குடிபோதையில் நடிகரை தாக்கிய விமல் தலைமறைவு; போலீஸ் வலை

Police Complaint filed against Vemal for allegedly assaulting another actorகளவாணி, மாப்ள சிங்கம், மன்னர் வகையறா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் விமல்.

இவர் தன் நண்பர்களுடன் குடிபோதையில் இருந்தபோது தன்னை தாக்கியதாக விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்து இருந்தார் நடிகர் அபிசேக்.

மேலும் இந்த வழக்கு ஆதாரமாக சிசிடிவி கேமரா காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த புகாரை ஏற்றுக் கொண்ட போலீசார் விமல் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்ய தேடிவருகின்றனர்.

ஆனால் விமல் தலைமறைவாகி விட்டார் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

“படம் சம்பந்தமாக வெளியூர் சென்றுள்ளார் விமல். அவர் வந்ததும் போலீஸ் முன் ஆஜராகி விளக்கம் அளிப்பார்” என விமல் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த வழக்கில் தான் கைது செய்யப்படாமல் இருக்க முன்ஜாமீன் மனு தாக்கல் செய்வார் என கூறப்படுகிறது.

Police Complaint filed against Vemal for allegedly assaulting another actor

Overall Rating : Not available

Latest Post