‘ஹீரோயினை கட்டி பிடிக்கும் காட்சி இல்லை….’ ஃபயர் ஆன பவர்ஸ்டார்..!

‘ஹீரோயினை கட்டி பிடிக்கும் காட்சி இல்லை….’ ஃபயர் ஆன பவர்ஸ்டார்..!

Powerstar Srinivasan Speech at Adra Machan Visilu Press Meetஜீவா நடித்த கச்சேரி ஆரம்பம் படத்தை தொடர்ந்து, அட்ரா மச்சான் விசிலு என்ற படத்தை இயக்கியுள்ளார் திரைவண்ணன்.

கோபி தயாரித்துள்ள இப்படத்தில் சிவா மற்றும் பவர்ஸ்டார் சீனிவாசன் நாயகர்களாக நடித்துள்ளனர்.

இவர்களுடன் நய்னா, சென்ட்ராயன், சிங்கமுத்து, மதுமிதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரகுநந்தன் இசைமைத்துள்ளார்.

விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், சற்றுமுன் பத்திரிகையாளர்களை இப்படக்குழுவினர் சந்தித்தனர்.

அப்போது பவர்ஸ்டார் சீனிவாசன் பேசியதாவது….

“என்னை வாழவைத்தும் கொண்டிருக்கும் என் உடன்பிறப்புகளுக்கு என் வணக்கம்.

இப்படத்தில் நான்தான் ஹீரோ என்று என்னை கமிட் செய்தார்கள். ஆனால் மிர்ச்சி சிவாதான் ஹீரோ என்கிறார்கள்.

நான் ஒரு காமெடி பீஸ் என்று சொல்லி கமிட் செய்தாலும் பரவாயில்லை. ஆனால் ஹீரோ என்று சொல்லி ஏமாற்றிவிடுகிறார்கள்.

ஹீரோயினை கட்டிபிடிக்கும் காட்சிகள் கூட இல்லை. ஆனால் என்னை கமிட் செய்தால் படம் ஓடும் என்கிறார்கள். எனவே அவர்களுக்காக நடிக்கிறேன்.

லத்திகாவை போன்று இனி நானே தாயாரித்து நடித்தால்தான் ஹீரோயின் உடன் ஆடி பாட முடியும்.

என்னுடைய ஆனந்த தொல்லை படத்தை இயக்கிய பாலு ஆனந்த் இறந்துவிட்டார். அவர் இருந்திருந்தால் என்னுடை படத்தை பார்த்துவிட்டு சந்தோஷமாக இறந்திருப்பார்” என்று பேசினார்.

தனுஷுக்கு கொடுத்ததை சிவகார்த்திகேயனுக்கும் கொடுப்பாரா மரணகானா விஜி..?

தனுஷுக்கு கொடுத்ததை சிவகார்த்திகேயனுக்கும் கொடுப்பாரா மரணகானா விஜி..?

Dhanush Singer for Sivakarthikeyan's Remoதனுஷின் ‘அனேகன்’ படத்தில் இடம்பெற்ற ‘டங்கா மாரி ஊதாரி’ பாடல் தமிழகத்தில் ஒலிக்காத இடமில்லை எனலாம்.

இப்பாடலை பாடாத குழந்தைகளும் இல்லை என்னுமளவுக்கு இப்பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது.

இப்பாடலை மரண கானா விஜி என்பவர் பாடியிருந்தார்.

அண்மையில் கூட பாண்டியோட கலாட்டா தாங்கல என்ற படத்தில் ஒரு பாடலை அவரே எழுதி பாடி, நடித்தும் இருக்கிறார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ படத்திலும் இவர் ஒரு பாடலை பாடியிருக்கிறாராம்.

அனிருத் இசையில் உருவாக்கப்பட்டுள்ள இப்பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்து.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

‘டங்கா மாரி’ பாடல் ஹிட்டடித்தது போலவே இப்பாடலும் ஹிட்டடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ரஜினி ரசிகர்களை ஏமாற்றும் கபாலி இசை வெளியீடு: தாணு சார் இது உண்மையா..?

ரஜினி ரசிகர்களை ஏமாற்றும் கபாலி இசை வெளியீடு: தாணு சார் இது உண்மையா..?

Rajinikanth's Kabali Audio Launch Detailsரஜினியின் கபாலி இசை வெளியீடு வருகிற ஜூன் 12 நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விழா, நேரு உள்விளையாட்டு அரங்கம் அல்லது சத்யம் சினிமாஸ் அரங்கில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தயாரிப்பாளர் தரப்பு, இப்பாடல்களை இணையத்தில் வெளியிட்டால் என்னவாம்? என யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

கபாலி டீசர் இணையத்தில் வெளியாகி உலகளவில் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து, சாதனை படைத்தது.

இதுபோல் இசை வெளியீட்டையும் இணையத்திலேயே வைத்துக் கொள்ளலாமா? என திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இதனால் தலைவரின் தரிசனத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

விஜய்-அஜித் ரசிகர்களால் பாதிக்கப்படும் கலைஞர்கள்..!

விஜய்-அஜித் ரசிகர்களால் பாதிக்கப்படும் கலைஞர்கள்..!

Popular Director Talks About Ajith and Vijay Fansதமிழ் சினிமாவில் கோலோச்சி வரும் நாயகர்களில் முக்கியமானவர்கள் விஜய் மற்றும் அஜித்.

இவர்களது படங்கள் வரும்போது ரசிகர்கள் ஆரவாரமான வரவேற்பு அளித்து வருகின்றனர்.

ஒருவரது படம் வெளியானால் மற்றவரின் ரசிகர்கள், அப்டத்தை பார்த்து, எதிர்மறையான விமர்சனங்களை முன் வைக்கின்றனர்.

ஓரளவு நல்ல விமர்சனங்களை படம் பெற்றாலும் இவர்களின் செயல்களால் மற்றவரின் படம் பாதிக்கப்படுகிறது.

இது விஜய், அஜித்துக்கு மட்டும் ஏற்படும் இழப்பு இல்லை. அப்படத்தில் பணிபுரிந்த மற்ற கலைஞர்களையும் பாதிக்கப்படைய செய்கிறது.

இதனை 3 படங்களை மட்டுமே இயக்கி ஹாட்ரிக் அடித்த ஒரு பிரபல இயக்குனர் தன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கமல்-எஸ்.ஜே.சூர்யாவின் நாயகிக்கு பிடித்த ஹீரோ யார்..?

கமல்-எஸ்.ஜே.சூர்யாவின் நாயகிக்கு பிடித்த ஹீரோ யார்..?

I am a Huge Fan of Performances Says Kamalini Mukherjeeகமல்-கௌதம் மேனன் இணைந்த வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்து, ரசிகர்கள் மனதில் ஆழமாய் பதிந்தவர் கமாலினி முகர்ஜி.

நீண்ட இடைவேளைக்கு பின்னர், தற்போது எஸ்.ஜே.சூர்யாவுடன் இறைவி படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில் இவரது சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…

“ஒரு சில படங்கள் என்றாலும் எனக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு ஆச்சரியமானது.

தமிழ் படங்களில் நிறைய நடிக்கவில்லை. மொழி எனக்கு பிரச்சினை இல்லை. நல்ல கேரக்டருக்காக காத்திருந்தேன்.

எனக்கு எந்த ஹீரோ பிடிக்கும் என்று அடிக்கடி கேட்கிறார்கள். நடிப்புக்குத்தான் நான் ரசிகை.

தற்போது மலையாள படத்திலும் நடித்து வருகிறேன். எழுத்துலகில் ஆர்வம் அதிகம். நிறைய எழுத நினைத்திருக்கிறேன்.

அதுபோல் மேடை நாடக அனுபவம் உள்ளதால், அதிலும் மீண்டும் நடிக்கக்கூடும் என நினைக்கிறேன்” என்றார் இந்த இறைவி நாயகி.

கேரளாவில் விஜய்க்கு போட்டியாக உருவாகும் தெலுங்கு ஹீரோ..!

கேரளாவில் விஜய்க்கு போட்டியாக உருவாகும் தெலுங்கு ஹீரோ..!

Kerala can't stop loving Allu Arjunவிஜய்க்கு தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் மார்கெட் இருப்பது நாம் அறிந்ததே.

தற்போது இவருக்கு போட்டியாக ஒரு ஹீரோ அங்கு உருவாகி வருகிறார். ஆனால் அவர் மலையாள ஹீரோ இல்லை. தெலுங்கு சினிமாவின் பிரபலமான அல்லு அர்ஜுன்தான்.

விஜய் படங்களை போல் இவரது தெலுங்கு படங்களுக்கும் அங்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் அல்லு அர்ஜுனின் ‘சரோனைடு’ படத்தின் டப்பிங் வெர்ஷனான ‘யோதாவு’ படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கேரளாவில் கலந்து கொண்டார் அல்லு.

இப்படத்தை மலையாள இயக்குனர் பி.உன்னி கிருஷ்ணன் தனது ஆர்டி இலுமினேஷன் கம்பெனி சார்பாக கேரளாவில் வெளியிடுகிறார்.

அப்போது கூடியிருந்த கட்டுங்கடங்காத ரசிகர்களை பார்த்து அல்லு அர்ஜுன் பேசியதாவது…

“என் மீது அன்பு காட்டும் உங்களுக்கு நன்றி. இன்னும் இரண்டு வருடங்களுக்குள் நேரடி மலையாளப் படத்தில் நடிப்பேன் என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதற்காf அவர் தனது சம்பளத்தை குறைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

More Articles
Follows