மகளிர் தினத்தில் பார்த்திபன் மகள் கீர்த்தனா திருமணம்

மகளிர் தினத்தில் பார்த்திபன் மகள் கீர்த்தனா திருமணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Parthibans daughter Keerthana marriage fixed on Womens dayமணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நடிகர் பார்த்திபன் மகள் கீர்த்தனா சிறுமியாக நடித்திருந்தார்.

கடந்த 2002ஆம் ஆண்டு இப்படம் வெளியானது.

தற்போது 16 வருடங்களை கடந்துவிட்ட நிலையில் அதில் நடித்துள்ள கீர்த்தனாவிற்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளார் நடிகர் பார்த்திபன்.

வருகிற மார்ச் 8ஆம் தேதி சென்னையில் உள்ள லீலா பேலசில் நடைபெறவுள்ளதாம்.

Parthibans daughter Keerthana marriage fixed on Womens day

பணத்திற்காக நடக்கும் அநீதியைப் பற்றி பேசும் கஸாலியின் மனுசனா நீ

பணத்திற்காக நடக்கும் அநீதியைப் பற்றி பேசும் கஸாலியின் மனுசனா நீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ghazali director“H3 சினிமாஸ்” நிறுவனம் தயாரிப்பில் கஸாலி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசையமைத்து இயக்கியுள்ள படம் “மனுசனா நீ”.

பிப்ரவரி வெளியீடாக வரவுள்ள “மனுசனா நீ” படத்தின் பெயரே படத்திற்கு மிகப்பெரிய விளம்பரமாக அமைந்துள்ளது.

“மனுசனா நீ” படத்தின் போஸ்டரை பார்ப்பவர்கள் அனைவருமே, அதைப்பற்றிப் பேசாமல் கடந்து செல்வதில்லை.

பொய், பித்தலாட்டங்கள், கோடிக்கணக்கில் கொள்ளை எல்லா தொழிலிலும், துறையிலும் இருக்கும்.

அப்படி மக்கள் வாழ்க்கையோடு தினசரி தொடர்புடைய ஒரு துறையில் பணத்திற்காக நடக்கும் அநீதியைப் பற்றிப் பேசும் படமாக உருவாகியுள்ளது “மனுசனா நீ”.

துபாயில் பிஸினெஸ் செய்து அனுபவமுள்ள கஸாலி, சினிமா மீதிருந்த நீண்ட காதலால் தனது முதல் திரைப்படத்தை இயக்கும்போது பலவிதமான பிரச்சினைகளையும் சிக்கல்களையும் சந்தித்துள்ளார்.

தயாரிப்பு, படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்சன், வெளியீடு என எல்லாத்துறைகளில் உள்ள பிரச்சினைகளையும் நேரடியாக சந்தித்த அனுபவம் கஸாலியை யோசிக்க வைத்தது. தமிழ் சினிமாவில் தயாரிக்கப்பட்டு வெளியாகும் படங்களை விட வெளியாகாமல் போகிற படங்கள் பல மடங்கு இருக்கின்றன. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

அவை என்னென்ன காரணங்கள் என்பதை நேரடியாக தன் அனுபவத்தில் கண்கூடாகக் கண்ட கஸாலி, அவர்களுக்கு உதவும் நோக்கில், ‘H3 சினிமாஸ்’ நிறுவனத்துடன் இணைந்து சிறிய படங்களுக்கும், அதன் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் ஆதரவுக்கரம் நீட்டும் முயற்சியாக பிரச்சனையில் சிக்கியுள்ள படங்களை முடித்துக் கொடுப்பது, வாங்கி வெளியிடுவது, வெளியிட உதவுவது போன்ற உதவிகளை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதற்குத் தேவையான ஸ்டூடியோ நிர்மாணிக்கும் பணி முழு வீச்சில் நடக்கிறது.

அதுபற்றிய விவரமான அறிவிப்பு, ‘மனுசனா நீ’ பட வெளியீட்டிற்குப் பின் வெளியாகும். நம்பிக்கையோடு வந்தவர்களை சென்னையும் சரி, தமிழ் சினிமாவும் சரி என்றுமே திருப்பி அனுப்பியதில்லை என்று சொல்வார்கள். அந்த நம்பிக்கையோடு அடியெடுத்து வைத்திருக்கிறார் கஸாலி.

“மனுசனா நீ” எனது முதல் படம் என்றாலும், எதிர்பார்த்ததை விட ரொம்ப திருப்தியாக வந்திருக்கிறது. அந்த வகையில் ஒரு இயக்குநராக நான் சந்தோசப்படுகிறேன்.

விரைவில் அந்த சந்தோசத்தை மக்கள் இன்னும் இரட்டிப்பாக்குவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்’ என்றார்.

இப்படம் வெளியான உடனேயே எனது அடுத்த படத்திற்கான வேலைகளும், மேலே குறிப்பிட்ட சிறு படங்களை வெளியிடும் முயற்சிகளும் தொடங்குவேன் என்கிறார் நம்பிக்கையோடு!

Ghazali directorial Manusanaa Nee release updates

manusanaa nee movie stills

எந்த படமும் ஹிட்டாகல; கடுப்பில் தமன்னா மீது செருப்பு வீசிய ரசிகர்

எந்த படமும் ஹிட்டாகல; கடுப்பில் தமன்னா மீது செருப்பு வீசிய ரசிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Footwear Thrown at Baahubali Actress Tamannaahஹைதராபாத்தில் ஒரு புதிய நகைக்கடையை திறக்க நடிகை தமன்னா சென்றிருந்தார்.

அப்போது நடிகையை காண வழக்கம்போல கூட்டம் கூடியது.

அப்போது தமன்னா தன் காரில் இருந்து கீழே இறங்கி சில ரசிகர்களோடு செல்ஃபி எடுத்து கொண்டிருந்தார.

அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் தமன்னா மீது செருப்பை வீசியுள்ளார்.

ஆனால் அது தமன்னா மீது படாமல் அருகில் இருந்த பாதுகாவலர் மீது விழுந்தது.

அதன்பின்னர் பாதுகாவலர்கள் செருப்பு எறிந்தவரை பிடித்துள்ளனர்.

அவரிடம் விசாரித்ததில் அவரும் தமன்னா ரசிகர் (பெயர் கரிமுல்லா) என தெரியவந்துள்ளது.

சமீபகாலமாக தமன்னா நடித்த தெலுங்கு படங்கள் ஹிட்டாகவில்லை எனவும் அதில் தனக்கு தமன்னா கேரக்டர் பிடிக்கவில்லை என்பதால் அந்த கடுப்பில் அவர் செருப்பு வீசினாராம்.

நகைக்கடை பணியாளர் அளித்த புகாரின்பேரில் கரிமுல்லா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Footwear Thrown at Baahubali Actress Tamannaah

ராஜ்கிரண்-சத்யராஜ்க்கு பதிலாக சமுத்திரக்கனி; மதுரவீரன் பற்றி PG. முத்தையா

ராஜ்கிரண்-சத்யராஜ்க்கு பதிலாக சமுத்திரக்கனி; மதுரவீரன் பற்றி PG. முத்தையா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director PG Muthaiya speaks about Madura Veeran projectஒளிப்பதிவாளரும் இயக்குனருமான P.G. முத்தையா இயக்கத்தில் இந்த வாரம் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகவுள்ள படம் மதுரவீரன்.

இப்படம் குறித்து இயக்குனர் கூறியதாவது…

நான் ஒளிப்பதிவாளராக பல படங்களில் பணியாற்றியுள்ளேன். முதலில் ஓரு படம் இயக்க வேண்டும் என்று எண்ணிய போது நமக்கு தெரிந்த அல்லது நமது வாழ்கையில் இருந்து எடுத்தால் சரியாக இருக்கும் என்பதால் தான் “மதுரவீரன்” கதை உருவானது.

இப்படம் ஜல்லிக்கட்டு பற்றிய படம் மட்டும் அல்ல அதன் பின்பு நிகழும் அரசியலையும் மையப்படுத்தியே திரைக்கதை அமைந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் இப்படத்தில் ஹீரோ என்றால் நல்லது மட்டுமே செய்வது போன்றும் வில்லன் என்றால் கெட்டது மட்டுமே செய்வது போன்றும் காட்சிகள் படத்தில் இல்லை.

இப்படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் சராசரி மனிதர்களைப் போலவே இருக்கும். அனைத்து கதாபாத்திரங்களின் பின்னணியிலும் ஓரு நியாயமான காரணங்களுக்காக குரல் கொடுக்கும் காட்சிகள் தான் உண்டு.

படத்தை பார்க்கும்போது அவரவர்கள் முன்வைக்கும் காரணங்களும், வாதங்களும் நியாயமானதாக இருக்கும். இப்படத்தில் வரும் கிளைமாக்ஸ் காட்சியின் முடிவுகளும் சரியான முடிவாக இருக்கும். இப்படம் மற்ற படங்களை காட்டிலும் வேறுபட்டு இருக்கும்.

ஜல்லிக்கட்டு பற்றிய படம் என்றால் ஹீரோ மாட்டை அடக்குவது போன்ற காட்சிகள் எல்லாம் படத்தில் வைக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

இப்படத்திலும் அந்த மாதிரியான காட்சிகள் இல்லை. படத்தில் நிகழும் அனைத்து பிரச்சினைகளை குறித்தும் சொல்லி கொண்டு வரும்போது கிளைமாக்ஸ் காட்சியில் ஹீரோ நீண்ட வசனங்களை கூறியவுடன் வில்லன்கள் கத்தியை கீழே போட்டுக்கொண்டு போவது போன்ற காட்சிகள் எல்லாம் கிடையாது.

யதார்த்தமான காட்சிகள் மட்டுமே படத்தில் உண்டு. இப்படம் உண்மையான சம்பவங்களின் அடிப்படையை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தில் வரும் சிறிய பீரியட் பிளாஷ் பேக் காட்சியில் அந்த பகுதியில் உள்ள உண்மையான பிரபலமான மாடுபிடி வீரர்களின் பெயர்களும் அந்த பகுதியில் உள்ள பிரபலமான மாடுபிடி வீரர்களையும் படத்தில் பயன்படுத்தியுள்ளோம்.

இப்படத்தின் ஹீரோ மதுரையை பின்புலமாக கொண்டவனாகவும், வயது 20 அல்லது 23 வயதை கொண்டவன் போலவும் ஓரு சபையில் 100 , 1000 பேர்கள் முன்பு எழுந்து குரல் கொடுக்கும்போதும் மற்ற அனைவரும் அமைதியாக அவன் பேசுவதை கேட்க வேண்டும் அப்படி ஒருத்தனாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் சண்முக பாண்டியனை தேர்வு செய்தோம்.

அவரும் தன் அப்பா அரசியலில் மிகப்பெரிய பின்புலம் கொண்டவர் மிக பெரிய ஸ்டாரின் பையன் என்ற ஓரு சிறிய சலனம் கூட நான் அவரிடம் காண வில்லை. நானும் அப்படி நினைத்துக்கொண்டு அவரிடம் கதையை கூறவில்லை.

கேப்டன் பற்றி நமக்கு எல்லாம் தெரியும் பிரேமலதா மேடம் படத்தின் இசையமைப்பாளர் யார், எடிட்டர் யார் என்றெல்லாம் கேட்டார்கள். ஆனால் கேப்டன் படத்தின் ஸ்டன்ட் மாஸ்டர் யார்? என்று மட்டுமே கேட்டார். அந்த அளவுக்கு சண்டை காட்சிகளில் தீவிரமாக இருந்தார்.

சண்முக பாண்டியனும் சண்டைகாட்சிகளில் மிக சிறப்பாக நடித்துள்ளார். சண்முக பாண்டியனின் உயரம் 6.3 அடி இருக்கலாம் படத்தில் ஹீரோவிற்கு அருகில் நிற்கும்போது குறைந்த 6 அடி உயரம் இருக்கவேண்டும், ஒரு 18 முதல் 20 வயதுடைய மதுரையை சார்ந்த ஓரு பெண்ணாக இருக்கவேண்டும் என்றும் படத்தில் ஹீரோயின் காட்சிகள் மிகவும் குறைவாகத்தான் உள்ளது எனவே புதுமுகமாக இருந்தால் போதுமானதாக இருக்கும் என்று தான் தேர்வு செய்தோம்.

படத்தில் “மதுரவீரன்” சமுத்திரகனி தான். படத்தில் அவருடைய கேரக்டர் “ரத்னவேலு” அவர் தான் மதுரவீரன் கதாபாத்திரம். சண்முக பாண்டியனின் தந்தை கதாபாத்திரம்.

ரத்னவேலு கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க 3 நடிகர்களை நான் எண்ணி இருந்தேன் முதலாவதாக ராஜ்கிரண், இரண்டாவதாக சத்யராஜ், மூன்றாவதாக தான் சமுத்திரகனி படத்தின் ஹீரோவின் வயதை வைத்து ரத்னவேலு கதாபாத்திரம் முடிவு ஹீரோ குறைவான வயது என்பதால் சமுத்திரகனியை தேர்வு செய்தோம்.

படத்தின் மிக முக்கியமான மிக வலுவான கதாபாத்திரம் அவருடையது. படத்தில் வரும் பாடல்கள் மிக சிறப்பாகவும் பாடல்களின் வரிகள் அனைவருக்கும் பிடிக்கும் வகையிலும் , புரியும் வகையிலும் இருக்க வேண்டும் என்று பேசியே வேலை செய்தோம்.

சந்தோஷ் தயாநிதி மிகவும் சிறப்பாக இசையமைத்துள்ளார். படத்தை ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு முன்பே கதை உருவாக்கிவிட்டோம். ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றிய சிறிய தொகுப்பு படத்தில் உள்ளது. என்றார் இயக்குநர் P.G. முத்தையா.

Director PG Muthaiya speaks about Madura Veeran project

madura veeran spot

மார்ச் இறுதிக்கு தன் இரும்புத் திரையை தள்ளிப்போட்ட விஷால்

மார்ச் இறுதிக்கு தன் இரும்புத் திரையை தள்ளிப்போட்ட விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Irumbu Thirai release postponed to 29th March 2018

மித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜீன், சமந்தா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் இரும்புத்திரை.

இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்லவரவேற்பை பெற்றது.

2018 ஜனவரியில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன்பின்னர் பிப்ரவரியில் வெளியாகும் என கூறப்பட்டது.

ஆனால் மைக்கேல் ராயப்பனின் கீ படத்திற்காக தன் இரும்புத்திரை படத்தை தள்ளி வைத்து உதவுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் இப்படத்தை சில பிரபலங்களுக்கு போட்டுக்காட்டியுள்ளார் விஷால்.

இதனை பார்த்த பலரும் பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில் விஷால் தன் ட்விட்டர் பக்கத்தில் டெஸ்ட் பிரிமியர் நல்லபடியாக நடந்து முடிந்தது.

எல்லாரும் படத்தை மிகவும் பாசிட்டிவாக கூறியுள்ளனர், எல்லா கருத்துக்களும் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது, மார்ச் 29 ரிலீஸ் செய்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

Vishal‏Verified account @VishalKOfficial
Replying to @dirlingusamy @Samanthaprabhu2 and
thank u bro @dirlingusamy. Glad u liked it. Test preview no 4 worked out Gud for #Irumbuthirai #Abhimanyudu. All suggestions noted.@Psmithran @george_dop @AntonyLRuben @Samanthaprabhu2. March 29th. Will be Gud. God bless

Irumbu Thirai release postponed to 29th March 2018

அஜித்-தனுஷை தொடர்ந்து விக்ரமுடன் இணையும் கமல் மகள்

அஜித்-தனுஷை தொடர்ந்து விக்ரமுடன் இணையும் கமல் மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Akshara-Hassan-Photos-8கமலின் உதவி இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இயக்கிய படம் தூங்கவனம்.

இப்படத்தை தொடர்ந்து விக்ரம் நடிக்கவுள்ள புதிய படத்தை இயக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.

இப்படத்தை கமல் தன் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார்.

இந்நிலையில் இதில் முக்கிய வேடத்தில் கமலின் 2வது மகள் அக்சராஹாசன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இவர் தனுஷ் உடன் ஷமிதாப் மற்றும் அஜித் உடன் விவேகம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Akshara Haasan teams up with Vikram in her Fathers Production movie

More Articles
Follows