உசுப்பேத்துறாங்க.. அதான் ஹீரோஸ் சம்பளத்தை ஏத்துறாங்க. : கே. ராஜன்

Producer K Rajan and Jaguar Thangam speech at Blue Whale Audio Launchபுளுவேல் விளையாட்டை மையமாக வைத்து ‘புளுவேல்’ என்ற பெயரில் தயாராகியுள்ள படத்தில் பூர்ணா, மாஸ்டர் கபிஷ் கண்ணா, பிர்லா போஸ், பொன்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ரங்கநாதன் இயக்கியுள்ள இப்படத்தை மது, அருமைச்சந்திரன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இப்பட பாடல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது…

“இயக்குனர் நினைத்தால் சாதாரண மனிதரையும் சூப்பர் ஸ்டாராக்க முடியும், சூப்பர் ஸ்டாரை சாதாரண மனிதராக்க முடியும்.

சிலர் உங்கள் படம் நன்றாக ஓடுகிறது என்று உசுப்பேத்துவதை நம்பி நடிகர்-நடிகைகள் சம்பளத்தை உயர்த்துவது வருத்தம் அளிக்கிறது

புளுவேல் விளையாட்டைப் பற்றியும், அதை விளையாடுபவர்களுக்கு ஏற்படும் ஆபத்தைப் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த இப்படத்தை தயாரித்திருக்கும் தயாரிப்பாளர்களுக்கு பாராட்டுக்கள்” என்றார்.

கில்டு சங்க தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது..

“பிரகாஷ் ராஜ் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு பிறகு நடிக்க நேரமில்லை என பின்வாங்கிட்டார்.
ரூ.15 லட்சம் முன்பணத்தில் ரூ.5 லட்சம் தொகையை மட்டும் கொடுத்துவிட்டு மீதி பணத்தைத் திருப்பிதரவே இல்லை.

அவர் இனிமேல் எந்த சூட்டிங்கில் கலந்துக் கொண்டாலும் மறியல் நடத்துவோம்” என்றார்.

Producer K Rajan and Jaguar Thangam speech at Blue Whale Audio Launch

Overall Rating : Not available

Related News

Latest Post