கடவுளை விட தலைவர்கள் பெரியவர்களா?.. ‘பகிரி’ டைரக்டரின் ‘பகீர்’ ரிப்போர்ட்

கடவுளை விட தலைவர்கள் பெரியவர்களா?.. ‘பகிரி’ டைரக்டரின் ‘பகீர்’ ரிப்போர்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pagiri- Prabhu Ranaveera, Shravya (11)நாம் எல்லாரும் அன்றாடம் பயன்படுத்தும் சாதனமாக மாறிவிட்டது செல்போன்.

அதில் உள்ள வாட்ஸ்அப்பை பயன்படுத்தாதவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம் என்கிற அளவில் இருக்கிறது.

இந்நிலையில் வாட்ஸ்அப்பின் தமிழ் சொல்லான பகிரி என்ற பெயரில் ஒரு படம் செப்டம்பர் 16ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இசக்கி கார்வண்ணன் இயக்கிய இப்படத்தில் பிரபு ரணவீரன் மற்றும் ஷ்ரவியா ஜோடியாக நடித்துள்ளனர்.

இவர்களுடன் ரவிமரியா, ஏ.வெங்கடேஷ், சரவண சுப்பையா, மாரிமுத்து, டி.பி. கஜேந்திரன், கே.ராஜன், பாலசேகரன் என பல இயக்குநர்கள் முக்கிய வேடமேற்று நடித்துள்ளனர்.

இப்படம் குறித்து இசக்கி கார்வண்ணன் கூறியதாவது…

‘’இன்றைய இளைஞர்கள் அரசாங்க வேலையையோ, அல்லது வொயிட் காலர் ஜாப் எனப்படும் சொகுசான வேலையையோத் தான் அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர். அதில் டாஸ்மாக் பணியும் ஒன்று.

படத்தின் நாயகனும் நாயகியும் மதுபானக் கடையாக இருந்தாலும் இதுவும் அரசாங்க வேலை தானே என்றுதான் இந்த வேலையில் சேர்கிறார்கள்.

கடை கிடைக்கவில்லை என்பதால் தங்களது வீட்டையே டாஸ்மாக்காக மாற்றி வியாபாரம் செய்வார்கள். அந்த வகையில் டாஸ்மாக் பணியாளர் ஒருவனின் காதல் கதை தான் ’பகிரி’.

இரு குடும்பத்து பெரியவர்களுமே குடிக்கு அடிமையானவர்கள். அதன் விளைவுகளையும் படத்தில் விளக்கியுள்ளேன். நாம் குடிப்பதற்கோ குடியை விற்பதற்கோ தயங்குவதில்லை.

ஏனென்றால் குடி நம் வாழ்க்கையோடே ஒன்றாகிவிட்டது. படம் முழுக்க டாஸ்மாக்கும், குடியுமாக இருக்கும்.

ஆனால் படம் முடியும்போது படத்தை பார்த்த இளைஞர்களுக்கு நாம் செய்வது சரியா? நமக்கு சோறு போடும் விவசாயத்தை வெறுப்பது சரியா? என பல கேள்விகள் நிச்சயம் எழும்.

முன்பெல்லாம் மதுபானக்கடையில் வேலை பார்க்க தயங்குவார்கள். ஆனால் இப்போது இளைஞர்கள் மதுபானக்கடையில் பணிபுரிய விரும்புகிறார்கள்.

இப்படி ஒரு சூழ்நிலை ஏன் உருவானது என்பதும் படம் பார்ப்பவர்களுக்கு புரியும். இதனை விளக்கும்போது நிச்ச்யம் ஆட்சியாளர்களை வசனங்கள் குறிவைக்கும் என்பது தெரியும்.

அதற்காக நான் எந்தவித சமரசமும் செய்துகொள்ளவில்லை. படம் பார்த்தபிறகு சென்சார் அதிகாரிகளே என்னிடம் ‘படம் பார்க்க நாங்கள் நேரம் குறைவாகத் தான் எடுத்துக்கொண்டோம்.

அதன்பின் எங்களை ஒரு நீண்ட விவாதத்துக்கே அழைத்து சென்றுவிட்டது படம்’ என்றார்கள். இதே விவாதம் படம் வெளியான பிறகு தமிழ்நாடு முழுக்க நடக்கும்.

ஏனென்றால் நான் படத்தின் மூலம் கேட்டிருக்கும் கேள்விகள் எல்லாமே சாமானிய மக்கள் ஒவ்வொருவரின் மனதுக்குள் இருக்கும் கேள்விகள் தான். அவற்றை சாமானிய மக்களின் சார்பில் பதிவு செய்திருக்கிறேன்’’ என்றார்.

Pagiri- Prabhu Ranaveera, Shravya (2)

சென்சார் போர்டில் மிரட்டினார்களாமே?

அதிகாரிகள் அல்ல அது. கீழ்மட்டத்தில் உள்ள மெம்பர்கள் ‘இந்த படம் ரிலீஸானால் உங்களைக் கொன்று விடுவார்கள்’ என்று நேரடியாகவே எச்சரித்தார்கள். நான் சிரிப்பை மட்டுமே பதிலாகத் தந்தேன்.

தவிர படத்தில் ஒரு காட்சியில் தமிழகத்தின் முக்கிய இரு தலைவர்கள் வேடம் அணிந்தவர்கள் டாஸ்மாக்கில் வந்து சரக்கு கேட்டு கெஞ்சுவதுபோல ஒரு காட்சி வரும். அதனை நீக்க சொன்னார்கள். நான் மறுத்தேன்.

மதுபானக்கடை என்ற படத்தில் கடவுள் வேடம் அணிந்தவர்களே குடிப்பது போல காட்டினார்கள். தலைவர்கள் என்ன கடவுள்களை விட பெரியவர்களா? என்று கேட்டேன். ஆனால் அதிகாரிகள் பிடிவாதமாக மறுத்துவிட்டார்கள்.

அந்த காட்சி உள்பட 18 காட்சிகளை வெட்டச் சொல்லிவிட்டார்கள். அப்படி செய்தும் கூட படத்துக்கு யு/ஏ சான்றிதழ் தான் கொடுத்திருக்கிறார்கள்.

மக்களுக்கு நல்லது சொல்லும் ஒரு படத்தை எடுத்தால் இதுதான் நிலைமையா? என்று வேதனையடைந்தேன். யு/ஏ சான்றிதழ் என்பதால் வரிவிலக்கு கிடைக்காது.

பரவாயில்லை. இளைஞர்கள் நல்வழி செல்ல வேண்டும் என்பதற்காக என் லாபத்தை விட்டு தர முடிவு செய்துவிட்டேன்’’ என்றார்.

இளைஞர்களை கவரும் வகையில் கமர்ஷியல் எண்டெர்டெய்னராக உருவாகி இருக்கும் பகிரி படத்தை ‘மீரா ஜாக்கிரதை’, ’பைசா’ படங்களை வெளியிட்ட வொயிட் ஸ்க்ரீன் சார்பில் எம். அந்தோணி எட்வர்ட் உலகம் முழுக்க வெளியிடுகிறார்.

தனுஷ் இயக்கும் ‘பவர் பாண்டி’ ஒரிஜினல் கதையா?

தனுஷ் இயக்கும் ‘பவர் பாண்டி’ ஒரிஜினல் கதையா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

power pandi rajkiran

பன்முகம் கொண்ட திறமையாளர் தனுஷ், இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார் என்பதை முன்பே பார்த்தோம்.

இந்நிலையில் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் துவங்கியது.

இதில் ராஜ்கிரண் முக்கிய வேடமேற்க, பிரசன்னா, சாயா சிங் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

ஆர் .வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய தனுஷ், கஸ்தூரி ராஜா ஆகியோர் பாடல்களை எழுதுகின்றனர்.
ஜோக்கர் படப்புகழ் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கும் போஸ்டரையும் இன்று வெளியிட்டுள்ளனர்.

இதில் ராஜ்கிரண் மற்றும் அவரது வயது நண்பர்கள் பைக்குடன் ஸ்டைலாக போஸ் கொடுத்தப்படி நிற்கின்றனர்.

Wild hogs என்ற ஹாலிவுட் படத்தின் போஸ்டரும் இதே போல உள்ளதால், இது அப்படம் மாதிரியான கதையா? என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

 

wild hogs

ரஜினிகாந்த்-சத்யராஜ் வழியில் ஆர்.கே.சுரேஷ்

ரஜினிகாந்த்-சத்யராஜ் வழியில் ஆர்.கே.சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rk suresh police getupதாரை தப்பட்டை மற்றும் மருது ஆகிய படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களை மிரட்டியவர் ஆர்.கே.சுரேஷ்.

அவ்வப்போது ஸ்டூடியோ 9 என்ற நிறுவனம் சார்பாக படங்களையும் தயாரித்து வருகிறார்.

தற்போது கௌரவ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் தனிமுகம் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம்.

ஆரம்ப காலங்களில் ரஜினி, சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்டோரும் வில்லனாக நடித்து, நாயகனாக உயர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

God is Mother Pictures தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சஜித் இயக்குகிறார்.

இப்படத்தில் சுரேஷுடன் இணைந்து தாக்ஷா, ரியாஸ்கான், கும்கி அஸ்வின், மிப்புசாமி, சந்திரமௌலி ஆகியோரும்  நடிக்கிறார்கள்.

இசையை எஃப் எஸ் பைசல் கவனிக்க, கேசவன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை சுரேஷ் அர்ஸ் செய்கிறார்.

நடனத்திற்கு தீனா, சண்டைப் பயிற்சிக்கு ஜான் மார்க் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

 

மூன்று ஹீரோக்களை உருவாக்கிய ‘கபாலி’ ரஞ்சித்

மூன்று ஹீரோக்களை உருவாக்கிய ‘கபாலி’ ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director ranjithமூன்று படங்களை மட்டுமே இயக்கியுள்ளார் இவர். ஆனால் உலகளவில் தெரிந்த இயக்குனராகி விட்டார்.

தற்போது மீண்டும் சூப்பர் ஸ்டாரையே இயக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். அவர்தான் ரஞ்சித்.

தன் முதல் படமான அட்டக்கத்தி மூலம் தினேஷ் என்ற ஹீரோவை உருவாக்கினார்.

மெட்ராஸ் படம் மூலம் கலையரசன் என்ற ஹீரோவை உருவாக்கி, இன்று பெரும்பாலான படங்களில் அவர் நாயகனாக நடித்து கொண்டிருக்கிறார்.

தற்போது கபாலி மூலம் விஷ்வந்த் என்பவரை ஹீரோவாக்கி விட்டார் என்கிறார்கள் கோலிவுட் வல்லுனர்கள்.

விரைவில் விஷ்வந்தையும் படங்களில் நாயகனாக பார்க்கலாம் என்றே தெரிகிறது.

பின்குறிப்பு : கபாலி படத்தில் சென்னை விமான நிலையத்தில் ரஜினியைப் பார்த்ததும் மெட்ராஸ்காரங்க, நம்புங்க சார் என்பாரே அவர்தான் விஷ்வந்த்.

கீர்த்தி சுரேஷின் கொள்கைக்கு எக்ஸ்பியரி டேட் உண்டா?

கீர்த்தி சுரேஷின் கொள்கைக்கு எக்ஸ்பியரி டேட் உண்டா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

keerthy suresh stillsஒரு சில நடிகைகள் மட்டும்தான் குடும்ப பாங்கான கேரக்டர்களுக்கு மிகப்பொருத்தமாக இருப்பார்கள்.

அப்படி வந்துள்ள மலையாள கரையோர வைங்கிளிதான் கீர்த்தி சுரேஷ்.

இந்நிலையில் இவர் தனுஷ் உடன் நடித்துள்ள தொடரி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

அப்போது லிப் லாக், கிளாமர் ரோல்கள் குறித்து அவரிடம் கேட்டதற்கு,

நான் லிப் லாக் மற்றும் கிளாமர் ரோல்களில் நடிக்க மாட்டேன் என்று கொள்கை வைத்திருக்கிறேன்” என்று கூறினார் .

நடிகைகள் அறிமுகம் ஆகும் போது, இதுபோன்ற வேடங்களில் நடிக்க மாட்டேன் என்பார்கள். பின்பு, அதுபோன்ற வேடங்களில் நடித்த பல வரலாறு உண்டு.

ஹ்ம்… கீர்த்தி சுரேஷின் கொள்கைக்கு எக்ஸ்பியரி தேதி உள்ளதா? என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.

சென்னை திரும்பிய அஜித்; நெக்ஸ்ட் என்ன ப்ளான்..?

சென்னை திரும்பிய அஜித்; நெக்ஸ்ட் என்ன ப்ளான்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith stillsசிவா இயக்கும் அஜித் படத்திற்கு இதுவரை தலைப்பிடப்படவில்லை.

எனவே தற்காலிமாக ஏகே 57 என்று பெயரிட்டு அழைத்து வருகின்றனர்.

இதன் பூஜையை தொடர்ந்து, ஆஸ்ட்ரியா மற்றும் பல்கேரியா ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பை நடத்தி தற்போது சென்னை வந்துள்ளனர்.

முதற்கட்ட படப்பிடிப்பில் சில ஆக்ஷன் காட்சிகள், காஜல் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த கட்டப் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன், சிறிது காலம் ஓய்வு எடுக்க இருக்கிறார்களாம்.

இதன்பின்னர் அமெரிக்கா, லண்டன் மற்றும் இந்தியாவில் இதன் படப்பிடிப்பை தொடர இருக்கிறார்கள் என சொல்லப்படுகிறது.

இதில் அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், கருணாகரன், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

More Articles
Follows