‘படம் பார்த்து சம்பாதிக்கலாம்…’ ஆர்.கே. அறிமுகப்படுத்தும் அதிரடி திட்டம்

‘படம் பார்த்து சம்பாதிக்கலாம்…’ ஆர்.கே. அறிமுகப்படுத்தும் அதிரடி திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RK Nassarமக்கள் பாசறை தயாரித்து வழங்கும் ஆர் கே நடிக்கும் வைகை எக்ஸ்பிரஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா 1000 விநியோகஸ்தர்கள் முன்னிலையில் சிறப்பாக நடந்தது.

இன்றைய நிலையில் படம் தயாரிப்பது கூட எளிதாகிவிட்டது. ஆனால், விநியோகம் செய்வது மிகவும் கடினம், ஏனென்றால் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே விநியோகஸ்தர்கள் இருப்பதும்,

அதிலும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களும் இருப்பதும் கண்கூடு. அப்படி இருக்க வைகை எக்ஸ்பிரஸ் விழாவில் ஆயிரம் விநியோகஸ்தர்களா..?

அவர்களைப் பற்றி விழாவில் பேசிய ஆர்.கே.,” உலகில் மார்கெட்டிங் சிறப்பாக இருந்தால் எதைவேண்டுமானாலும் சந்தைப்படுத்தி விடலாம். கற்றுக்கொடுப்பது தான் வாழ்க்கை. டேய் நான் உன் தகப்பன்டா என்று தந்தை கற்றுக் கொடுக்கிறார்.

டேய் நான் உன் அம்மாடா சேலையைப் பிடிச்சு இழுக்கிற படவா என்று அம்மா கற்றுக்கொடுக்கிறாள். நான் திரைப்படத்தை எப்படி வியாபாரம் செய்யவேண்டும் என்று கற்றுக் கொடுத்தேன்.

மக்கள் மதத்தைப் பற்றி பேசுவார்கள், அரசியலைப்பற்றிப் பேசுவார்கள், சினிமாவைப் பற்றி வெறுமனே பேசாமல்.நேசிக்கவும் செய்கிறார்கள்.

பலகோடி வர்த்தகம் நடக்கும் இடம். பல லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் இடம். ஆனால், நசிந்து கிடக்கிறது.

300 ரூபாய்க்கு விற்கும் டிக்கெட்டை எடுத்துப் படம் பார்த்துட்டு, குடும்பத்தைக் கூட்டிட்டுப் போக முடியலயே என்கிற ஆதங்கத்தில்., இல்லை படம் மொக்கை என்று நண்பன் சொல்லிட்டான் என்று பொய் சொல்கிறான். 600 பேர் அமரும் தியேட்டரில் 100 டிக்கெட் கூட விற்கமாட்டேங்குது.

நான் 300 ரூ டிக்கெட்டை 100 ரூபாய்க்கு கொடுக்கிறேன். அத்துடன் 3 பேர் டிக்கெட்டு எடுத்தா 2 பேரைக் இலவசமா கூட்டிட்டு வா என்கிறேன். குடும்பம் குட்டியோட மக்கள். சந்தோஷமா படம் பார்க்கட்டுமே.

அப்படி உருவானதுதான் ஹிட் பாக்ஸ். இது பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டுக்கான உத்திரவாதமான முதல் படி. ஆயிரம் விநியோகஸ்தர்களை உருவாக்கினேன்.ஐயா திருட்டு விசிடி விக்கிறாய்ங்கன்னு சொன்னார்கள்.

இது இனிமேல் உங்கள் சினிமா உங்கள் வியாபாரம் என்று ஊக்கப்படுத்தினேன்.. களமிறங்கி ஜெயித்திருக்கிறார்கள்.

ஆன் லைன்ல புக் பண்ணா எவனோ ஒருத்தன் ஒரு டிக்கெட்டுக்கு 30 ரூ சம்பாதிக்கிறான்.கேட்டா சர்வீஸ் சார்ஜுங்கிறான். 10 டிக்கெட் புக் பண்ணாலும் 300 ரூபாய் வாங்கிவிடுகிறான். இதை முதலில் ஒழிக்கவேண்டும்.

எங்க ஹிட் பாக்ஸ்ல டிக்கெட் விற்கிறவர்கள் ஒரு டிக்கெட்டுக்கு 5 ரூபாய்தான் வாங்குகிறார்கள். 1 லட்சம் டிக்கெட் விற்றால் 5 லட்சம் ரூபாய் சம்பாதிப்பார்கள்.. என் ஏழைத்தமிழனும் லட்சாதிபதி ஆகட்டுமே.

ஹிட் பாக்ஸ் மூலமா எட்டு கோடி பேரும் தியேட்டர்ல வந்து படம் பார்ப்பார்கள்.

வைகை எக்ஸ்பிரஸ், தொடர்ந்து நான்கு வாரம் அரங்கு நிறைந்த காட்சிகளாய் ஓடும்.

ஹிட் பாக்ஸ் வி நியோகம் உலகிலேயே முதல் முறையாக இந்தியாவில் அதுவும் தமிழ் சினிமாவுக்கு வைகை எக்ஸ்பிரஸ் மூலம் வருகிறது. எதிர் காலத்தில் எங்கள் படங்களையும் ஹிட் பாக்ஸ் மூலம் வி நியோகியுங்கள் என்று எல்லோரும் வருவார்கள்..” என்றார்.

ஷாஜி கைலாஷ் இயக்கியிருக்கும் வைகை எக்ஸ்பிரஸ் படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார், ராஜ ரத்தினம் ஒளிப்பதிவு செய்ய , சண்டைக்காட்சிகளை அமைத்திருக்கிறார் கனல் கண்ணன். வசனத்தை கையாண்டிருக்கிறார் V. பிரபாகர்.

ஆர்கே, நீதுசந்திரா, இனியா, கோமல் சர்மா, சுஜா வாருணி, நாசர், ரமேஷ் கண்ணா, எம் எஸ் பாஸ்கர், மனோபாலா, ஸ்ரீரஞ்சனி, காமெடி டைம் அர்ச்சனா, பவன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர்கள் கேயார், ஏஎம் ரத்னம், ஏஎல் அழகப்பன், கதிரேசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.

அர்ச்சனா (V P மணி மகள் ) தொகுத்து வழங்கினார்.

vaigai express

சூப்பர் ஸ்டார் வேண்டாம். அம்மா போதும்… லாரன்ஸ்

சூப்பர் ஸ்டார் வேண்டாம். அம்மா போதும்… லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and Raghava Lawrenceஇன்று வெளியான மொட்ட சிவா கெட்ட சிவா படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தின் இயக்குனர் சாய்ரமணி சமீப காலமாகவே எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்க போவதாக சொல்லி கொண்டிருந்தார். அது என்ன என்பது எனக்கு தெரியாது.

ஆனால் இந்த மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் என் பெயருக்கு முன்னாள் “ மக்கள் சூப்பர் ஸ்டார் “ என்று பட்டதை வழங்கி இருக்கிறார்.

அதுதான் அந்த இன்ப அதிர்ச்சி. அவர் அன்பிற்கு நன்றி. இருந்தாலும் எனக்கு எந்த ஒரு பட்டமும் வேண்டாம். எப்போதும் இந்த உலகத்தில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் அது என் தலைவர் ரஜினிகாந்த் மட்டும் தான். அவர்தான் என் குரு, எனக்கு வழிகாட்டி எல்லாமே.

எனக்கு இந்த உலகத்திலேயே மிகப்பெரிய பட்டம் என் அம்மாவின் பெயர் தான். அதற்கு நிகராக வேறு எந்த பட்டமும் என்னை திருப்தி படுத்திவிட முடியாது.

அதனால் கண்மணி என்ற என் அம்மாவின் பெயரை எனக்கு பட்டமாக நானே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அதனால் இனி என் பெயருக்கு முன்னாள் பட்டமாக கண்மணி ராகவா லாரன்ஸ் என்று வைத்துக்கொள்கிறேன் என்றார் K. ராகவா லாரன்ஸ்.

அஜித்துடன் மோதலை தவிர்ப்பாரா சிவகார்த்திகேயன்..?

அஜித்துடன் மோதலை தவிர்ப்பாரா சிவகார்த்திகேயன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith and sivakarthikeyanமோகன்ராஜா இயக்கத்தில் உருவாகும் வேலைக்காரன் படத்தில் நயன்தாரா, ஸ்நேகாவுடன் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என பூஜை போட்ட நாள் அன்றே அறிவித்தனர்.

தற்போது அஜித் நடிப்பில் உருவாகிவரும் விவேகம் படமும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என தெரிகிறது.

இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் இரண்டு படங்களும் மோத வாய்ப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.

நிச்சயம் அஜித் படங்களுக்கு நல்ல ஓப்பனிங் இருக்கும் என்பதால் இந்த மோதலை சிவகார்த்திகேயன் தவிர்ப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ரஜினி-மம்மூட்டி பாணியில் இணையும் விஜய்-விக்ரம்..?

ரஜினி-மம்மூட்டி பாணியில் இணையும் விஜய்-விக்ரம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay and vikramவிஜய்யோடு அஜித் நடித்திருக்கிறார். (ராஜாவின் பார்வையிலே.)

அஜித்தோடு விக்ரம் நடித்திருக்கிறார். (உல்லாசம்)

விக்ரமுடன் சூர்யா நடித்திருக்கிறார். (பிதாமகன்)

சூர்யாவோடு விஜய் நடித்திருக்கிறார். (நேருக்கு நேர், ப்ரெண்ட்ஸ்)

ஆனால் விஜய்யும் விக்ரமும் இதுவரை இணைந்து நடிக்கவில்லை.

இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தபோதிலும் அந்த வாய்ப்பு இதுவரை அமையவில்லை.

ஆனால் தற்போது அமைய உள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

கார்த்தி நடிக்கும் காற்று வெளியிடை படத்தை தொடந்து விரைவில் தன் அடுத்த படத்தை தொடங்கவிருக்கிறாராம் மணிரத்னம்.

பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இப்படத்தில் விஜய் மற்றும் விக்ரம் இணைந்து நடிக்கலாம் என கூறப்படுகிறது.

ஒருவேளை இப்படி அமையுமானால் ரஜினி-மம்மூட்டி நடித்து உருவான தளபதி பாணியில் இது மெகா எதிர்பார்ப்பை உருவாக்கும் என்று சொல்லலாம்.

ஓபிஎஸ்க்கு ஆதரவளித்த தனுஷ்-விஜய் ஆண்டனியின் பாடல்கள்

ஓபிஎஸ்க்கு ஆதரவளித்த தனுஷ்-விஜய் ஆண்டனியின் பாடல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush and Vijay antonyஉலக மகளிர் தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

இதே நாளில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் உண்ணாவிரதம் சென்னையில் நடைபெற்றது.

இதில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் கொள்கை பாடல்கள் ஒலிக்கப்பட்டது.

இவற்றுடன் தனுஷ் பாடி நடித்த ‘அம்மா அம்மா நீ என் அம்மா’ (விஐபி) மற்றும் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படத்தில் இடம் பெற்ற ‘நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப்போல் ஆகிடுமா’ என்ற பாடல்களும் ஒலிக்கப்பட்டது.

Dhanush and Vijay antony songs in OPS fasting on Womens day

பெற்றோரை பாட வைத்து பெருமிதம் அடைந்த சிம்பு

பெற்றோரை பாட வைத்து பெருமிதம் அடைந்த சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu T Rajendarசந்தானம் ஹீரோவாக நடிக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ என்ற படத்திற்கு நடிகர் சிம்பு இசையமைத்து வருகிறார்.

இவரது இசையில் அனிருத், யுவன்ஷங்கர் ராஜா ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர்.

இந்நிலையில் மற்றொரு பாடலில் தன் பெற்றோர் டி.ராஜேந்தர்-உஷா ஆகியோரை பாடவைத்துள்ளார்.

தன் பெற்றோரை தன் இசையில் பாட வைத்துள்ளதால் சிம்பு பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.

‘வா முனிம்மா வா’ என்று இப்பாடல் தொடங்குகிறது.

இவர்கள் இல்லாமல் புதிதாக இரண்டு பாடகர்களை அறிமுகப்படுத்தியுள்ளார் சிம்பு.

பிரபல பாடகர் உன்னிகிருஷ்ணனின் மகன் வாசுதேவ் கிருஷ்ணன் மற்றும் கீர்த்தனா ஆகியோருக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளார்.

வைபவி, விவேக், விடிவி கணேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தை சேதுராமன் இயக்கி வருகிறார்.

T Rajendar and his wife Usha sung song in their Son Simbus Music

More Articles
Follows