அன்புசெழியன் உத்தமர்; நான் நியாயத்தின் பக்கம் என சீனுராமசாமி தகவல்

அன்புசெழியன் உத்தமர்; நான் நியாயத்தின் பக்கம் என சீனுராமசாமி தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer Anbu Chezhiyan is good man says director Seenu Ramasamyநடிகர் சசிகுமாரின் உறவினரும் கம்பெனி புரொடக்சனின் தயாரிப்பாளருமான அசோக்குமார் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துக் கொண்டார்.

தன் தற்கொலைக்கு தயாரிப்பாளர் அன்புச்செழியன் கொடுத்த டார்ச்சர் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்திருந்தார்.

இதனால் விஷால், சுசீந்திரன், அமீர் உள்ளிட்ட பல கலைஞர்கள் அன்புசெழியனை கடுமையாக விமர்ச்சித்திருந்தனர்.

இந்நிலையில் எவரும் எதிர்பாரா விதமாக இயக்குனர் சீனுராமசாமி தன் ட்விட்டரில் அன்பு செழியன் பக்கம் நியாயம் உள்ளது. அவர் உத்தமர் என பதிவிட்டுள்ளார்.

Seenu Ramasamy‏Verified account @seenuramasamy
எம்.ஜீ.ஆர், சிவாஜீ, போல் இல்லை இன்றைய நடிகர்கள்.அன்பு செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்பவது வேதனை.நான் நியாயத்தின் பக்கமே…

Producer Anbu Chezhiyan is good man says director Seenu Ramasamy

சிம்பு துணையுடன் சிவகார்த்திகேயனுடன் மோதும் சந்தானம்

சிம்பு துணையுடன் சிவகார்த்திகேயனுடன் மோதும் சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan and Santhanam movies clash on Christmas 2017சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படம் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது.

மோகன்ராஜா இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த விடுமுறைக்கு மற்ற படங்களும் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இதே நாளில் சந்தானம் நடித்துள்ள சக்க போடு போடு ராஜா படமும் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.

நடிகர் சிம்பு இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது.

சேதுராமன் இயக்கியுள்ள இப்படத்தை விடிவி கணேஷ் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan and Santhanam movies clash on Christmas 2017

ட்விட்டர் அரசியல்வாதி எங்கே..? கமலை கலாய்க்கும் தமிழிசை

ட்விட்டர் அரசியல்வாதி எங்கே..? கமலை கலாய்க்கும் தமிழிசை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal tamilisaiநடிகர் சசிகுமாரின் உறவினரும் கம்பெனி புரொடக்சனின் தயாரிப்பாளருமான அசோக்குமார் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துக் கொண்டார்.

இதற்கு திரையுலகின் பல்வேறு அமைப்பினர்கள் தங்களது அனுதாபத்தை தெரிவித்து, தற்கொலைக்கு காரணமான அன்புசெழியனை கைது செய்ய வேண்டும் என குரல் கொடுத்தனர்.

ஆனால் சினிமாத் துறையில் உள்ள முன்னணி நடிகரான கமல் இது குறித்து ஒன்றும் தெரிவிக்கவில்லை.

இதனையடுத்து கமல்ஹாசனை தேடி கலாய்க்கும் வகையில் பாஜக. வை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

Dr Tamilisai Soundararajan‏Verified account @DrTamilisaiBJP
தன்துறைசார்ந்ததுக்கம்தன்னைஏற்றிவிட்டதுறையில் பெரும்துயரம்பகிர்ந்து கொள்ளா கொடூரஅமைதி திடீர் டுவிட்டர்அரசியல்வாதிகள் எங்கே?தேடத்தான்வேண்டும்!

Why Kamal didnt speak about Producer suicide asks Tamilisai Soundararajan

அஜித்தால் எனக்கு விளம்பரம் தேவையில்லை.. சுசீந்திரன்

அஜித்தால் எனக்கு விளம்பரம் தேவையில்லை.. சுசீந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suseenthiran speech about Ajith and Naan Kadavul issueபிரபல பைனான்சியர் அன்புசெழியன் மிரட்டியதன் காரணமாக சசிகுமார் உறவினர் அசோக்குமார் தற்கொலை செய்துக் கொண்டார்.

இதனைக் கண்டிக்கும் வகையில் இயக்குனர் சுசீந்திரன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

மேலும் நடிகர் அஜித்தையும் ஒரு முறை அன்பு செழியன் மிரட்டினார்.

இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் எனத் தெரிவித்தார்.

இதனையறிந்த அஜித் ரசிகர்கள் இதை ஏன் இப்போ தெரிவிக்கிறீர்கள். அன்புவிடம் நீங்களும் கடன் வாங்கியிருக்கிறீர்களா.

அஜித்தை வைத்து விளம்பரம் தேடுகிறீர்களா?” என கேள்விகள் கேட்டுள்ளனர்.

அதற்குப் பதிலளித்த சுசீந்திரன், “அன்புசெழியன் இல்ல யாரிடமும் 1 ரூபாய் கூட கடன் வாங்கியதில்லை. அஜித் பற்றி பேசி விளம்பரம் தேட வேண்டிய அவசியமில்லை.

அன்புசெழியன் பற்றி எல்லாருக்கும் தெரிய வேண்டும் என்பதே என் நோக்கம்” என்று தெரிவித்துள்ளார்.

Suseenthiran speech about Ajith and Naan Kadavul issue

சினிமாவுலேயே இருக்க முடியாது.. அஜித்தை மிரட்டிய அன்புசெழியன்?

சினிமாவுலேயே இருக்க முடியாது.. அஜித்தை மிரட்டிய அன்புசெழியன்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer Anbu Cheziyan warning Ajith to act in Naan Kadavul movieபிதாமகன் படத்தை தொடர்ந்து பாலா இயக்கத்தில் நான் கடவுள் என்ற படத்தில் அஜித் நடிக்கவிருந்தார்.

இதற்காக 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்து நீண்ட தலைமுடி தாடியுடன் வழக்கம்போல பாலா பட நாயகன் போல காத்திருந்தாராம் அஜித்.

ஆனால் முடியும் தாடியும் மட்டும் வளர்ந்ததே தவிர படம் சரியாக தொடங்கப்படவில்லையாம்.

இதனால் வெறுத்துப்போன அஜித் மற்ற படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டாராம்.

அஜித்தின் இந்த முடிவு பாலா தரப்பை ஆச்சரியத்தில் ஆழ்த்த கட்டபஞ்சாயத்து தொடங்கியுள்ளது.

அஜித்தை அவர்கள் வற்புறுத்த இனி நடிக்க முடியாது என மறுத்து அட்வான்ஸ் தொகையை தர சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.

இறுதியாக ஒரு பஞ்சாயத்து சென்னையில் உள்ள பிரபல ஓட்டலில் நடைபெற்று உள்ளது.
அங்கு அஜித்தை வரவைத்து மிரட்டி பார்த்துள்ளனர். அப்போதுதான் மதுரையிலிருந்து அன்புச் செழியன் அவரது அடியாட்களுடன் வந்த மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது…. ‘பேசாம இந்த படத்தில் நடிச்சிரு… இல்லன்னா தமிழ் சினிமாலயே இருக்க முடியாது’ என எச்சரித்தார்களாம்.

ஆனால் அதற்கெல்லாம் அசராத அஜித், தன் தற்காப்புக்காக வைத்திருந்த ஒரு துப்பாக்கிய எடுத்து நீட்டினாராம். இது லைசென்ஸ் பெற்ற துப்பாக்கியாம்.

அதன்பின்னர் பஞ்சாயத்து குழு அங்கிருந்து பதறி அடித்துக் கொண்டு ஓடியதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Producer Anbu Cheziyan warning Ajith to act in Naan Kadavul movie

அரசியல் எப்போது? ரசிகர்கள் சந்திப்பு எப்போது? ஏர்போர்ட்டில் ரஜினி பேட்டி

அரசியல் எப்போது? ரசிகர்கள் சந்திப்பு எப்போது? ஏர்போர்ட்டில் ரஜினி பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini says political entry will not happen nowசில மாதங்களுக்கு முன் ரசிகர்களை சந்தித்தபோது போர்வரும் போது சந்திப்போம் என தன் அரசியல் பிரவேசத்தை தெரிவித்திருந்தார் ரஜினிகாந்த்.

எனவே அவரின் அரசியல் வருகைக்காக ரசிகர்கள் காத்திருக்க தொடங்கினர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சற்றுமுன் சென்னை விமான நிலையத்தில பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது…

காலா பட சூட்டிங் முடிவடைந்துவிட்டது.

தற்போது களத்தில் (அரசியல்) இறங்க வேண்டியதற்கு அவசரம் இல்லை.

பிறந்தநாளுக்கு பிறகு ரசிகர்களை சந்திப்பேன் என பேட்டியளித்தார் ரஜினிகாந்த்.

Rajini says political entry will not happen now

More Articles
Follows