விஜய்-சூர்யாவுக்கு அடுத்த இடத்தை பிடித்த பவர்ஸ்டார்

விஜய்-சூர்யாவுக்கு அடுத்த இடத்தை பிடித்த பவர்ஸ்டார்

pawan kalyanஒரு படம் வெளியாகி என்ன வசூல் படைக்கிறது? அது மற்ற படங்களின் சாதனையை முறியடிக்குமா? என்பதை அறிந்துக் கொள்வதற்கு முன்பே அந்த படத்தின் டீசர், ட்ரைலர் படைத்த சாதனை என்ன? என்பதை அறிந்துக் கொள்ள ரசிகர்கள் அதிகம் ஆர்வம் கொள்கின்றனர்.

இந்நிலையில் இந்திய அளவில், மட்டுமல்லாது உலக அளவில் யு டியூபில் அதிக லைக்குகளைப் பெற்ற டீசர் என்ற பெருமையை ‘மெர்சல்’ படம் அண்மையில் பெற்றது.

இதனை வேறு பட டீசர்கள் முறியடிக்குமா? என ரசிகர்கள் காத்திருந்தனர்.

ஓரிரு தினங்களுக்கு முன் தெலுங்கு பவர்ஸ்டார் பவன் கல்யாண் நடித்த ‘அஞ்ஞாதவாசி’ பட டீசர் வெளியானது.

இந்த டீசராலும் மெர்சல் சாதனையை முறியடிக்க முடியவில்லை.

ஆனால் தெலுங்கு சினிமாவில் முதன்முறையாக 24 மணி நேரத்தில் அதிகப் பார்வைகள், அதிக லைக்குகளை இந்த டீசர் பெற்றுள்ளது.

வெளியான சில மணி நேரங்களிலேயே 40 லட்சம் பார்வைகளையும், 3 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது.

தற்போது 78 லட்சம் பார்வைகளையும், 4 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்று யு டியூப் டிரென்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

இதற்கு முன் வெளியான சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் தெலுங்கு டப்பிங்கான ‘கேங்’ தெலுங்கு படங்களில் அதிக லைக்கான 3 லட்சம் லைக்குகளைத் தாண்டி சாதனை புரிந்தது.

அந்த சாதனையை அன்றே ‘அஞ்ஞாதவாசி’ டீசர் முறியடித்துவிட்டது.

ஆனால் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் (தமிழ் பதிப்பு) படத்தின் டீசர் சாதனையை முறிடியக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மெர்சல்- 728K லைக்ஸ்
தானா சேர்ந்த கூட்டம்- 308K லைக்ஸ்
Agnyaathavaasi- 382K லைக்ஸ் (பவர் ஸ்டார் பவன்கல்யாண் தெலுங்கு படம்)

நேற்று தீரன்; இன்று அருவி; தயாரிப்பாளர் எஸ்ஆர். பிரபுக்கு ஷங்கர் பாராட்டு

நேற்று தீரன்; இன்று அருவி; தயாரிப்பாளர் எஸ்ஆர். பிரபுக்கு ஷங்கர் பாராட்டு

Director Shankar praises Aruvi is very good movieஜோக்கர், தீரன், அருவி உள்ளிட்ட தரமான படங்கள் தன் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக தயாரித்தவர் எஸ்ஆர். பிரபு.

இதில் ஜோக்கர் படம் 64வது ஆண்டு தேசிய விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இவர் தயாரிக்கும் படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சக ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கடந்த நவம்பர் மாதம் வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படம் வெளியானது.

இப்படத்தை பார்த்த டைரக்டர் ஷங்கர் இதன் மேக்கிங்கை பாராட்டி இருந்தார்.

தற்போது அதே பேனரில் அருவி படம் வெளியாகியுள்ளது.

இப்படத்தையும் வெகுவாக பாராட்டியுள்ளார்.

Director Shankar praises Aruvi movie

Shankar Shanmugham‏Verified account @shankarshanmugh
Aruvi – A very good movie. Unmasks everything and everyone. Excellent work by Director Arun Prabhu, Adithi Balan and everyone performed very well.

Shankar Shanmugham‏Verified account @shankarshanmugh Nov 25
Theeran adhigaram 1 – terrific cop movie.. nail biting..seat edge.. excellent efforts and details by director Vinod.. well done karthi Ghibran Dop and the whole team

பலூன் படத்தால் கபாலி-பைரவா பாடலாசிரியருக்கு கிடைத்த பெருமை

பலூன் படத்தால் கபாலி-பைரவா பாடலாசிரியருக்கு கிடைத்த பெருமை

Kabali Bairavaa fame lyricist Arunraja Kamaraj wrote all songs in Balloon movieபாடகர், நடிகர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ்.

ரஜினியின் கபாலி படத்தில் இவர் எழுதி பாடிய நெருப்புடா பாடல் இவரை புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.

இதனையடுத்து விஜய்யின் பைரவா படத்தை வர்லாம் வா பைரவா என்ற பாடலை பாடியிருந்தார்.

இவர் பல படங்களில் பாடல்கள் எழுதியிருந்தாலும் முதன்முறையாக பலூன் படத்தில்தான் எல்லா பாடல்களையும் எழுதியிருக்கிறாராம்.

இதனை அவரே பலூன் பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில் தெரிவித்தார்.

’70 எம் எம் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் கந்தசாமி நந்தகுமார், அருண் பாலாஜி தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் இசையமைக்க, ஜெய், அஞ்சலி, ஜனனி நடித்துள்ளனர்.

Kabali Bairavaa fame lyricist Arunraja Kamaraj wrote all songs in Balloon movie

நாகார்ஜுனா மகன் அகில் ஜோடியாக பிரியதர்ஷன்-லிஸி மகள் கல்யாணி

நாகார்ஜுனா மகன் அகில் ஜோடியாக பிரியதர்ஷன்-லிஸி மகள் கல்யாணி

Akhil Akkineni romance with Kalyani Priyadarshan for Hello movie‘யாவரும் நலம்’, 24 உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விக்ரம் குமார்.

இவர் அடுத்து இயக்கியுள்ள படம் ‘ஹலோ’.

இப்படத்தில் நாகார்ஜுனாவின் மகன் அகில் அக்கினேனி ஹீரோவாக நடிக்கிறார்.

அகிலுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இவர் இயக்குநர் பிரியதர்ஷன் – லிஸியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘மெரிஸ் மெரிஸ்..’ என்ற பாடலின் மேக்கிங் வீடியோ அண்மையில் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பிருந்தா மாஸ்டரின் நடன அமைப்பில் உருவாகியுள்ள இந்தப் பாடலில் கல்யாணி பிரியதர்ஷன், ரம்யா கிருஷ்ணன், ஜகபதி பாபு ஆகியோர் நடனம் ஆடியிருக்கிறார்கள்.

கலை இயக்குனர் ராஜீவன் நம்பியார் கைவண்ணத்தில் 2 கோடி செலவில் மிக ஆடம்பரமான அரங்கத்தை உருவாக்கியுள்ளனர்.

இந்த மெகா பட்ஜெட் படத்தின் ட்ரைலரை ஒரே வாரத்தில் 10 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் சார்பில் நாகார்ஜூனா தயாரித்துள்ள இந்த படத்துக்கு இளைஞர்களின் ஃபேவரைட் ‘அனூப் ரூபன்’ இசையமைத்துள்ளார்.

படத்தில் வரும் அனல் பறக்கும் சண்டைக்காட்சிகளுக்காக ஹாலிவுட்டில் இருந்து ‘பாப் பிரவுன்’ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.

Akhil Akkineni romance with Kalyani Priyadarshan for Hello movie

‘மெரிஸ்… மெரிஸ்’ பாடலை யூடியூபில் காண பின்வரும் லிங்க்கைச் க்ளிக் செய்யுங்கள்..!

https://youtu.be/dNppXNV7s3A

25 வருட கேள்விக்கு 2018 புத்தாண்டில் பதில் சொல்லும் ரஜினி?

25 வருட கேள்விக்கு 2018 புத்தாண்டில் பதில் சொல்லும் ரஜினி?

rajini walkரஜினியையும் அரசியலையும் இணைத்து வரும் செய்திகள் இன்றல்ல நேற்றல்ல.. கிட்டதட்ட 25 வருடங்களுக்கு மேலாக வந்துக் கொண்டிருக்கிறது.

அப்படியென்றால் இதற்கான ஆரம்ப புள்ளி எங்கு தொடங்கியது தெரியுமா?

ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை, மன்னன் ஆகிய படங்களிலேயே அரசியல் வசனங்கள் பேசத் தொடங்கிவிட்டார்.

அண்ணாமலை படத்தில்… பிழைக்க எவ்வளவோ நல்ல வழி இருக்கு. ஏன்யா அரசியலை கெடுக்கிறீங்க என்பார்.

இதனையடுத்து பாட்ஷா படத்தின் வெற்றி விழாவில் தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் பெருகிவிட்டது என ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.

அதன்பின் வந்த பொதுத் தேர்தலில் திமுக கட்சியை ஆதரித்தார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மூப்பனார் உருவாக்க உறுதுணையாக இருந்தார்.

இனிமேல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது என பகிரங்கமாக பேசினார்.

அந்த தேர்தலில் அதிமுக படுதோல்வியை அடைந்தது.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் ரஜினியின் ஆதரவு யாருக்கு? என்பதே பெரும் எதிர்பார்ப்பாக மாறியது.

ரஜினி வாய்ஸ் யாருக்கு? என்பது மாறி, அவர் அரசியலுக்கு வரவேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

அவரும் ஒவ்வொரு படத்தின் போது, அரசியல் பேச ஆரம்பித்தார். இதனால் அரசியல் ஆசைத் தீ ரசிகர்கள் மனதில் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது.

இந்த அரசியல் ஆசை தற்போது 25 வருடங்களை கடந்துவிட்டது.

ஜெயலலிதா காலமாகிவிட்டார். அரசியல் மூத்த தலைவர் கருணாநிதி ஓய்வில் இருக்கிறார்.

எனவே இதுவே சரியான தருணம். எங்களை காக்க, தமிழகத்தை மீட்க தலைவர் வரவேண்டும் என ரசிகர்கள் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்துவிட்டனர்.

அண்மையில் 5 மாதத்திற்கு முன்பு ரசிகர்கள் சந்திப்பின்போதும் போர் வரும்போது சந்திப்போம் என்றார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் வருகிற டிசம்பர் 26 முதல் 31 வரை ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுக்கவிருக்கிறார் ரஜினி.

அப்போது ரசிகர்களின் 25 வருட கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக ரஜினியின் அரசியல் பிரவேச அறிப்பு இருக்கும் என கூறப்படுகிறது.

அன்றைய தினத்தில் ரஜினி தன் கட்சி, அரசியல் பற்றி பேசுவார் என சொல்லப்படுகிறது.

இது 2018 புத்தாண்டு பரிசாக இருக்கும் என நம்பலாம்.

கடந்த இரண்டு நாட்களாக RajinikanthPoliticalEntry என்ற வாக்கியங்கள் இணையங்களில் டிரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Rajini may announce his political entry on 2018 New year day

rajini thadai udai

ஆணழகன் போட்டியில் வென்ற ஒன்பது திருடர்கள் பட இயக்குனர்

ஆணழகன் போட்டியில் வென்ற ஒன்பது திருடர்கள் பட இயக்குனர்

vijay paramasivamஇயக்குநர் ஒருவர் ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்று இருக்கிறார். அவர் பெயர் விஜய் பரமசிவம்.

இவரது அப்பா ஓர் ஒளிப்பதிவாளர் மட்டுமல்ல ‘கொலுசு ‘ என்ற படத்தை தயாரித்த தயாரிப்பாளரும் கூட.

இரண்டு முதுகலைப் பட்டம் பெற்ற விஜய் பரமசிவம். யாரிடமும் உதவியாளராகப் பணியாற்றவில்லை.

20 குறும்படங்களை இயக்கியிருக்கிறார். இவரது ‘ரூம் நம்பர் 76’ திரைப்பட விழாவில் சிறந்த குறும்படமாகத் தேர்வானதுடன் சிறந்த இயக்குநர் விருதையும் பெற்றுத் தந்தது.

பாலிமர் டிவிக்காக பல நிகழ்ச்சிகளையும் இயக்கியுள்ளார்.

ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி நடிப்பில் ‘ஒன்பது திருடர்கள்’ என்கிற
ஒரு திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.

இவரது இலக்கு திரைப்பட இயக்கம் தான் என்றாலும் அதற்கான தேடல் ஒரு பக்கம் இருந்தாலும் திறமை காட்டும் வகையில் வரும் பிற வாய்ப்புகளையும் பயன்படுத்தத் தவறவில்லை .

அவ்வகையில் இவர் பல நாடுகளுக்காக சுற்றுலா வளர்ச்சிக்காகப் படமெடுத்துள்ளார். இவர் சிங்கப்பூர், மலேஷியா, சீனா, இந்தோனேஷியா , தாய்லாந்து, ஹாங்காங்க், வியட்னாம், பிலிப்பைன்ஸ் , கம்போடியா என பல நாடுகளுக்கு இயக்கியுள்ளார்.

அதில் உலகளவில் பெரிய தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர்.

இப்படி உலகம் சுற்றி வந்த விஜய் பரமசிவம் உள்நாடு வந்திருக்கிறார். எதில் ஈடுபட்டாலும் அதன் அடியாழம் வரை சென்று ஈடுபாடு காட்டுவது இவரது இயல்பு.

ஆவணப்படங்கள் , விளம்பரப் படங்கள் எடுத்துக் கொடுத்து பல நாடுகளிலிருந்து பாராட்டுகளைப் பெற்றவர் , அடுத்து ஒரு முழு நீளத் திரைப்படத்துக்கான தேடுதலைத் தொடங்கியிருக்கிறார் .

எப்போதும் மனதை உற்சாகமாக வைத்துள்ள இவர் உடற்கட்டிலும் கவனம் செலுத்துபவர். அதற்காக உடற்பயிற்சிக் கூடம் சென்றிருக்கிறார்.

இவரது ஆர்வத்தை அறிந்த கமல் என்பவர் நீங்கள் ஏன் மிஸ்டர் தென்னிந்தியா போட்டிக்குத் தயாராகக் கூடாது? என்று தூண்டியிருக்கிறார்.

ஊக்கமும் தந்திருக்கிறார். ஒரு கணம் யோசித்தவர் அதிலும் இறங்கிப் பார்ப்பது என்று முடிவெடுத்திருக்கிறார்

இவருக்கு பிரபாகர், நெளஷத் என இரு பயிற்றுநர்கள் பயிற்சி அளித்துள்ளனர். மளமளவென பயிற்சிகள் , பரபரவென உணவுத் திட்டங்கள் எனத் தொடர்ந்திருக்கின்றன.

நான்கே மாதத்தில் சுமார் 25 கிலோ எடை குறைந்து தயாராகியுள்ளார். போட்டியில் பங்கேற்பது குறித்த நடைமுறைகளை ஏற்கெனவே மிஸ் சவுத் இந்தியா பட்டம் பெற்ற பிரதிக்ஷா அளித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற தென்னிந்திய ஆணழகன் போட்டியில் ரன்னர் பரிசு பெற்றுள்ளார்.

அது மட்டுமல்ல ஆண் மாடல்களுக்கான போட்டியிலும் மூன்றாம் இடம் பெற்று பதக்கம் பெற்றுள்ளார். இவ்விழாவில் இயக்குநர் அமீர் கலந்து கொண்டார்.

இவர் ஓர் இயக்குநர் என்பதை அறிந்த அமீர் மகிழ்வுடன் இவரைத் தட்டிக் கொடுத்துப் பாராட்டியதை எண்ணிப் பெருமைப் படுகிறார்.

எதிலும் தீவிர ஈடுபாடு காட்டினால் புதிய துறையானாலும் அதில் முத்திரை பதிக்க முடியும் என்பதற்கு இந்தப் போட்டி முடிவுகள் உதாரணம் எனலாம்.

முழு ஈடுபாடு காட்டி அதில் தன் அடையாளத்தைப் பதிப்பது விஜய் பரமசிவத்தின் இயல்பு. அடுத்து திரைப்படத்தில் இறங்கி விட்டார்.

கதாநாயகர்களிடம் கதை சொல்லி சம்மதம் பெற்றுள்ளவர் விரைவில் அதற்கான அறிவிப்பை வெளியிடவுள்ளார்.

ஏற்கெனவே ஒரு படம் இயக்கியிருந்தாலும் அது மற்றவர் ஒருவரின் கதை, சின்ன பட்ஜெட் என இருந்ததால் அது ஒரு முன்னோட்டம் மட்டுமே முழுமையான படம் தன் கதையில் உருவாகவிருக்கும் அடுத்த படம் தான் என்று கூறுகிறார் நம்பிக்கையுடன்.

தொட்டது எதிலும் முத்திரைத் தடம் பதிக்கும் விஜய் பரமசிவம் பட இயக்கத்திலும் முத்திரை பதிப்பார் என நம்புவோம்.

Vijay Paramasivam won Runner in Mr South India 2017

mr south india 2017

More Articles
Follows