“முதல் முறையாக கோர்ட் அறை செட்டிற்குள் நுழைந்த போது பதட்டமாக உணர்ந்தேன் – பூர்ணா !!

“முதல் முறையாக கோர்ட் அறை செட்டிற்குள் நுழைந்த போது பதட்டமாக உணர்ந்தேன் – பூர்ணா !!

poornaஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தன் முதல் வழக்கு தயாராவது போல, பூர்ணாவும் தனது கதாபாத்திரத்திற்கு மிகவும் தயாராகியிருக்கிறார். தான் தோன்றுகிற எந்த ஒரு கதாபாத்திரத்திலும், பூர்ணா தனது நிலையை அடுத்த அடுத்த கட்டத்துக்கு உயர்த்துகிறார். ‘சவரக்கத்தி’யில் அவரின் பாராட்டத்தக்க நடிப்பை மறக்க முடியாது. அவர் பார்வையாளர்களை சிரிக்க வைத்தார், சில சமயங்களில் உணர்வுப்பூர்வமாகவும் ஒன்ற வைத்தார்.

சொல்லப்போனால் ‘ஒரு சரியான நடிகர் காலவரையறை பற்றி கவலைப்பட மாட்டார், தன் நடிப்பாற்றல் மீது உறுதியான நம்பிக்கை வைத்து, சக்தி வாய்ந்த நடிப்பை வழங்குவார். தற்போது ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடித்து வரும் ‘அடங்க மறு’ படத்தில், வழக்கறிஞராக நடித்து வருகிறார். இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இந்த கதாபாத்திரத்தில் அவரை தேர்ந்தெடுத்ததற்கு பின்னால் ஒரு மிருதுவான காரணத்தைக் கூறுகிறார். அவர் கூறும்போது, “ஆரம்பத்தில், வலுவான ஒரு சிந்தனை மனதில் தோன்றும் வரை, நான் ஒரு ஆண் நடிகரை தான் இந்த வழக்கறிஞரின் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க விரும்பினேன். பொது நிகழ்ச்சிகளிலிருந்து, டைனிங் டேபிள் வரை பாலின சமத்துவம் பற்றி நாம் பேசும்போது, அந்த வரம்புக்குள் அவர்களை கட்டுப்படுத்துவது அநியாயமாக இருக்கும். எனவே, இந்த கதாபாத்திரத்தில் ஒரு பெண் நடிகரை நடிக்க வைக்கும் யோசனையை செயலாக்கினேன், படக்குழுவும் அதற்கு இசைந்தார்கள். இருப்பினும், ஒரு பொருத்தமான நடிகையை தேர்ந்தெடுப்பது தான் மிகப்பெரிய சவாலாக இருந்தது. அங்கு பூர்ணா அனைவரது தேர்வாகவும் வந்தார். இப்போது பூர்ணாவை தவிர வேறு எவருமே இந்த பாத்திரத்தை முழுமையாக்கி இருக்க மாட்டார்கள் என நினைக்கிறோம்” என்றார்.

நடிகை பூர்ணா இந்த பாத்திரத்தில் நடித்த தனது அனுபவத்தை பற்றி கூறும்போது, “இது ஒரு எளிமையான விஷயம் அல்ல. உண்மையில், முதல் முறையாக நீதிமன்ற அறை செட்டுக்குள் நுழைந்தவுடன் எனக்கு பதட்டம் ஏற்பட்டது. என்ன தான் முன் தயாரிப்பு மற்றும் ஒத்திகைகள் பார்த்திருந்தாலும், படப்பிடிப்பு சூழ்நிலையில் தான் ஒரு கதாபாத்திரத்தின் சரியான கணிப்பை நாம் உணர முடியும். இந்த கதாபாத்திரத்தின் உடல் மொழி, உரையாடல் மற்றும் மேனரிஸம் ஆகியவற்றில் முழுமையான நேர்த்தி தேவைப்பட்டது. ரவி மற்றும் கார்த்திக் இருவருக்கும் நான் மிகவும் நன்றி கடன்பட்டிருக்கிறேன். ரசிகர்கள் என் நடிப்பை ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன்” என்றார்.

அடங்க மறு ஒரு எமோஷன் கலந்த ஒரு அதிரடி ஆக்‌ஷன் திரில்லர் படம். புத்திசாலித்தனமான மற்றும் சுறுசுறுப்பான தருணங்களைக் கொண்ட ஒரு படம். இந்தத் திரைப்படத்தை சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார், ஆனந்த் ஜாய் இணை தயாரிப்பாரளராக இருக்கும் இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். சத்யா சூரியன் (ஒளிப்பதிவு), ரூபன் (எடிட்டிங்) மற்றும் லால்குடி என். இளையராஜா (கலை) ஆகியோர் இந்த படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களாக பணியாற்றுகிறார்கள். இன்னும் இரண்டு பாடல்கள் மட்டும் படமாக்கினால் முழுப்படப்பிடிப்பும் முடிவடையும்.

சிம்புவின் மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிய எடிட்டர்

சிம்புவின் மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிய எடிட்டர்

STR in maanaduசுந்தர்.சி. இயக்கத்தில் உருவாகும் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

எனவே விரைவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார்.

சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்கவுள்ளது.

இந்நிலையில், பட கதையை இயக்குநர் வெங்கட் பிரபு எடிட்டர் பிரவீன் கே.எல்லிடம் கூறியிருக்கிறாராம்.

கதையை கேட்ட பிரவீன் கே.எல், அவரது ட்விட்டர் பக்கத்தில் வெங்கட் பிரபுவை பாராட்டியுள்ளார்.

உறையவைக்கும் மாநாடு படத்தின் முழுக் கதையை தற்போது தான் கேட்டேன். எனது தலை சுற்றிக் கொண்டே இருக்கிறது. அற்புதம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கோலமாவு கோகிலா இயக்குனர் பெயரை தன் கேரக்டருக்கு வைத்த சிவகார்த்திகேயன்

கோலமாவு கோகிலா இயக்குனர் பெயரை தன் கேரக்டருக்கு வைத்த சிவகார்த்திகேயன்

sivakarthikeyanநயன்தாரா, யோகி பாபு இணைந்து நடித்த கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கியவர் நெல்சன் திலீப்குமார்.

இவர் நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் என்பதால் அந்த படத்தில் ஒரு பாடலை எழுத அனுமதியளித்திருந்தார்.

இவர்கள் இருவரும் விஜய் டிவியில் பணியாற்றியபோது நண்பர்கள் தானாம்.

இந்நிலையில் கனா படத்திற்கு பிறகு ரியோ நடிக்கவுள்ள ஒரு படத்தை தயாரிக்கிறார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தை முடித்துவிட்டு அடுத்து தயாரிக்கவுள்ள பட இயக்கும் வாய்ப்பை தன் நண்பன் நெல்சன் திலீப்குமாருக்கு அளிக்க இருக்கிறாராம்.

‘கனா’ படத்தில் தன் கேரக்டருக்கு நெல்சன் திலீப்குமார் என பெயரிட்டுள்ளார் சிவகார்த்திகேயன் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

பாட்ஷா பட பாணியில் உருவாகும் விஜய்சேதுபதியின் *மாமனிதன்*

பாட்ஷா பட பாணியில் உருவாகும் விஜய்சேதுபதியின் *மாமனிதன்*

Vijay Sethupathis Maamanithan will be in Rajinis Baasha styleவிஜய்சேதுபதிக்கு மக்கள் செல்வன் என்ற பட்டத்தை அளித்தவர் டைரக்டர் சீனுராமசாமி.

இவர்களது கூட்டணியில் வெளியான அனைத்து படங்களும் நல்ல வரவேற்பையே பெற்று வருகிறது.

தற்போது ‘தர்மதுரை’ படத்தை தொடர்ந்து ‘மாமனிதன்’ என்ற படத்திற்காக இணைந்துள்ளனர்.

இது இவர்கள் இருவரும் இணையும் 4வது படம்.

இதன் சூட்டிங் தன் சென்டிமென்ட் பகுதிகளில் ஒன்றான ஆண்டிபட்டியில் தொடங்கியிருக்கிறார் சீனுராமசாமி.

யுவன்சங்கர் ராஜா தயாரித்து இசையமைக்கும் இப்படத்தில், யுவனுடன் இளையராஜவும் இணைந்து இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதுபதியின் ஆஸ்தான நாயகி காயத்ரி இதில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறாராம். அதாவது டைப்ரைட்டிங் சொல்லிக் கொடுக்கும் டீச்சராக நடிக்கிறாராம்.

‘ஜோக்கர்’ புகழ் குரு சோமசுந்தரமும் இவர்களுடன் இணைந்துள்ளார்.

இதில் ஆட்டோ டிரைவர் வேடத்தில் விஜய்சேதுபதியும் (ஹிந்து மதம்) அவரின் இஸ்லாமிய நண்பராக குரு சோமசுந்தரமும் நடிக்கிறாராம்.

பாட்ஷா படத்தில் ரஜினி ஆட்டோ டிவைராக நடித்திருந்தார். ப்ளாஷ்பேக்கில் அவரது முஸ்லீம் நண்பராக சரண்ராஜ் நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Vijay Sethupathis Maamanithan will be in Rajinis Baasha style

கிறிஸ்துமஸ் அன்று விஸ்வாசம் டீசரை வெளியிட அஜித் திட்டம்.?

கிறிஸ்துமஸ் அன்று விஸ்வாசம் டீசரை வெளியிட அஜித் திட்டம்.?

Ajiths Viswasam teaser may release on 2018 Christmasநான்காவது முறையாக அஜித் மற்றும் சிவா கூட்டணி இணைந்துள்ள படம் ‘விஸ்வாசம்’.

சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையைமைத்துள்ளார்.

இப்படத்தின் போஸ்டர்கள் வெளியானபோது அதை அஜித் ரசிகர்களே கொண்டாடவில்லை.

நெகட்டிவ்வான விமர்சனங்களை மட்டுமே சந்தித்தது. அதனையடுத்து வெளியான முதல் பாடலும் சரியான வரவேற்பை பெறவில்லை.

தற்போது எல்லா பாடல்களும் வெளியான நிலையில் சிறிது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்து வருடம் 2019 பொங்கலுக்கு விஸ்வாசம் வெளியாகவுள்ள நிலையில் இப்பட டீசரை வருகிற கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

Ajiths Viswasam teaser may release on 2018 Christmas

எவரும் தொட முடியாத சாதனையில் ரஜினியின் 2.0 பட வசூல்

எவரும் தொட முடியாத சாதனையில் ரஜினியின் 2.0 பட வசூல்

Rajinis 2pointO movie breaking many records in Box office collectionகடந்த நவம்பர் 29ஆம் தேதி ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0 திரைப்படம் வெளியானது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் இப்படத்தை லைகா நிறுவனம் வெளியிட்டது.

550 கோடியில் உருவான இப்படம் உலகம் முழுவதும் 15000 தியேட்டர்களில் வெளியானது.

ரிலீஸாகி இதுவரை 20 நாட்களை நெருங்கும் வேளையில் சென்னையில் மட்டும் 24 கோடியை நெருங்கியுள்ளதாம்.

இதற்கு முன்பு ரஜினி நடித்த கபாலி 3-வது வாரத்தில் சென்னையில் ரூ18 கோடியை மட்டுமே வசூல் செய்தது.

இதுவரை எந்தவொரு தமிழ் படமும் பண்டிகை இல்லாத நாட்களில் வெளியாகி இப்படியொரு சாதனை படைத்தது இல்லை எனவும் கூறப்படுகிறது.

மேலும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த வேளையிலும் சென்னையில் 82 ஸ்கிரீன்களில் இப்படம் ஓடிக் கொண்டிருப்பது கோலிவுட்டையே ஆச்சரியப்படுத்தியுள்ளது.

அதுபோல் மதுரையில் எந்த படமும் 7 தியேட்டருக்கு மேல் வெளியானதே இல்லையாம்.

ஆனால் 2.0 மட்டும் 23 தியேட்டர்களுக்கு மேல் வெளியானது.

தற்போதும் 15 திரையரங்குகளில் ஓடிக்கொண்டே ரூ 18 கோடியை வசூல் செய்துள்ளது.

அதுபோல் கர்நாடகாவில் ரூ 19 கோடியை அள்ளியுள்ளது.

இதன் மூலம் ஆல் டைம் நம்பர் 1 தமிழ் படம் என்ற சிறப்பையும் கேரளாவில் ரஜினிகாந்த் பெற்றுள்ளார்.

தமிழகம் முழுவதும் இதுவரை ரூ 200 கோடியை தாண்டியுள்ளது.

உலகளவில் தமிழ் பதிப்பில் 455 கோடியையும் தெலுங்கு, ஹிந்தி பதிப்புகளில் 265 கோடியையும் வசூலித்துள்ளதாம்.

ஆக மொத்தம் இதுவரை உலகளவில் ரூ 720 கோடி வசூலை ஈட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

Rajinis 2pointO movie breaking many records in Box office collection

More Articles
Follows