போகிறார் தலைவர்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Rajini fans put up posters all over Tamil Nadu