நாளை மாலை 6 மணிக்கு ஒரு நல்ல நாள் பாத்து சொல்லும் விஜய்சேதுபதி

நாளை மாலை 6 மணிக்கு ஒரு நல்ல நாள் பாத்து சொல்லும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathiவிஜய்சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் ஆகியோர் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

ஆறுமுககுமார் என்ற இளைஞர் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி 10 விதமான கெட் அப்புகளில் நடித்திருக்கிறார்.

இவருடன் காயத்ரி, நிகாரிகா, ரமேஷ்திலக், விஜி சந்திசேகர் உள்ளிட்டோரும் நடிக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

நிஹாரிகா அவர்கள் நடிகர் சிரஞ்சீவியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் பர்ஸ்ட் லுக் வெளியானது முதலே இப்படம் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இப்படத்தின் தலைப்பே முக்கிய வசனமாக பல இடங்களில் வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதன் டீஸரை நாளை நவம்பர் 29ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளனர்.

சிம்பு உடன் கைகோர்க்கும் தனுஷ்

சிம்பு உடன் கைகோர்க்கும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sakka podu podu rajaசந்தானம் நாயகனாக நடித்துள்ள படம் சக்க போடு போடு ராஜா.

இதில் விவேக், ரோபோ சங்கர், மயில்சாமி ஆகியோரும் நடித்துள்ளனர்.

விடிவி கணேஷ் இப்படத்தை தயாரிக்க சிம்பு இசையமைத்துள்ளார்.

இப்படம் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசையை டிசம்பர் 6ஆம் தேதி வெளியிடுகின்றனர்.

இதை நடிகர் தனுஷ் வெளியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கவியரசர் கண்ணதாசனின் பேரன் நடிகர் ஆதவ் கண்ணதாசனுக்கு திருமணம்

கவியரசர் கண்ணதாசனின் பேரன் நடிகர் ஆதவ் கண்ணதாசனுக்கு திருமணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aadhav kannadhasanகவியரசர் கண்ணதாசனின் பேரனும், நடிகருமான ஆதவ் கண்ணதாசனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

‘யாமிருக்க பயமேன்’, ‘பொன்மாலை பொழுது’ முதலான படங்களில் நடித்துள்ள ஆதவ் கண்ணதாசன், வினோதினி சுரேஷ் என்பவரை திருமணம் செய்கிறார்.

இந்த திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாகும்.

ஆதவ் கண்ணதாசன், வினோதினி சுரேஷ் திருமணம் வருகிற டிசம்பர் 6-ஆம் தேதி சென்னை எம்.ஆர்.சி.நகரிலுள்ள மேயர் ராமநாதன் செட்டியார் சென்டரிலுள்ள வள்ளியமை ஹாலில் நடைபெறவுள்ளது.

இவர்களது திருமண விழாவில் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

4வது முறையாக ஏஆர். ரஹ்மானுடன் இணைய விஜய் திட்டம்

4வது முறையாக ஏஆர். ரஹ்மானுடன் இணைய விஜய் திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay ar rahmanவிஜய் தன் கேரியரில் 61 படங்களை கடந்து விட்டாலும் ஆஸ்கர் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உடன் இதுவரை 3 படங்களில் மட்டுமே இணைந்துள்ளார்.

உதயா, அழகிய தமிழ் மகன் மற்றும் மெர்சல் படங்களில் இந்த கூட்டணி இணைந்து பணியாற்றியது.

தற்போது விஜய் 62வது படத்திலும் ஏஆர். ரஹ்மான் இசையமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் மற்றும் லைக்கா இணைந்து தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜனவரியில் தொடங்கும் இதன் சூட்டிங்கை 6 மாதத்தில் முடித்து 2018 தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

அழுத்தமான பவர்புல் கேரக்டருக்கு விஜய்ஆண்டனிதான் கரெக்ட்: சீனிவாசன்

அழுத்தமான பவர்புல் கேரக்டருக்கு விஜய்ஆண்டனிதான் கரெக்ட்: சீனிவாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay antony will be right person for powerful weight character says Annadurai director Srinivasanவிஜய் ஆண்டனி நடிக்க, ராதிகா சரத்குமாரின் ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் ஃபாத்திமா விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கியிருக்கும் ‘அண்ணாதுரை’, வரும் நவம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

படம் வெளியாக இருப்பது எனக்கு உற்சாகமாகவும், அதே சமயத்தில் பதட்டமாகவும் இருக்கிறது என்கிறார் இயக்குனர்.

இப்படம் குறித்து அவர் மேலும் கூறியதாவது…

இந்த மாதிரி ஒரு கலவையான உணர்வுக்காக தான் இத்தனை வருடங்கள் காத்திருந்தேன். சினிமா கலையின் அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

இந்த கதையை எனது முதல் படமாக இயக்கியதை நான் பெருமையாக நினைக்கிறேன்.

சினிமா கலையை கற்றுக் கொள்ள பல்வேறு இயக்குனர்களிடத்தில் வேலை செய்திருக்கிறேன், அவர்களுக்கு நன்றி. வசந்தபாலனிடம் கிளாஸாக எப்படி படம் எடுப்பது, சுசீந்திரனிடம் அழுத்தமான கமெர்சியல் படம் எடுப்பது எப்படி, நகைச்சுவையை பூபதி பாண்டியனிடமும், குறிப்பிட்ட நேரத்துக்குள் படம் எடுப்பதை எழில் சாரிடமும் கற்றுக் கொண்டேன்.

அண்ணாதுரை கதையை விஜய் ஆண்டனியை தவிர்த்து யாரையும் என்னால் யோசித்து பார்க்க முடியவில்லை.

பல நடிகர்களிடம் காண முடியாத, நுட்பமான அதே சமயம் அழுத்தமான பவர்ஃபுல் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் ஆண்டனியால் முடியும்.

அண்ணாதுரை படத்துக்கு அவரின் ஈடுபாடும், அர்ப்பணிப்பும் சிறப்பாக இருந்தது. நடிகராக, இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் ஒரு எடிட்டராகவும் தன் சிறப்பான பங்களிப்பை செய்திருக்கிறார்.

ஒட்டுமொத்த படக்குழுவும் கொடுத்த ஒத்துழைப்பால் படம் சிறப்பாக வந்திருக்கிறது. அண்ணாதுரை தலைப்புக்கேற்ற வகையில் ஒரு பவர்ஃபுல் படமாக இருக்கும்.

வாழ்நாளில் மறக்க முடியாத நவம்பர் 30 ரிலீஸுக்கு காத்திருக்கிறேன்” என்றார் அறிமுக இயக்குனர் சீனிவாசன்.

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக டயானா சம்பிகா, மஹிமா மற்றும் ராதாரவி,காளி வெங்கட், நளினிகாந்த், ஜீவல் மேரி, ரிந்து ரவி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

தில்ராஜ் ஒளிப்பதிவில், ஆனந்த மணி கலை இயக்கத்தில், ராஜசேகர் சண்டைப்பயிற்சியில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு சக்திவேல் பாடல்கள் எழுதியுள்ளார், கவிதா, சாரங்கன் ஆடை வடிவமைப்பை செய்திருக்கிறார்கள்.

Vijay antony will be right person for powerful weight character says Annadurai director Srinivasan

annadurai movie set

ரசிகரை அடிக்கவில்லை; அது வேற காரணம்.. கமல் தரப்பு விளக்கம்

ரசிகரை அடிக்கவில்லை; அது வேற காரணம்.. கமல் தரப்பு விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Clarification news Whether Kamalhassan beat his fanதன்னை பார்க்க ஓடி வந்த ரசிகரை நடிகர் கமல்ஹாசன் தள்ளிவிட்ட ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

கமல் ஏன் இப்படி செய்தார்? என நடுநிலையாளர்களே வருத்தப்படும் அளவுக்கு இணையங்களில் இது பேச்சானது.

இந்நிலையில் கமல் தரப்பில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த ரசிகர் கமல் அவர்களின் காலில் விழ ஓடிவந்தார். காலில் விழும் கலாச்சாரத்தை கமல் ஒருபோதும் விரும்புவதில்லை.

எனவேதான் அந்த ரசிகரை கமல் தள்ளிப் போக சொன்னார்.

ஆனால், அடிப்பது போல் சித்தரித்துள்ளனர்’ என தெரிவித்துள்ளனர்.

Clarification news Whether Kamalhassan beat his fan

kamal slams

More Articles
Follows