‘2.O’ வை போன்று ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’..!

‘2.O’ வை போன்று ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’..!

New Projectகிரியாமைன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் விஜயன்.சி என்பவர் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ ‘.

‘நீ என்ன மாயம் செய்தாய்’, ‘மித்ரா’ ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், காளி படத்தில் அறிமுகமாகி, இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படம் மூலம் பிரபலமான நடிகை ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

மேலும் நடிகை சச்சு, இயக்குனர் சரவண சுப்பையா, நடிகர்கள் லிவிங்ஸ்டன், ஆர். சுந்தர்ராஜன், டெல்லிகணேஷ், மீசை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

‘நாகேஷ் திரையரங்கம்’ புகழ் இ.ஜே. நவ்ஷாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். சார்லஸ் தனா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேரழகி ஐ.எஸ்.ஓ படத்தின் இயக்குனர் விஜயன் கூறியதாவது,

” பேரழகி ஐ.எஸ்.ஓ ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம். சீரியஸாக இல்லாமல், மிக ஜாலியாக காமெடி கலந்து இப்படத்தை எடுத்துள்ளேன். இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம். ஷில்பா மஞ்சுநாத் இதில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

படத்தின் கதைப்படி, முந்தைய காலத்தில் வாழ்ந்த ராஜா ஒருவர் தான் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, அரண்மனை வைத்தியர்களை கொண்டு ஒரு மருந்து கண்டுப்பிடிக்கிறார். பல ஆண்டுகள் கழித்து, அந்த மருத்துவ குறிப்பு ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திடம் கிடைக்கிறது.

ஷில்பாவின் பாட்டியாக வரும் சச்சு, அந்த நிறுவனத்தை அணுகி தன்னை இளமையாக மாற்றிக்கொள்ளகிறார். பாட்டி சச்சு, இப்போது அழகான பேத்தியாக மாறிவிடுகிறார். ஷில்பா தான் அந்த ரோலை செய்துள்ளார். அதன் பிறகு நடக்கும் குழப்பங்களை, காமெடியாக கூறியுள்ளோம். ஒரு ஜாலியான சயின்ஸ் பிக்ஷன் படமாக பேரழகி ஐ.எஸ்.ஓ இருக்கும்.

ஷில்பா தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். மொத்தம் 50 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். விஜிபியில் அரண்மனை செட்டு போட்டு சில காட்சிகளை படமாக்கினோம். அது விஜிபி என்று தெரியாத அளவுக்கு கிராபிக்ஸ் வேலைகள் செய்துள்ளோம். குறைந்த பட்ஜெட்டில் நல்ல படத்தை எடுத்துள்ளோம்”, என விஜயன் கூறினார்.

வரும் மே-10 முதல் இந்த திரைப்படம் வெளியாகிறது.

புள்ளக்குட்டி பெத்துகிட்டு கட்டிக்கலாமே…; இது எமிஜாக்சன் வெர்சன்

புள்ளக்குட்டி பெத்துகிட்டு கட்டிக்கலாமே…; இது எமிஜாக்சன் வெர்சன்

New Project (5)வெளிநாட்டில் பிறந்து அங்கேயே வளர்ந்து ‘மதராசப்பட்டனம்’ படத்தின் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமானவர் எமி ஜாக்சன்.

அதன்பின் விக்ரமின் ‘ஐ’, தனுஷின் ‘தங்கமகன்’, விஜய்யின் ‘தெறி’, ரஜினியின் ‘2.0’, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்

இதனிடையில் இங்கிலாந்து தொழிலதிபர் ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார்

அவரைத் தான் திருமணம் செய்வேன் என அறிவித்திருந்தார்.

ஆனால் திருமணத்திற்கு முன்பே எமி கர்ப்பமாகி விட்டார். அதையும் அவரே வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்குள்ளேயே குழந்தை பிறக்கும் என தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், வரும் 2020ல், தனக்கும்; காதலர் ஜார்ஜூக்கும் கிரிஸ் நாட்டில் திருமணம் நடக்கும் என எமி ஜாக்சன் அறிவித்துள்ளார்.

தன் ரசிகர் சாந்தனுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்

தன் ரசிகர் சாந்தனுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்

New Project (4)தானே ஒரு நடிகராக இருந்தபோதும் விஜய்யின் தீவிர ரசிகர் என அடிக்கடி கூறி கொண்டிருப்பவர் சாந்தனு.

இவர் தற்போது விக்ரம் சுகுமாறன் இயக்கவுள்ள படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என்பதை பார்த்தோம்.

கதிர், ஓவியா நடித்திருந்த `மதயானை கூட்டம்’ படத்தை இயக்கியவர் இந்த விக்ரம் சுகுமாறன்.

தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு தன் படத்திற்கு `இராவண கோட்டம்’ என்று தலைப்பிட்டு இயக்கவுள்ளார்.

இந்த படத்தை கண்ணன் ரவி தயாரிக்கிறார்.

இந்நிலையில் சாந்தனுவுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் விஜய் குறுந்தகவல் ஒன்றை அனுப்பியுள்ளாராம்.

இதுகுறித்து சாந்தனு கூறியிருப்பதாவது,

வாழ்த்துக்கள் நண்பா, தலைப்பு செம என்று எனக்கு குறுந்தகவல் அனுப்பி விஜய் அண்ணா என்னை மெர்சலாக்கி விட்டார். உங்களது வாழ்த்துக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

பேட்ட படத்தை அடுத்து புது ஹீரோவுக்கு வில்லனாக விஜய்சேதுபதி

பேட்ட படத்தை அடுத்து புது ஹீரோவுக்கு வில்லனாக விஜய்சேதுபதி

Makkal Selvan Vijay Sethupathi again acting as baddieஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் போது வில்லனாக நடிக்க பலர் மறுக்கும் நிலையில் ரஜினிக்கு வில்லனாக பேட்ட படத்தில் நடித்தார் விஜய்சேதுபதி.

தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து வரும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.

ராம்சரண்-சமந்தா நடித்த ரங்கஸ்தலம் படத்திற்கு கதை எழுதிய புஜ்ஜி பாபு இயக்கும் ஒரு புதிய படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கவுள்ளார் நம் மக்கள் செல்வன்.

வைஷ்ணவ் தேவ் என்ற புதுமுக நடிகர் நாயகனாக நடிக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

Makkal Selvan Vijay Sethupathi again acting as baddie

விஜய்யுடன் கூட்டணி வைத்து சூர்யாவுடன் மோதும் தமன்னா

விஜய்யுடன் கூட்டணி வைத்து சூர்யாவுடன் மோதும் தமன்னா

Surya and Tamanna movies clash on 31st May 2019செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் பிரீத்சிங், சாய்பல்லவி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் என்ஜிகே.

இப்பட டீசர் மற்றும் பாடல்கள் இன்று மாலை வெளியாகவுள்ளது. இதற்கான விழா இன்று சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடக்கிறது.

யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை மே 31-ந்தேதி திரையிட உள்ளனர்.

சூர்யாவுக்கு தெலுங்கிலும் நல்ல மார்கெட் உள்ளதால் அங்கும் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள்.

இதே நாளில் விஜய் இயக்கத்தில் பிரபு தேவா-தமன்னா நடித்துள்ள தேவி-2 படம் வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

பிரபுதேவா மற்றும் தமன்னாவுக்கும் தெலுங்கில் நல்ல மார்கெட் வேல்யூ இருப்பது இங்கே கவனிக்கத்தக்கது.

ஆக.. நல்ல போட்டியிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Surya and Tamanna movies clash on 31st May 2019

சூர்யா படத்திற்காக தீ-யை பற்ற (பாட) வைத்த ஜிவி. பிரகாஷ்

சூர்யா படத்திற்காக தீ-யை பற்ற (பாட) வைத்த ஜிவி. பிரகாஷ்

Rowdy Baby sensation Dhee lends her voice for Soorarai Pottru‘இறுதிச்சுற்று’ படத்தில் இடம்பெற்ற “ஏ சண்டக்காரா…’ பாடலை யாரும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. அப்படி ஒரு குரலால் நம்மை ஈர்த்தவர் பாடகி தீ (DHEE).

அப்பாடலை தொடர்ந்து, தனுஷின் ‘மாரி-2’ படத்தில் இடம் பெற்ற ‘ரவுடி பேபி…’ பாடலைப் பாடினார்.

இந்த பாடல் இன்றும் இணையத்தை கலக்கி வருகிறது. பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து செல்கிறது.

தற்போது இந்த பாடகி தீயை தன் இசையில் பாட வைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிக்கும் ‘சூரரை போற்று’ படத்தில் தான் அந்த பாடல் இடம் பெறுகிறது.

‘சூரரை போற்று’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைக்கிறார் என்பது தங்களுக்கு தெரியும் தானே…

Rowdy Baby sensation Dhee lends her voice for Soorarai Pottru

More Articles
Follows