கேன்டீன் வியாபாரத்திற்கா படம் எடுக்கிறோம்..? சுரேஷ் காமாட்சி

கேன்டீன் வியாபாரத்திற்கா படம் எடுக்கிறோம்..? சுரேஷ் காமாட்சி

Pagiri Movie Audio Launchedவாட்ஸ்அப் ஷேரிங் பற்றிய நிகழ்வுகளை மையமாக கொண்டு ‘பகிரி’ படம் தயாராகியுள்ளது.

லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் பிரபு ரணவீரன் நாயகனாகவும், நாயகிகளாக ஷார்வியா, ஆதிரா நடித்துள்ளனர்.

இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ள இப்படத்திற்கு நடிகர் கருணாஸ் இசையமைத்துள்ளார்.

இதன் பாடல்கள் வெளியீட்டு விழாவில் நடிகை நமீதா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

பாடல்களை இயக்குநர் வசந்தபாலன் வெளியிட ஒளிப்பதிவாளர் செழியன் பெற்றுக்கொண்டார்.

முன்னதாக புதிதாகத் தேர்வான தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர் யூனியனின் நிர்வாகிகள் தலைவர் டைமண்ட் பாபு, செயலாளர் A.ஜான், பொருளாளர் விஜய முரளி, துணைத்தலைவர் வி.கே. சுந்தர், இணைச் செயலாளர் யுவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு ‘பகிரி’ படக் குழுவின் சார்பில் பொன்னாடை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டனர்.

விழாவில் சுரேஷ் காமாட்சி பேசியதாவது…

“நான் மற்றும் ‘பகிரி’ இசக்கி கார்வண்ணன் எல்லாருமே ஒரே இடத்திலிருந்து பயணத்தை தொடங்கியவர்கள்.

இப்படத்தின் இசையமைப்பாளர் கருணாஸ் ஜல்லிக்கட்டு பற்றி சட்டசபையில் பேசியது மகிழ்ச்சியளிக்கிறது.

இன்றைய தமிழ் சினிமாவிற்கு ஒரே நம்பிக்கை ஊடகங்கள்தான்.

ஆனால் ஊடகங்களின் விமர்சனங்கள் மக்கள் பார்வைக்கு வருவதற்குள் திரையரங்கில் அந்த படத்தை தூக்கி விடுகிறார்கள்.

இன்று சினிமா பார்க்காதவர் யாருமில்லை. திருட்டு விசிடி அல்லது டவுன்லோடு செய்து பார்க்கிறார்கள்.

ஆனால் தியேட்டருக்கு வந்து பார்க்கத்தான் அவர்கள் தயார் இல்லை.

சினிமா டிக்கெட்டை விட அதன் பார்க்கிங் கட்டணம் அதிகம். ரூ. 200 வரை இருக்கிறது.

படம் பார்க்கத்தான் தியேட்டருக்கு வருகிறார்கள். ஆனால் இப்படி கட்டணம் வைத்தால் எப்படி வருவார்கள்?

காலை, மதியம் காட்சிக்கு கேண்டீனில் வியாபாரம் இல்லையென்றால் அடுத்த காட்சிக்கு அந்த படம் இருக்காது. கேண்டீனில் வியாபாரம் செய்வதற்கா தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டுப் படம் எடுக்கிறார்கள்?

எனவே, ஏன் எல்லாரையும் தியேட்டருக்கு போய் படம் பார்க்கக் கட்டாயப்படுத்த வேண்டும்?

கள்ளச் சாராயத்தை ஒழிக்க டாஸ்மாக் வந்தது போல் திருட்டு விசிடியை ஒழிக்க அதையும் சட்டப் பூர்வமாக்கி விடலாம்.” என்றார்.

விஷால்-லிங்குசாமி-யுவன் கூட்டணியில் ‘சண்டக்கோழி 2’..!

விஷால்-லிங்குசாமி-யுவன் கூட்டணியில் ‘சண்டக்கோழி 2’..!

Vishal - Yuvan and Lingusamy confirm Sandakozhi 2சண்டக்கோழி 2 படத்திற்காக இணையவிருந்த விஷால் மற்றும் லிங்குசாமி கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.

அதன்பின்னர் இருவரும் சமாதானம் ஆகிவிட்டதை நம் முன்பே பார்த்தோம்.

எனவே சண்டக்கோழி படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

தற்போது இவர்களின் கூட்டணியில் இசையமைப்பாளராக இணைந்துள்ளார் யுவன் சங்கர் ராஜா.

லிங்குசாமி இயக்கிய சண்டக்கோழி, பையா, அஞ்சான் ஆகிய படங்களுக்கு யுவன் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மதி ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். படத்தின் நாயகி உள்ளிட்ட கலைஞர்கள் தேர்வானவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஹிப் ஹாப் ஆதி… வைரலாகும் வீடியோ..!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஹிப் ஹாப் ஆதி… வைரலாகும் வீடியோ..!

HipHop Tamizha's Jallikattu Short Film Releasedஹிப் ஹாப் பாடல்கள் மூலம் பிரபலமான ஆதி தற்போது திரைப்படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

இவரின் இசையில் உருவான ஆம்பள, தனி ஒருவன் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

தற்போது ஜல்லிகட்டில் ஒளிந்திருக்கும் சர்வதேச அரசியலை தோலுரிக்கும் வகையில் டக்கரு டக்கரு என்ற வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசும் மக்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல்களை எழுப்பி வரும் நிலையில், காளை இனத்தையே அழிக்க பன்னாட்டு அரசியல் என்னவெல்லாம் செய்கிறது என்பதை அப்பட்டமாக காட்டியிருக்கிறார்.

சொந்த நாடாக இருந்தாலும் நம் அடையாளங்களை இழந்துவிட்டால் நாமும் அகதிதான் என்ற குரல் பாடலில் ஒலிக்கிறது.

மேலும் வல்லுனர்கள், விவசாயிகள், மாடு வளர்ப்போரின் கருத்துக்களும் இதில் இடம்பெற்றுள்ளது. 12 நிமிடங்கள் வரை இந்த வீடியோ உள்ளது.

இறுதியாக காளையை காப்போம். ஜல்லிக்கட்டை வளர்ப்போம் என்ற கருத்துடன் இந்த காட்சிகள் முடிகிறது.

ரீமேக் உரிமைக்கு காத்திருக்கும் தனுஷ்-பிரகாஷ்ராஜ்..?

ரீமேக் உரிமைக்கு காத்திருக்கும் தனுஷ்-பிரகாஷ்ராஜ்..?

சிரஞ்சீவியின் தம்பி மகள் நிகாரிகா அறிமுகமாகியுள்ள தெலுங்கு படம் ‘ஓக மனசு’. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் நேற்று ரிலீஸ் ஆனது. நாக செளரியா, நிகாரிகா நடித்துள்ள இப்படத்தை ராமராஜூ இயக்கி இருக்கிறார்.

இப்படத்தை பார்த்து இம்ப்ரஸ் ஆன தனுஷ், இதன் தமிழ் ரீமேக் உரிமையை பெற விரும்புவதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்களும் ஒரு கன்னட படத்தை ரீமேக் உரிமையை பெற முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

Godhi Banna Sadharna Mykattu என்ற கன்னட படத்தின் ரீமேக் உரிமையை பெற்று தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரித்து நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

விரைவில் இந்த இரு படங்களின் ரீமேக் அறிவிப்பு வெளியாகும் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

9 முதல் 90 வரை… சிம்புவின் ‘AAA’ சீக்ரெட்ஸ்…!

9 முதல் 90 வரை… சிம்புவின் ‘AAA’ சீக்ரெட்ஸ்…!

actor simbuசிம்பு நடிக்க, ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படப்புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ (AAA).யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தில் 9 பாடல்கள் இடம் பெறுகிறது.இதில் சிம்பு 3 வேடம் ஏற்கவுள்ளதால் மூன்றையும் வித்தியாசப்படுத்த மெனக்கெட்டு வருகிறாராம்.

இதில் ஒரு கேரக்டருக்காக பெரிய தாடி, மீசையை வளர்த்து வருகிறார்.மேலும் தன்னுடைய உடல் எடையை 90 கிலோவுக்கு மேல் ஏற்றவிருக்கிறார். அதற்கான கடும் பயிற்சியில் தற்போது ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

விரைவில் மைசூரில் இது தொடர்பான காட்சிகளை படமாக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணையும் விக்ரம்பிரபு

ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணையும் விக்ரம்பிரபு

vikram prabhu and Murugadossவிக்ரம்பிரபு நடிப்பில் ‘வாகா’ மற்றும் ‘வீரசிவாஜி’ ஆகிய இரண்டு படங்கள் வெளியீட்டுக்கு தயாராகியுள்ன.

இதில் வீரசிவாஜி படத்தை கணேஷ் விநாயக் இயக்கியிருக்கிறார்.

இமான் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ஷாலினி அஜித்தின் தங்கை ஷாமிலி நாயகியாக நடித்துள்ளார்.

இவர்களுடன் ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன், ரோபோ சங்கர், யோகிபாபு, உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ள இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டீசரை இன்று இரவு 7 மணிக்கு வெளியிடுகிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.

More Articles
Follows