தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆறுமுககுமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கௌதம்கார்த்திக் இணைந்து நடித்து வரும் படம் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்.
இவர்களுடன் காயத்ரி, நிகாரிகா, ரமேஷ்திலக், விஜி சந்திசேகர் உள்ளிட்டோரும் நடிக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தை சினிமாவாலா சார்பாக சதீஷ் தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் டீசர் நேற்று மாலை இணையங்களில் வெளியானது.
அதில் விஜய்சேதுபதி பேசிய ராமாயண கதை சர்ச்சைகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வசனத்தில்… புருஷோத்தமா.. ராவணன் சீதையை கொண்டு போய் பத்திரமா வச்சிருந்தானா? ஆனா அவன நாம அரக்கன் சொல்றோமா?
அதே நேரம் ராமன் சீதையை சந்தேகப்பட்டு தீயில போட்டு கொன்னானா? அவனை நாம கடவுள்னு சொல்றோமா? இப்போ ராமனா கெட்டவனா? நல்லவனா? என்பதுபோல் வசனம் வருகிறது.
எனவே ராமனை கடவுளாக மதிக்கும் இந்துக்கள் மத்தியில் இது பிரச்சினையை உருவாக்கும் என சொல்லப்படுகிறது.
அண்மையில் வெளியான மெர்சல் படத்தில் விஜய் பேசிய வசனங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுபோல் இதுவும் உருவாகும் எனவும் நம்பலாம்.