தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ரூ 400 கோடியில் உருவாகியுள்ள படம் 2.0.
லைகா தயாரித்துள்ள இப்படத்தை இந்தியாவே எதிர்பார்த்து காத்திருக்கிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை இப்படத்தின் டீசர் லீக்காகி இணையத்தில் வெளியானது.
இதனால் ஒட்டு மொத்த திரையுலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இதுகுறித்து ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான சவுந்தர்யா ரஜினி தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது…
’2.0 பட டீசர் அதிகாரப்பூர்வ ரிலீஸுக்கு முன்பாகவே திருட்டுத்தனமாக இணையத்தில் பதிவேற்றப்பட்டது சகித்துக் கொள்ள முடியாதது.
ஒரு சில நொடி உற்சாகத்துக்காக, படைப்பாளிகளின் கடின உழைப்பையும், உணர்வுகளையும் சீரழிக்கும் இதயமற்றச் செயலாகும். டிஜிட்டல் மீடியாவை தவறாக பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள்’ என கோபமாக தெரிவித்துள்ளார்.
சௌந்தர்யா ரஜினிகாந்த் பல படங்களில் கிராஃபிக்ஸ் டிசைனராக பணிபுரிந்துள்ளார்.
மேலும் ரஜினி நடித்த கோச்சடையான், தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Rajini daughter Soundarya Condemns Piracy of 2point0 Teaser
Leaking content online before the official release should not be TOLERATED or ENCOURAGED ! This is a heartless act ignoring hard work, efforts and sentiments of the makers for few seconds of excitement !!! #BeAshamed #StopPiracy #StopMisusingDigitalMedium
— soundarya rajnikanth (@soundaryaarajni) March 4, 2018