பெரியார் பற்றி பேச்சு; ரஜினி மன்னிப்பு கேட்க தபெதிக வலியுறுத்தல்

Rajini should apologize for his controversial speech about Periyarஓரிரு தினங்களுக்கு முன் சென்னையில் துக்ளக் 50-வது ஆண்டு விழா நடைபெற்றது.

இதில் நடிகர் ரஜினிகாந்த கலந்துக் கொண்டார். அப்போது அவர் முரசொலி வைத்திருத்தால் திமுக காரன் என்றும் துக்ளக் படித்திருந்தால் அவர் அறிவாளி என்றும் பேசியிருந்தார்.

மேலும் பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. செருப்பு மாலை போடப்பட்டது என சிலவற்றை பேசியிருந்தார்.

இத்துடன் பத்திரிகையாளர்கள் பால் என்ற உண்மை செய்தியில் பொய் என்ற தண்ணீரை கலக்க கூடாது என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில் பெரியார் குறித்த ரஜினியின் பேச்சுக்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியது.

கோவை திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ரஜினி மீது வழக்குப்பதிவு செய்ய காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்காவிட்டால் வருகின்ற ஜனவரி 23ல் (23.1.2020) காலை 10 மணிக்கு, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் நடிகர் ரஜினிகாந்த் வீடு முற்றுகையிடபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Rajini should apologize for his controversial speech about Periyar

Overall Rating : Not available

Latest Post