தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
60 வருடங்களாக சினிமாவில் சாதித்த கமல் தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். விரைவில் ரஜினியும் களத்தில் குதிக்க உள்ளார்.
வருகிற நாடாளுமன்ற இடைத்தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட உள்ளது.
ரஜினி களத்தில் இல்லாத காரணத்தினால் அவரின் ஆதரவை கமல் கேட்டு வருகிறார்.
ஆனால் விரைவில் தானும் அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளதால் யாருக்கும் தன் ஆதரவில்லை என கூறிவருகிறார் ரஜினி.
இதனால் கமல் விஷயத்தில் ரஜினி மௌனம் காத்து வருகிறார்.
இந்நிலையில் இன்று ரஜினியின் தர்பார் பட பர்ஸ்ட் லுக் வெளியானது.
அப்பட ஷூட்டிங் நாளை தொடங்க உள்ள நிலையில், இன்று தனது போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ரஜினிகாந்த்.
அப்போது கமல்ஹாஸன் தொடர்ந்து ரஜினி ஆதரவு வேண்டும் என்று கேட்டு வருவது குறித்து கேள்வியை நிருபர்கள் எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், “எனது ஆதரவு யாருக்கும் இல்லை என நான் ஆரம்பத்திலேயே கூறிவிட்டேன், அதில் எந்த மாற்றமும் இல்லை. இதுகுறித்து திரும்ப திரும்பப் பேசி எங்கள் நட்பைக் கெடுத்து விடாதீர்கள்,” என்றார்.
Rajini clarifies about Kamals friendship and his support to MNM Party